Thursday, July 15, 2010

அனல் காற்று,சாரு,ஜெயமோகன்,பாலு மகேந்திரா

நான் ஜெயமோகன் படிப்பதேயில்லை.ஊமைச் செந்நாய் என்ற நல்ல குறுநாவல் படித்த பின்னும் பெரிய ஈடுபாடு எல்லாம் வரவில்லை என்று சொல்வது தான் உண்மை. தவிர மும்பையில் வேலை பார்க்கும் போது ஜெயமோகனின் தளம் தடை செய்யப்பட்டிருந்தது.(பின்னூட்டத்தில் வந்து கேக்கக் கூடாது..உங்க தல தளம் வேலை செய்ததா என்று..பதில் ஆமாம்).பிறகு நைஜீரியாவில் நடந்த படுகொலை பற்றி எழுதிய போது எதிர்வினை எழுதி விட்டு ஜெயமோகன் ஆதரவாளர்கள் யாராவது வந்து கேள்வி கேட்டால் என்ன செய்வது என்று பயந்து(யாரு நீயி) அதை மூன்று நாட்கள் கஷ்டப்பட்டு படித்து முடித்தேன்.இங்கு வந்தபின் நேரத்தை கொல்ல வழியில்லாமல் அவர் தளத்தில் மேயத் தொடங்கினேன். இந்த நேரத்தில் சைடில் சாரு இணையதளம் போனால் மன நோயாளியை சமாளிப்பது எப்படி என்று எழுதியுள்ளார். அதை படித்தால் நான் மன நோயாளியாகி விடுவது உறுதி.

சாருவிடம் எனக்கு பிடித்ததே இரண்டு தான்.எழுத்துப் பிழைகள் மிகவும் குறைவு அல்லது அரிது. எதை எழுதினாலும் கீழே வரை வாசிப்பவனைக் கொண்டு வரும் சாத்தியம்.அவர் மற்றவர்கள் சொல்வது போல் பத்தி எழுத்தாளராகவே இருந்தாலும் அது சாத்தியமாகிறது.புரிந்தும் தொலைக்கிறது.எல்லோரும் முழுதாக படித்தவுடன் எதிர்வினை வைக்க கிளம்பி விடுகிறார்கள். இனி அவரிடம் சொல்ல வேண்டும் ஜெயமோகன் மாதிரி புரியாமல் எழுதுங்கள் என்று.சொல்லி விட்டு மீண்டு வந்தால் அடுத்த பதிவு எழுதுகிறேன். ஜெயமோகன் கன்னட எழுத்தாளர் விவேக்கின் சிறுகதையை மொழி பெயர்த்திருந்தார். சாருவிடம் இருந்த இரண்டு இவரிடம் இல்லாத காரணத்தால் சிக்கித் திணறி பாதியிலே ஓடி வந்து விட்டேன்.

அனல் காற்று கதை பாலு மகேந்திராவிற்காக ஜெயமோகன் எழுதியுள்ளார் என்று அவர் தளத்தில் இருந்த விமர்சனம் பார்த்ததுமே படிக்க முடிவு செய்து படிக்க ஆரம்பித்ததும் முதல் அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது.எழுத்துப் பிழை மற்றும் கதையின் கோர்வையின்மை இரண்டும் சேர்ந்து ஸ்டார்டிங் டிரபிள் தந்தாலும் அடுத்த அத்தியாயத்தில் இருந்து சூடு பறக்க ஆரம்பித்தது. விமர்சனத்தில் கதையை தெரிந்து கொண்ட காரணத்தினாலும் இருக்கலாம். முக்கோண காதல் காமக்கதை என்பதால் தொடரவில்லை. பாலகுமாரன் எழுதாமல் விட்டதையா ஜெயமோகன் இது மாதிரி கதைகளில் தொட்டு விடப் போகிறார்.இது மாதிரி உறவுச்சிக்கல் கதை நிறைய படித்திருப்பதால் சில இடங்களில் பாலகுமாரன் தெரிகிறார்.கலைஞர் சொன்னது சரிதான் - "படைப்பு என்பது இன்னொரு படைப்பில் இருந்து உருவாகிறது..அது இன்னொரு இன்னொரு படைப்பிலிருந்து..".இப்படி முடிவில்லாத பயணம் நடந்து கொண்டேயிருக்கும்.

முதல் மூன்று அத்தியாயம் முடிந்தபின் அடுத்தது ஏழாவது,ஒன்பதாவது,பதினான்கு மற்றும் கடைசி அத்தியாயம் மட்டும் தானிருந்தது.நடுவில் இருந்தது எல்லாம் அன்று வரவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது.படிக்க வேண்டுமானால் அந்தப் பக்கத்தை மெயில் அனுப்பச் சொல்லியிருந்தார்கள். அப்படி முயற்சி செய்தும் ஒன்றும் பலனில்லை.பிறகு கேடித்தனம் படித்து முடித்தேன். நான் இந்த கதையை படித்தபின் உறுதியெடுத்துக் கொண்டேன்.எழுத்துப்பிழை இல்லாமல் மற்றும் கோர்வையாக எழுதுவது என்று. அப்படி முடியாமல் போகும் பட்சத்தில் ஜெயமோகனே அப்படித்தான் எழுதுகிறார் என்று உதாரணம் காட்டி விடக்கூடாது என்ற பயம் தான்.

முரண்கள் நிறையவேயிருக்கிறது - அருணிடம் சந்திரா சொல்கிறாள் "உன் அப்பா மீது அம்மாவிற்கு முப்பது வருட வன்மம் இருக்கிறது என்று.."

அருண் சுசியிடம் சொல்கிறான் - " எனக்கு நாலு வயதாகயிருக்கும் போது அப்பா செய்த தவறால் அம்மா பிரிந்து விட்டாள் என்று.." இந்த இரண்டு வாதங்களை வைத்துப் பார்த்தால் அருணுக்கு முப்பத்து நாலு வயதாகிறது. சந்திராவிற்கு நாற்பது வயது என்று வருகிறது.

சந்திரா சொல்கிறாள் - "நீ நான் பார்த்து வளர்ந்த பையன்..பதினைந்து வருடமாக உன்னை எனக்குத் தெரியும்..நான் உன்னை என் இடுப்பில் தூக்கி வளர்த்திருக்கிறேன்.."

அருண் சொல்கிறான் - "நான் சந்திராவிடன் கல்லூரியில் படித்தவன்.."

34 - 15 = 19 பத்தொன்பது வயது பையனை இடுப்பில் தூக்கி வளர்த்திருக்க வேண்டுமென்றால் சந்திரா பெரிய ஆள் தான். தவிர சந்திராவின் மகன் நவீன் வயதிலும் சிறு குழப்பம்.

இப்படி நிறைய சின்னதாக குறைகள் இருந்தாலும் கதை எனக்குப் பிடித்திருந்தது. பெண்கள் வன்மத்தில் எப்படி பேசுவார்கள், வேண்டுமென்ற பட்சத்தில் எப்படி அழுவார்கள் என்று சொல்வதில் ஜெயமோகன் நூறு அடிக்கிறார். அதுவும் அசராமல் அடிக்கிறார்.

இதில் ஜோ என்ற கதாபாத்திரம் ஒரு இடைச்செருகல் என்றாலும் கதையை கொஞ்சம் நீளமாக காட்ட உதவியுள்ளது. அம்மா வயதுள்ள பெண்ணுக்கும் மாமா மகளுக்கும் இடையில் கிடந்து அல்லல் படும் கதையின் நாயகன்.

இந்தியப் படங்களில் பண்டிட் குயின் படத்தில் தான் அது மாதிரி கெட்ட வார்த்தைகளைக் கேட்டுருக்கிறேன் . தமிழ்ப் படமாக பாலு மகேந்திரா எடுத்து இருந்தால் சந்திரா அருண் பேசும் வசனங்களுக்கு பீப் பீப் என்ற சத்தம் கேட்டே எரிச்சலைக் கிளப்பியிருக்கும்.

இது மாதிரி பாணியில் பாலு மகேந்திரா ஏற்கனவே படம் எடுத்துள்ளார்.அதுவும் தமிழில் முதல் படமாக எடுத்திருக்கிறார். படம் அழியாத கோலங்கள். உறவுச்சிக்கல்களை வெளிப்படுத்திய படங்கள் அதாவது இரண்டு பெண்கள் - கோகிலா (கமலின் இன்றைய தேதி வரை அவர் நடித்ததில் சிறந்தப் படங்களில் ஒன்று), ரெட்டை வால் குருவி, மறுபடியும், சதி லீலாவதி, வண்ண வண்ணப் பூக்கள், ஜூலி கணபதி என்ற பட்டியலில் இது சேர்ந்தாலும் வ.வ.பூக்கள்,ஜூ.கணபதி மாதிரி படு மொக்கயாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். காரணம் நினைத்ததை எல்லாம் இங்கு எடுக்க முடியாது. இந்த மாதிரி கதைக்கு எந்த படத்தை உதாரணம் கொடுக்கலாம் என்றால் அதற்கு பொருந்தி வரும் படம் - த ரீடர். அப்படி எடுத்தாலும் பாலு மகேந்திரா,ஜெயமோகன் அவர்களுடைய வயதிற்கு திரும்ப வேண்டும் என்று ஆனந்த விகடன் தலையங்கம் எழுதும்.

நிறைய இடத்தில் கோட்டை விட்டிருந்தாலும் எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருக்கிறது. கதையின் சில இடங்களில் என்னை பொருத்திக் கொள்ள முடிந்தது. அதற்கு சின்ன எ.கா

"புறநானுரிலே ஒரு உவமை வருது வில்லிலேருந்து அம்பு போறப்ப அதன் நெழலும் கூடவே போகும்னு. ஆனா அம்பு நேரா போகும், நிழல் காடுமேடு குப்பைகூளம்லாம் விழுந்து பொரண்டு போகும். ரெண்டுமே போய் தைக்கிற எடம் ஒண்ணுதான்..”

இந்த இடத்தில் நானே கட்டுண்டேன். இந்த உவமை போதும் கதையை முழுதும் சொல்லி விட.

தங்கை மீது கோபம்.அவளை சீண்ட வழி கிடைக்காமல் நான் சொன்னேன் - " நான் ரமணிச்சந்திரனை விட( நான்?) நன்றாக எழுதுவேன்..".போனை வைத்து விட்டாள்.

என் மீதுள்ள கோபத்தில் நிறைய நண்பர்கள் "ஏன் சாரு மாதிரியே பேசுறீங்க.." என்று சொல்வார்கள். இனி வரும் காலத்தில் "ஏன் ஜெயமோகன் மாதிரி பேசுறீங்க.." என்று கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான். காரணம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இடத்தில் ஜெயமோகனை ரசித்தேன். எனக்கும் வயதாகிறதோ என்னவோ அடிக்கடி இப்படி பேத்துகிறேன்.

15 comments:

நீ தொடு வானம் said...

நீங்க சாரு ரசிகரா சொல்லவேயில்ல

சு.சிவக்குமார். said...

நீங்கள் ஜெயமோகனை எந்த வித பாதிப்புகளுமின்றி தீவிர படைப்பாளியாக இயங்கிய சில புத்தகங்களில் இன்னும் நன்றாகவே ரசிக்கலாம். கன்னியாகுமரி,ஆயிரம் கால் மண்டபம்,திசைகளின் நடுவே, ஆழ்நதியைத் தேடி,சங்கச்சித்திரங்கள் மற்றும் விஷ்னுபுரம்.

Romeoboy said...

தம்பி நீ நல்லவனா இல்ல கெட்டவனா... :(

அத்திரி said...

தலைப்புல சொல்லிருக்கிறவங்க எல்லாம் யாரு தம்பி?

Rajan said...

i appreciate the honestyin your writing .. good , continue to be who u r.. dont worry about how u would be viewed by others.

பா.ராஜாராம் said...

இரும்புத்திரை,

நீங்க சண்டைக்காரர் என்பது போலவே பயந்து பயந்து வந்து வாசித்திருக்கிறேன்.(இப்பவும் அந்த பிம்பம் மறையல)

now, i feel intresting u r! pls go..

அது சரி(18185106603874041862) said...

/
இனி வரும் காலத்தில் "ஏன் ஜெயமோகன் மாதிரி பேசுறீங்க.." என்று கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான். காரணம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இடத்தில் ஜெயமோகனை ரசித்தேன்.
//

நீங்களும் எஸ்கேப்பா?.... இனிமே அவரு யாருமே இல்லாத கடையில தான் பொரோட்டா போடணும் போலருக்கே...

அது சரி(18185106603874041862) said...

/
இனி வரும் காலத்தில் "ஏன் ஜெயமோகன் மாதிரி பேசுறீங்க.." என்று கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான். காரணம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இடத்தில் ஜெயமோகனை ரசித்தேன்.
//

நீங்களும் எஸ்கேப்பா?.... இனிமே அவரு யாருமே இல்லாத கடையில தான் பொரோட்டா போடணும் போலருக்கே...

இரும்புத்திரை said...

சண்டைக்காரன் என்பது ஒரு பிம்பம்..எல்லோரும் அதை தான் சொல்கிறார்கள்..பாசக்காரனும் இருக்கிறான்..வெளிப்படுவதேயில்லை..

Raju said...

யாரவது அங்கே லிங்க் வர வாழ்த்துக்கள்ன்னு சொல்லீறப்போறாங்க பாஸு..!

பாலா அறம்வளர்த்தான் said...

இந்த குறிப்பிட்ட கதை பாலகுமாரனை நினைவு படுத்தியது . அவரும் 'உடம்பெல்லாம் காதாக' போன்ற பாலகுமாரனின் சொல்லாடல்களை நிறைய உபயோகப் படுத்தி இருந்தார்.

சங்கர் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

YYYYYYYYYYYY??????????

சங்கர் said...

சாருவுக்கு தமிழ் மணத்தில அக்கவுன்ட் இருக்கா # டவுட்டு

Unknown said...

Daiiiiiii Overa scene podatha...
Ora comedy ah eruku po pa po...
Neenga oru comedy piece sir.....

இரும்புத்திரை said...

சீரியஸ் பீஸ் உங்களுக்கு இங்கே என்ன வேலை நாசமா

சங்கர் இப்போ தான் வழி தெரிஞ்சிதா..எதுக்கா இனிமே அப்படித்தான் டொண்டடொண்ட டொய்ங்க்

யோவ் ராஜூ நீங்க ஒரு ஆள் போதும்.