raji - "you people are killing me..all men are male savanist including you and my father.."
amar - "all girls are in safer side especially you and your mother.."
raji - "see this is mail savanism..why dont you add your mothers name in safer side.."
amar - "dont talk about her..you.."
ராஜி - "சொல்லு அசிங்கமா சொல்லு..இதான் நீ..தெரியுதா நீ ஒரு சுயநலப் பிசாசு.."
அமர் - "சரிதான் பொதுநலப் பிசாசு சொல்ல வந்துட்டா..பொத்திக்கிட்டுப் போடி.."
ராஜி - "இனி நான் செத்தா கூட என் மூஞ்சில முழிக்காத.."
அமர் - "அதான் என்னக் கொன்னுட்டியே..பிணம் எப்படிடி உன் மூஞ்சில முழிக்கும்.."
ராஜி சொல்லும் போதே கண்களில் நீர்ப்படலம் தெரிந்தது.முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தேன். அழுபவளைப் பார்க்கும் போதெல்லாம் முத்தமிட தோன்றும். ஏற்கனவே இரண்டு முறை முயற்சித்து வாங்கிக் கட்டியிருந்தேன்.
"அமர்..இருக்கிற எல்லா அரியர் பேப்பரையும் எப்படியாவது படிச்சி நீ எழுதணும்..அப்பத்தான் கேம்பஸ்ல வேலை கிடைக்கும்..அப்பா கிட்ட தைரியமா சொல்லலாம்..அமர் செய்வ தானே..எனக்காக நமக்காக.."
".."
"என் மேல சத்தியம் பண்ணு..முடியும்னு.."
"சத்தியம் எல்லாம் வேண்டாம்..முடியும்.." வார்த்தைகள் பலமிழந்திருந்தது.
"சத்தியம் பண்ணு.." பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
"முடியாது..காலையில மத்தியானம்..காலையில மத்தியானம்..இப்படி தொடர்ந்து மூணு நாள் எக்ஸாம்..எனக்கு நம்பிக்கையேயில்ல.."
"பண்ணு.."
சத்தியம் செய்து விட்டு தூக்கமில்லாமல் முதல் இரண்டு பரிட்சையை எப்படியோ முடித்திருந்தேன். பஸ்ஸில் வீடு திரும்பும் போது மட்டுமே கோழித் தூக்கம் தூங்கினேன்.
இரண்டாவது நாள் பரிட்சையின் போதே முகம் சோர்வில் நிறமிழக்கத் தொடங்கியது.இன்னும் ஒரு நாள் தான்.ராஜி ராஜி என்று எண்ணங்கள் நிமிடத்திற்கு ஒரு முறை அலறிக் கொண்டிருந்தது.
இன்னும் பனிரெண்டு மணி என்று மனம் முழுவதும் ஓடும் கடிகாரத்துடனே ஓடியது.அடுத்த நாள் பத்து மணிக்கு மாற்றி விட்டு நிறுத்தியிருந்தேன்.
எப்படியோ தூங்கி விட்டேன்.ராஜி காதில் கிசுகிசுப்பது மாதிரியேயிருந்தது.
"நான் செத்துருவேன்னு பயமாயிருக்கு அமர்.."
அப்படிடே ஓடிப் போய் பாத்ரூம் பக்கெட்டில் தலையை முக்கியிருந்தேன். பேலன்ஸ் இல்லாமல் கதவில் வலது கையை ஊன்றியிருந்தேன்.
மூச்சுத் திணறத் தொடங்கியிருந்தது.விபரீத ஆசை வந்து வந்து போனது.அப்படியே இருந்து விட்டால் ராஜி இல்லை,எக்ஸாமில்லை, போராட்டமில்லை.
யாரோ வெளியேயிருந்து கதவைத் தட்டத் தொடங்கியிருந்தார்கள்.தட்டிய வேகம் வலது கையில் தெரிந்தது.
தலையை வெளியே எடுத்தப்பின் பலமாக இருமத் தொடங்கியிருந்தேன். வெளியே அம்மா கூப்பிடுவது தெரிந்தது. "அமர் என்னடா பண்ற.." குரல் பலகீனமாக ஒலித்தது.
தலையில் தண்ணி வழிந்தடியே வெளியே வந்து நிலைத் தடுமாறி அம்மா தான் பிடித்ததாக ஞாபகம்.
"அம்மா..என்ன மன்னிச்சிருமா.." வார்த்தைகளை முந்திக் கொண்டு கண்ணீர் வந்தது.
"ராஜியாடா.."
கொஞ்சம் ஆச்சர்யம்.யாருக்குமே தெரியாது என்று நினைத்திருந்தேன்.
"இந்த வயசுல நீங்க எல்லாம் அழுதா அதுக்கு காரணம் யாரோ ஒருத்தியா தான் இருப்பா.." அம்மாவை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
"இல்லம்மா.."
"சின்ன வருத்தம் தாண்டா..ப்ளஸ்டூ படிக்கும் போது நான் சொன்னதை நீ கேட்கவே இல்லடா..அஞ்சு அஞ்சு நிமிஷம்னு தூங்கி தூங்கி நேரம் கடத்துவ..இன்னைக்கு அஞ்சு நிமிஷம் உன்னால தூங்க முடியல.." அம்மா கை மட்டும் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தது.
"அம்மா.." குழந்தை மாதிரி அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்.
"எல்லாம் நல்லதுக்கு தாண்டா..இனி எல்லா பரிட்சையையும் நீ ஜெயிப்ப..ஒரு பரிட்சையைத் தவிர.." அருள் வந்தது அம்மாவின் வாய் மட்டும் பேசிக் கொண்டேயிருந்தது.
பிரமித்து போயிருந்தேன்.என் மேல் தான் எவ்வளவு நம்பிக்கையிருக்கிறது. பாதுகாப்பை உணர்ந்தேன்.
"ராஜி உனக்கானவ இல்லடா.." அம்மாவை புரிந்து கொள்ள முடியாமல் உலுக்க தொடங்கியிருந்தேன். "டீ கொண்டு வர்றேன்..படி.." .அதற்கு பிறகு ராஜியைப் பற்றி அம்மா பேசவேயில்லை.
ஜூன் மாத முடிவில் வந்த முடிவில் எல்லா அரியரையும் கிளியர் செய்திருந்தேன்.
அமரின் 2004ம் வருட டைரியிலிருந்து.
3 comments:
ம்ம்
சில சமயங்களில..இல்ல இல்ல ...பல சமயங்களில இப்படித் தான் நடக்குது ...ஆணாதிக்கமுன்னு சொல்ல முடியாது ...வேறு காரணங்களும் இருக்கலாம் ...
நல்ல சம்பவக் கோர்வை. அம்மாவ புகழ்ந்து தள்ளியிருக்கீங்க. இது எப்புடிங்க ஆணாதிக்க பதிவு? :)
Post a Comment