Thursday, October 1, 2009

இதுக்கு பெயர் என்ன - காதலா இல்லை நட்பா

நான் அவளிடம் எப்போது பேசினாலும் அது சண்டையில் தான் முடியும்.அவள் எந்த கேள்வி கேட்டாலும் ஏடாகூடமாகவே பதில் வரும்.நான் பெரிய சோம்பேறி.(எப்படி என்றால் சாப்பிடுவதைக் கூட கஷ்டமாக நினைப்பேன்.அம்மா தான் இருபத்தியொரு வயது வரை காலை உணவு ஊட்டி விடுவார்.நான் ஒரிடத்தில் நிற்கவே மாட்டேன்.ஓடிக் கொண்டேயிருப்பேன்.அம்மாவும் சளைக்காமல் பின்னால் வந்து ஊட்டி விடுவார்.மும்பை வந்தப் பிறகு அந்த நாட்களை நினைத்து கண் கலங்கிய காலை உணவுப் பொழுதுகள் ஏராளம்.)

என் சித்தி பையன் எனக்கு அடுத்த வாரிசாக உருவாகி இருந்தான்.

அவன் சின்ன வயதில் அடிக்கடி சொல்வான்."இப்போ எங்க அம்மா ஊட்டுறாங்க..அப்புறம் என் பொண்டாட்டி..அதுக்கப்புறம் எம் பொண்ணு"(நல்லவேளை பேத்திய விட்டு விட்டான்)

உடனே நான் சொல்வேன்.(செம்பூர்ண யோக்கியன் வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை..)"உன் பொண்டாட்டி பின்னாடி மிதிப்பா.. பொண்ணு வாயிலே மிதிப்பா.."

இந்த காட்சியை அப்பாவோ இல்லை வேறு யாராவது பார்த்தால் உடனே ஒரு பகடி பாய்ந்து வரும்.."திங்கறதுக்கு கூட கறி வலிச்சு அலையிறான்.."

இப்படி சாப்பிடவே கஷ்டப்படும் என்னைப் போய் அசைன்மெண்ட் எழுத சொல்லி உயிர வாங்கினா நான் என்ன பண்ணுவேன்..எழுதிக் கொடுக்கவே பிறந்த மாதிரி இருந்த ஒருத்தியிடம் நட்பு பாராட்டினேன்.இதுதான் சாக்கு என்று கோவிலுக்கு வந்தால் தான் நான் எழுதி தருவேன் - இப்படியொரு நிபந்தனை.அம்மா கூப்பிட்டாலே கோவிலுக்கு போகாத நான் என் விதியை நொந்து கொண்டு அங்கு போனேன்.ரொம்ப பிரசத்தி பெற்ற கோவில்.

அவள் சாமி கும்பிட்ட பிறகு,நான் என்னுடையப் பிரசாதத்தை அமுக்கியப் பிறகு..

"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.."

"சரி..ம்..சொல்லு..என்ன பேசனும்.." நான் அவளுடையப் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன்.

"முதல்ல விபூதி வைச்சுகோ..சொல்றேண்.."

"இல்ல வேற எதாவது.."

"ஏன் வேண்டாம்னு சொல்ற.."

"ஸ்கூல் படிக்கும் போது விபூதி வைக்க ஒரு வாத்தி எங்களை ரொம்ப மிரட்டுவான்..அடுத்த மதத்தில் இருக்கும் பசங்களிடம் பழகுவதற்கு இது ஒரு தடையாக தெரியும்..அப்போ வந்த பழக்கம்.."

"அப்போ சாமி நம்பிக்கை இல்லையா..கடைசியா என்ன சாமி கும்பிட்ட.."

"இருக்கு.."(என்ன சாமி கும்பிட்டேன்..என்ன பெயர் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.அதனால் கடைசியா கும்பிட்ட இரு சாமிகள்..போன வாரம் பிள்ளையார் கோவில்ல குடுத்த கேசரி,சுண்டலுக்காக பிள்ளையார்.அதுக்கு முன்னாடி மும்பை தீவிரவாதிகள் தாக்கியப் போது இறந்த மேஜர் சந்தீப் மற்றும் நான்கு காவலர்களின் படத்தைக் கும்பிட்டேன்..நான் அப்படி செய்யும் போது
என்னை பைத்தியம் மாதிரி பார்த்தார்கள்)

"நாளைக்கும் வரனும்.."

"பின்ன மாட்டேனா விடவா போற.." (முணுமுணுத்தேன்) "காரியம் முடியணும்னா நான் கழுதை காலைக் கூடப் பிடிப்பேன்.."

"என்ன சொன்ன..எனக்கும் கேட்குது..சரி எவ்வளவு நாள் எங்கூட சண்டை போடாம இருப்பியோன்னு தெரியல.."

"சொல்ல முடியாது..இப்போ பேசி முடிக்கும் போது கூட சண்டை வரலாம்.."

"அப்படி சண்டை வந்து நான் உங்கிட்ட பேசாம இருந்தா தண்ணி அடிப்பியா.."

"தண்ணியப் போய் ஏன் அடிக்கிறேன்..உன்ன அடிப்பேன்.."

"வேற என்ன செய்ய..கைய கிழிச்சிக்கிட்டு கெஞ்சுவியா.."

"சரி உன் ஆசைய எதுக்கு கெடுக்கனும்..அப்படி செஞ்சா உனக்கு வலிக்கும்..நீ அழுவ.."

"நான் இதுக்கு எல்லாம் அழ மாட்டேன்..உன் கைய கிழிச்சா நான் ஏன் அழனும்.."

"கிழிக்கப் போறது என் கைய இல்ல..உன் கைய.."

"நீ எப்பவுமே இப்படித்தானா.."

"இல்லை இப்படித்தான் எப்பவுமே.."

"உனக்கு பிடிச்ச பழமொழி என்ன.."

"பெண்ணை கண்டால் பேயும் இறங்கும்.."

"அப்ப நீங்க எல்லாம் பேயா.." என்னை ரொம்ப ஒவராக கலாய்த்து விட்டாள்.

"அப்படி இல்ல..நீங்களும் பேயும் ஒரே ஜாதி..அதனால இருக்கும்.."

"அரவிந்த் ரொம்ப பேசுற.."

"ஸாரி..பாரு உன் கூட கம்பேர் பண்ணி பேய அசிங்கப் படுத்திட்டேன்.."

"இனிமே எங்கிட்ட பேசாத..நான் வர்றேன்.." என்று என் நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

நானும் கோவத்தில் "என் நோட்டக் குடு.." என்று பிடுங்கி வைத்துக் கொண்டேன்."அவசரப்பட்டு விட்டோமே..எப்படியும் நாளைக்கு வெளியே நிற்கனும்.." என்று நினத்தப்படியே பஸ் ஏறக் காத்து இருந்தேன்.பஸ் கூட்டமாக இருந்தது.தொங்கிக் கொண்டே போகளாம் என்று ஏற போனேன்.சட்டையை யாரோ இழுத்தது போல இருந்தது.பார்த்தால் பேய் இல்ல அவள்.

"ம்..நோட்டக் குடு..தொங்கிட்டுப் போன அடி விழும்.." என்று செல்லமாக மிரட்டினாள்.

வீட்டிற்கு வந்தவுடன் போன் அடித்தது.அவள் தான்.

இன்று யோசித்துப் பார்த்தால் அவள் சொன்னதை நான் கேட்டதே இல்லை.

பின் குறிப்பு :

அவள் தான் எனக்கு போன் செய்வாள்.வீடு மாறியப் பிறகு போன் வர ஒரு மாதம் ஆனது.அந்த நேரத்தில் நான் போன் செய்வேன்.அவள் வீட்டில் மாட்டாமல் இருக்க ஏதாவது பெண்ணை விட்டு போன் செய்வேன்.அதற்கு அந்த கடைக்கு வரும் பெண்களிடம் கெஞ்சிக் கூத்தாடி போன் செய்ய வைப்பேன்.அப்படியே நிறைய நண்பிகள் கிடைத்தார்கள்.

அவளிடம் சண்டைப் போட்டப் பிறகு ஒரு நாள் அந்த கடையில் இருந்தேன்.போன் செய்து கொடுக்கும் பெண் வந்தாள்.

"நம்பர் சொல்லுங்க..போன் பண்றேன்.."

"இல்ல அவ கூட சண்டை.."

"சரி அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..என் போன் நம்பர் வேணுமா.." இந்தப் பெண் அவளை விட அழகாக இருந்தாள்.

"உங்க கையெழுத்து நல்லா இருக்குமா..படம் நல்லா வரைவீங்களா..எனக்கு ஒரு அசைன்மெண்ட் எழுதி தர முடியுமா.."

"போடா பேக்கு.." என்று திட்டி விட்டாள்.

"யாருடி பேக்கு..நீ பேக்கு..உங்க அம்மா பேக்கு..உங்க அப்பா பேக்கு.." என்று கத்தினேன்.

"இதனால் தான் அவ உன்ன விட்டு போயிட்டா.." என்றவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

உபப் பின் குறிப்பு :

அவளுக்கும் எனக்கும் சண்டை வரக் காரணம்.அவள் வைத்திருந்த விஜய் படத்தைக் கிழித்து விட்டேன்.

அவள் யார் என்றால் நான் முதலில் இன்னொரு பெண்ணிடம் பேச முயர்சி செய்து கொண்டு இருந்தேன்.அந்த பெண்ணின் தோழி தான் இந்த பெண்.இவள் மூலமாக எனக்குப் பிடித்தப் பெண்ணிடம் பேச முயற்சி செய்வதாக பிளான்.இந்த பெண்ணோடு நின்று போய் விட்டது.

நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்.

18 comments:

பிரபாகர் said...

//நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்//

ரொம்ப கனவு வேணம் அர்விந்த்... அஜித் ஃபேனா வந்துட்ப்போறாங்க...

எனி ஹவ் வாழ்த்துக்கள். உங்களின் பதிவுகள் நாளுக்கு நாள்மெருகேறுகின்றன. வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

Raju said...

யோவ்..! குடிச்சுட்டு இருந்த டீயை சட்டைல கொட்டிட்டேன்யா.
செம காமெடி..!
:)

பிரபாகர் said...

''நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்.''

//யோவ்..! குடிச்சுட்டு இருந்த டீயை சட்டைல கொட்டிட்டேன்யா.
செம காமெடி..!//

தம்பி,

இதைத்தானே காமெடின்னு சொல்லியிருக்க?

நாங்களும் கோத்துவிடுவம்டி...

பிரபாகர்.

தினேஷ் said...

மாமிக்கு விரிச்ச வலைனுதான் கடைசில சொல்லிட்டிய மாப்பு.. அப்ப்புறம் என்ன நட்பா காதலானு தலைப்பு

தினேஷ் said...

''நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்.''

ஏன்யா இந்த வேண்டாத எண்ணம்...

தினேஷ் said...

உடனே நான் சொல்வேன்.(செம்பூர்ண யோக்கியன் வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை..)"உன் பொண்டாட்டி பின்னாடி மிதிப்பா.. பொண்ணு வாயிலே மிதிப்பா.."

மச்சி டாப்பூ இது..

நாமக்கல் சிபி said...

அனுபவங்கள் சூப்பர்!

எனிவே விஜய் ரசிகை மனைவியாக வாய்க்க வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//நான் அவளிடம் எப்போது பேசினாலும் அது சண்டையில் தான் முடியும்.அவள் எந்த கேள்வி கேட்டாலும் ஏடாகூடமாகவே பதில் வரும்.//

புருஷன் பொண்ணாட்டிக்குள்ளே இதெல்லாம் சகஜம்தானப்பா!

நையாண்டி நைனா said...

/*நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்.*/

"ஒன்னும் தெரியாத லூசா" இருக்கணும் என்று டைரக்டா சொன்னா 'ஆண் ஈயம்', 'பெண் பித்தளை' பிரச்சினை வரும் என்று நாசுக்காய் சொன்ன உமது புலமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாமக்கல் சிபி said...

//"ஒன்னும் தெரியாத லூசா" இருக்கணும் என்று டைரக்டா சொன்னா 'ஆண் ஈயம்', 'பெண் பித்தளை' பிரச்சினை வரும் என்று நாசுக்காய் சொன்ன உமது புலமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.//

கிளாசிக் கமெண்ட்யா நைனா உன்னுது!

இரும்புத்திரை said...

நான் ஒரு பச்ச மண்ணு

மணிஜி said...

குருவியை வேட்டையாடும் போக்கிரி
அழகிய ஒரு தமிழ் மகளை கரம்பிடித்து திருமலைக்கு சென்று வா

(எப்படி கமெண்ட்?சும்மா கில்லி இல்ல?)

ஈரோடு கதிர் said...

கலக்கல் அரவிந்த்

தொடரட்டும்

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
குருவியை வேட்டையாடும் போக்கிரி
அழகிய ஒரு தமிழ் மகளை கரம்பிடித்து திருமலைக்கு சென்று வா

(எப்படி கமெண்ட்?சும்மா கில்லி இல்ல?)*/

"அமராவதி" ஆற்றங்கரையில்,
"ஏகனாய்" அமர்ந்து
"காதல் கோட்டை" கட்ட வைத்து
"சிட்டிசன்" உன்னை
"திருப்பதி" அனுப்ப
அண்ணன் தண்டோரா போடும் "அசல்" ப்ளான்
.....
அது

அமுதா கிருஷ்ணா said...

'நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்.''
அஜித் ரசிகையாய் இருக்க ப்ராத்தனை...

லோகு said...

////நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்//

விஜய்க்கு ரசிகையா... போங்க பாஸ்.. ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் நப்பாசை..

********

பதிவு செம காமெடி..

மணிஜி said...

அப்ப ஓட்டு போட மறந்துட்டேன்..அதான் திரும்ப வந்து....(பதில் மரியாதைன்னு ஒன்னு இருக்கு)

துபாய் ராஜா said...

//நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்....//

அ(ட)ப்பாவி அரவிந்த்தா, அப்படி ஒரு பொறுமைசாலிப் பொண்ணு இந்த பூலோகத்துல மட்டுமில்லை ஏழேழு லோகத்துலயும் இருக்கவா போகுது.... :))