ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல சில படங்களின் காட்சிகளை உருவி எடுத்து ஒரு கலக்கு கலக்கி ஒரு ப்ளேவரில் கொடுத்தால் ஒரு புதுமையான படம் வந்து விடும். அப்படி ஒரு படம் தான் மதராசப்பட்டிணம்.எல்லோரும் சின்ன "ன" போட்டதால் தலைப்பும் புதிதாக தெரிகிறது. மொத்தமாக பார்த்தால் அது ஒரு மக்கிப் போன பொட்டலம்.இப்படியும் படம் எடுக்கலாம்.
எத்தனை பேருக்கு தான் இப்படி ஒரு கதைக்களம் அமைந்து தயாரிப்பாளர் கிடைத்து விடுவார். கிடைத்தும் விஜய் கோட்டை விட்டுள்ளார் என்பது தான் உண்மை. டைட்டானிக் ,அப்போகல்பிடா, லகான் , டெல்லி 6 என்று கலந்தடித்து திகட்டும் அளவிற்கு தந்திருக்கிறார்.
டெக்னீஷியன் டீன் ஒன்று வலுவாக அமைந்தால் கதை என்ற வஸ்துவே தேவையில்லை என்று எல்லோரும் நினைக்கிறார்களோ என்று சமீபகாலப் படங்கள் சொல்லாமல் சொல்வது போலவே தெரிகிறது. பழைய சென்னை எப்படியிருந்தது என்று பழைய சென்ட்ரல் ரயில் நிலையத்தையும்,ட்ராம் வண்டியையும், அண்ணா சாலையையும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால் பிரீயட் பிலிம் ஆகி விடுமா என்ன. அப்படியே போலீஸ்காரர்கள் உடை கால் சட்டை அளவிற்கு தானிருக்கும் என்று பழைய புகைப்படங்களில் பார்த்தாக ஞாபகம். ஒரு வேளை மதராசப்பட்டிணப் போலீசார் மட்டும் விதிவிலக்கு போல. விஜய் நீங்கள் பிரியதர்ஷன் எடுத்த சிறைச்சாலை படத்தை இன்னொரு முறை பார்க்கவும்.அதில் இருந்த காதலை விடவா இந்த காதலில் அழுத்தமிருந்தது. நாடோடி தென்றல் படத்தையாவது கொஞ்சம் எடுத்து பார்த்திருக்கலாம். ஆர்யா கழுதைக்குட்டியைக் காப்பாற்றி விடும் காட்சியில் நிறைய கழுதைகள் இருந்தது. கழுதைகளைப் பிடித்த அளவிற்கு கொஞ்சம் கதையையும் பிடித்திருக்கலாம். ஆர்யா தவிர எல்லோரும் மீசை வைத்திருக்கிறார்களே அது ஏன். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகவா.
மறுபடியும் தாலி செண்டிமென்ட், ஒண்டிக்கு ஒண்டி என்று காட்சிகள் இருந்தாலும் சரி விட்டுத் தொலைகிறது என்று பார்த்தால் கதாநாயகி ஆர்யாவுடன் பழகத் தமிழ் கற்றுக் கொண்டார் என்பது சரி. அதே அளவிற்கு வில்லனும் தமிழ் பேசுகிறாரே. அவரும் சைடில் ஏதாவது கழுதை மேய்க்கும் பெண்ணை காதலித்து விட்டாரா. கவர்னரும் அடுத்த காட்சியில் தமிழ் பேசுகிறார். அதுவும் ஆரம்பத்தில் ஹனீபா சொல்வது கூட புரியவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்தில் அவரும் தமிழ் பேசுகிறார்.லகான் படத்தை இன்னும் நாலைந்து தடவை பார்த்திருக்க வேண்டியது தானே.அதில் வில்லனாக வருபவன் கடைசி வரைக்கும் ஆங்கிலம் தான் பேசுவான்.
கதை தான் காதல் கதை என்று முடிவு செய்தாகி விட்டீர்களே அப்புறம் எதற்கு நடுவில் புரட்சி, வெடிகுண்டு எல்லாம். சரி சரி நெட்டிவிட்டி மிஸ்ஸாகி விடக் கூடாது அல்லவா.ஆர்யா சலவை செய்வதைத் தவிர எல்லாம் செய்கிறார். இந்த இடத்தில் கார்த்திக் என்று அருமையான நாயகனை சினிமா தொலைத்து விட்டது என்று கசப்போடு ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மல்யுத்தம் எல்லாம் செய்கிறார்கள் எதற்கு சரி ஏதோ விடுதலை படையில் போராட என்று பார்த்தால் என்றாவது வெள்ளைக்காரி வருவாள் அவளுக்காக அவளை காதலிப்பவன் சண்டைக்கு வருவான் அதுக்கு உதவும் என்று நாசர் பயிற்சி தந்தது போலுள்ளது. இப்படியெல்லாம் கேட்டா தர மாட்டார்கள் என்று அடிக்கடி உதார் விடும் நாசர் கதாபாத்திரம். நேதாஜி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கதாபாத்திரம் ஒரு புரட்சியாளன் ஒரு கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கும் காட்சியில் பல்லிளித்து விடுகிறது.
ஆர்யா முதல் படத்திலிருந்து ஒரே விதமாக நடித்து பிரசாந்த்,ஷாம்,ஸ்ரீகாந்த் என்று பீல்ட் அவுட் ஆனவர்களுடன் போட்டிப் போடுகிறார்.விரைவில் அந்த வரிசையில் சேரும் நாள் பக்கத்தில் தானிருக்கிறது. அந்த வெள்ளைக்காரப் பெண் நடித்த அளவிற்கு கூட நடிக்கவில்லை என்றால் என்ன செய்வது. ஆர்யாவை எல்லாம் ஒரு பாலா வந்தால் மாற்ற முடியாது என்று புரிந்தது.ஒரே ஆறுதம் ஹனீபா தான்.லொள்ளு சபா ஜீவா,பாலாஜி அளவிற்கு கூட ஆர்யா நடிக்கவில்லை என்பது தான் உண்மை. ஆர்யா நடித்த இடத்தில் இயக்குனரின் அண்ணன் உதயா நடித்திருந்தாலும் அந்த பெண் உதயாவுக்கு தான். இப்படி சொல்ல காரணம் கதை திராட்டில் தொங்கிக் கொண்டு நிற்கிறது. பிறகு வழக்கம் போல ஒரே காட்சியில் ஆஸ்பத்திரி,பள்ளிக்கூடம் என்று வளர்ந்து விடுவது இன்னொரு நகைச்சுவை. ஆர்யாவுக்கு துணியே சரியாக துவைக்க தெரியாது என்று படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன். இதில் சித்தப்பா (அபியும் நானும் படத்தில் பிச்சைக்காரராக நடித்தவர்) சொல்கிறார். "பாருங்க எவ்வளவு அழகாக இருக்கிறார் எங்க ஐயா..சினிமாக்காரன் பார்த்திருந்தால்.." இந்த படத்திலுமா ஹீரோ வோர்ஷிப்.
ஆர்யா தோற்றுப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 1962 களில் அந்த இடத்தை காலி செய்தார்கள் என்று பிறகு சொல்கிறார்கள். அப்பவே காலி செய்திருந்தால் கூவமாவது மிஞ்சியிருக்கும். இந்த கொடுமை தியேட்டரில் ஓட களவாணியைத் தூக்குமாறு களவாணித்தனம் செய்கிறார்கள். இது சேரனின் பொக்கிஷம் மாதிரி திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கும் இயக்குனரின் சோடையிழந்த இயக்குனரின் வியாபார உத்தி.
Sunday, July 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
படத்தின் இருந்த அனைவரின் உழைப்பையும் கேலி செய்திருக்க வேண்டாம்.
உங்க மனசுல என்ன ஜேம்ஸ் கேமருன், குப்ரிக்-னு நினைப்போ... படம் பார்க்க தெரில்ன்னா
பொத்திகிட்டு இருக்கனும்... ஒரு சிறந்த படத்தை நானும் விமர்சனம் போடுறேன்னு நாறடிக்ககூடாது...வந்தாடாய்ங்க ஆளக்காளு சொம்பை தூக்க்கிட்டு...
உங்க அளவுக்கு என்னால படம் பாக்க கண்டிப்பா முடியாது..படம் பார்க்க தெரிந்தால் சொம்பு தூக்கிட்டு வரலாமா இப்போ நீங்க தூக்கிட்டு வந்த மாதிரி சொல்லுங்க நாஞ்சில் பிரதாப்..சிறந்த படம் தான் - இதுக்கு 26 ஆஸ்கர்,நாலு ஆம்பாசிடர் கார் கிடைக்கும்னு நினைக்கிறேன்..
அப்பாடி ஒரு பாலோயர் காலி..நிறைய பேர் படிச்சா எனக்கு அலர்ஜி வந்துரும்னு டாக்டர் சொல்லியிருக்கார்..
Ada pavi. unkalaiellam evan tamil cinema paka sonnathu. oru taste illa. Hollywood cinema mattumthan cinema va. ippadi sonna neenga periya arivali nu oru nenaipu.
Nanum follow panratha pathi yosikren.
:)
முன்னோட்டம் (trailer-னு நினைக்கிறேன்) பார்த்த நிமிஷமே Lagaan ஞாபகம் வந்ததால் இந்த படத்தை தவிர்த்து விட்டேன்..exam தப்பிச்சுதுடா சாமி...Amy Jackson மட்டும் மிக அழகாகத் தெரிகிறார்... ஆனால் அதற்காக இந்த படத்தின் promotion நிகழ்ச்சிகளில் அவரை நடுவில் உட்கார வைத்து சுற்றி உள்ள அனைவரும் தமிழில் பேசுவது பெரிய அநாகரிகமாகப் பட்டது... என்ன கொடுமை sir இது???
விமர்சனம் அப்படீங்கிற பேர்ல மத்தவங்க உழைப்பை கேலி செய்ய வேண்டாமே!!!
இரும்பு சரியான விமரிசனம்!.
5 ரூபா கொடுத்து வாங்குற டீ பத்தி கருத்து சொல்ல்லாம் 200 ரூவா செலவழிச்ச சினிமா நல்லால்லன்னு சொல்லக்கூடாதா?
இதுக்காவ டிஏ பேட்டாவெல்லாம் கொடுத்து ஜேம்சு கேமரோனையும் அவங்கன்னன் விட்டலாச்சாரியா ஜூனியரையும் ஆலிவுட்டுலேருந்து இட்டுகினு வரனுமா?
நாடோடித்தென்றலையும் உல்டா செஞ்சிருக்காங்க
நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எனக்கும் சிறைச்சாலைதான் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தது. அந்த படத்தில் எல்லாமே இருக்கிறது. சுதந்திர போராட்ட உணர்வு, காதல், சந்தர்ப்பவாதம், நட்பு, அந்த சமயத்தில் நமக்கு ஜெர்மனி நாட்டிடமிருந்த ஒரு மறை முக ஆதரவு, இந்து முஸ்லீம் பிரச்சனை, மிதவாதமா, தீவிர வாதமா இதற்கிடையில் மோகன் லால் ஊரில் உள்ள அந்த பெண்ணின் ஏக்கம், மேலும் ஆங்கிலேயர்கள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல அவர்களிலும் கனவான்கள் உள்ளனர் என்ற முறையில் அந்த மருத்துவராக வருபவரின் நியாத்திற்கான குரல்,புதிதாக நடிக்க வருபவரே தயங்கும் அந்த செருப்பை நாவால் திரு.மோகன் லால் சுத்தம் செய்யும் காட்சியென... ஒரு பீரியட் பிலிம்ற்கு உண்டான அத்தனை தகுதிகளும் கொண்ட அந்த சினிமாவை, முயற்சியை நம்மால் அவ்வளவாக கவனிக்க படவில்லை.ஆனால் கதையில் எந்த புதுமையும் இல்லாத வெறுமனே டெக்னில் திங் மட்டுமே உள்ள இந்த படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.
நீங்க மதராசபட்டினம் நல்ல இல்லன்னு சொன்னிங்க சரி....
ஆனா களவானி supernu சொன்னிங்க பாருங்க இதுல இருந்தே உங்க விமர்சனத்தோட லட்சணம் நல்லாவே தெரியுது
மிகச் சரியான விமர்சனம். நான் பாதி படத்திலேயே வந்துவிட்டேன். ஆனா, 12 படிக்கிற அக்கா பையன் படம் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றான். எனக்கு என்னமோ நமக்கு வயசாயிடுசு. நம்ம நாடோடித் தென்றல் காலத்து ஆளுங்க போல. அவனக்கு அந்த படமே தெரியல. இந்த படம் இள வயதினருக்குன்னு நினைக்கிறேன்.
Post a Comment