ஜெயம் ராஜா - கோடு மேல அலுங்காக குலுங்காம இன்னொரு கோடு போடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.இப்படி என் தம்பி படிக்கும் போது பேசி நொந்தவர் தான் ஜெயம் ராஜா. இன்னைக்கு கோடு மேல கோடு போட்டு பேப்பர் கிழிஞ்சு போச்சு. எம்.குமரன் படமும் ரவி தேஜா நடிச்சது தான்.அதுல பிரகாஷ்ராஜ் கேரளாவில் இருப்பார்.ஜெயம் ராஜா அதை மலேஷியா என்று காட்டி இஷ்க் என்ற இந்திப் படத்தில் சுட்ட காட்சிகளை எல்லாம் போட்டு ஒப்பேத்தி விட்டார். கிக் படத்தில் ரவி தேஜா மலேசியா வருவதால் இவர்களும் அங்கே போக வேண்டிய கட்டாயம்.தம்பிக்கு எல்லாம் தெலுங்கில் மட்டும் தான் உருவினார். விஜய்க்கு வீடியோ கேமில் இருந்து உருவி விட்டார்.
ஜெயம் ரவி - பாஸ் உங்களுக்கு பிஞ்சு மூஞ்சு.தயவு செய்து இந்த மாதிரி படத்தில் எல்லாம் அதுவும் ரவி தேஜா மாதிரியே நடிக்க வேண்டாம்.உங்களுக்கு அவர் மாதிரி நக்கல் இல்ல விக்கல் கூட வராது.
தமன்னா - இலியானாவும், தெலுங்கு ரசிகர்களும் இந்த படத்தை நல்லவேளையாக பார்க்கவில்லை. கொலை கேஸ்ல இருந்து தப்பிச்சிட்டீங்க.
ஷாம் - ஏன் சார் இந்த மர்டர் வெறி.அந்த பசங்க கூட சேராதீங்க.
சன் பிக்சர்ஸ் - இப்படியே மொக்கைகளா பாத்து பாத்து வாங்கி விடுங்க.அப்புறம் எந்திரன் அதோ கதி தான். அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாம்.அப்ப விளம்பரம்.
வடிவேலு - பீல்ட் அவுட் ஆகி உக்கார வேண்டிய நாள் தூரத்தில் இல்லை.பிரம்மானந்தம் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
டவுட் - சூட்டிங் எடுக்கும் போது இந்த படம் சைட் பை சைட் ஓடிக்கொண்டிருந்ததா.
விஜய் - உங்களுக்கு மட்டும் ஒரு டிவிட்டர்.
வேலாயுதம் - மெட்ராஸ் பாஷையில் முதல் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் தலைப்பை ரசிகர்கள் படம் வெளியானப் பின் பயன்படுத்துவார்கள் #ஆருடம்
Saturday, July 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆக மொத்தம் செம மொக்கா
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..
கலாநிதி மாறன் வழங்கும் ............இரும்புத்திரை புகழ் நடிக்கும் ..........வெள்ளித்திரை new அடுத்து வரப் போறதா பேச்சு . சம்பளம் சரியா வாங்கிடுங்க ...........விமர்சனம் நான் எழுதுறேன் .
Post a Comment