Wednesday, October 21, 2009

குலால்,கமீனே,சாரு

பேராண்மை விமர்சனத்தைப் படித்து "அது ஒரு அரைவேக்காடுத்தனமான விமர்சனம்..இனிமே விமர்சனமே எழுதாதீங்க.." என்று ஒரு நண்பர் அன்பாக பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தியிருந்தார் .அவர் திரு.திரு.அரைவேக்காடு மாதிரி படம் எடுத்தால் விமர்சனமும் அது மாதிரி தான் இருக்கும்.அதனால் ஒரு மாற்றத்திற்கு இரண்டு இந்தி படங்கள் விமர்சனத்திற்கு எடுக்கப்படுகிறது.இது மாதிரி தமிழில் படம் எடுத்தால் அரைவேக்காடு விமர்சங்கள் குறையும்.

தமிழ் படம் பார்த்தால் யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டேன்.ஆனால் குலால் மற்றும் கமீனே படத்தை நிறைய பேரிடம் பார்க்க சொன்னேன்.எனக்கு ரொம்ப பிடித்த படங்கள் வரிசையில் இந்த இரண்டு படங்களும் சேர்ந்து விட்டது.அட சாரு கூட இந்த படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்.அதனால் தான் இந்த படங்களை நான் தூக்கி பிடிக்கிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.இந்த படங்களைப் பற்றி எனக்கு சொன்னது என் மேனேஜர்.அவருக்கு அவர் தந்தை.வயது எழுபது.வயதானவர்கள் தான் இளமையாக உணர்கிறார்கள் என்பதற்கு இந்த படம் சாட்சி.

இனி குலால் - இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குறு நில மன்னர்களிடம் பேசி அவர்களின் அரண்மனைகளையும்,சொத்துகளையும் எடுத்து கொள்கிறது.அது பிடிக்காமல் இராஜ்புத்(ட்) இனத்தினர்கள் புரட்சி செய்து தனி நாடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.அந்த புரட்சியின் சேனாதிபதி கே.கே.மேனன்.அரசியலில் நுழைய பீகாரிலும்,ராஜஸ்தானிலும் கல்லூரி தேர்தல் தான் முதல் கட்டம்.முப்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூட இதற்காக கல்லூரியில் படிப்பார்கள்(சட்டக் கல்லூரி).

அப்படி நாடு இழந்த ஒரு ராஜாவின் மகன் தான் ரன்ஸா.அவன் தங்கியிருக்கும் வீட்டில் வந்து தங்குகிறான் தீலிப்(கதையின் நாயகன்).ரன்ஸாவின் அப்பாவுடைய சின்ன வீட்டிற்கு பிறந்தவர்கள் தான் கரணும்,கிரணும்.

தீலிப் விடுதிக்கு செல்ல அவனை நிர்வாணப்படுத்தி ஒரு அறைக்குள் அடைக்கிறார்கள்.அங்கே பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியையும் அதே கோலத்தில் இருக்கிறார்.இருவருக்கு இடையில் ஒரு நட்பு துளிர்க்கிறது.

தட்டி கேட்க செல்லும் ரன்ஸாவும்,உடன் செல்லும் தீலிப்பும் கழிவறையில் முக்கி எடுக்கப்படுகிறார்கள்.இதை எல்லாம் செய்பவன் ஜடுவால்.கரணின் கையாள்.திரும்ப அவனை தாக்கும் முயற்சியில் ரன்ஸா வெற்றி பெற ஜடுவாலின் நண்பர்கள் துரத்த இருவரும் ஒரு திரையரங்கில் ஒளிந்து கொள்கிறார்கள்.தீலிப் பயப்பட ரன்ஸா சொல்கிறான்."ஹீரோயினை பார்..".ஆனால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள்.கே.கே.மேனன் வர காப்பாற்றப் படுகிறார்கள்.

கே.கே.மேனனின் அண்ணனாக ஒரு பாத்திரம்.துணைக்கு ஒரு திரு நங்கையாக ஒரு சின்ன பாத்திரம்.உடல் மொழியால் அசத்துகிறார்கள்.கே.கே.மேனனை பகடி செய்கிறார்கள்.

ரன்ஸா தேர்தலில் கே.கே.மேனனால் நிறுத்தப்படுகிறான்.எதிர்த்து கிரண் நிற்கிறாள்.ஒரு பாட்டு வருகிறது.(இந்த இடத்தில் வேறு வழியே இல்லாமல் பேராண்மை படத்தின் பாடல் ஒப்பிடப்படுகிறது.தோழியைக் கொன்றவர்களை பழி வாங்க ஜெயம் ரவியும் மூன்று பெண்களும் புறப்படுகிறார்கள்.அந்த பாட்டு கேட்டு நான் நொந்து நூலாகி விட்டேன்.காதில் பூவும்(நமக்கும் உண்டு),கண்மையும் தடவி கொண்டால் பயந்து விடுவார்களா என்ன.)

ஆனால் அதே சமயம் குலால் படத்தில் அந்த அர்த்தம் புரியாத பாடல் எனக்கு மிகவும் பிடித்தியிருந்தது.உடம்பும்,மனதும் சேர்ந்து புல்லரித்தது.அந்த வரிகள் இங்கே..காட்சி அமைப்பும் அருமை.மிரட்டியிருக்கிறார்கள்.

(உ-ம்) நீந்தே(ங்) பி அப் ஸோனே கயீ(ங்)

ராத்தோ(ங்) கோ பி பர்வா நஹி.

ரன்ஸா கரணால் கடத்தப்பட்டு மிரட்டியும் கேட்காததால் கொல்லப்படுகிறான்.அந்த அதிர்ச்சியில் ராஜாவும் உயிரை விடுகிறார்.ராஜாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட விடாமல் கரணை தடுத்து விடுகிறார்கள்.

தீலிப் தேர்தலில் நிற்கிறான்.கோல்மால் செய்து தேர்தலில் ஜெயிக்க வைக்க படுகிறான்.(கிரணின் 600 ஓட்டு 500 ஓட்டாகவும்,தீலிப்பின் 400 ஓட்டு 500 ஓட்டாகவும் எண்ணப்படுகிறது.)

வெற்றிக்கு கொடுக்கப்படும் பார்ட்டியில் கரண் சொல்லி கொடுத்தது மாதிரி கிரண் அவனை நெருங்கி அவனை வலையில் சிக்க வைக்கிறாள். நெருங்கிய பழக்கம் கர்ப்பத்தில் முடிகிறது.கிரண் "என்னை போல இன்னொரு குழந்தை வரவே கூடாது.." என்று சொல்லி விடுகிறாள்.அவனை பிரிகிறாள்.அந்த சோகத்தில் அவன் பதவியை ராஜினாமா செய்கிறான்.அந்த பதவிக்கு கிரண் வருகிறாள்.எதுவும் தப்பாக நடந்து விடக் கூடாது என்று கே.கே.மேனனை நெருங்குகிறாள்.

இது தெரிந்தவுடன் தீலிப் கே.கே.மேனனை கொல்கிறான்.கிரணை கொல்ல புறப்படுகிறான்.அவள் உண்மையை சொல்கிறாள்.பதவிக்காக செய்தேன் என்று.அவளை கொல்ல முயற்சிக்கும் போது கொல்லப்படுகிறான்.

கரண் சேனாதிபதி ஆகிறான்.ரஜபுத் புரட்சியாளர்களுக்கு வீரஉரை நிகழ்த்துகிறான்.கிரண் முகத்தில் குங்குமம்(இது என்ன பொடி என்று தெரியவில்லை உடனே நான் தப்பாக விமர்சனம் செய்து விட்டேன் என்று சாம்ராட் பாய்ந்து வர வேண்டாம்) பூசிக் கொண்டு உரையை கேட்கிறாள்.

டிஸ்கி :

பேராண்மை விமர்சனம் படித்து விட்டு எழுதிய பின்னூட்டங்களைப் பார்க்கவும்.குறிப்பாக (ஒன்பது மட்டும் பதினொன்று)

ஐயா சாம்ராட் எனக்கு அறிவு கம்மி தான்.நான் ஏவுகணை என்று தமிழில் எழுதியதால் என்னை வெளுக்க வந்து விட்டீர்கள்.இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரும் ராக்கெட் என்று தான் எழுதியிருக்கிறார்கள்.ராக்கெட் என்றால் தமிழில் ஏவுகணை என்று தான் அர்த்தம்.(என் உங்களுக்கு அர்த்தம் சொல்கிறேன் என்றால் நீங்க ஆங்கிலத்தில் பிளாக் எழுதும் அறிவுஜீவி).சாட்டிலைட் என்று படம் பார்த்த எனக்கு தெரியாதா.சாட்டிலைட் என்ன நீங்க தூக்கி மாட்ட உங்க வீட்டில் இருக்கும் குண்டு பல்ப்பா?.அதை எடுத்து செல்ல ராக்கெட் இப்படி எழுதுனா எனக்கு புரியாது ஏவுகணை தேவை.உங்க அறிவுஜீவி தனத்தை என்னை போல முட்டாளிடம் காட்ட வேண்டாம்.இப்படி எழுதியதற்கும் புல்லரிக்குமே

இதில் பார்த்து சாட்டிலைட் எப்படி மேலே போனது என்று தெரிந்து கொள்ளலாம்.மேலே கொண்டு செல்ல ஏவுகணை தேவை.எதையும் முழுதாக தெரிந்து கொண்டு குதிக்கலாம் என்ன சரியா

கமீனே அடுத்த பதிவில்..

8 comments:

shortfilmindia.com said...

அறிவு ஜீவிகளை எல்லாம் ரைட்டுல போக சொல்லி விட்டு தள்ளுங்க அரவிந்த்

கேபிள் சங்கர்

பிரபாகர் said...

விமர்சனங்களுக்கு பயப்படாதே தம்பி... அதுதான் உன்னை செம்மைப்படுத்தும். எதிர்கொள்ள பழகிக்கொள். உன்னை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.

பிரபாகர்.

யூர்கன் க்ருகியர் said...

கமீனே படத்தில் வரும் "டொட்ட..டொஇங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்..... டோ டொடொ ..யிங் " மூஜிக் இப்போ என் ரிங் டோன் !! :)

பிரபாகர் said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

அசராம அசத்துங்க

புலவன் புலிகேசி said...

நீங்க கவலைப்படாம நெனச்சத எழுதுங்க தல..இதெல்லாம் சாதாரணம்.......

வினோத் கெளதம் said...

kaminey எங்க ?

Kamineyல Second half கொஞ்சம் சுமார் தான் இல்ல..என்ன கொஞ்சம் வித்தியாசமான Making..
இங்கே இருக்கும் வட இந்திய நண்பர்களிடம் கேட்டபொழுது kaminey flop என்றார்கள்..உண்மையா..?

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

Kaminey படத்தில் வரும் Dhan Te Nan பாடல் ரிங்டோனுக்கு அமர்களமாக இருக்கு. படம் இன்னும் பார்க்கல... நல்ல விமர்சனம் நண்பா.. :)