Tuesday, October 27, 2009

தாஜ்மகாலும் பிண்ணனியில் பெட்டிகோட் ஆட்சியும்

பெட்டிகோட் ஆட்சி - இந்த வார்த்தைகளுக்காகவே ஷாஜகானோடு முடித்து கொள்ளாமல் நான் அக்பரில் இருந்து ஆரம்பிக்கிறேன்.காரணம் பெட்டிகோட் ஆட்சி பாரம்பரியமாக இருந்து அக்பரிடம் தொடங்குகிறது. வரலாறு ரொம்ப முக்கியம்.இதில் நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் நண்பன் என்று கூட பார்க்க வேண்டாம்.அடி வெளுக்கலாம்.

அக்பர் ஆட்சியில் இருந்தே பெட்டிகோட் ஆட்சி தலை காட்டி இருக்கிறது.அக்பர் என்றுமே அதிர்ஷ்டம் துணை நின்று இருக்கிறது.அதற்கு மூன்று சம்பவங்களை உதாரணம் பார்க்கலாம்.

1. அக்பர் வயிற்றில் இருக்கும் சமயம் ஹிமாயூன் மனைவியோடு பாலைவனத்தில் அலைந்து திரிந்தாராம்.சாப்பிடக் கூட வழியில்லாமல் ஒட்டகங்களைக் கூட விட்டு வைக்காமல் சமைத்து சாப்பிட்டார்களாம்.அக்பரின் அம்மா அந்த சமயத்தில் மாதுளை பழம் கேட்க,பாலைவனத்தில் யாரும் எதிர்பாராமல் ஒரு வியாபாரி மாதுளை கொண்டு வந்தாராம்.

2.சண்டையில் தம்பியிடம் ஹிமாயூன் தோற்று ஓட,அக்பர் கைக்குழந்தை.அவரை விட்டு விட்டு ஓட சித்தப்பா அக்பரை எதுவும் செய்யாமல் எடுத்து வளர்த்தாராம்.

3.ஷெர்ஷா அக்பருக்காகவே எல்லாம் செய்து விட்டு இறந்து போகிறார்.அவர் இருந்திருந்தால் அக்பர் ஆட்சி சந்தேகம் தான்.ஷெர்ஷா இறந்தவுடன் நடந்த குழப்பத்தில் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட ஹெமூ கிளம்ப,உக்கிரமான சண்டையில் யாரோ விட்ட அம்பு ஹெமூவின் கண்ணில் பாய சண்டை முடியில் அவர் கிடாவாகி விட்டார்.கண்ணில் அம்பு பாயாமல் இருந்திருந்தால்.......இதன் நீட்சியாக ஒரு புனைவு எழுதலாம்.

அக்பரின் ஆட்சியின் பெட்டிகோட் - மதாம் அங்கா.அக்பரை எடுத்து வளர்த்தவள்.அந்த உரிமையில் அவளும் அவளுடைய பிள்ளையும் போட்ட ஆட்டத்தின் முடிவில் அவளின் பிள்ளை ஆதம் கான் அக்பரால் கொல்லப்பட அவளும் கொஞ்ச நாட்களில் உயிர் துறக்கிறாள்.இதோடு முதல் பெட்டிகோட் முடிவடைகிறது.

அக்பர் இறந்த உடன் ஜகாங்கீர் ஆட்சிக்கு வர,1607ம் ஆண்டு பெங்கால் கவர்னராக இருந்த ஷெர் ஆப்கன் என்ற தளபதி ஏதோ சண்டையில் கொல்லப்பட(நூர்ஜகானை அடைய தான் ஜகாங்கீர் கொன்று விட்டார் என்ற வதந்தியும் உண்டு.) நூர்ஜகான் டெல்லிக்கு வர,1611 ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்க அடுத்து வந்த பதினாறு ஆண்டுகள் இவரது பிடி இரும்பு பிடியாக இறுக..

அதுவும் தப்பாமல் இருக்க அண்ணன் அசப் கான் மகளை குர்ரமிற்கு கட்டி குடுக்க,அண்ணன் குர்ரம் பக்கம் சாய வேறு வழியில்லாமல் தன் மகளை ஜகாங்கீரின் கடைசி மகன் ஷாரியாருக்கு கட்டி வைக்க..எத்தனை எத்தனை ராஜ தந்திரங்கள்.அத்தனையும் அண்ணனிடமும் அண்ணன் மகள் மும்தாஜிடமும் வீணாய் போனதே.

இப்படி நினைத்தையெல்லாம் சாதிக்க அவருக்கு ஒபியம் தான் உதவியது.புலி வேட்டைக்கு சென்றால் எத்தனை புலிகளோ அத்தனை குண்டுகள் தான் எடுத்து செல்வாராம்.அத்தர் வாசனை திரவியம் கண்டுப் பிடித்ததும் இவர் தான்.

அடுத்து வருவது தான் இந்த பதிவின் நாயகன் ஷாஜகான்.

1607ம் ஆண்டு நிச்சயதார்த்தம்,1612ல் திருமணம் - இப்படி காதல் பொங்கி வழிந்தது இருவரிடமும் அதுதான் ஷாஜகான்-மும்தாஜ் ஜோடி.இருவருக்கும் சமவயது.1631ம் ஆண்டு அவர் பதினாலாவது பிரசவத்தின் போது இறக்க (இதற்கு காரணம் போர்முனையில் கூட ஷாஜகானுடன் பயணம் + தொடர் பிரசவம்) ஷாஜகான் அவர் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற துடிக்கிறார்.நூர்ஜகான் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் ஷாஜகானை அன்பால் கட்டியவர்.எப்படியென்றால் மும்தாஜ் இறந்தவுடம் அந்த சோகத்தில் உடனே ஷாஜகான் தலை நரைத்து விட்டது.அப்போழுது இருவருக்கும் வயது நாற்பது கூட ஆகவில்லை.

அவர் வைத்த கோரிக்கைகள்.

1.எனக்கு நீங்கள் ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.(அது தான் தாஜ் மகால்)

2.வருடம் தவறாமல் நீங்கள் தாஜ்மகாலிற்கு என் நினைவு நாள் அன்று வர வேண்டும்.

3.இன்னொரு கல்யாணம் செய்ய வேண்டும்,குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்.

4.நம் குழந்தைகள் சண்டை போடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இதில் 1 மற்றும் 3 மட்டும் தான் நடந்தது.

மும்தாஜ் இறந்தவுடன் ஆதிக்கம் செலுத்திய அடுத்த பெண் யார் - அது அடுத்த பதிவில்..

டிஸ்கி :

இப்போது தாஜ் மகால் இருக்கும் இடம் ஒரு சிவன் கோவில்.அந்த இடத்தை ஒரு இந்து மன்னரிடன் இருந்து வாங்க அப்பவே சில பல கோடிகள் (நாலு) குடுத்தாராம்.மகால் என்று முடியும் எந்த கட்டிடமோ,நினைவு சின்னமோ இந்தியாவை தவிர வேறு எங்கும் கிடையாது.இன்று போனாலும் சிவனின் சில குறியீடுகள் உண்டாம்.இன்னும் நிறைய மன்னர்கள் ஆலயத்தில் தான் புதைக்கப் பட்டியிருக்கிறார்கள்.வைரம்,தங்கம் என்று சுவரில் பதித்து இருந்தார்களாம்.அதை ஆங்கிலேயர்கள் லேயர் லேயராக சுரண்டி விட்டார்கள்.(கரண்டி வைத்து).

8 comments:

அகல்விளக்கு said...

//அதை ஆங்கிலேயர்கள் லேயர் லேயராக சுரண்டி விட்டார்கள்.(கரண்டி வைத்து).//

இங்க... இங்க...

இங்க நிக்கிறீங்க தல நீங்க...

பிரபாகர் said...

டிஸ்கில சும்மா தூவி விட்டிருக்கிற தம்பி...

மறுமணம் புரியக்கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கினதா படிச்சிருக்கேன்...(தாத்தாவும் சொல்லிக்கொடுத்தாரு)

அர்விந்த், வரலாறு முக்கியம்... (வடிவேலு பாணியில் படி தம்பி)

கலக்குற... ஒட்டியாச்சு...(அதாம்பா, ஒட்டு போட்டாச்சுன்னு சொல்றேன்)

பிரபாகர்.

பிரபாகர் said...

நாமதான் 0/1 ங்கறத 1/2 வா மாத்திருக்கோம் போலிருக்குது. மொத ஓட்டையே மைனஸா போட்ட புண்ணியவான் வாழ்க... தம்பி, பப்புலராயிட்டே வர்ற...(மைனஸ வெச்சு சொல்றேன்)

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//மும்தாஜ் இறந்தவுடன் ஆதிக்கம் செலுத்திய அடுத்த பெண் யார் - அது அடுத்த பதிவில்..//

எழுதுங்க தல காத்திருக்கிறேன்....

வெண்ணிற இரவுகள்....! said...

சரித்திரத்த நல்ல திரும்பி பார்த்து இருக்கீங்க தல

nedun said...

//இப்போது தாஜ் மகால் இருக்கும் இடம் ஒரு சிவன் கோவில்.அந்த இடத்தை ஒரு இந்து மன்னரிடன் இருந்து வாங்க அப்பவே சில பல கோடிகள் (நாலு) குடுத்தாராம்.//

வரலாற்றில் இதற்கு ஆதாரம் கிடையாது. நாலு உண்மை செய்திகளுடன் ஒரு பொய் செய்தியை கலந்து சொல்லாதிர்கள். எந்த இந்து மன்னரிடம் அந்த இடத்தை வாங்கினார்? தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா அப்போதும் ஷாஜகானின் ஆளுகைக்கு உட்பட்டே இருந்தது

இரும்புத்திரை said...

நெடுன் அவர்களுக்கு பதில்

ஆதாரம் 1

ஆதாரம் 2

Unknown said...

தவகல்களும் ஆதாரங்களும் அருமை:) வரலாற்று பதிவு தொடர வாழ்த்துகள் :)