முன் குறிப்பு - நான் போபால் பற்றி எழுதப் போவதில்லை. காரணம் அது ஒரு விபத்து என்பதையும் தவிர நான் தட்டிக் கேட்க போபாலை விடவும் பெரிய விடயங்கள் இருக்கிறது. போபாலைப் பற்றி யாரும் எழுதவில்லை என்று வருத்தம் நண்பர்களுக்கு இருந்தாலும் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு தான் நாம் பேச வேண்டும்.
போபாலில் நடந்தது ஒரு விபத்து.எப்படி இத்தனை நபர்களின் உயிரை எடுத்த மீதேல் ஐசோ சயனைட் வாயு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ஆண்டு 1979.ஐந்து வருடங்கள் ஒன்றுமே நடக்கவில்லை. நாமும் போராடவில்லை. வரும் முன்னே தான் நாம் போராட மாட்டோமே. தவிர விபத்து நடந்த அன்று சுத்தம் செய்ய தண்ணீர் விடும் போது 42 டன் மீதேல் ஐசோ சயனைட் இருந்த தொட்டிக்குள் தண்ணீர் விடப்பட்டுள்ளது. அடுத்த நாள் விசாரணையில் பைப்பில் இருந்த பழுதினால் தான் தண்ணீர் போனது என்று பொய்யான தகவல் தரப்பட்டது. அது விசாரணையில் பொய் என்றும் புதிதாக ஒரு பிரஸர் காஜ் மாட்டப்பட்டது என்றும் தெரிய வந்தது.இருந்தாலும் அது மறைக்கப்பட்டது.
அங்கு அதிகளவில் கோல்மால் நடக்கும் போது அதை அடிக்கடி சென்று பார்க்காதது யார் தவறு. ஒரு பொறியியல் மேலாளரையே காப்பாற்ற அவர்கள் முயற்சிக்கும் போது ஏன் அரசாங்கம் ஆண்டர்சனை காப்பாற்ற பார்க்காது.நம் அரசாங்கத்தின் மீது ஓட்டைகளை வைத்து கொண்டு எழுத வரவில்லை என்று வருத்தப்பட்டால் என்ன செய்ய நான் எழுத மாட்டேன் தான்.காரணம் அதை விட பெரிய ஆபத்துகள் நம்மை சுற்றியிருக்கிறது.
1.தமிழ் நாட்டில் இருந்து எடுத்து செல்லும் மாடுகளைத் தின்று ஏப்பம் விட்டு விட்டு கழிவுகளைத் தமிழக எல்லை பகுதிகளில் கொட்டுகிறார்கள்.இதை ஏன் வினவு போன்ற கம்யூனிஸ்ட்காரர்கள் கேட்பதில்லை.
2. கேரளாவில் பிடிக்கப்பட்ட வெறி நாய்களைக் கொல்லாமல் தமிழக எல்லைப் பகுதியில் விட்ட கேரள வனத்துறையினரைத் தட்டிக் கேட்கவில்லை தமிழக கம்யூனிஸ்ட்காரர்கள்.
3.இரண்டு மாநிலம் தாண்டினால் தான் மகாராஷ்ட்ரா மாநிலம் போய் விதர்பா,சச்சின் எழுதிய ரத்தப் புத்தகம் பற்றி எழுதியதை இங்கிருந்தே காறித் துப்பும் வினவித் தோழர்கள் ஏன் கேரள அருவியில் குளிக்கப் போகும் தமிழகப் பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த கேரள வனத்துறையினர் மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. இல்லை இந்த செய்தி வினவுத் தோழ்ர்களுக்கு தெரியாதா. நான் அந்த வீடியோவைப் பார்த்தேன்.அதிலிருந்த அம்மா கதறிய கதறல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. சக நாட்டவர் மீதே இந்த வன்முறை என்றால் அதுவும் ஏன் இலங்கையில் எதிரி என்று பார்க்கப்படும் தமிழர்களின் மீது சிங்கள ராணுவத்தினர் செய்ய மாட்டார்கள்.
கம்யூனிஸ்ட் என்றால் நாங்கள் தட்டிக் கேட்ட மாட்டோம் என்று வினவுத் தோழர்கள் சொல்கிறார்கள். இல்லை சச்சின் போன்றவர்களை விமர்சனம் செய்தால் கூட்டம் கூடுமே என்று நினைக்கிறார்களா. இல்லை நடந்தது அவர்களுக்குத் தெரியாது என்று சொல்வார்களா.
முதல்ல இங்கு இருக்கும் பிரச்சனையை நாம் சரி செய்வோம். பிறகு போபால் பற்றிப் பார்ப்போம். போபால் பற்றி இந்த அளவிற்கு விமர்சனம் செய்ய காரணம் அது கம்யூனிஸ்ட்களுக்கு பிடிக்காத முதலாளித்துவம் மட்டுமே காரணம்.இதே போல் ஒரு பேக்டரியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் வைத்திருந்தால் ஒன்றும் கேட்க மாட்டார்கள்.
முதலில் கம்யூனிசம்,இத்துப் போன ரசம் பேசுபவர்கள் எல்லாம் கம்யூனிசம் வெற்றி நடைப் போடுகிறது என்று மார்த்தட்டும் சீனாவில் போய் இருந்து வாருங்கள்.பக்கத்து கிராமத்திற்கு போக வேண்டும் என்றாலும் விசா வேண்டும்.அதாவது உங்களுக்கு தெரியுமா.சரி விடுங்கள்.அருணாசலப் பிரதேசம் எங்களிடையது என்று சொல்கிறார்களே.அதை என்றாவது பேசியது உண்டா.
இன்று இந்தியாவை சுற்றி வலை மாதிரி துறைமுகங்கள் பாகிஸ்தான்,இலங்கை,பர்மா என்று கட்டியிருக்கிறார்களே அது பற்றி மக்களுக்கு சொன்னது உண்டா. முடிந்து போன விஷயத்தை வெட்டித்தனமாக பேசுவதை விட(ஒன்றும் கிழிக்க முடியாது என்று தெரிந்தப் பிறகும் பேசுவதை விட)
இது மாதிரி விஷயங்களை பேசலாம்.
கார்த்தி எது பற்றிப் பேசினாலும் உன் நிலையில் இருந்து மாறுவாயே..இன்று போலிகளின் போராட்டத்தனத்தைப் பற்றி நான் கிழித்திருக்கிறேன்.உன் நிலை என்ன. நீ போராடுவாயா.பந்து உன் பக்கமிருக்கிறது.
தூத்துக்குடியில் கழிவுப் பொருட்கள் கொண்டு வரும் கப்பல்களை நாம் வாங்கி உடைக்கிறோம்.அதை பற்றி பேசு.கேரள கம்யூனிஸ்ட்களின் துரோகங்களைப் பற்றி பேசு. தொடர் பதிவு எழுத கூப்பிடு.நான் வருகிறேன். சரி தொடர்பதிவு எழுத அழைக்கும் போது உயிர் நண்பன் என்று இருந்ததே.ஒரே நாளில் அது இல்லை.சரி எப்படியோ போகட்டும்.வெண்ணிற இரவுகள் கார்த்தி நீ என் உயிர் நண்பன் தான்(யார் சொன்னாலும் இதை எடுக்க மாட்டேன்).
கேரள அருவியில் நடந்தது
''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''
''ஐயோ வேணாம் சாமீ...''
''ஏய், விடுடி... துணியை விடுடி...''
''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''
''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''
இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர் வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.
அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களை யும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது.
இதை தமிழ் நாட்டில் இருக்கும் குறைந்தப் பட்ச தமிழர்களாவது படிக்க வேண்டும்.அந்த பட்டிகளின் நாடு தேவதைகள் ஆசீர்வதிக்கப்பட்ட நாடாகவே இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு குற்றாலம் இருக்கிறது முடியாவிட்டால் வீட்டில் குளிப்போம். அங்கு குளிக்க வேண்டுமானால் இப்படி நடக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தேவையான பாதுகாப்போடு போவோம்.
இதை ஏன் வினவு தட்டிக் கேட்கவில்லை.காரணம் விடுங்க விடுங்க.நீங்க என்றுமே ஒரு நிலைச் சார்பு உடையவர்கள்.(உடனே பாருங்கள் தல என்பவர் வந்து மைனஸ் போடுவார்.இதை தானே செய்ய முடியும்.)
Saturday, July 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
80 comments:
இன்று மட்டும் மாடரேஷன் நீக்கப்பட்டுள்ளது.
அவர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்கலாம் எழுதலாம். அவர்களை யாரும் எவரும் கேட்கமுடியாது, கேட்க கூடாது என்ற மனப்பான்மை உடையவர்கள்தான் இவர்கள். இவர்கள் "புர்ச்சி" பேசி, எழுதி இன்றுவரை என்ன கிழித்தார்கள் என்று யாராவது சொல்லட்டு. இவர்கள் ஒருவித மனவியாதி காரர்கள்தான்,தாங்கள் பக்கம் மட்டுமே நியாயமும், கேள்விகேட்கும் உரிமையும் உள்ளது என்ற சர்வாதிகார கூட்டமே இவர்கள்.
தாங்கள் சொல்வதே, எழுதுவதே சரி, அதனையே மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு வாலை இருகால்களுக்குள் இடையில் வைத்துகொள்ளும் நாய்களாகவே மற்றவர்கள் அலையை வேண்டும் என்று சாதிக்க நினைப்பவர்கள்.
நீங்கள் சொவதுபோல சீனாவில் இவர்கள் இருந்து கொண்டு அங்கு நடபவைகளை புரட்சிகரமாக பேசி, எழுதினால் அவர்கள் நோண்டி நொங்கு எடுத்துவிடுவார்கள் என்பது இவர்களுக்கு தெரியும்.இங்கே இருந்து கொண்டு இங்குள்ள அணைத்து உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு சிறிதும் வெட்க மானம் இன்றி இங்கு உள்ள மக்களுக்கு எதிராக எழுதி அவைகளை "புர்ச்சி" "சோசலிசம்" "பின்னோக்கு வாதம்" புடலங்காய் " என்று காரிதுப்பும் பழக்கம் உள்ளவர்கள். அது வேறு ஒன்றுமில்லை. இது ஒருவகை வயிற்று பிழைப்பே ! தன்முதுகில் உள்ளது தனக்கு தெரியாது அல்லவா?
இந்த இணைப்புக்கு செல்லவும்.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/07/blog-post_15.html --
வேட்டை ஆரம்பமாயிடுச்சி டோய்...
(பின்னூட்டங்கள் பெறுதற்பொருட்டு)
follow up
கக்கு அண்ணா,நான் ஏற்கனவே படிச்சேன்..கொஞ்சம் பின்னூட்டம் போடும் முறையை மாற்றுங்கள்.அது சிரமமாக இருக்கிறது.
நடக்கட்டும் தினேஷ்
அரவிந்த்,
கம்யூனிஸ்டுகளைக் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டாய் இனி உனக்கு இறங்குமுகம்தான்.
அவர்களால் நன்றாக நடந்துகொண்டிருக்கும் தொழிற்சாலையை மூடத்தான் முடியுமே தவிர பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் தொழிற்சாலைகளை எடுத்து நடத்தியதாக எங்கும் இல்லை.
ஆமை புகுந்த வீடும் கம்யூ புகுந்த தொழிலகமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
Word verification எடுத்தாகி விட்டது பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி.
நன்றி .
அண்ணாச்சி இது விமர்சனம் என்பதை விட அவர்கள் பக்கம் தப்பிருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்ற ஆசை தான்..
அதையேதான் நானும் சொல்கிறேன். ஆனால் நாம் குறிப்பிட நடப்புகளை பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
சவுக்கு அடிடா தம்பி .. வினவு , கம்யூனிஸ்ட் தோழர்கள் எல்லாம் என்னத்த பண்ணுறாங்க ??? போபால் போபால்ன்னு கத்துறாங்களே நம்ம உருக்குல கூடங்குளம் பத்தி இவ்வங்க வாய திறகுறதே இல்லையே..
இந்த அரவிந்து நல்லாத்தானே எழுதிகிட்டிருந்தாப்புல...
ஹூம் யார்கண்ணு பட்டிச்சோ !
வீராதி வீர சூராதி சூராதி சூர பின்னூட்ட பிலிங்களே வணக்கம்... இந்த பதிவோட நியாயப்படி உங்களான்ட ஒரு கேள்வி கேக்கறேன் சொந்த ரத்தத்தின் ரத்தமான பதிவுலக சவுக்கு சங்கரை கைது செய்யும் போது ஏன்யா பொங்கி எழல...?? உளவுத்துறை வச்சி ஆப்படிப்பாங்ன்னுதானே.. ஏன் இரும்பு நீங்க கூட வாயே திறக்கலையே.. ஆக இதுவும் கூட ஒரு பக்க சார்பு புண்ணாக்கு பதிவு. செந்த பதிவருக்காக குரல் குடுக்க வக்கில்லாத கோழைகள் கூடி கும்மியடிக்கும் மானக்கேடு . அடச்சே!
போபால் விபத்து பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆங்கிலத்தில் எழுதிய பதிவு :
http://athiyaman.blogspot.com/2007/05/question-about-economic-polices-in.html
ஆண்டர்சனை தூக்கில் போடுவதைவிட இழபீடுகளை ஒழுங்கா வாஙக பெற முயல்வதுதான் உருப்படியான செயல்.
சோவியத் ரஸ்ஸியாவில் 80களில் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்தினால் இறந்தவர்கள் பற்றி 'தோழர்கள்' இதே அறசீற்றத்துடன்' பேச மாட்டார்கள். அந்த விபத்து நடக்க காரணம் சோசியலிச அக்கரையின்மை. பொய்யான தகவல்கள். அவசரம். மற்றும் அந்த அமைப்பில் உள்ள அதிகார மைய சிக்கல்கள். அதை பற்றியும் பேசலமே..
// ஏழர said...
வீராதி வீர சூராதி சூராதி சூர பின்னூட்ட பிலிங்களே வணக்கம்... இந்த பதிவோட நியாயப்படி உங்களான்ட ஒரு கேள்வி கேக்கறேன் சொந்த ரத்தத்தின் ரத்தமான பதிவுலக சவுக்கு சங்கரை கைது செய்யும் போது ஏன்யா பொங்கி எழல...?? உளவுத்துறை வச்சி ஆப்படிப்பாங்ன்னுதானே.. ஏன் இரும்பு நீங்க கூட வாயே திறக்கலையே.. ஆக இதுவும் கூட ஒரு பக்க சார்பு புண்ணாக்கு பதிவு. செந்த பதிவருக்காக குரல் குடுக்க வக்கில்லாத கோழைகள் கூடி கும்மியடிக்கும் மானக்கேடு . அடச்சே!//
இது குற்றம் சொல்லாதவர்கள் மட்டும் கல்லெறியுங்கள் வித்தை 2000 வருசப்பழசு. வேற ஏதாவது முயற்சி செய்யுங்க ஏழர.
பதிவர் சவுக்கு அவர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் பரிச்சயம் இல்லை. தனிப்பட்ட முறையில் பழக்கமில்லாதவர்களுக்காக நேர்வதற்கு என்னால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்க முடியாது.
நன்றி - டாக்டர் ருத்ரன்.
அண்ணே ரோமியோ விவரம் தெரியாம வாய விடப்பிடாது..அப்புறம் அவமானமா போயிடும்.. இந்த போபால் பிரச்சனையை வினவில் வந்த பதிவை புத்தகங்களை வாசித்தால் ஒரு முக்கியமான விசயம் புரிந்திருக்கும்.. இது முடிந்து போன போபாலுக்கு மட்டுமல்ல.. இனி நாட்டில் இருக்கும் எந்த அனுவுலையில் நடக்கும் விபத்திலுந்து வெளிநாட்டு நிர்வாகத்தை கழற்றி விடும் சட்டத்தையும் எதிர்த்துத்தான் போராட்டமே..
பதிவுலக்த்துல மொக்கையை போட்டா மட்டும் போதாது அண்ணே கொஞ்சம் பொது அறிவையும் வளர்த்துகனும்...
இந்த சுட்டியை பாருங்க விவரம் புரியும
http://www.greenpeace.org/india/stop-another-bhopal?tyf=1
இப்படி ஒரு கேள்வி வரும் தெரிஞ்சே நான் இந்த பத்தியை பதிவில் போடாமல் வைத்திருந்தேன்.
ஏழர - அதிலும் எனக்கு விமர்சனம் உண்டு.சங்கர் கைதுக்கு பின் சவுக்கு ஒரு பதிவு எழுதினார்கள்.ஊழலை எதிர்ப்போம் என்று.அதை யாருமே பரிந்துரையில் நிறுத்தவில்லையே.அவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்த பதிவுகள் எல்லாம் பரிந்துரையில் வந்தது.அது ஏன்.அதை நீங்கள் அதாவது வினவு எதிர்த்தீர்கள் தானே.எனக்கு அதில் முழு உடன்பாடு உண்டு.இந்த பதிவிலும் என்ன சொல்லி இருக்கிறேன்.வினவு சமரசம் செய்யாமல் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும்.எது மக்களுக்கு தேவையோ அதை சொல்லுங்கள். இன்று எழுதிய கள்ளகாதல் பற்றிய பதிவை விட நீங்கள் தமிழ்ப்பெண்களுக்கு நேர்ந்ததை ஏன் சொல்லவில்லை.
டாக்டர் ருத்ரன் :-)))))))))))))))))))))))))))))))))))))))))))
ஏழர பாருங்க..நான் அப்படி சொல்லவில்லை.நீங்கள் எழுதியதைப் படிப்பவர்கள் அதிகம்.எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.அப்படி இல்லை என்று நீங்கள் சொன்னப்பின் தான் தெரியும்.நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.
பதிவுலகப் பெண்களுக்கு அதாவது உங்களுக்கு வேண்டியவர் என்பதால் தானே நீங்கள் களத்தில் இறங்குனீர்கள்.ஏன் இந்த பெண்களுக்கும் இறங்கலாம் என்பது தான் என் கேள்வி.
அதியமான் கேள்விகளுக்கும் பதில் சொன்னால் நன்றாகயிருக்கும் ஏழர.
அடுத்த்து பதிவு எழுதின இரும்பு.. வினவு கேளரா வங்காள கம்மீனிஸ்டகளை தட்டிக்கேட்பதில்லை என்ற ஒரு அண்டப்புளுகை கூசாமல் எப்பிடி எழுதினீங்க. இப்பிடி எழுதறவங்க ஒன்னு அயோக்கியனா இருக்கனும் இல்ல அடி முட்டாள இருக்கனும்.. நீங்க அயோக்கியானா இல்ல முட்டாளா? எதுக்கு கேக்குறேன்னா.. வினவு CPI, CPIM போன்றவர்களை கம்யூனிஸ்டாகவே கருதுவதில்லை.. போலி கம்யூனிஸ்டுகள் என்றுதான் வகைப்படுத்துகிறார்கள். நார் நாராய் கிழிக்கிறார்க்ள அதுக்காக சுட்டி இதோ
http://www.vinavu.com/category/communism/pseudos/
அண்ணே மாணிக்கன்னே உங்களுக்கும்தான்..
ஏழர அண்ணே..
சங்கர ராம சுப்பிரமணியனுக்கு எதிராவும், லீனாவுக்கு எதிராவும் களத்துல எறங்குன மாதிரி குற்றாலத்துக்குப் பக்கத்துல மானபங்கப் படுத்தப்படுற சகோதரிகளுக்காகவும் களத்துல எறங்கலாமே?
சத்தியமா இது ஃப்ரெண்ட்லி அட்வைஸ்..
இங்கே வடகரைவேலன் எழுதுவதை பாருங்கள்.. மாதவராஜை திட்டி 4 பதிவு எழுதும் போது கம்யூனிஸ்டை திட்டி எழுதுகிறாய் என்று சொல்லவில்லை.. மாதவராஜோடு நட்பு பாராட்டும் போது கம்யூனிஸ்ட்டு கம்பெனியை
மூடுவது தெரியவில்லை.. இப்போதான் புரிகிறதாம்.. அண்ணாச்சிக்கு ஒரு கேள்வி.. இதுவரை இந்தியாவில் எத்தனை தொழிலகங்கள் கம்யூனிஸ்டுகளால் மூடியுள்ளது என்ற புள்ளி விவரம் இருக்கிறதா?
வேண்டுமென்றால் அண்ணன் அதியமானிடம்கூட கேட்கவும். கடந்த வாரத்தில் 70 அமெரிக்க வங்கிகள் திவாலாகிப்போனதற்கு எந்த கம்மீனீஸ்டு காரணம் என்று சொல்லுவார்
நான் அயோக்கியன் அல்லது முட்டாள் அல்லது அடி முட்டாளாகவே இருந்து விட்டுப் போகிறேன்.ஒத்துக் கொள்கிறேன்.நீங்கள் எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கும் சிங்கம் என்று இன்று தான் தெரிந்தது.நான் மூன்று நாட்களாக இந்த பதிவு எழுதி வைத்து விட்டு போடாமலிருந்தேன்.நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என்று.
மண்டபத்தில் யாரும் எழுதி தரவில்லையா?
எழர எனக்கு உங்க நேர்மை பிடிக்கும்.நாம எப்படியிருப்போமோ அப்படித்தான் மற்றவர்களையும் பார்ப்போம் என்று.அதை நிரூபித்த காரணத்திற்கு இன்று அளவுக்கு அதிகமாகவே பிடித்து தொலைக்கிறது
//70 அமெரிக்க வங்கிகள் திவாலாகிப்போனதற்கு எந்த கம்மீனீஸ்டு காரணம் என்று சொல்லுவார்//
நாடே திவாலாயிருக்கு கம்மீனிஸ்டால. இவரு 70 பேங்கு திவாலானதைச் சொல்றாரு..
சீனாவைப் பாருங்க பாஸு.. சும்மா கேப்பிடலிஸம் குத்தாட்டம் போட்டுட்டு இருக்கு. சீனா அடக்குமுறைக்கு மட்டும் தான் கம்மீனிஸ்டை உபயோகப் படுத்திக்கிட்டு இருக்காங்க.
அண்ணே முகிலன் அண்ணே ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்.. நான் ஒரு அரைகுறை என்பதை போகஸ் லைட்டு போட்டு காண்பிக்கும் தைரியம் யாருக்கு உள்ளது போங்கள்.. இருந்தாலும் உங்க அட்டுவைசுக்கு நன்றி.. அதுக்கு மட்டுமில்லீங்க தெனோம். கேரள வனத்துறையால் பாதிக்கப்பட்ட தமிழக பெண்கள் மட்டுமில்லிங்க வீரப்பன் வேட்டையில் தமிழக வனத்துறை-காவல்துறையால் பாதிக்கப்பட்ட தமிழக கண்ண்ட பெண்களுக்கும் சேத்துத்தான் இந்த அதிகார அமைப்பை தூக்கி எரியுற போராட்டத்துல நாங்க இருக்கோம்
போங்கய்யா தூக்கம் வருது.. நாளைக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பாத்துக்குறேன்.
இன்னும் அதியமான் கேட்ட கேள்விக்கு பதிலில்லை..அதை பற்றியும் கொஞ்சம் விவாதியுங்கள் தோழர் ஏழர.. ரஷ்ய விபத்து பற்றியும் பேசுவோமே..சீனா பற்றி பேசுவோமே..
நீங்கள் கேரள கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக விமர்சனம் வைத்துள்ள அளவிற்கு அடக்குமுறையைக் காட்டும் சீனாவிற்கு எதிராக எதுவும் வைத்திருந்தால் சுட்டித் தரவும். முட்டாள்த்தனத்தை மேம்படுத்தி கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்டேன்.
அருணாசப்பிரதேசம் பற்றி உங்கள் நிலை என்ன..
இந்தியாவை சுற்றி சீனத் துறைமுகங்கள் வரப் போகிறதே..அது பற்றி ஏதாவது..
உங்களுக்கு தோதான் பந்துகளை மட்டும் தேர்வு செய்யக்கூடாது..
இரும்பு, ஏன் சொல்லவில்லை என்று கேட்பதில் தப்பில்லை? சொல்லப்போனால் சரியான கேள்விதான்... ஆனால் அப்படி கேட்கும் போது
கேரள வங்க போலி கம்யூனிஸ்டுகளே வினவு ஆதரிக்கிறார்கள் என்று பொய் பேசுவதைத்தான் நான் அயோக்கியத்தனம் என்கிறேன். அதை நிரூபிக்த்தான் வினவு போலிகம்யூனிஸ்டுகளை விமரிசனம் செய்து எழுதிய சுட்டிகளை அளித்துள்ளேன்...
(BRB)
கிளம்புவதற்கு முன்னால் ஒரு சின்ன விசயம்..
சீனா ஒரு கம்யூனிச நாடே அல்ல என்பதுதான் வினவினுடைய நிலைப்பாடு. அதுதான் என்கருத்தும். அது ஒரு மாஃப்பியா மயமாகிப்போன முதலாளித்துவ நாடு. உங்களுக்கு அளித்த சுட்டியிலேயே அதைப்பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது.
மேலும் வினவினுடைய பின்னூட்ட விவாதங்களில் இது பலமுறை விளக்கப்பட்டுள்ளது.. (BRB)
அண்ணே ஏழரை உங்களுக்கும் ஒண்ணு சொல்லிகிறேன். வினவு தளத்தை நான் படிப்பதே இல்லை. உருப்படியான எந்த ஒரு விஷயமும் அங்கு இல்லை. அடிசிக்க வேண்டும் என்றால் மட்டுமே அங்க வரலாம்.
\\பதிவுலக்த்துல மொக்கையை போட்டா மட்டும் போதாது அண்ணே கொஞ்சம் பொது அறிவையும் வளர்த்துகனும்...//
இது தான் அண்ணே நேர கொடுமைன்னு சொல்லுவாங்க எனக்கு இந்த மாதிரி விவாதம் எல்லாம் பண்ண புடிக்காது , முக்கியமா அட்வைஸ் பண்ண புடிக்காது,,அட்வைஸ் பண்ணுறவங்களை புடிக்காது, உங்களுக்கு புரிஞ்சி இருக்கும்ன்னு நினைக்கிறேன். எனக்கு வேற வேலை அதிகமா இருக்கு அண்ணே என்னோட அறிவுக்கு மட்டும் தெரிந்ததை சொல்லுறேன் .. வினவு சென்று படித்து எனது நேரத்தை வீணாக விரும்பவில்லை.
அண்ணே ஏழரை உங்களுக்கும் ஒண்ணு சொல்லிகிறேன். வினவு தளத்தை நான் படிப்பதே இல்லை. உருப்படியான எந்த ஒரு விஷயமும் அங்கு இல்லை. அடிசிக்க வேண்டும் என்றால் மட்டுமே அங்க வரலாம்.
\\பதிவுலக்த்துல மொக்கையை போட்டா மட்டும் போதாது அண்ணே கொஞ்சம் பொது அறிவையும் வளர்த்துகனும்...//
இது தான் அண்ணே நேர கொடுமைன்னு சொல்லுவாங்க எனக்கு இந்த மாதிரி விவாதம் எல்லாம் பண்ண புடிக்காது , முக்கியமா அட்வைஸ் பண்ண புடிக்காது,,அட்வைஸ் பண்ணுறவங்களை புடிக்காது, உங்களுக்கு புரிஞ்சி இருக்கும்ன்னு நினைக்கிறேன். எனக்கு வேற வேலை அதிகமா இருக்கு அண்ணே என்னோட அறிவுக்கு மட்டும் தெரிந்ததை சொல்லுறேன் .. வினவு சென்று படித்து எனது நேரத்தை வீணாக விரும்பவில்லை.
ஏழர இந்த சுட்டியை படிங்க என்று கொடுத்தற்கு நன்றி..
இந்த பதிவே நீங்கள் சரியாக படிக்கவில்லை போல..வினவு மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.அவர்கள் பக்கம் தப்பிருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்பது தான் என் ஆசை என்று பின்னூட்டத்தில் போட்டதைத் திரும்பவும் நினைவு படுத்திக்கொள்கிறேன்.
இன்னொரு விஷயம் சாருவை அடிக்கும் போது இன்று திட்டுனீர்களே அதே ரோமியோ தான் ஒரு ஸ்கீரின் ஷாட் உங்களுக்கு கொடுத்தார் அன்பது வரலாறு..
வினவு தோழர்களின் அரசியல் சித்தாந்தம் குறித்து உங்களுக்கு என்ன விதமான புரிதல் இருக்கிறது என்று தெரிகிறது. இதற்கு முன்பு அவர்கள் கேரள மற்றும் தமிழக கம்யூனிஸ்டுகள்ள் குறித்து விமர்சனமே வைப்பதில்லை என்பதை ஜஸ்ட் லைக் த்ட் என்று ர்ழுதி இருக்கிறீர்கள். அவர்களாது பழைய கட்டுரைகளை, குறிப்பாய் புதிய கலாச்சாரம் உள்ளிட்ட பத்திரிக்கைகளை படித்துப் பார்த்து விட்டு பேசுங்கள்.
போபால் பிரச்சினை உங்களுக்கு வேண்டுமானால் ஒன்றுமில்லாததாய் இருக்கலாம். ஆனால் அது குறித்துப் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம். ராஜீவ் காந்தி உள்ளிட்ட உலக மகா ஒழுக்க சீலர்கள் தெய்வங்களாய் பவனி வந்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் இது இன்னொரு அத்தியாவசியம்.
வினவு உள்ளிட்ட எந்த கம்யூனிஸ்டுகளின் மீது வேடுமானாலும் விமர்சனம் வைக்கலாம். ஆனால் அதை இப்படி மேம்போக்காக வைப்பது சிரிப்பைத் தருகிறது.குறைந்த பட்சம் அதியமான இங்கு கேட்டிருக்கும் கேள்வி மட்டுமே கொஞ்சமேனும் விஷய ஞானத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.
அவர்களின் அரசியல் சித்தாந்தம் தெரிந்தது தான்..வேண்டுமென்றால் உபயோகித்து கொண்டு அப்புறம் திட்டுவார்கள் இன்று ரோமியோவைத் திட்டியது போல..அது போல தற்போது ஏதாவது கேரள கம்யூனிஸ்ட்களுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டார்களா என்ற சந்தேகம் வந்து தொலைக்கிறது.
தொலைநோக்கு என்பது அவர்கள் எழுதும் பதிவிலிருந்தே தெரிகிறது.அதை படிக்க ஆழ்ந்த அறிவு தேவையில்லை என்பது மட்டும் தெரிகிறது.அதியமான் சொன்னது தான் என் கருத்தும்.
இங்கே யாரும் ரோமியோவை திட்டவில்லை மாறாக மாணிக்கன்னே தான் மனோவியாதிக்கார்ரஃ என்று எங்களை திட்டுகிறார்.. அத கவினிங்க இரும்பு!ரோமியோவுக்கு பொதுஅறிவை
வளத்துக்கங்கன்னு அட்வைசு பண்ணால் பிடிக்கவில்லை அதுக்கு நான் என்ன செய்ய?
இரும்பு உங்கள் பதிவில் எழுதியிருக்கும் பொய்யை தவறு என ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனமில்லை அப்புறம் எதுக்கு நேர்மை பற்றி பேசுகிறீர்கள்...?
அடுத்த அண்டப்புளுகு ரோமியோவை பயன்படுத்திக்கொண்டு
திட்டியது என்பது.. ரொம்ப மோசம் இரும்பு.. ஏன் இப்படி ஒரு மட்டமான புத்தி உங்களுக்கு.. மாறாக எங்களை மனோவியாதி என்று திட்டும் சுக்கு மாணிக்கத்தை பற்றி வசியாக மறந்து போகும் ...என்னே உங்கள்நேர்மை??
அருணாசலப்பிரதேசம் பற்றி கேட்கிறீர்கள்.. உங்களுக்கு என்ன தெரியும் அருணாசலப்பிரதேசத்தைப்பற்றி...? தமிழீழத்தை ஆதரிக்கிரீர்களே ... வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் ஈழம் என்பது உங்குளக்கு தெரியுமா? அந்த இடங்கள் இந்தியாவுக்கே சொந்தமில்லை.. தேசிய விடுதலை போராட்டங்கள் நடைபெறும் களம் அது தெரியுமா?.. சீனா மட்டுமலில் இந்தியாவுக்கும் அந்தமண் சொந்தமில்லை தெரியுமா? அங்கே இந்திய சட்டம் அமலில் இல்லை இராணவ சட்டம்தான் இருக்கிறது தெரியுமா?
அதற்கு எதிராக ஐரோம் சர்மிளா என்ற பெண் 10 வருடமாக ஒரு பெண் உண்ணாவிரதம் இருப்பது தெரியுமா? நினைத்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் இந்திய இராணுவத்தை எதிர்த்து தாய்மார்கள் 'இந்திய இராணுவமே எங்களை வன்புணர்ச்சி செய்'என்று நிர்வாண போராட்டம் நடத்தினார்களே தெரியுமா?
வெறும் பரபரப்புக்காக அருணாசலப்பிரதேசத்தை பற்றி எழுதுவதை விடுத்து
அங்கே நடக்கும் அரசியலை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.
ஏன் கேராளா பற்றி எழுதவலில்லை என்ற உங்கள் கேள்வியின் நியாயம் உங்கள் பதிவில் இருக்கும் பொய்கள் மற்றும் திரிபுகளால் அடிபட்டு போனது. இந்த அரசியல், சமூக, பொருளாதார அமைப்புகளை புரிந்து கொள்வதில் உங்களிடம் மிகுந்த பற்றாக்குறை இருக்கிறது.. வினவை விட்டுத்தள்ளுங்கள் போய் கார்த்தியுடன் பேசுங்கள்.. இது என் அன்பான வேண்டுகோளும் கூட..
ரோமியோ நான் உங்களுக்கு கொடுத்த சுட்டி வினவோடது இல்ல அது கிரீன் பீஸ் என்கிற சர்வதேச அமைப்போடது... விவரவிம்லாம, விவரம் தெரிஞ்சுக்குற பொறுமையில்லாம வினவு அனுவுலையை பற்றி வாயே திறப்பதில்லை என்று எழுதியது நீங்கள்.. மறுபடியும் சொல்றேன்
நம்ம நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகங்க அது ரொம்ப முக்கியம்.. இன்னிக்கு போபால்லயயும் கேரளாவுலயும் யாருக்கோ நடந்த ஒன்னு நாளைக்கு நமக்கு நடக்கலாம் இல்லயா.. இது அட்வைஸ் இல்ல எச்சரிக்கை!
இந்த பதிவில் பிண்ணனி அரசியல் பற்றியெதுவும் தெரியாது... தமிழகத்திலே ஒரு போபால் இருக்கிறது, அந்த ஊர் பெயர் கடலூர், மடியிலே இராசயண குண்டை கட்டிக்கொண்டு உள்ளது கடலூர் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் உள்ளது மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற 200 நஞ்சுகள் கடலூர் காற்றில் கலந்துள்ளன, மேலும் 800% தூய்மையற்ற காற்றாக உள்ளது, நிலம், நீர், காற்று என அத்தனையும் இராசாயன தொழிற்சாலைகளால் கெட்டுள்ளது, அரசின் எந்த சுற்று சூழல் விதிகளும் கடைபிடிக்கப்படுவதில்லை, இது தொடர்பாக நான் எழுதிய பதிவு மடியில் இரசாயன குண்டு நடந்ததிலிருந்து பாடமும் அந்த அழிவு மீண்டும் நடக்காமல் இருப்பதுவே முக்கியம் இதில் பிற அரசியல்களை தவிர்ப்பதே நல்லது
மற்றபடி வினவு ஏன் அதபத்தி எழுதல இதபத்தி எழுதலன்னு கேட்குறவங்களுக்கு ஒன்னுதான் என் பதில்.. சமூக பிரச்சனை ஒன்னும் வினவுக்கு பட்டா போடல சூடு சுரணையுள்ள யார் வேணுன்னாலும் பதிவாகவோ, பின்னூட்டமாகவோ, டிவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ சமூக அவலங்களை எதிர்க்கலாம். but of course இது சூடு சுரணையுள்ளவங்களுக்கு மட்டும்தான்.. எல்லாருக்குமானதில்ல...
@குழலி இப்போதான் பார்த்தேன், அருமையான பதிவு.. இதே போல திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகளாலும் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது.. ஆனால் நமது அரசியலமைப்பு முதலாளிகளின் கைப்பாவையாக செயல்படும்போது சாமான்யனுக்கு ஏது நீதி? போராடுவது ஒன்றுதான் வழி.
பாருங்க ஏழர கடலூர் பிரச்சனை ஏற்பட்டு இருபத்தியாறு ஆண்டுகள் கழித்து போராடவும்..அது வரை இது சாதாரணப் பிரச்சனை தான்.
இதுல ஒன்னு என்னன்னா இரும்பு எல்லாத்துக்கும் நாங்க மட்டும் போராடிக்கிட்டே இருப்போம் நீங்க நோகாம ஒக்காந்து வக்கண பேசுவீங்க.. இதுவும் ஒரு பிழைப்பா?
ஏழர..நீங்க என்னைக்காவது இதே நேர்மையை மங்களூர் சிவா,அபி அப்பா,லதானந்த மீது காட்டியது உண்டா
போதும்.
உருப்படியா இதாவது செய்யலாம் வாங்க!
கீழே உள்ள இணைப்புக்கு போங்க. உங்க எல்லாரின் எதிர்ப்பையும் வன்மையாக சொல்லி அவரவர் தங்கள் பெயர்களை பதிவிடுங்க.
http://orumutham.blogspot.com/2010/07/justice-to-tamil-and-lesson-to-kerala.html
இதுவர வரை வெறும் இரண்டேபேர்தான் பதிவு செய்துள்ளோம்.
நண்பர் ஏழரை அவர்களை குறிப்பாக அழைக்கிறேன் வாருங்கள்.
அன்பின் ஏழர,
விவாதத்தைத் திசைதிருப்பும் வித்தையை உங்களைமாதிக் கம்யூ தோழரிடம்தான் கற்கவேண்டும்.
நான் வைத்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இதில் அவரை இழுக்கிறீர்கள். உங்களுக்கு ஆதரவாக அவர் வந்து பதில் சொல்லுவார் என்றா?
பழனி, சின்னக் கலையம்புத்தூரில் இருந்த விஜயகுமார் மில்லை மூடியதில் பெரும்பங்கு தோழர்களுக்கே. அந்த முதலாளி பல முறை சமரசப் பேச்சுக்கு வந்தும் இவர்கள் தங்கள் ஈகோவை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. விளைவு அந்தக் குழுமத்தைச் சேர்ந்த மேலும் 5 நூற்பாலைகள் மூடப்பட்டன. அதன் பிறகு சில மில்களை சீசுக்கு எடுத்து வேறு நிறுவனத்தினர் நடத்தினர். அங்கே இதே தொழிலாளர்கள் பாதிச் சம்பளத்திற்கு வேலை பார்த்தார்கள்.
நீங்கள் தயார் என்றால் சொல்லுங்கள் அங்கே நேரடியாக் உங்களை அழைத்துச் சென்று காட்டுகிறேன்.
இல்லை என்றால் உங்கள் ஊரிலிருக்கும் பி எஸ் என் எல் அலுவலகத்தில் சென்றுபாருங்கள் உங்கள் தொழிற்சங்கங்களின் பங்களிப்பை. தனியாருடன் போட்டி போடுமளவுக்கு தொழிற்நுட்பமும், உட்கட்டமைப்பு வசதியும் கொண்ட பி எஸ் என் எல் இப்படிச் சீரழிய என்ன காரணம். போலவே எல் ஐ சியும். ஊழியர் நலன் மட்டுமே முக்கியம் நிர்வாகம் எக்கேடு கெட்டால் என்ன என்ற உங்கள் அனுகுமுறை மாறினாலொழிய மாற்றம் ஏமாற்றமே.
தோழர் ஏழர கூட ஐடி கம்பெனில தான் வேலை பாக்குறார் போல :-))
தம்பி உனக்கு நிறைய மைனஸ் ஓட்டு உழுது சோ நீ பிரபலம் ஆகிட ...வாழ்த்துக்கள் :)))
தோழர் ஏழரை அவர்களே """ரோமியோ நான் உங்களுக்கு கொடுத்த சுட்டி வினவோடது இல்ல அது கிரீன் பீஸ் என்கிற சர்வதேச அமைப்போடது.""""" இது கூட எனக்கு தெரியாதா என்ன ?? எங்க நான் என்ன அந்த அளவுக்கு படிக்காதவன் அல்ல தோழரே,, கலகபிரியா கிட்ட வாங்கி கட்டினது போதாதா ?? கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும் .. கூகுள் இடத்தை வெட்டியா ஆக்கிரமிப்பு செய்யாதிங்க.
\\இது அட்வைஸ் இல்ல எச்சரிக்கை!// தம்பி என்ன காப்பாத்து உட்டா இவரு கையில குச்சிய கொண்டுவந்து இத படி இத படின்னு சொன்னாலும் சொல்லுவாரு .. ஏன் பா இவரு கமெண்ட் போடா மட்டும் பிளாக் பண்ணனும்?? அந்த மாதிரி ஏதாவது தயவுசெய்து கண்டுபுடி.
நண்பர் வடகரை வேலன்,
பி.எஸ்.என்.எல் & எல். ஐ .சி. தபால் ,தந்தி மட்டுமல்ல உலகின் இரண்டாவது பெரிய அமைப்பான இந்தியன் ரயில்வேயின் அணைத்து மண்டலங்களும் நாசமாய் போனதும் இதில் சேரும். தன் கடமைகளை ஒழுங்காக செய்ய தயாரில்லை. ஆனால் உழைப்பு, சுரண்டல் என்றெல்லாம் பேசி.போராடி மக்களின் பணத்தை அரசின் பணத்தை சுரண்டும் இவர்கள் மட்டும் சுரண்டல் வாதிகள் இல்லையா?
பொதுசேவையில் உள்ள எந்த நிறுவன ஊழியர்களாவது என்றாவது ஒருநாள் "நாம் மக்களுக்கா" என்ற சிந்தனையுடன் செயல் பட்டதுண்டா? பணியில் சேர்த்துவிட்டால் முடிந்தது. அதன் பிறகு ரிடயர்டு ஆகி தன் வாரிசுகளை கொண்டு வேலைக்கு வைக்கும் வரை இவர்களுக்கு போராட்டமே வாழ்கை.போராட்டம்,போராட்டம், போராட்டம்.தங்கள் கடமைகளை பற்றி சிறிதும் அக்கறையற்ற தனம் தானே நாம் தினமும் காண்பது. மக்களுக்காக அல்ல. தங்களுக்காக, தங்கள் நலன்களுக்காக மட்டுமே.
பொதுமக்கள் - இவர்களுக்கு "புறம் போக்குகள்."
இவர்கள்தான் மிக மோசமான சோம்பேறிகள், சுரண்டல் பேர்வழிகள்.
--
Thanks & Best Regards
S.Manickam
நண்பர் வடகரை வேலன்,
பி.எஸ்.என்.எல் & எல். ஐ .சி. தபால் ,தந்தி மட்டுமல்ல உலகின் இரண்டாவது பெரிய அமைப்பான இந்தியன் ரயில்வேயின் அணைத்து மண்டலங்களும் நாசமாய் போனதும் இதில் சேரும். தன் கடமைகளை ஒழுங்காக செய்ய தயாரில்லை. ஆனால் உழைப்பு, சுரண்டல் என்றெல்லாம் பேசி.போராடி மக்களின் பணத்தை அரசின் பணத்தை சுரண்டும் இவர்கள் மட்டும் சுரண்டல் வாதிகள் இல்லையா?
பொதுசேவையில் உள்ள எந்த நிறுவன ஊழியர்களாவது என்றாவது ஒருநாள் "நாம் மக்களுக்கா" என்ற சிந்தனையுடன் செயல் பட்டதுண்டா? பணியில் சேர்த்துவிட்டால் முடிந்தது. அதன் பிறகு ரிடயர்டு ஆகி தன் வாரிசுகளை கொண்டு வேலைக்கு வைக்கும் வரை இவர்களுக்கு போராட்டமே வாழ்கை.போராட்டம்,போராட்டம், போராட்டம்.தங்கள் கடமைகளை பற்றி சிறிதும் அக்கறையற்ற தனம் தானே நாம் தினமும் காண்பது. மக்களுக்காக அல்ல. தங்களுக்காக, தங்கள் நலன்களுக்காக மட்டுமே.
பொதுமக்கள் - இவர்களுக்கு "புறம் போக்குகள்."
இவர்கள்தான் மிக மோசமான சோம்பேறிகள், சுரண்டல் பேர்வழிகள்.
தோ... நான் கிளம்பியாச்சு உங்களுக்கு காத்தும் கொஞ்சம் அறிவும் வரனுங்கர ஆசையோடு :)
இது வெறும் Escapism தான் .வெறும் 'பொதுஉடமை ' வெத்து வெட்டு வார்த்தை பிரயோகங்கள் இங்கே எடுபடாது
உண்மையில் தூங்குபவரை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல பாசாங்கு செய்பவரை ? ..............
முடிவாக 'பொதுஉடமை " என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு இவர்கள் பம்பாத்து பண்ணுவார்கள்.
அரசு,ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கம், பணம்படைத்த தொழில் அதிபர்களின் வர்க்கம், லச்சம் வாங்கியே வயிறும் வீடும் வளர்க்கும் அரசு, பொதுத்துறை ஊழியர்கள் வர்க்கம் போல. இந்த பொதுஉடமை வாதிகளும் ஒரு
சுரண்டல் வர்க்கம் தான் என்றால் கோபம் வரத்தானே செய்யும்.
சூப்பர் ஏழர,
பொதுவாப் பேசாதீங்க. ஆதாரம் இருக்கான்னு கேட்டீங்க. ஆதாராத்தச் சொன்னா, சேதாரம் வேணாம்னு ஓடீட்டிங்களே?
இதுதானா உங்க டக்கு?
A amn questioned abt killings of more than 500 Tamil fishermen is in spl prevention act.
THE KILLING CONTINUES
SPORTS AND ALL GOOD MONEY FETCHING MEDIA PERFORMERS ARE NOT Tamils.
Till date the common mans music "Folk" is not given a stage in Tamilnadu
Mr. Shankar disclosed the land scam of Jankit and Nakeeran Kamaraj is arrested in a criminal case.
We Tamils are refugees in our own land
Nothing can be done. Still if you want some thing to happen add a brahmin with you.
Otherwise ""Maanam Ketta nammakku ini Ina unarvu Mana unarvu, oru mayirum vendam!, Uyir pizhachu vazha muyarchi seivone.
ஏழர, நீங்கதானே வ.வேலனிடம் ஆதாரம் கேட்டீங்க. கொடுத்தவுடன் ஏன் எஸ் ஆகறீங்க? விவரங்கள் சேகரிக்க வேண்டுமென்றால், அதைச் சொல்லிச் செல்லலாமே!
அப்புறம், பல இடங்களில் மங்களூர் சிவா கேஸ் போடுவதாகச் சொன்னார் என்கிறீர்கள். இதை ம.சிவா சொன்ன்னாரா இல்லை வேறு யாராவது சொன்னார்களா? லின்க் இருந்தால் கொடுக்க முடியுமா?
அண்ணாச்சி, உங்க பின்னூட்டத்த நேத்து பாக்கல.. இமெயில்ல யாரோ கிளம்பு காத்து வரட்டம் போட்ட பின்னூட்டம் போடவும் சரிங்க ஒகே கிளம்பறேன்னடுட்டேன் அவ்வளவுதான்..
இப்ப உங்கமேட்டருக்கு வருவோம்...
நேத்து நீங்க சொன்னது
/////அவர்களால் நன்றாக நடந்துகொண்டிருக்கும் தொழிற்சாலையை மூடத்தான் முடியுமே தவிர பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் தொழிற்சாலைகளை எடுத்து நடத்தியதாக எங்கும் /////
இதற்குத்தான் நான் ஆதாரம் கேட்டேன்.. எந்த நன்றாக நடந்த தொழிற்சாலையை தொழிலாளர்கள் மூடினார்கள், பட்டியல் கொடுங்கள் என்று..
பதிலாக இப்படி எழுதுகிறீர்கள் !
////பழனி, சின்னக் கலையம்புத்தூரில் இருந்த விஜயகுமார் மில்லை மூடியதில் பெரும்பங்கு தோழர்களுக்கே. ///
அது என்ன பெரும்பங்கு? அப்ப மிச்ச பங்கு யாருக்கு? விஜயகுமார் மில்லின் பிரச்சனை என்ன? ஏன் தொழிலாளர் போராட்டம் நடத்தினர்.. அதுவரை நன்றாக நடந்த மில் என்றால் தொழிலாளர் போராட்டம் நடத்தியவுடன் மூடிவிடுமா.. முழு விவரமும் சொல்லுங்க சார். பிரச்சனை என்ன்னஃனு தெரியாம எப்படி தொழிலாளர் மீதே தவறு என்று ஒரு தலைப்பட்சமான முடிவுக்கு வருவது?
அப்புறம் ஒரு கேள்வி? விஜயகுமார் மில் தொழிலாளர் மீதே தவறு என்று வைத்துக்கொள்வோம்.. அந்த ஒன்றை வைத்தே தொழிலாளர்கள்தான் நன்றாக நடக்கும் மில்லை மூடுவார்கள் என்பது நேர்மையான மதிப்பீடா..
அதற்கு நேர் எதிராக உண்மை முகத்லில் அறைகின்றதே.. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையினால் மூடப்பட்டா ஆலைகள் இந்தியாவெங்கும் எத்தனை ஆயிரம், சிறு பெரு தொழிற்சாலைகள் முதல் விவசாயம் வரை கோடிக்கணக்கான பேர்கள் இந்த முதலாளித்துவ கொள்கையினால் அழிந்து போனது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இந்தியாவை விடுங்கள் கம்யூனிசத்தின் ஜன்ம விரோத அமெரிக்க மண்ணிலேயே நூற்றுக்கணக்கி நிறுவனங்கள் திவாலாவதும் பலலட்சம் பேர்கள் வேலையில்லாமல் வாடுவதும் கம்யூனிஸ்டுகளாலா? இப்படி யதார்தம் இருக்கும் போது உண்மைக்கு விரோதமாக கம்யூனிஸ்டுகள் ஆலைகளை மூடுவார்கள் என்ற உங்கள் கருத்தை எப்படி மதிப்பிடுவது? கம்யூனிச வெறுப்பு என்பதை தவிர!
அண்ணாச்சி, உங்க பின்னூட்டத்த நேத்து பாக்கல.. இமெயில்ல யாரோ கிளம்பு காத்து வரட்டம் போட்ட பின்னூட்டம் போடவும் சரிங்க ஒகே கிளம்பறேன்னடுட்டேன் அவ்வளவுதான்..
இப்ப உங்கமேட்டருக்கு வருவோம்...
நேத்து நீங்க சொன்னது
/////அவர்களால் நன்றாக நடந்துகொண்டிருக்கும் தொழிற்சாலையை மூடத்தான் முடியுமே தவிர பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் தொழிற்சாலைகளை எடுத்து நடத்தியதாக எங்கும் /////
இதற்குத்தான் நான் ஆதாரம் கேட்டேன்.. எந்த நன்றாக நடந்த தொழிற்சாலையை தொழிலாளர்கள் மூடினார்கள், பட்டியல் கொடுங்கள் என்று..
பதிலாக இப்படி எழுதுகிறீர்கள் !
////பழனி, சின்னக் கலையம்புத்தூரில் இருந்த விஜயகுமார் மில்லை மூடியதில் பெரும்பங்கு தோழர்களுக்கே. ///
அது என்ன பெரும்பங்கு? அப்ப மிச்ச பங்கு யாருக்கு? விஜயகுமார் மில்லின் பிரச்சனை என்ன? ஏன் தொழிலாளர் போராட்டம் நடத்தினர்.. அதுவரை நன்றாக நடந்த மில் என்றால் தொழிலாளர் போராட்டம் நடத்தியவுடன் மூடிவிடுமா.. முழு விவரமும் சொல்லுங்க சார். பிரச்சனை என்ன்னஃனு தெரியாம எப்படி தொழிலாளர் மீதே தவறு என்று ஒரு தலைப்பட்சமான முடிவுக்கு வருவது?
அப்புறம் ஒரு கேள்வி? விஜயகுமார் மில் தொழிலாளர் மீதே தவறு என்று வைத்துக்கொள்வோம்.. அந்த ஒன்றை வைத்தே தொழிலாளர்கள்தான் நன்றாக நடக்கும் மில்லை மூடுவார்கள் என்பது நேர்மையான மதிப்பீடா..
contd....
அதற்கு நேர் எதிராக உண்மை முகத்லில் அறைகின்றதே.. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கையினால் மூடப்பட்டா ஆலைகள் இந்தியாவெங்கும் எத்தனை ஆயிரம், சிறு பெரு தொழிற்சாலைகள் முதல் விவசாயம் வரை கோடிக்கணக்கான பேர்கள் இந்த முதலாளித்துவ கொள்கையினால் அழிந்து போனது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இந்தியாவை விடுங்கள் கம்யூனிசத்தின் ஜன்ம விரோத அமெரிக்க மண்ணிலேயே நூற்றுக்கணக்கி நிறுவனங்கள் திவாலாவதும் பலலட்சம் பேர்கள் வேலையில்லாமல் வாடுவதும் கம்யூனிஸ்டுகளாலா? இப்படி யதார்தம் இருக்கும் போது உண்மைக்கு விரோதமாக கம்யூனிஸ்டுகள் ஆலைகளை மூடுவார்கள் என்ற உங்கள் கருத்தை எப்படி மதிப்பிடுவது? கம்யூனிச வெறுப்பு என்பதை தவிர!
contd...
அடுத்து BSNL நிறுவனத்தை பற்றி சொல்கிறீர்கள்....
/////தனியாருடன் போட்டி போடுமளவுக்கு தொழிற்நுட்பமும், உட்கட்டமைப்பு வசதியும் கொண்ட பி எஸ் என் எல் இப்படிச் சீரழிய என்ன
காரணம்? /////
என்ன காரணம்? இதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? BSNLல்லின் நடுத்தற வர்க்க ஆபீசர்களெல்லாம் கம்யூனிஸ்டுகளா? நல்ல
வேடிக்கை.. அதிகார வர்க்கத்தினர் எந்த நிறுவனத்திலிருந்தாலுமே அவர்கள் மக்கள் விரோதமானவர்கள்தான் அது BSNL ஆ கலெக்டர் ஆபிசா
என்பதில் வேறுபாடில்லை.. ஏன் தொழிற்சங்கம் இல்லாத போலீசு துறை என்ன மக்களின் நண்பனாகவா நடந்து கொள்கிறது? ஏன் இதே தொழிலாளர் அமைப்புகள் உள்ள BHEL , ONGC போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் பல உலக நிறுவனங்களுக்கே சவால்விடவில்லையா?
contd...
contd...
அடுத்து தொழிற்சங்கம் என்றாலே கம்யூனிஸ்டுகள் என்ற புரிதல் பெரும் தவறு, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, இன்னும் பல கட்சிகள் சார்பிலும் சங்கங்கள் உண்டு. இவர்களுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்... ஏன் CPI , CPIM தொழிற்சங்கத்துக்கே கம்யூனிச வாசனை கிடையாது... வெறும் கூலிஉயர்வும் பணிபாதுகாப்போது போராட்டங்கள் எல்லாம் கம்யூனிசம் என்றால் பிறகு பாஜகவும் கம்யூனிஸ்டுதான். எனக்கும் கூடத்தான் இது போன்ற தொழிற்சங்கங்களின் அரசியலற்ற மந்தமான தன்மை மீது கடும் விமரிசனம் உண்டு ஆனால் இவர்கள் கூட இல்லையெனில் இந்திய விவசாயி போல இலட்சக்கணக்கில் தொழிலாளியும் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான்... முற்றும்
@மாணிக்கன்னே @ சுந்தர்.
அண்ணாச்சிக்கு பதில் சொல்லியாச்சு. அதை வாசிச்சுக்கங்க
@சுந்தர் ...
''தொலைபேசியில் கேசு போடுவதாக சொன்னீங்க அதுக்கு தயாராக இருக்கிறேன் '' என்ற தொனியில் மங்களூர் சிவாவின் பதிவில் பைத்தியக்காரன் பின்னூட்டம் எழுதியிருந்தார். அதை மங்களூர் சிவா வெளியிட்டிருந்தார். இப்போ அவர் பதிவில் எந்த பின்னூட்டமும் இல்லை அதனால் என்னால் லிங்க கொடுக்க முடியவில்லை.
தவிர
என்ன பேசினாலும், எந்த விவாதத்திலும் சம்பந்தமேயில்லாமல் மங்களூர்சிவா பிரச்சனையை வைத்து விவாதம் திசை திருப்பப்படுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.. அதற்கு என் பதில் ''என்யா இதயே சொல்லி புலம்பறீங்க.. போய் கேசு போட்ட வினவை, சிவராமனை உள்ளே தள்ளி உங்கள் மனசை ஆத்திக்கங்க'' என்பதுதான்.
ஏழர ஒரு கேள்வி
ஜனநாயக நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உண்டு..
கம்யூனிஸ்ட் நாட்டில் ஜனநாயக கட்சி ஏதாவது உண்டா
சொன்னால் தன்யனாவேன்
சீனா கம்யூனிச நாடே இல்லை என்று வெ.இ.கார்த்தி சொல்லி விட்டான்..
அப்ப மாவோ என்று கொண்டாடுவது எல்லாம் பொய்தானா
இரும்பு, கம்யூனிஸ்டு நாடு எங்கே இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் நானும் தன்யனாவேன் :)
சீனாவுல மாவோ படத்தை
சும்மா அலங்காரத்துக்கு வச்சிருகக்காங்க.. எத்தன நாளைக்குன்னு தெரியாது :(
கியூபா கூட கிடையாதா..கம்யூனிசம் எங்குமே இல்லையா..அடக்கடவுளே..
நீங்கள்(கம்யூனிஸ்ட்) அமெரிக்காவை எதிர்க்க கேபிட்டலிஸ்ட் சதாம் உசேனை கூட ஆதரப்பீர்கள்..
ஏன் கேரள கம்யூனிஸ்டை ஆதரிக்க மாட்டீர்கள்..
பெண்,புரட்சி எல்லாம் வாய் வார்த்தை தானா
///கியூபா கூட கிடையாதா..கம்யூனிசம் எங்குமே இல்லையா..அடக்கடவுளே..///
ஆமா அதான் யதார்த்த நிலைமை!
////நீங்கள்(கம்யூனிஸ்ட்) அமெரிக்காவை எதிர்க்க கேபிட்டலிஸ்ட் சதாம் உசேனை கூட ஆதரப்பீர்கள்..///
இது அடுத்த பெரிய அவதூறா இருக்கு.. யார் அமெரிக்காவை எதிர்க்க சதாமை ஆதரிச்சது..
மொதல்ல சதாமே அமெரிக்க கைக்கூலி என்பதாவது தெரியுமா.. அமெரிக்கா ஆப்கான், இராக் மேல் தொடுத்திருக்கும் அநீதியான போரை எதிர்பது வேறு பின்லேடன் சதாம் என்ற முன்னாள் அமெரிக்க கைக்கூலிகை ஆதரிப்பது வேறு.. தயவு செய்து நாங்கள் சதாமை ஆதரிக்கிறோம் என தடாலடியாக உளரவேண்டாம்
///ஏன் கேரள கம்யூனிஸ்டை ஆதரிக்க மாட்டீர்கள்..///
ஏன் என்றால் அவர்கள் முதலாளித்துவ தாசர்களாகவும் மக்கள் விரோதியாகவும் இருப்பதனாலும்.. கம்யூனிசம் என்று பெயரை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றுவதால்
///பெண்,புரட்சி எல்லாம் வாய் வார்த்தை தானா///
இல்லை பெண் புரட்சி என்பதற்கெல்லாம் செறிவான அர்த்தம் இருக்கிறது..வெற்று வர்த்தையில்லை
அப்ப கம்யூனிசம் ஜெயிக்காது அப்படித்தானே..கேரள கம்யூனிசம் பற்றி இந்த அளவாவது ஒத்துக் கொண்டதற்கு நன்றி
அப்படியே இன்னும் கொஞ்சம் தான் ஒத்துக் கொண்டாம் நேர்மையானவர்கள் என்று நம்பலாம்..ஏன் உங்களுக்கு வேண்டிய பெண் என்றால் மட்டும் போராட்டம் செய்ய களம் இறங்குகிறீர்கள்.
ஏன் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் தட்டிக் கேட்பேன் என்று சொன்னது பொய்தானே..அது சரி வீடியோ ஆதாரமிருந்தால் எப்படி கேட்பீர்கள்.உங்களுக்கு பிடிக்காத ஜாதி,கட்சியில் இருந்தால் உடனே வர மாட்டீர்கள்.என்ன கொடுமை ஏழர இது.
ஏழர,
என் பின்னூட்டத்தில் நான் தெளிவாகவே கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சில வரிகளை மட்டும் எடுத்தாள்கிறீர்கள். நான் சொன்னதைப் புரிந்துகொள்ள முடியவில்லையா, அல்லது மறுக்கிறீர்களா?
கம்யூனிசம் என்றால் என்னவென்று புரியாமலேயே கிரிக்கெட் மேட்சு போல ஜெயிக்கும் ஜெயிக்காது என்று பேசிவரும் உங்களுக்கு அனா.ஆவன்னாவிலிருந்து
ஆரம்பிக்க இப்போ எனக்கு அவகாசம் இல்லை.
நேரில் வரும்போது பேசுவோம்.. முடிந்தால் சேட்டில்!
மற்றபடி உங்கள் பதிவிலேயே கேளரசம்பவத்தை கண்டித்த எனது பின்னூட்டம் வந்துள்ளது.. மீண்டும் தெரிந்த பெண் பிடிக்காத சாதி என்று நீங்கள் உளர ஆரம்பித்தால் அதற்கு என் பதில் 'உங்களுடைய இரண்டு பதிவுகளில் எனது பின்னூட்டங்களைவாசித்து கொள்ளவும்' என்பதுதான்..
ஏழர உங்களுக்கு ஏற்ற வரிகளை மட்டும் எடுத்து கொண்டு விவாதம் செய்யக் கூடாது.
நேரடியாக ஒரு கேள்வி - ஆண்டர்சன் ரஷ்யனாக இருந்திருந்தால் இந்த அள்விற்கு போராட்டம் இருக்குமா.
ஏதாவது கேள்வி கேட்டால் எனக்கு தெரியவில்லை என்று சொல்லி திசை திருப்பக் கூடாது. உங்களுக்கு வேண்டப்படாத பெண்கள் என்றால் பின்னூட்டத்தில் மட்டும் தான் கண்டனம்.டாக்டர் ருத்ரன் சொன்னது சரி தான்.அவர் என்ன சொன்னார் என்பது முகிலனின் பின்னூட்டத்தில் உள்ளது.
அப்படியே அண்ணாச்சி,அதியமான் இவர்களின் பின்னூட்டத்தையும் இன்னொரு பார்த்து நீங்கள் பதில் சொல்லாமல் விட்ட்தற்கு பதில் சொன்னால் கொஞ்சம் வரலாறு தெரியும்
///என் பின்னூட்டத்தில் நான் தெளிவாகவே கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சில வரிகளை மட்டும் எடுத்தாள்கிறீர்கள். நான் சொன்னதைப் புரிந்துகொள்ள முடியவில்லையா, அல்லது மறுக்கிறீர்களா?///
@வடகரை வேலன் @இரும்புத்திரை
பின்னூட்டத்திற்கு நான் பதில் சொல்லாமல் விட்டது எது என்று சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம்?
இரும்பு!
விவாதிக்க முடியவில்லையெனில் உளராமல் அமைதிகாப்பது நல்லது.
உங்க அளவுக்கு பேச முடியுமா ஏழர..முடியவே முடியாது..ரஷ்யா அணு ஆலை விபத்து என்றால் போதும் உளறுகிறேன் என்று சொல்லி விடுவீர்கள்
/////ஏதாவது கேள்வி கேட்டால் எனக்கு தெரியவில்லை என்று சொல்லி திசை திருப்பக் கூடாது. உங்களுக்கு வேண்டப்படாத பெண்கள் என்றால் பின்னூட்டத்தில் மட்டும் தான் கண்டனம்.டாக்டர் ருத்ரன் சொன்னது சரி தான்.அவர் என்ன சொன்னார் என்பது முகிலனின் பின்னூட்டத்தில் உள்ளது.////////
இதுதான் உளரல்! மற்றபடி ரசியா ஒரு கம்யூனிச நாடு இல்லை என்று சொன்ன பிறகு இன்னமும் உங்கள் கருத்தை மாற்றிக்களொள்ள மறுத்தால் நான் என்ன செய்ய முடியும்?
சரிங்க ஏழர வாங்க நாம போய் நோக்கியாவில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் ஆரம்பிப்போம்.வினவில் கள்ளக்காதல் பற்றி எழுத நேரம் இருக்கும்.இதற்கு நேரம் இருக்குமா.இது தெரியாம நான் தான் உளறி விட்டேன்.
உங்களை கேள்வி கேட்டால் பைத்தியக்காரப் பட்டம் தான்..அதுவே பதிவு எழுதி தந்தால் அதுவும் நீங்கள் வழங்கும் பட்டத்தைப் புனைப்பெயராக வைத்து கொண்டு
Post a Comment