இணையம் மூலமாக நெருங்கிய நண்பரானவர் அவர்.தற்போது கொஞ்சம் என்ன நிறைய காஸ்ட்லியான நகரத்தில் வசிக்கிறார்.எனக்கு சாருவை பிடித்தவர்களை விட அவரை பிடிக்காதவர்களுடன் நிறைய நெருங்க முடிகிறது.வித்தியாசமான பார்வை கொண்டவர்.தீவிர இலக்கிய ஆர்வமுள்ளவர்.ப்ளாக் எழுதுங்க என்று கெஞ்சி கேட்டாலும் மறுத்து விடுகிறார். இனி அவரிடம் கேட்க வேண்டும் - எனக்காவது எழுதி கொடுங்கள் நம் பதிவுலகின் தங்கங்கள் பாணியில் பெயர் வாங்கி கொள்கிறேன். அதற்கு முன் அவரிடம் எச்சரிக்கை செய்ய வேண்டும் - கடவுச்சொல் பத்திரம் என்று.
நேற்று இன்சப்ஷன் படத்தில் ஆரம்பித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பாரதி ஆங்கிலேயர்களிடன் மன்னிப்பு கடிதம் கொடுத்திருக்கிறாரே என்ற விவாதம் வந்ததும் சொன்னார். அன்று ஆங்கிலேயர்களுடம் பம்மாதவர்கள் கொஞ்சம் தான் உண்டு. இரண்டு பெயர்களை சொல்லி அவர்களும் எழுதியிருக்கிறார்கள்.பிற்காலத்தில் அரசியல் அவர்களுக்கு என்று ஆனப்பின் அந்த கடிதம் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று சொன்னார். பாரதி பாப்பான் என்று ஆழமாக எதிர்வினை செய்யப்பட்ட சமீபத்திய பதிவில் ஏன் பாரதி மாட்டுக்கறி சாப்பிட்டதை குறிப்பிடாமல் விட்டு விட்டார் என்று கேள்வி வைத்தார். அது தான் இன்று எல்லோருடைய நிலையும் அவர்களுக்கு தேவைப்படுவதை மட்டும் எதிர்வினை செய்ய எடுத்து கொள்கிறார்கள் என்று நிதர்சனம்.
அடுத்து சாரு - நேற்று இணையத்தில் எழுத ஆரம்பித்தவனும் நானும் ஒன்றா என்று வெளுத்து இருக்கிறார். அதற்கு அவர் பதில் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் காலத்தில் இணையம் இல்லை. திருவள்ளுவர் காலத்தில் பேப்பர்,பேனா இல்லை.அதற்காக நானும் சாருவும் ஒன்றா என்று திருவள்ளுவர் கேட்க மாட்டார் என்ற தைரியமே இப்படி பேச வைக்கிறது என்றும் இதுவே சுஜாதாவாகயிருந்திருந்தால் இன்று ப்ளாக்கர்களையும்,டிவிட்டர்களையும் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார் என்றார். கொஞ்ச நேரம் மவுனித்திருந்தேன்.திறமையாக எதிர்வினை செய்யும் ஆட்கள் எல்லாம் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
வாசகர் கடிதம் பற்றி பேச்சு வந்தது. வாசகனை தன் வசத்தில் வைத்திருக்க எல்லா எழுத்தாளர்களும் முயற்சி செய்வார்கள்.அந்த மயக்கத்தின் நீட்சி தான் வாசகர் கடிதம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சாரு,ஜெயமோகனுக்கு வரும் வாசகர் கடிதம் பற்றி பேச்சு வந்தது. க.நா.சு(ப்ரமணியன்) காலத்திலே இது ஆரம்பித்து விட்டது என்றும் அதாவது அவர்களே அவர்களுக்கு வாசகர் கடிதம் எழுதிக் கொள்வார்கள் என்று சொன்னார்.
உதாரணம் அவர் சாருவை சொன்னார். "சாரு உங்கள் புகைப்படத்தை வைத்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்..தினமும் இருபது முறை உங்கள் தளத்திற்கு வருவேன்.." இப்படி ஆரம்பித்து உருகலாக எழுதப்பட்டிருந்தது.அதை எழுதியது ஒரு பெண்.நிச்சயம் இதை சாரு அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் தான் எழுதியிருப்பார்கள் என்று சொன்னார்.
என் பங்கிற்கு நான் ஜெயமோகனை சொன்னேன். அனல்காற்று கதைக்கு பின் ஒரு வாசகர் கடிதம் வருகிறது.அதன் சுட்டியை இங்கு நான் கொடுக்கலாம்.பிறகு இணைய போர்னோ அது இது என்று குத்து டான்ஸ் போட வாய்ப்பிருப்பதால் அதன் சுருக்கம் மட்டுமே இங்கு.
"இந்த கதையில் வருவது போல எனக்கு ஒரு மூத்தப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.அதுவும் என் இருபத்தைந்தாவது வயதில்.அவள் என்னை பிடிக்குள் வைத்திருந்தாள்.அதிலிருந்து மீண்டு நான் பொறியியல் படித்து முடித்தேன்.தற்போது எனக்கு முப்பது வயது."
இருபத்தைந்தாவது வயதில் பொறியியல் படிப்பா.எந்த ஊரில் கொடுக்கிறார்கள்.சொன்னால் நானும் போய் சேர வசதியாக இருக்கும்.அனல் காற்று கதையிலேயே வயது குழப்பமிருந்தது என்று ஏற்கனவே சுட்டியிருந்தேன். அதனாலே என்னவோ இது ஜெயமோகனே எழுதி விட்டாரோ என்று சந்தேகம் ஏழாமல் இல்லை.
தவிர இருபது வருடம் இருந்தால் தான் இலக்கியவாதி,எழுத்தாளர் இல்லை.முதல்வன் படத்தில் ரகுவரன் சொல்வார் - "எனக்கு முப்பது வருட அனுபவமிருக்கு.." அதற்கு அர்ஜூன் - "எனக்கு முப்பத்தியொரு வருடம் அனுபவமிருக்கு..உன் அனுபவத்தையும் நான் சேர்த்துக் கற்றுக் கொண்டேன்.." என்று சொல்வார். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் புரட்டிப் போடும் இலக்கியம் படைக்க முடியும் என்பது தான் என்னுடைய எண்ணம்.
யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.படைப்பை பொதுவில் வைத்து விட்டால் அது படைப்பாளிகளுக்கு சொந்தமில்லை.ஜெயமோகன் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் முப்பது வருடம் சினிமாவில் இருப்பவரை நேற்று வந்த பதினெட்டு வயது பார்வையாளன் விமர்சிக்க கூடாது என்று சொல்வது போலுள்ளது.முப்பது வருட சினிமாவையும் பார்த்து வர வேண்டுமென்றால் ரொம்ப ஸாரி.
சாரு தன் தளத்திலிருந்து பதிவை நீக்கியது போல ஜெயமோகனும் நீக்கியுள்ளார்.அதில் எழுத்தாளனின் இரத்தத்தில் சுவடை பதித்து கொண்டு கேள்வி எழுப்புவர்கள் உங்களைப் போன்றவர்கள் தான்.ஏன் அந்த பதிவை நீக்கினார் என்று யோசித்து பார்த்தேன். இதற்கு பாலகுமாரனைப் பற்றி எழுதி அவர் வாசகரிடம் இருந்து வாங்கிக் கட்டிக் கொண்டார். வாசகர் என்ன சொன்னார் என்று பார்ப்போம். "பாலகுமாரன் கதையில் வருபவன் தன் முனைப்பு உடையவன், உங்கள் கதையில் வருவதை போல தன் ஆசிரியையே துரத்தி துரத்தி வலுக்கட்டாயமாக உறவு வைக்க மாட்டான், மாமியாரைப் பற்றி கனவு காண மாட்டான்.." இப்படி ஆரம்பித்து வெளுத்திருந்தார்.உடனே ஜெயமோகன் பம்மினாரே பாக்கலாம். வாசகர்களும்,பார்வையாளர்களும் சரி என்றுமே படைப்பாளியை விட புத்திசாலிகள்.திரும்பவும் அந்த வாசகர் ஞாபகத்தில் வந்திருப்பார்.காரணம் நீக்கப்பட்ட பதிவில் பாலகுமாரனைப் பற்றி எழுதியிருக்கிறார்.பழைய சுட்டி அவர் தளத்திலேயே இருக்கிறது.எனக்கு ஸ்கீரின் ஷாட் எடுப்பது வேலையில்லை.முடிந்தால் அதை நீக்கும் முன் படித்து கொள்ளவும்.
வாசகர் கடிதம் எனக்கு நானே எழுதியிருக்கிறேன்.அப்ப நான் இலக்கியவாதியா. எழுத(கிறுக்க) வந்து ஒரே வருடத்தில் உனக்கு நீயே வாசகர் கடிதம் எழுதலாம் என்று இலக்கியவாதிகள் சண்டைக்கு வருவார்களா.நாங்கள் எல்லாம் இப்படி எழுத இருபது வருடம் ஊறியிருக்கிறோம்.(எதுல சொன்னா நானும் ஊறுவேன்).இணையம் கிடைத்தால் தம்மாத்துண்டு எல்லாம் துள்ளிக் குதிக்குது இப்படி சொன்னால் ஆச்சர்யமல்ல.பி.ப சொன்னது போல இப்போதெல்லாம் ஜெ.மோவை நிறைய படிக்கிறேன்.வட நிறைய கொட்டிக் கிடக்கிறது.
Sunday, July 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இது தவிர சாரு சொன்னது போல் ஜெயமோகன் அவரை காப்பி அடிக்கிறாரோ என்ற சந்தேகமிருக்கிறது. முன்னால் ஒரு முறை சாரு நான் ஓரான் பாமூக்கை விட பெரிய எழுத்தாளன் என்று சொன்னார். பிறகு ஜெயமோகன் அப்படி சொன்னார்.
அடுத்து சாரு ஒரு பதிவு எழுதி நீக்கினார்.ஜெயமோகன் அதை காப்பி அடிக்கிறார்.
சாருவின் வாசகர்கள் எல்லாம் நள்ளிரவில் நன்றாக தூங்கிறார்களாம்.காரணம் ஜெயமோகன் ஆதரவாளர்கள் அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து தருவார்களாம். ஆனாலும் பாருங்க ஜெயமோகன் பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து யாரும் பதிவு போட்டு விளக்கம் தரவில்லை.கல்லா கட்டாது போல
மிகப்பெரும் ரவுடியான உடன் பிறப்பே...........நின் சேவை பிளாக்கருக்கு தேவை
நான் உடன்பிறப்பு இல்ல இலக்கியவாதி அதுவும் வளர்ந்து வரும்.வருங்காலத்தில் நிலா,செவ்வாய் கிரகத்தில் ஆரம்பிக்கும் நூலகத்தில் என் புத்தங்களுக்காக இப்பவே அடித்து கொள்கிறார்கள்.
இப்படி போனா சென்னையில் கால் வைக்க முடியாது
இன்னும் எட்டு மாதமிருக்கு..அதற்குள் கையால் நடக்க முயற்சிக்கிறேன்..
//யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.படைப்பை பொதுவில் வைத்து விட்டால் அது படைப்பாளிகளுக்கு சொந்தமில்லை//
true
aravind, valid arguement.
பரதியார் பாவும்.எதோசெய்யப்போய் என்னவொ ஆகிவிட்டது.
அவருடய மீசை ஏன் வந்தது ,அத்னால் அவருக்கு பார்ப்பாஙள் தொந்தரவு கொடுத்தார்கள் என்ரு படித்துள்ளேன்.
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி. என்னுடய கேள்வி எல்லாம் பாரதியை இவ்வளவு ஆரைய்ச்சிக்குளாக்குபவர்கள் சமகாலத்தில் இந்த ஆராஇய்ச்சியாளர்கள் சார்ந்துள்ள 'சாதீ' களின் சாதீய நோக்கை ஏன் விமர்சிப்ப்தில்லை?
//
திருவள்ளுவர் காலத்தில் பேப்பர்,பேனா இல்லை.அதற்காக நானும் சாருவும் ஒன்றா என்று திருவள்ளுவர் கேட்க மாட்டார் என்ற தைரியமே இப்படி பேச வைக்கிறது என்றும் இதுவே சுஜாதாவாகயிருந்திருந்தால் இன்று ப்ளாக்கர்களையும்,டிவிட்டர்களையும் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார் என்றார்
//
சரியா சொல்லியிருக்கார்............
பாரதி விமர்சனத்திற்கு உள்ளாகக் காரணம், தன் கவிதைகளில் தன்னை ஒரு அமானுசிய (Extraordinary human being) ஆக காட்ட விழைந்து மக்களும் அதை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
குறிப்பாக மன்னிப்புக்கடிதம். (Contrast it with அச்சமில்லை..அச்சமில்லை). தன் மகளுக்கு ஒரு ஆச்சார பார்ப்ப்னக்குடும்பத்து மாப்பிள்ளையைத்தேடி மணமுடித்து வைத்தது (Contrast it with சாதிகள் இல்லையடி பாப்பா).
just two examples.
அதே வேளையில், மற்றவர்கள் இவ்வளுவு தூரம் பிம்பம் வளர்க்கவில்லை.
பள்ளிக்குழந்தைகளும் பாமர மக்களும் இவ்வளுவு தூரம் brain wash பண்ணப்படவில்லை. பார்ப்ப்னர்கள் கடும் முயற்சி செய்து பாரதிகாலத்திற்குப் பின், அவரை அமானுசிய லெவலுக்கு கொண்டுபோய் வெற்றியடைந்தார்கள்.
எனவே இன்று பாரதியைப்பற்றிய விமர்ச்னம் முன்வைக்கப்பயப்படுகிறார்கள் மற்றவர்கள்.
மத்த ஹிபோக்கிரட்டுகள் பாரதியடைந்த லெவலுக்கு வரவில்லை.
குடிமக்களை வைத்து துன்பயியல் நாடகம் எழுதமுடியாது. மன்னனை வைத்தே, அல்லது மன்னனைப்போன்ற ஒருவனை வைத்தே, எழுத முடியும்.
Lets subject every one, howesoever high he was and may be, or considered to be, to our independent scruitiny. That is the essence of democratic living.
Lets welcome negative criticism on Bharathi.
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ....
"Lets subject every one, howesoever high he was and may be, or considered to be, to our independent scruitiny. That is the essence of democratic living."
that is exactly my point too. just as bharathy is human/ only human, everyone needs to be seen through critical eyes.the problem happens when we are selective in our history and memory....
Post a Comment