இந்தியாவை விட்டு வந்த இருபதாவது நாளில் அவளுடைய பிறந்த நாள்.நான்கு வருடங்களாக நினைவுக்கு வராதது இந்த வருடம் நினைவுக்கு வந்தது ஆச்சர்யமாக தெரியவில்லை.சிங்கப்பூரில் இன்னும் பக்கத்தில் அவளிருப்பதால் கூட நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.பழைய நினைவுகளால் கடும் தலைவலி. இந்திய உணவகத்திற்கு இன்னும் நடக்க வேண்டும் என்ற நினைப்பே கூடுதல் தலைவலியை உண்டாக்கியது.பாகிஸ்தான் ரெஸ்டாரண்டைக் கடந்து சீன ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தேன்.நான் என்ன சொன்னேனோ அவன் என்ன புரிந்து கொண்டானோ தெரியவில்லை.எதையோ கொண்டு வந்தான்.பிடிக்கவில்லை என்றாலும் சாப்பிட்டு தொலைத்தேன் காரணம் இந்திய மதிப்பில் அது தொன்னூறு ரூபாய்.வாந்தி வருவது போலிருந்தது.என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டு ஏற்கனவே இங்கிருந்த நண்பனுக்கு தகவல் அனுப்பினேன்.
"டேய் பீர் அடி சரியாகி விடும்.." பதிலுக்கு தகவலனுப்பி விட்டு போனை அமர்த்தி விட்டான்.அந்த நாய் தான் என்கிரிப்ட் முறையைக் கண்டுப்பிடித்தது யார் என்று வகுப்பில் கேள்வி கேட்ட போது ஏதோ பீர் பெயரை சொல்ல அதை நானும் வாந்தியெடுக்க பின் வந்த அவள் வகுப்புகளில் நான் மொத்தமாக வெளியேற்றப்பட்டிருந்தேன்.உண்மையா என்று கேட்க முடிவு செய்து காலடித்து காலடித்து நான் ஒய்ந்து விட்டேன்.இனி நாளை தான் பேசுவான் என்று தெரிந்து விட்டது.
"வாட் யூ வான்ட் சார்.." என்று சத்தம் கேட்டது.அட என்னைக் கூட சார் என்று சொல்ல ஆளிருக்கிறதே என்பது தலைவலியைத் தாண்டி இனித்தது.
"டைகர் பீர்.." சொல்லி விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆரவாரமில்லாத அழகு அவளிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.தமிழ்ப்பெண்ணாக இருக்குமோ என்று அவளை இன்னும் உற்றுப் பார்க்கத் தொடங்கிருந்தேன்.
"ஒன் ஆபர் இஸ் தேர் வார் ஹாட்..பை ஒன் கெட் ஒன் ப்ரீ.." அவளுக்காகவே அதை வாங்கலாம் போலிருந்தது.சரி என்று தலையாட்டி வைத்தேன்.காலையில் தான் நண்பர் சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்தது."இங்கே கொஞ்சம் உஷாரா இரு இல்ல..சூ அடிச்சி சுண்ணாம்பு தடவுவாங்க.." காதில் ஒலித்த வார்த்தைகளால் இருக்கும் சூழ்நிலை தெரிந்தாலும் அவள் பிறந்த நாளென்பதால் யார் என்ன சொன்னாலும் கேட்க முடிவு செய்திருந்தேன்.அவள் பேச்சைக் கேட்பதில்லை என்று சொல்லித் தான் பிரிந்தாள்.அதனால் இன்று யார் என்ன சொன்னாலும் கேட்க முடிவு செய்திருந்தேன்.
கொண்டு வரப் போனவளிடம் "தமிழா.." என்று கேட்டு வைத்தேன்.பதிலை எதிர்பார்த்து உதடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்."தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." என்று சொன்னவுடன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் அவள் கண்களில் லேசான சிரிப்பு தெரிவது போல் ஒரு உணர்வு.
கொண்டு வந்ததை எதுவும் கலக்காமல் கல்ப் கல்ப்பாக அடித்தேன்.எல்லோரும் என்னைப் பார்ப்பது போல் உணர்ந்தாலும் அவள் எந்த மேஜையில் இருந்தாலும் என்னைக் கவனிப்பது கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.
இந்தியா மாதிரி இல்லை இங்கு ஜக் அல்லது மக் தான்.அந்த ஜக்கை முடித்து விட்டு "ஹேய்.." அவளை அழைத்து "ஒன் மோர்.." என்று சொன்னேன்.கொண்டு பக்கத்தில் வைத்து விட்டு "என்ன லவ் பெயிலியரா..ஏன் இப்படி அடிக்கிறீங்க..உடம்பு.." என்று அவள் முடிப்பதற்குள் "தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." என்று சொல்லும் போது என் கண்களால் சிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.கண்ணைத் திறக்கவே முடியவில்லை எங்கு சிரிக்க.
"சரி தப்பு செய்துட்டேன்..தமிழ் தான்.. அடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா இல்லையா.."
"தமிழ் செம்மொழியாக மாறினாலும் மாறிச்சி..இங்கே அது சரக்காக மாறி விட்டதா..தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." சொல்லி விட்டு பலமாக சிரித்தேன்.
"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்.."
"ப்ரீன்னு சொன்னீங்களே..அதை எடுத்துட்டு வாங்க..அடிக்கணும்.."
"நீங்க பாதி காசு தந்தா போதும்..சரக்கெல்லாம் தர முடியாது.."
"இல்ல அது தான் வேணும்.."
"அதில்ல..நீங்க காசே தர வேண்டாம் .வீட்டுக்குப் போங்க முதல்ல.."
"டேய் மானேஜர்..இங்க வாடா.." கத்தத் தொடங்கியிருந்தேன்.எழுந்து கேஷியர் இருந்த இடத்திற்கு போகலாம் என்று நினைப்பதற்குள் கால் தடுக்கி விட்டது.முழுதாக விழுவதற்கு முன் அவள் தாங்கியிருந்தாள்.நினைவிழந்து கொண்டிருந்தேன்.
நினைவிருப்பதாக நினைத்துக் கொண்டு "சரி கொண்டு வரேன்..கூட என்ன வேணும்.."
"முத்தம்.."
"என்ன..ஆங்க் தர்ட்டி ரிங்கெட்ஸ்.." அங்கு யாருக்கோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
எனக்கு தான் என்று நினைத்துக் கொண்டு "ஒரு முத்தம் முப்பது ரிங்கெட்டா..ஜாஸ்தியா இல்ல.." அவள் பதில் சொல்லும் முன் மயங்கிருந்தேன்.
கண் முழித்து பார்த்தால் ஹோட்டல் அறையில் கூடவே யாரோ ஒரு பெண்ணுமிருந்தாள்."வாட் ஆர் யூ டூயிங் ஹியர்.." சொன்னது போலவே இது ஐட்டம் ஏரியா போல் தான் என்று நினைத்துக் கொண்டேன்.
"என்னமா நடிக்கிற..முப்பது ரிங்கெட் ஒரு முத்தத்திற்கு ஜாஸ்தி என்று சொல்லி அதுவும் அந்த கடை ஒனர் கிட்டேயே முத்தம் கேக்குற.."
பாஸ்போர்ட்,பர்ஸ் எல்லாமிருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டேன்.அதுவும் அவளுக்கு தெரிந்து விட்டது.
"என்ன கொழுப்பா..உன்னை எல்லாம் அப்பவே ரோட்ல தூக்கிப் போட்டு இருக்கணும்..எல்லாம் சரியாதான் இருக்கு..ஒசியில சரக்கடிச்சிட்டுப் பண்ற வேலையெல்லாம் பாரு..என்ன லவ் பெலியரா.."
"இங்க இருந்து சிங்கப்பூர் எவ்வளவு தூரம்.."
"நான் என்ன கேக்குறேன்..நீ என்ன சொல்ற.."
"அங்கப் போக விசா வாங்கணுமா.."
"டாக்ஸில போக முடியுமா..எவ்வளவு நேரம் ஆகும்.."
"ஆள விடு சாமி..இப்போ தான் தெரியுது ஏன் லவ் பெயிலியர்னு..சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா எந்தப் பொண்ணு தான் கூட இருப்பா..எதுக்கு சிங்கப்பூர்.."
"அவ என்ன காரணம் சொல்லி நிராகரிச்சாளோ அப்படி எல்லாம் இப்ப இல்ல , நானும் இங்கதான் இருக்கேன்னு அவளுக்கு சொல்லணும்.."
"ஆர்குட்,பேஸ்புக் இப்படி எதிலயாவது போட வேண்டியது தானே..அவ பாத்து தெரிஞ்சிட்டுப் போறா.."
"நேர்ல தான் சொல்லணும்..எதுல போனா சீக்கிரம் போகலாம்.."
"நடந்து போ..முதல்ல காசைக் கொடு..அப்புறம் எப்படி வேணாலும் போ.." அவள் பொறுமை இழந்திருந்தாள்.
காசோடு ஒரு துண்டுச் சீட்டில் என் எண்ணையும் கூடவே சிங்கப்பூர் எதில் போனால் சீக்கிரம் போகலாம் என்றும் கேட்டு வைத்திருந்தேன்.
மொபைல் அலறியது "என் நெஞ்சிலே ஒரு பூ பூத்தது.." ஏதோ ஒரு புது எண்.
"டாக்ஸியில் சிங்கப்பூர் இங்கிருந்து ஐந்து மணி நேரம்.டாக்ஸி வேண்டாம்..என்னிடம் கார் இருக்கிறது..வருகிறாயா :-).." என்றிருந்தது.
"ஏற்கனவே நீ தர வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது.." பதிலனுப்பினேன்.
"என்ன முத்தமா..நீ தான் காஸ்ட்லி என்று சொல்லி விட்டாயே.." என்று பதில் வந்தது.
"நான் சரக்கை சொன்னேன்..சரி சரக்கு மட்டும் தான் ஒண்ணு வாங்கினால் ஒண்ணி ப்ரீயா..நான் கேட்ட இன்னொன்று இல்லையா.." அனுப்பியிருந்தேன்
"எது முத்தமா.."
"இல்லை சைட்டிஸ்.." உள் மனது நீ கூடிய விரைவில் அடுத்த பாருக்கு போக வேண்டும் என்று சொன்னாலும் பதிலுக்காக காத்திருந்தேன்.
Monday, July 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஒரு மணி நேரம் இங்கே கும்மியடிங்க இப்போ வந்து விடுறேன்..
எதுக்கு வம்புன்னு ஓட்டுப் போட்டுட்டேன். அப்பாலிக்கா வந்து படிக்கிறேன். :)
எதுக்கு வம்புன்னு ஓட்டுப் போட்டுட்டேன். அப்பாலிக்கா வந்து படிக்கிறேன். :)
பீர்பால் கதையா? :))
ரைட்டு!
பீர்பால் கதையா
இரண்டிலும் வாக்கு அளித்து விட்டேன்
Nice Exp..Awesome Story...
- Gopi
"தமிழ் செம்மொழியாக மாறினாலும் மாறிச்சி..இங்கே அது சரக்காக மாறி விட்டதா..தட் இஸ் நாட் அவேலபிள் சார்.." சொல்லி விட்டு பலமாக சிரித்தேன்.
இந்த punch-ஐ ரசித்தேன்...
சரி singapore போகத்தான் போகிறீர்கள் என்று பார்த்தால், கடைசியில் "உள் மனது நீ கூடிய விரைவில் அடுத்த பாருக்கு போக வேண்டும் என்று சொன்னாலும் பதிலுக்காக காத்திருந்தேன்". இப்படி open-ended ஆக முடித்து விட்டீர்கள்.. எதிர்பார்க்கவில்லை...
கதைக்குத் தலைப்பிடும் விதத்தில் திரு. சுஜாதா அவர்களின் தாக்கம் தெரிகிறது...Nice one..
இப்போதுதான் தமிழிஷ்-ல் சேர்ந்துள்ளேன்.. இனிமேல் வாக்கிடுகிறேன்.. :)
Post a Comment