Friday, July 30, 2010

ஜெகநாதன் - ஆதி - சுஜாதா

ஜெகநாதன் - ஆதி என்று தொடங்கும் பதிவை இரண்டு நாட்களுக்கு முன் எங்காவது பார்த்திருந்தால் அதற்கு எதிர்பதிவு என்று இதை நினைத்து விட வேண்டாம். தினமும் சத்தியப்பிரமாணம் எடுத்து கொள்ளாத குறையாக சண்டை இழுக்கக் கூடாது என்று நினைத்து கொண்டாலும் அதை மீறுவதே எனக்கு வேலையாகயிருக்கிறது.

ஜெகன் - நான் அடிக்கடி சொல்வதுண்டு.நான் பதிவுலகத்தில் பொறாமை படுவது இரண்டு பதிவர்களின் மேல் தான்.அதில் ஒருவர் ஜெகநாதன். நான் மகான் அல்ல என்ற மொக்கை பதிவிலும் கூட அவரை பார்த்து பொறாமை கொள்கிறேன் என்று சொன்னேன்.அடுத்த நாளே இன்னும் அதிகப் பொறாமை கொள்ளுமாறு ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதியுள்ளார்.

க.சீ.சிவக்குமார் அடிக்கடி சொல்லும் ஜெகன் தான் இந்த ஜெகநாதன்.இதுவரை இந்த வருடத்தில் பதினெட்டே பதிவு தான் எழுதியுள்ளார்.  விமர்சனங்கள் கடுமையாக வைப்பார்.அவர் எப்படி விமர்சனம் செய்வார் என்று பதிவுலகின் கவிஞர்கள் நேசமித்ரனிடமும், யாத்ராவிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.என்னை இரண்டு முறை விமர்சனம் செய்துள்ளார். ஏன் உங்கள் கதையில் நாயகன் நல்லவான தெரிகிறான்.இந்த இடத்தில் தான் கதாசிரியர் தோற்றுப் போகிறார் என்று.இன்னும் சொன்னார் அதை இங்கே படித்துக் கொள்ளவும்.

இந்த கதையை மட்டும் நன்றாக தெரிந்த பதிவர்கள் எழுதியிருந்தால் கொண்டாடியிருப்பார்கள்.

அடுத்து ஆதி எழுதிய சைக்கிள் சிறுகதையைப் படித்தேன்.தொடக்கம் ஒரு இடத்தில் தொடங்கி முடிவு இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது. இந்த கதையில் மட்டும் ஒரே ஒரு வார்த்தையை ஆதி போட்டிருந்தால் அருமை என்று எல்லா பின்னூட்டங்களும் வந்திருக்கும். தொடரும் என்று போட்டு விட்டு தொடர்கதையாக மாற்றியிருந்தால் நிச்சயம் அப்படித்தான் சொல்லியிருப்பார்கள்.

தொடரும் போடாமல் ஒரு வார்த்தை கூட மாறாமல் இந்த கதையை ஜெயமோகன் அவர் பதிவில் போட்டு இருந்தால் ராம்ஜி யாஹூ போன்ற அதி தீவிர ரசிகர்கள் ஜெயமோகனைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள்.இதை கிண்டலுக்கு சொல்லவில்லை.யார் எழுதுகிறார் என்பதை பொறுத்து தான் விவாதமே.

சுஜாதா சிறுகதை எழுதிப் பழகும் எல்லோரையும் நிறைய பாதித்திருக்கிறார் என்பது நிதர்சனம். ரொம்ப திராமையான கதையை கூட சிலாகிக்க வைத்து விடுவார்.உதாரணத்திற்கு விகடனில் வந்து சிறுகதை. பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் வாசகனை ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வைக்கும் திறமை அவருக்கு மட்டும் தான் இருந்ததாக இன்னும் நான் நினைக்கிறேன். புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி வீட்டில் பேசிக் கொள்ள முடியாமல் காவிரி ஆற்றுக்குப் போகிறார்கள். மனையிடம் வீரத்தைக் காண்பிக்க காவிரியில் குதித்து நீந்துகிறான்.தசைப்பிடிப்பினால் மூழ்கும் அவனை காப்பாற்ற நீச்சல் தெரியாத மனைவி காப்பாற்ற குதிக்கிறாள். பிறகு இருவரும் மறுநாள் காலையில் பிணமாக ஒதுங்குகிறார்கள். புதுமணத் தம்பதியர்கள் எப்படி பேசிக் கொள்வார்கள் என்று நாம் எழுதினால் அரைப் பக்கம் எழுதி வைப்போம் அல்லது வைப்பேன். அவர் ஒரே வரியில் முடித்து விட்டார். அவளை இறுக்கமாக அணைத்தான்(வேறுவிதமாக எழுதியிருக்கிறேன்.)  முறைத்ததும் கைகளை விலக்கிக் கொண்டான்.அவர்கள் என்ன பேசிக் கொண்டால் நமக்கென்ன என்று கதையை கொஞ்சம் வேறு பக்கம் நகர்த்தியிருப்பார். வாசகனை அந்த இடத்தில் அவர் கட்டி வைத்து விட்டார்.

விவரணைகளைக் குறைத்து கொண்டு கதையை சொன்னால் வாசகனை கட்டி வைத்து விடலாம்.இல்லை அவர்கள் விமர்சனத்தில் இருந்து அது காப்பாற்றும். கயிறு கொஞ்சம் நீளமாகயிருந்தால் வாசிப்பவனை ஒரு விளாசு விளாச வேண்டும்.அந்த பாணி தான் எனக்கு சரி வரும்.அந்த பாணியில் கதை எழுதியிருக்கிறேன்.பயத்தினால் வெளியிட மனது வரவில்லை. பாருங்க நான் பயந்த சுபாவம் உள்ளவன்.

உடனே நான் இவர்களுக்கு சொறிந்து விடுகிறேன். அப்படி செய்கிறேன்.இப்படி செய்கிறேன் என்று ஆரம்பிக்கக் கூடாது. இதை எழுதக் காரணம் முன்பெல்லாம் விமர்சனமோ,சண்டையோ போடுவதற்கு முன் அவர்கள் என்ன நினைத்து கொள்வார்களா என்று கொஞ்சம் சலனம் வரும். அப்படி சலனம் உண்டாக்கியவர்களில் ஆதியும்,ஜெகநாதனும் உண்டு. என்னை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாதென்றே எதுவும் சொல்வதில்லை.மிக முக்கியமாக படிப்பதேயில்லை என்று நினைக்கிறேன். அதுதான் நான் கம்பு சுழற்றுவதற்கு எதுவாகயிருக்கிறது.

மேலும் சிறுகதை எழுதுவது எப்படி என்று ரணகளமாக விவாதித்த ஜெகநாதனுக்காக இந்த இடுகை. ஜெகநாதனுக்கு சொறிகிறேன் என்று சொன்னால் பரவாயில்லை. காரணம் நான் யார் என்று தெரியாத காலத்தில் இருந்து இதுவரை அவர் தளத்தில்,அவர் மனதில் இடம் கொடுத்து வைத்திருக்கிறார்.

14 comments:

நீ தொடு வானம் said...

மிஸ்டர் பொறாமைஸ் வேர் இஸ் ஆதி பதிவு

இரும்புத்திரை said...

ஆதி நன்றாக தெரிந்த பதிவர் என்பதால் நான் லிங்க் தந்தால் சொறிகிறேன் என்று சொல்வார்கள்..அதனாலே அவரை தல என்று சொல்ல வந்ததை கூட நிறுத்திக் கொண்டேன்.மேலும் எனக்கு தோழர்களை கண்டால் தொடை நடுங்கும்.அது கூடுதல் காரணம்.

சங்கர் said...

தொடை நடுங்க நீ என்ன கவர்ச்சி நடிகையா (இப்போ அப்படி ஒரு தனி ஜாதி இல்லாட்டாலும் பரவால்ல),

btw , நானும் சந்தோஷமா சொரியுறேன், "வாவ் ஜெகன்"

பா.ராஜாராம் said...

நானும் வியக்கிற இருவர்கள்.

//விமர்சனங்கள் கடுமையாக வைப்பார்.அவர் எப்படி விமர்சனம் செய்வார் என்று பதிவுலகின் கவிஞர்கள் நேசமித்ரனிடமும், யாத்ராவிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.என்னை இரண்டு முறை விமர்சனம் செய்துள்ளார்//

என்னவோ என்னிடம் மட்டும் தூரமாக இருக்கிறார் அரவிந்த், ஜெகன். நேர்மையான விமர்சனத்தை வைக்க மாட்டேங்கிறார். சும்மா சும்மா ஓகே பாஸ் என்கிறார்.

அப்படியெல்லாம் பார்த்ததால்தான் இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறேன்.. இன்னும் ஜெகன் எதிர்பார்க்கிற அளவு சமயல என எடுக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்யட்டும்?

இரும்புத்திரை said...

சங்கர் ஜெட்லி பதிவில் போய் டீக்குடிக்கவும்..அப்புறம்

பா.ராஜாராம் அண்ணே..அவர் என்னையும் விமர்சனமே பண்றது இல்ல..அவருக்கு ஒரு எதிர்பதிவு போட்டா தான் சரியா வரும்..

ரவி said...

நாராயணா

-

இரும்புத்திரை said...

கொசு தொல்லை தாங்க முடியல..விடாம என்னை ஃபாலோ பண்ணுது..படிக்குது..இனி இருக்காது..

இரும்புத்திரை said...

ரொம்ப வருத்தமாம் இண்ட்லில மைனஸ் போட முடியாமல் போனதில்லை..அதான் வருத்தமோ

Paleo God said...

இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவுவது போல ஒரு பதிவாவது இந்தக் காட்டாற்றில் அடித்து வாராதோ கண்ணே??

இரும்புத்திரை said...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..

மதார் said...

/இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்../

என்ன ஒரு வில்லத்தனம் ?

நேசமித்ரன் said...

ஜெகனின் வாசிப்பு வெளி படைப்பாற்றல் வியக்க வைப்பது ஆனால் மனுஷனிடம் இருக்கும் எளிமை வெட்கப் பட வைக்கும் நம்மை

ஒரு தருக்கத்தை அவர் அணுகும் விதம் . ஒரு படைப்பை பிரித்து மேயும் பாங்கு சான்ஸே இல்லை.
நேரிடையான விமர்சகர் .

அந்தக் கதை!!! அவருக்கு காதல் தேவதைகள் முத்த வரங்கள் வழங்கட்டும் :)

@ பா.ரா

அவர் ப்ராஜக்டுகளில் பிஸி இப்போ எல்லாம் .அதிகம் பின்னூட்டங்கள் பார்க்க முடிவதில்லை

Nathanjagk said...

இது ஒருவகையில் எனக்கு அலாரம் போல தோணுகிறது. எழுதுகிற பதிவுகள் குறைவு. எழுதிய பதிவுகளை கவனிக்கிறவர்கள் என ஒரு பொதுத்தளத்தில் முழுமையாக வந்துவிட்டவன் போல உணர்கிறேன்.

ஆதியின் கதையை வாசிக்கணும்.

நம்மிடம் எளிமையாக பாராட்டும் குணம் வற்றி போய்விட்டது எனலாம். அரவிந்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாங்கு இது. படைப்பின் இண்டு இடுக்குகளில் புகுந்து அதன் குறைகளை உலகத்தரமாக எடுத்துச் சொல்வதே விமர்சனம் என்றாகிவிட்டது. படைப்பைப் பாராட்டினால், நகக்கூர்மை சந்தேகிக்கப் படுகிறது.

அரவிந்த் குறிப்பிட்ட சுஜாதா சிறுகதை நினைவிலுண்டு. கணவன் ஆற்றில் குதிப்பதை விவரிக்கும் இடம் முக்கியமானது (அவன் ஆற்றில் குதித்தது நேர்த்தியானது. தேவையில்லாத சப்தம் வரவில்லை; நீர்த்திவலைகள் தெறிக்கவில்லை...)

சிறுகதை எழுதுவது எப்படி என்று சூத்திரச்சுத்தமாக எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இருந்தும் குறிப்புகளை வைத்துக் கொண்டு செய்யும் சமையல் போல சிறுகதை பொன்னிறமாக பொரிவது இல்லை. வாசகனை படைப்பு கவர்ந்து கொள்ளும் தருணம் முக்கியமானது. இதில் வாசகன் சார்ந்த வெளியையும் கருத்தில் கொள்ள வேண்டும். படைப்பின் சுவை ஒருவருக்கொருவர் மாறுபடுவது இதனால்தான். சுருக்கமாக ஒருவருக்கு குட்; இன்னொருவருக்குக் குப்பை.

அன்புத் தம்பி அரவிந்தின் அன்புக்கு நன்றி!

Thamira said...

என் கதை குறித்த உங்களது பார்வைக்கும் என் மீதான தொடரும் உங்கள் அபிமானத்துக்கும் நன்றி அர்விந்த்.

@ஜெகன்,

சிறுகதை லேபிளை கிளிக் செய்து வேறெதாவது கதையை படித்துப்பாருங்கள். சைக்கிளைப் படித்து விட்டு அப்புறம் என் திசைக்கே வராமல் போய்விடப்போகிறீர்கள். ஹிஹி..