Thursday, July 8, 2010

பரிந்துரை சுயமோகமும்,போலியின் உண்மை முகமும்

போலியின் முகத்திரையை ஏன் அவரே தொடர்ந்து கிழித்து கொள்வேன் என்று திரிகிறாரோ தெரியவில்லை.இன்று தான் தெரிந்தது போலியின் உண்மை முகம்.இன்று முகப்பில் தெரியும் கோவி கண்ணனின் தமிழ்மணம் பரிந்துரை படித்தீர்களா.படித்து பாருங்கள்.அதில்அவர் சொல்லாமல் சொன்ன நபர் தான் போலி மாதவராஜ்.

போலியின் முகத்திரையை நான் கிழித்த பதிவு முதல் பக்கத்தில் தெரிந்து கொண்டிருந்தது.அதை இதற்கு மேலும் யாரும் படித்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த போலி நாட்டாமை எனக்கு பின் வந்த பதிவுகளில் எல்லாம் சரியாக ஏழாவது ஒட்டை குத்தித் தள்ளியுள்ளார்.எனக்கு ஒன்றும் பரிந்துரையில் நிற்க போலியின் அளவிற்கு ஆசையில்லை.அவருக்கு தான் தன் எழுத்தை எல்லோரும் படிக்க சுயமோகம் பிடித்து அலைகிறார்.உதாரணம் காட்டுகிறேன் பாருங்கள்.

எனக்கு முன்னால் ஆறு ஓட்டு வாங்கியிருந்த சசிக்குமாரின் பதிவு முகப்பில் தெரிய ஒரு ஓட்டியில்லாமல் இருந்தது. அதற்கு மாதவராஜ் ஓட்டுப் போட வேண்டியது தானே.போட மாட்டார்.போட்டால் என் பதிவு கீழே இறங்காதே.http://vandhemadharam.blogspot.com/2010/07/automatic-share-button.html
இதுக்கு முன் ஸ்டார்ஜன்,உண்மைத்தமிழன்,வலைச்சரத்தில் எழுதியவர்களுக்கெல்லாம் அவர் ஓட்டுப் போட்டதேயில்லை.இன்று அவர் உண்மை முகத்தைக் காட்டும் பதிவை இறக்க இவர்களுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்.இன்றும் ஸ்டார்ஜன்,கே.ஆர்,பி செந்தில் பதிவி போட்டுள்ளனர்.ஏன் ஓட்டுப் போடவில்லை இந்த போலியான மனிதர்.சரி அதை விடுவோம் முகிலனின் பதிவுக்கு ஏன் போடவில்லை.போட மாட்டார் போட்டால் அவர் பதிவு கீழே இறங்கி விடும்.

ஸ்டார்ஜனின் இன்றையப் பதிவும் ஆறு ஓட்டுக்கள் வாங்கியிருக்கிறது.ஓட்டுப் போட வேண்டியது தானே.
http://tamilmanam.net/who_voted.php?id=590079. போட மாட்டார்.அதுவே அவர் முகத்திரையைக் கிழித்த என் பதிவை இறக்க ஓட்டுப் போடுவார்.அதுவும் சரியாக ஏழாவது ஓட்டு.
http://tamilmanam.net/who_voted.php?id=589593. அதற்கு முந்திய பதிவில் போடவில்லை. http://tamilmanam.net/who_voted.php?id=589520 .

அடுத்து வலைச்சரம் கே.ஆர்.பி செந்திலின் பதிவு. http://tamilmanam.net/who_voted.php?id=589575
இந்த பதிவிற்கும் ஏழாவது ஓட்டுப் போட்டிருக்கும் போலி மனிதர் ஏன் முந்தைய பதிவான புதன் கிழமை வலைச்சரப் பதிவில் ஏன் ஓட்டுப் போடவில்லை. http://tamilmanam.net/who_voted.php?id=589104
போட மாட்டார்.எதிர்பதிவுகள் அந்த சமயத்தில் இல்லையே.

அடுத்து அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவு.அட இதிலும் ஏழாவது ஓட்டு.என்ன கொடுமை போலி இது. http://tamilmanam.net/who_voted.php?id=589580 . அதற்கு முந்தைய பதிவில் ஏன் போடவில்லை. http://tamilmanam.net/who_voted.php?id=588282 .

அவருக்கு ஆபத்து என்றால் கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு படிக்காமலே ஓட்டுக் குத்துவார். முகப்பில் நிற்பதால் உங்கள் எழுத்து ஒன்றும் தரமானது கிடையாது.மனதில் போலித்தனமும் வக்கிரமும் வைத்து கொண்டு கருணாநிதி,ஜெயலலிதா என்று விமர்சிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. கூட கிடைக்கும் ஒரு ஆயிரம் ஹிட்ஸ்களுக்காக நீங்கள் கோல்மால் செய்யும் போது அதை விட அதிக ஆதாயம் கிடைப்பவர்கள் கோல்மால் செய்ய மாட்டார்களா என்ன.முதலில் உங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை எடுங்கள்.பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்.

சரி இவர் பதிவு கீழே இறங்கி விடாமல் இருக்க மற்றவர்கள் பதிவுக்கு போலி நிச்சயம் மைனஸ் குத்தியிருப்பார். போலித்தனத்தை உள்ளுக்குள் வைத்து விட்டு அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய வேண்டாம். அதுவும் ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதியை என்றோ இழந்து விட்டீர்கள்.யாராவது ஏதாவது சொன்னால் கருத்து திசை மாறுகிறது.எதிர் காற்றில் பறக்கிறது என்று பின்னூட்டப் பெட்டியை அடைத்து விட வேண்டியது.இல்லை அதை வெளியிடவே மறுப்பது.இப்படி எல்லாம் செய்தால் நீங்கள் நல்லவராகி விடுவீர்களா.

உங்களைப் போல சுயமோகம் பிடித்தவர்களை நான் பார்த்ததே கிடையாது.உங்கள் அணியினர் என்ன எழுதினாலும் ஓட்டு போடத் தெரியும் உங்களுக்கு ஏன் வாடாத பூக்கள்,வாடிய நாக்கள் என்று ஒரு விளம்பரம்.அதில் நர்சிம்மை விமர்சித்தது நிச்சயம் ஒரு படைப்பாளனாக கிடையாது.இவ்வளவு தில்லுமுல்லு செய்யும் உங்களிடம் எப்படி சரியான விமர்சனம் வரும்.உங்கள் தமிழால் எல்லார் கண்ணையும் கட்டி விட முடியாது மிஸ்டர் போலி.இனியாவது இந்த போலித்தனத்தை விடுங்கள்.அடுத்தவர்கள் முகப்பில் ஏறக்கூடாது என்பதற்காகவும்,உங்கள் பதிவு தொடர்ந்து பரிந்துரையில் நிற்க நீங்கள் மற்றும் உங்கள் சகாக்கள் மைனஸ் போடுவார்கள் என்று ஊருக்கே தெரியும்.

தமிழ்மணப் பரிந்துரை என்பதே தேவையில்லை.யாருக்கு சரக்கு இருக்கிறதோ அவர்கள் பதிவு வாசகர்களிடம் போய் சேரட்டும்.அதற்கு பதில் ரவுண்ட் ராபின் முறையில் சூடான இடுகை,பரிந்துரை,புதியவர்களின் பதிவு என்று மாற்றிக் கொண்டேயிருக்கலாம்.தமிழிஷ் தளத்தில் அப்படித்தான் செய்கிறார்கள்.தமிழ்மணத்தின் சக போட்டியாளர்கள் உங்களை எங்கே முந்துகிறார்கள் என்று தமிழ்மண நிர்வாகிகள் முடிவு செய்யட்டும்.இல்லாவிட்டால் பாரதி,ஆத்மா நாம்,செல்லப்பா மாதிரி பரிந்துரையும் நாங்கள் உபயோகிக்க வேண்டும் என்று போலிகள் பேசும்.பரிந்துரையை போலிகளின் கூடாரமாக மாற்றி விடாதீர்கள்.தமிழ்மண நிர்வாகிகள் இப்போதாவது நல்ல முடிவு எடுக்கட்டும்.

14 comments:

நீ தொடு வானம் said...

சொற்சுவர் எழுப்பியாச்சி போல

வால்பையன் said...

ஓட்டு போடுவது அவரவர் இஷ்டம்!
ஏன் இங்க போடல, அங்க போடல என்பது கொஞ்சம் ஓவரா இருக்கே!

ஏன் இப்படி!?

இரும்புத்திரை said...

வால் எங்கே போட்டாலும் பிரச்சனையில்லை..உங்ககளின் பதிவை இறக்க கங்கணம் கட்டிக் கொண்டு அடுத்தவர்களின் பதிவைப் படிக்காமல் அதற்கு ஓட்டுப் போட்டால் சரியா..என் பதிவு என்னைக்கு பரிந்துரையில் நின்றாலும் நிற்காவிட்டாலும் எனக்கு ஒரு பிரச்சனையில்லை.

அதுவும் அடுத்தவர்களுக்கு பாடம் சொல்லித் தருபவர்கள் செய்யும் காரியமா இது.பாவம் அந்த பேய் என்று சொற்சித்திரம் வராமல் இருக்க வேண்டும்.எல்லா பதிவுகளிலும் ஓட்டுப் போட்டால் நான் ஏன் கேட்க போகிறேன்.ஏன் இன்று மட்டும் இந்த வேலை என்று கேட்கிறேன்.அவர் முகத்திரையை கிழித்தப் பதிவு பரிந்துரையில் நின்றால் என்ன.நிக்காவிட்டால் என்ன.அது நிரந்தரமாகயிருக்கும்.

தல சாமி கும்பிடுவது அவரவர் இஷ்டம்.டவுசரைக் கிழிப்பது உங்கள் இஷ்டம்.கிழிக்கும் போது சிலருக்கு கோபம் வரும்.அது மாதிரி தான் இதுவும் தல.தப்பு செய்யும் போது தட்டிக் கேக்கணும்.எல்லால் நீங்க கத்து தந்தது தான்.

இரும்புத்திரை said...

இனி சொற்கதவும்,சொற்ஜன்னலும்,சொற்பூட்டும் போட வேண்டியது தான் பாக்கி.போட்டு விட்டால் சொற்கட்டடமாக மாறி விடும்.

வால்பையன் said...

//எல்லால் நீங்க கத்து தந்தது தான். //


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இனி ஒருபய இங்க நிக்கக்கூடாது

பிகேர்ஃபுல்!

என்னை சொன்னேன்!

:)

IKrishs said...

பதிவு சத்தியமா சம்பந்தமே இல்லாத கேள்வி! உங்களுக்கு road rash கேம் விளையாட தெரியுமா?

நந்தா said...

இங்கு போலி என்ற வார்த்தைப் பிரயோகம் எதற்கு என்று நான் தெரிந்து கொள்ளலாமா? இரண்டு அல்லது மூன்று பதிவுகளுக்கு ஏழாவதா ஓட்டு போட்டார் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவதா?

ஓட்டு போடுவதும் போடாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். எனக்கு ஆச்சர்யமாய் இருப்பது என்னவென்றால் இதெல்லாம் ஒரு விஷயம் பிரச்சினைன்னு பேசறீங்களே என்பதுதான்.

முதல்ல சின்னதா ஒரு குற்றச்சாட்ட்டை வைக்கறீங்க. அடுத்து அதை வெச்சு போலி, யோக்கியதை இல்லை, அது இதுன்னு ஒரு ஆட்டமே ஆடி தீர்க்கறீங்க. ஆக்ச்சுவலா என்ன பிரச்சினை உங்களுக்கு?

எனக்கு சுயமோகம் கிடையாது கிடையாது என்று சொல்லிக் கொண்டே நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரை ஏதோ விளம்பரத்திற்காக எழுதறீங்களோ என்ற எண்ணத்தைத்தான் எனக்கு தோற்றுவித்தது.

பி.கு: எனக்கு உங்களிடம் முன் விரோதம் எதுவும் இல்லை. மாதவராஜின் சகா வகையைச் சேர்ந்தவனும் இல்லை. வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளன் மட்டுமே. இந்தக் கட்டுரையைப் பொறுத்த வரை எனக்கு என்னமோ உங்களிடம் பிரச்சினை என்று தோன்றுகிறது.

http://blog.nandhaonline.com

இரும்புத்திரை said...

நந்தா,

புதியவர்கள் வரும் போது வெளியே தெரியாமல் அவர்களும் இதே பாணியில் இறங்குகிறார்கள்.சொல்லி தருவது யார்.இதில் இன்னும் நிறைய இருக்கிறது.லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும்.இல்லை புதிதாக சாதிக்க நினைக்கும் புதியவர்களையும் லஞ்சம் வாங்க வைத்து விடுவார்கள்.நீங்கள் மாதவராஜின் சகா இல்லை என்று நன்றாக தெரியும் உங்கள் மீது எனக்கு பெரும் மரியாதையும் உண்டு.ஆனால் அவரும் இது மாதிரி ஓட ஓட வெளுத்தாரே அப்போது ஏன் கேட்கவில்லை.ஓட ஓட வெளுக்கலாம் ஆனால் அதை ஒரு நேர்மையானவன் செய்ய வேண்டும் நந்தா.கேட்டால் பாவம் அந்த நாய்,பாவம் அந்த பேய் என்று சொற்சித்திரம் வரைகிறார்.

கிருஷ்குமார் எனக்கு ரோட் ராஷ் கேம் பிடிக்காது..அது அடுத்தவனை மிதித்து விட்டு முன்னேறுவது..நான் விளையாடுவது என்.எஃப்.எஸ்.அதுவும் இடிக்காமல் ஓட்டும் டிராக்கில் மட்டும்.

கோவி.கண்ணன் said...

//இன்று தான் தெரிந்தது போலியின் உண்மை முகம்.இன்று முகப்பில் தெரியும் கோவி கண்ணனின் தமிழ்மணம் பரிந்துரை படித்தீர்களா.படித்து பாருங்கள்.அதில்அவர் சொல்லாமல் சொன்ன நபர் தான் போலி மாதவராஜ்.//

நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. நீங்கள் இப்படியாக எழுதும் போது அது உங்களது சொந்தக்கருத்து என்று சொல்லிவிட்டால், நான் அதை எதிர்கொள்ளவோ /விளக்கவோத்தேவை இருக்காது.

K.MURALI said...

follow up...

வால்பையன் said...

அரவிந்த்

நான் நியாயத்தின் பக்கம் இருக்கிறேன் என்பதற்கும்,

நான் ஆதரவளிப்பவரின் எதிரி என்ன செய்தாலும் அடிப்பேன் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!

சாருவின் தீவிரவிசிறி!? என அடிக்கடி நிறுபிக்கிறீர்கள்!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

கோபம்; நாட்கள் செல்ல,செல்ல சரியாகிவிடும்...ஆனால் சிதறிய வார்த்தைகள்...?

பதிவர்கள் இப்படி சொற்சித்திரங்களில் சண்டையிட்டு கொண்டால் புதிதாக படிக்க வருபவர்கள்
என்ன நினைப்பார்கள்

சின்னப்பிள்ளைகள் சண்டை போல்
உள்ளது..

மணிகண்டன் said...

வரிசையான உளறலுக்கு ஒரு கிளைமாக்ஸ் போன்று உள்ளது இந்த பதிவு :)-

இரும்புத்திரை said...

கோவி கண்ணன் அது என்னுடைய கருத்து தான்..

மணிகண்டன் சில சமயம் உண்மை உளறல் போலத்தானிருக்கும் :-)).அட இது க்ளைமேக்ஸ் தான் :-))))))))).நீங்கள் வினவு - பைத்தியக்காரன் மேட்டர் மாதிரி இதையும் கண்டுப் பிடித்து விட்டீர்களே..

வால்பையன் சாருவின் தீவிர விசிறியா ? சாருவுக்கு தெரிந்தால் என்னை விசிறியாலே விசிறுவார்.தல இதைத்தான் எனக்கு முன்னாடி சிலர் செய்தார்கள்.ஒரு வேளை அவர்களும் சாருவின் தீவிர விசிறியா.

தமிழ் வெங்கட் :-)))))))))