Saturday, July 24, 2010

போபால்,போலி கம்யூனிசம்,ஒரு பக்கச் சார்பு,புண்ணாக்கு,போராட்டம் - 2

கார்த்தி,

சீனா கம்யூனிச நாடே இல்லையா அப்பாடி இப்பவாவது ஒத்துக் கொண்டதற்கு நன்றி..

சீனா அருணாசலப் பிரதேசத்தை ஆக்கிரமித்தைப் பற்றி கேட்டால் - கேவலம் வீடியோ பிடிப்பது தான் சாதாரணமாக சொல்லி விட்டாயே. நர்சிம் விவகாரத்தில் பாய்ந்து வந்தாயே ஏன் உனக்கு பிடித்தவர்கள் அவர்களைஆதரித்தார்கள் என்று நினைத்து விட்டேன்.எனக்கு எப்படி கேரள வெறுப்போ(அதுவும் நீ சொன்னது தான்) உனக்கு பார்ப்பனர்கள் மீதுள்ள வெறுப்புத்தான் காரணம் என்று தெரிந்தது.

நம் வீட்டு பெண்கள் யாருமில்லையே அது சாதாரண வீடியோ தான்.உன் வீட்டில் வந்து குப்பையையும்,கழிவுகளையும்,நாயையும் பற்றி விடவில்லையே.அப்ப அதுவும் சாதாரணம் தான்.உனக்கு இருப்பது கேரள கம்யூனிஸ்ட் பாசம் என்று இந்த இடுகை மூலமே தெரிகிறதே. நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.வீட்டில் இருந்து போராட வாருங்கள் என்று சொல்வது எளிது.

எனக்கு வேறு விடயங்கள் தான் முக்கியம்.நான் ஒன்றும் புரட்சியாளன் அல்ல.நேரத்தை கொல்ல இணையம் பயன்படுத்தும் சாதாரண ஆள்.நீங்கள் தான் புரட்சி பேசுவீர்களே ஏன் இதையும் தட்டிக் கேட்க வேண்டாமா என்று கேட்டேன்.

சாதாரண வீடியோ என்று சொல்லும் போதே தெரிகிறதே - உனக்குள் இருக்கும் சமூக அக்கறை.அதனால் சொல்கிறேன் போலிகள் என்று.

போபாலில் நடந்தது திட்டமிட்ட படுகொலை என்று சொல்கிறாயே.இதற்கு முன்பும் கசிவு நிகழ்ந்திருக்கிறது என்று சொல்கிறாயே.ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.எத்தனை பேர் இறந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.கசிவு நிகழ்ந்ததே -  அப்போதே போராட்டம் நடத்தவில்லை.இன்னும் என் தளத்தில் ரஷ்ய விபத்து பற்றி கம்யூனிஸ்ட் காரர்கள் வாயைத் திறக்கவில்லை. நீயாவது சொல் கார்த்தி.நீ நிறைய படித்தவர்.நானோ உங்கள் தோழர் ஏழர சொன்னது போல் முட்டாள் தான்.கொஞ்சம் விளக்கி சொல்ல வேண்டியது தானே.படித்து விட்டு சொல் ஒண்ணும் பிரச்சனையில்லை.

ஏன் அது மாதிரி ஆலைகள் அமைக்க வேண்டும்.மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தி தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பிடுங்கியது போல ஆபத்துள்ள வேலையும் தடுக்க வேண்டியது. ஏன் மக்கள் சாகும் வரை காத்திருக்கிறீர்கள்.அல்லது கசியும் போதே போராட வேண்டியது தானே.

முதல்ல தமிழ் நாட்டில் நடப்பதையே தட்டிக் கேட்க முடியவில்லை.நீங்கள் எல்லோரும் போய் போராடிய உடன் ஆண்டர்சன்னைத் தூக்கில் போட்டு விட்டு தான் மறுவேலை.முதலில் உன் வீட்டில் இருந்து ஆரம்பி.அப்புறம் மாநிலம்,நாடு என்று போகலாம்.கார்த்தி நீ கம்யூனிஸ்ட் தானே.போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு காசு மாதமாதம் கொடுக்கிறாய். கொடுப்பதில்லை தானே.கம்யூனிசத்தின் அடிப்படையே எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது தான்.உன் சம்பளத்தில் பத்தில் மூன்று பங்கை வைத்து விட்டு மற்றவர்களுக்கு உதவி செய். முடியாத உனக்கு அது ஒரு சாதாரண வீடியோ தான்.

என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது..உன்னிடம் எத்தனை முறை வாயு கசிந்தது.எத்தனை முறை கம்யூனிஸ்ட் போராடினார்கள் என்று சொல்ல வேண்டும்.

கடலூர் பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கக் கூடாது.உங்களுக்கு இதுவும் வீடியோ போல சாதாரண பிரச்சனை தான்.நடந்தப்பின் தான் குதிப்போம் என்று சொல்பவர்கள் நீங்கள்.தவிர உங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்சனையைப் பற்றி பேசும் தொலை நோக்கு உள்ளவர்கள். கடலூரைப் பற்றி உங்களிடம் பேச சொல்லலாமா.அப்புறம் அதை படி.இதை படி என்று சொல்வீர்கள்.

பெண்ணுக்கு எதிராகவே புனைவு எழுதினாலே பொங்கும் நீங்கள் வீடியோ எடுத்ததைப் பற்றி எழுதாதது ஏன் என்று கேட்டால் அது சாதாரண வீடியோ என்று சொல்கிறீர்கள்.அது சரி நீங்கள் அசிங்கமாக திட்டிய லீனா மணிமேகலையும் பெண் தானே.தயவு செய்து இனி பெண்களின் காவலர்களாக நடிக்க வேண்டாம்.அதுவும் நீ நடிக்க வேண்டாம்.

அப்படியே ரஷ்யாவும் கம்யூனிச நாடு இல்லையா என்று அழுத்தி சொல்லவும்.பாருங்க நான் எல்லாம் முதலில் கூரை ஏறி கோழி பிடிப்பவன்.அப்புறம் தான் வைகுண்டம்.நீங்கள் எல்லாம் நேராக வைகுண்டம் போகும் நபர்கள்.

எனக்கு இந்த விடயம் தான் முக்கியம்.இதற்கு முன் எதிலாவது நான் கேரளாவைப் பற்றி விமர்சித்து என் கோபத்தை காட்டினேன் என்று நிரூபிக்க வேண்டும்.சச்சினின் புத்தகம் பற்றி எழுத முடிந்தவர்களால் இதை பற்றி எழுத முடியாமல் போவது சகஜம் தான்.

29 comments:

இரும்புத்திரை said...

கார்த்தி ஏழர கடலூர் பற்றி இப்போது தான் தெரியும் என்று சொல்கிறார்.இதற்கு ஏதாவது போராட்டம் செய்து இருக்கிறீர்களா.இல்லை வருங்காலத்தில் செய்வீர்களா.இல்லை விபத்து நடந்து நஷ்டயீடு தரும் போது தான் போராட்டம் தொடங்குமா

ஏழர said...

///கார்த்தி ஏழர கடலூர் பற்றி இப்போது தான் தெரியும என்று சொல்கிறார்///

இரும்பு பொய் தவிர வேறொதுவும் சொல்ல வறாதா.. நான் அவருடைய (2005 ல் எழுதப்பட்ட) அந்த பழைய பதிவை இப்போதுதான் பார்தேன் என்றுதான் பதிலளித்தேன்.. இப்படி பொய்பேசுவதன் நோக்கம் என்ன?

ஏழர said...

போன பதிவின் அவதூறுகளை சுட்டிக்காட்டியதற்கு பதிலில்லை அதற்குள்ள அடுத்த பதிவா... வெட்கக்கேடு...

ஏழர said...

///நான் ஒன்றும் புரட்சியாளன் அல்ல.நேரத்தை கொல்ல இணையம் பயன்படுத்தும் சாதாரண ஆள்.///

ஆனா நோகாம கேள்விமட்டும் கேப்பேன், நான் ஆதரிக்குற சமூக பிரச்சனைக்கு கூட ஒரு முடியும் பிடுங்க மாட்டேன் ஏனனா உண்மையான என் நோக்கம் உன்னை எதிர்ப்துதானே அன்றி மற்ற விசயங்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்கு என் வாழ்வும் வசதியும் தான் முக்கியம் நீயும் அப்படி இருந்தால் பிரச்சனையில்லை ஆனால் நீ சமூக அக்கரையோடு இருப்பதனால் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது எனவே என் குற்ற உணர்ச்சி அரிப்பை சொறிந்து கொள்ள உன்னை மட்டம்தட்டி நான் பதிவு எழுதுகிறேன் ஆனால் ஆழ் மனதில் எனக்கு தெரியும் நான் ஒரு வெத்து வெட்டு :(

இப்படி எழுதியிருந்தால் அது நேர்மையாக இருக்கும் இரும்பு....

இரும்புத்திரை said...

சரி உங்களுக்குத் தெரியும்.எத்தனை முறை போராடி உள்ளீர்கள்.வினவுத் தளத்தில் பொய்யே வந்தது இல்லையா.அபி அப்பா,சிவா,லதானந்த குற்றச்சாட்டு உண்மையா.

சொல்லுங்கள் நேர்மையாக சொல்ல வேண்டும்.போராட கூட வேண்டாம்.தட்டிக் கேளுங்கள் என்று தான் சொல்கிறேன்.அப்படி செய்யாமல் இருப்பதால் தான் கேரள கம்யூனிஸ்ட்களுடன் கூட்டு இருப்பது மாதிரி தெரிகிறது.

கார்த்தி என்ன சொல்கிறான் என்றால் ரோமம் என்கிறான்.நான் போன பதிவில் எங்காவது ரோமம் கொட்டுவதைப் பற்றி சொன்னேனா.இதே அறிவுரை ஏன் அங்கே சொல்லவில்லை.

இரும்புத்திரை said...

நான் உண்மையை ஒத்துக் கொள்கிறேன்.நேரம் கொல்ல இணையம் பயன் படுத்துபவன் என்று.உங்களால் முடியவில்லை ஏழர.நோ டென்ஷன்.

ஏழர said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள கடலூர் மட்டுமல்ல, திருப்பூர் சாயப்பட்டறை, கங்கை கொண்டான் கோக் ஆலை, முல்லைபெரியாறு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.. உங்களைபோன்ற காகித எலிகள் இல்லை நாங்கள். சமூகத்தில் எங்கள் செயல்பாட்டின் நீட்சியே எங்கள் இணைய செயல்பாடு

ஏழர said...

ஆமாம் ஒத்துக்கொள்ள முடியவில்லை, உங்களைப்போல காரியத்தில் எதுவும் செய்யாமல் வெற்று வக்களை பேசுபவர்களை ஒத்துக்கொள்ளத்தான் முடியவில்லை :(

இரும்புத்திரை said...

சரி ஏழர அதை தான் நானும் சொல்கிறேன்.உங்களுக்கு தான் பிம்பமிருக்கிறது.நீங்கள் போராடலாம்.நான் வேணா உங்கள் வழக்கப்படி பதிவு எழுதி தருகிறேன்.உங்கள் பெயரிலே போட்டுக் கொள்ளுங்கள்.அப்படி போட்டது இல்லை என்று மறுக்க முடியாது.

போராளி பிம்பம் உடையாமல் இருக்கும்.

ஏழர said...

சமூக பிரச்சனை பதிவு எழுதும் போது சற்றும் சம்பந்தமில்லாத மங்களூர் சிவா விசயத்தை இழுக்கும் போதே தெரிகிறது உங்கள் நோக்கம் என்னவென்று.. ஆக உங்க சமூக அக்கரை புண்ணாக்கு வேசத்தை நீங்களாகவே
கலைத்து கொண்டதற்கு நன்றி.

கேசு போடுவேன்னு சொன்ன மங்களூர் சிவா அமைதியா இருக்கார்.. நீங்களாவது அவர் சார்பா வினவு, சிவராமன் பேர்ல கேசு போடுங்க...அதைவிட்டு
சும்மாபுலம்பினா எப்படி? இதுலேயும் வெத்துவெட்டுதானா?

இரும்புத்திரை said...

ஏற்கனவே சொன்னது தான்.யார் வெத்துவேட்டு என்று எல்லோருக்கும் தெரியும்.எனக்கு உங்க மேல கோபம் இல்ல.உங்களப் பாத்தா காமெடியா இருக்கு.

பின்ன என்ன மங்களூர் சிவான்னு சொன்னதும் உங்க மேல தப்பே இல்லாத மாதிரி பேசுறீங்க.ஏன் குரல் கம்முது.

நான் எதுக்கு கேஸ் போடணும்.நீங்க போராளி.நான் ஒரு வெத்துவேட்டு.இருபது வருஷம் கழிச்சி போராடுவீங்க.அதப் போய் நான் தடுப்பேனா.எல்லா விஷயத்துக்கும் நீங்க போராடணும்னு சொன்னது தப்பா.அதுக்கு போய் ஏன் டென்ஷன்.இனி சொல்ல..விடுங்க.

இன்னும் என்ன சொல்லட்டும்

நீங்க ஒரு நல்லவரு,வல்லவரு,நாலும் தெரிஞ்சவரு.

ஏழர said...

26 வருசம் கழிச்சு வந்த தீர்ப்பும் இந்திய சட்டத்தை நம்புனவங்களுக்கு நடந்த அநீதியையும் பத்தி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியல. ஆனா எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பதிவு எழுத வேண்டியது...அத அம்பலப்படுத்தி எழுதுனா உடனே மங்களூர் சிவாவுக்கு பின்னால ஒளிய வேண்டியது...
சிவராமன்தான் , ஆதாரத்தை வெளியிடமுடியாதுன்னு சொல்லியாச்சு
.. மங்களூர் சிவாவுக்காக எழுதி தள்ளுர நீங்க உங்க பக்கம் நியாயம் இருந்தா போய் கேசு போடுங்க போலீஸ் கம்ப்ளைய்யின்டு குடுங்க? எதுக்கு இந்த வெட்டி புலம்பல்?

ஏழர said...

இதுக்கு மேல உங்க பதிவு சம்பந்தமா உங்களால பதில் சொல்ல முடிஞ்சா (முடியாது..முடிஞ்சா) மேல பேசலாம்.. இல்ல மங்களூரு சிவா, பெங்களூரு சிவான்னு புலம்பினா என் பதில் போய் கேசு போடு என்பது மட்டுமே!

இரும்புத்திரை said...

பாஸ் நான் தான் அதியமான் கருத்தை தான் ஆதரிக்கிறேன் என்று சொல்லி விட்டேனே..இனிமே மங்களூர் சிவா என்று சொல்லவில்லை..விடுங்க உண்மை லைட்டா கசக்கும்..

இந்திய அரசாங்கம் அந்த லட்சணத்தில் இருக்கு என்ன செய்ய..

அதுக்காக கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்தால் இன்னும் மோசமாக இருக்கும்..உங்கள் பலமே விடாமே சொன்னதையே சொல்றது தான்..அது நான் உங்ககிட்ட இருந்து தான் கற்றுக் கொண்டேன்..நானும் நான் சொன்னதை தான் சொல்வேன்..

ஏழர said...

போபால பத்தியது மட்டுமில்ல விசயம்.. போன பதிவுல கிரீன் பீஸ் சுட்டி குடுத்தேனே பாக்கல.. இங்க இருக்குற எல்லா அனுவுலையிலும விபத்து ஏற்பட்டா அதன் பொறுப்பிலிருந்து நிர்வாகம் விலப்படும் சட்டம்தான் இப்ப அதி முக்கிய பிரச்சனை. இதன் பரிமாணம் உங்களுக்கு புரியுதா? போபால் மாதிரி என்னத்த வச்சு வேணா இங்க சோதனை பண்ணலாம் விபத்து நடத்து மக்கள் அழிஞ்சா எவனையும் கேக்க முடியாது இதே மாதிரி ஒரு 25 வருசம் கழிச்சு 10,000 ரூபா காசு குடுப்பாங்க அவ்வளவுதான்.. இதப்பத்தி அதியமான் ஒன்னும் சொல்லல உங்க கருத்து என்ன.. ஓகேவா?

புலவன் புலிகேசி said...

நண்பரே உங்களின் கோபங்கள் கம்யூனிசம் மீதா அல்லது கார்த்தி மற்றும் ஏழற மீதா? நீங்கள் சொல்வது போல் இப்போதுள்ள சி.பி.எம் போன்ற கம்யூனிஸ்டுகள் வந்தால் அது கேவலமாகத்தான் இருக்கும். இங்கு ஆடிக்கு யார் வருவது என்பது நோக்கமல்ல. மக்களுக்கான ஜன நாயகம் அமைப்பது ஒன்றே நோக்கம். எந்த ஒரு விடயமும் மக்கள் முன்னிலையில் மக்களின் அனுமதிக்கினங்க நடக்க வேண்டும். அந்த கம்யூனிசம் மட்டுமே நோக்கம். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போலி கம்யூனிசத்தை விட்டொழியுங்கள். பின்னர் ஒரு விடயத்தை கையிலெடுத்து விவாதிக்கும் போது அதை பற்றி முழுதும் விவாதியுங்கள். அதை விடுத்து இன்னொரு விடயத்தை அதில் கலந்து குழப்பி தப்பி செல்லாதீர்கள். அது தெளிவின்மையை மட்டுமே தோற்றுவிக்கும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வாசகர்களுக்கும். தயவு செய்து போபால் கொடுமைகளை ஒரு முறையேனும் படியுங்கள். புரிதலுக்கு வாருங்கள். அதன் பின் சொல்லுங்கள். விவாதிக்கலாம். கோபத்தில் பதிலளிக்கும் குணம் வெண்டாம். யோசித்து பதில் கூறுங்கள்.

இரும்புத்திரை said...

இந்த மாதிரி பிரச்சனையான எதுவுமே நமக்கு வேண்டாம் என்று தான் நான் சொல்கிறேன்..எனக்கு ஒப்புதல் இல்லை என்று நான் ஒத்துக் கொள்கிறேன்.

இன்னும் இருக்கிறது பிரான்ஸ் துறைமுகத்தில் உள்ளே விடாத கப்பலை நாம் சென்னை துறைமுகத்தில் அனுமதித்தோம்..

பி.டி.கத்திரி,குறைந்து விலை மடிக்கணினி,தக்காளி(தவளையின் ஜீன் சேர்க்கப்படும் நீண்ட நாள் கெட்டுப் போகாது சாப்பிட்டப்பின் நிறைய வியாதிகள் வரும்) எல்லாம் எதிர்க்க வேண்டியது தான்.நான் முழு ஆதரவு தருவேன்.

அடுத்து மருந்து - அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் இங்கே விற்கப்படுகிறது. அங்குள்ள இணையதளங்களில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விவரம் நாம் சேகரிக்க முடியும்.அதை பற்றி பேசுவோம். மக்களுக்கு சொல்வோம்.

நான் இப்பவும் சொல்றேன்.எல்லா விஷயங்களையும் எதிர்க்கும் நீங்கள் இதையும் எதிர்த்தால் என்ன என்று தான் கேட்டேன்.இன்று வினவில் வந்திருக்கும் பதிவை விட நான் சொன்னது வலிமை வாய்ந்தது என்று நினைக்கிறேன்.

போபால் பற்றி பேசுவதை விட இன்னும் என்ன என்ன மக்களை அழிக்கும் அணு உலை,பேக்டரி அதை பற்றி பேசுவோம்.போபால் விஷயம் பற்றி பேசுவதை விட என்று சொல்ல காரணம் அது செவிடன் காதில் ஊதிய சங்கு.என்ன ஊதினாலும் யாரும் சட்டை செய்ய போவதில்லை. அதே மாதிரி பெண்ணுக்கு ஒன்று என்றால் நான் வருவேன் என்று வினவுத் தோழர்கள் சொன்னார்களே ஏன் இன்று வரவில்லை.

இரும்புத்திரை said...

புலிகேசி - எனக்கு கார்த்தி,வினவு,ஏழர மீது கோபமா.கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது. நீங்கள் இதை சொன்னால் நிறைய பேருக்கு போகும் என்று சொன்னது தப்பா.எங்கிருந்து திசை மாறியது என்று இதை படித்தவர்களுக்கு தெரியும். நான் மட்டும் தான் பொய் சொல்கிறேன் என்று சொன்னால் அது உண்மையாகி விடுமா.

ஏழர said...

சட்டப்படி எல்லாம் நடக்கும் சட்டத்தை நம்புங்க சட்டத்த நம்புங்கன்னு சொல்றாங்களே.. அந்த சட்டத்த நம்பினவங்கள 25 வருசம் இழுத்தடிச்சு பச்சே துரோகம் பண்ணிச்சே சட்டம்.. ஏழைங்களுக்கு சட்டம் இல்லை பணக்காரனுக்கு
மட்டும்தான்னு காட்டிசே சட்டம் அந்த துரோகத்தைதான் நாம
அம்பலப்படுத்தலும்..போராடனும்.. ஏழையின்
சொல்லும் அம்பலம் ஏறும் வழி செய்யனும்....

அதபத்திஅதியமான் ஒன்னும் சொல்லமாட்டார்..
மீறி கேட்டால் 50 வருசத்துக்கு முன்னால சோவியத்துல அது நடந்திச்சு 100வருச்த்துக்குமுன்னால செவ்வாய்கிரகத்துல இது நடந்திச்சுன்னு வாறு
அவர் புரிதல் அவ்வளவே.

ஏழர said...

நான் போன பதிவுலேயே சொன்னேன்,அதை இங்க காப்பி பேஸ்ட் செய்யுறேன்..............

//////////////ஏன் கேராளா பற்றி எழுதவலில்லை என்ற உங்கள் கேள்வியின் நியாயம் உங்கள் பதிவில் இருக்கும் பொய்கள் மற்றும் திரிபுகளால் அடிபட்டு போனது. இந்த அரசியல், சமூக, பொருளாதார அமைப்புகளை புரிந்து கொள்வதில் உங்களிடம் மிகுந்த பற்றாக்குறை இருக்கிறது.. வினவை விட்டுத்தள்ளுங்கள் போய் கார்த்தியுடன் பேசுங்கள்.. இது என் அன்பான வேண்டுகோளும் கூட../////////////

இதுதான் என் நிலைப்பாடு... ஒரு வேளை வினவு இதைப்பற்றி ஒரு பதிவு எழுதினால் எனக்கு மகிழ்ச்சியே ஆனால் அதே நேரத்தில் அதை எழுதாத காரணத்தினால் அவர் கேளர கம்மிகளுடன் சமரசம் செய்திருக்கிறார் என்று சொல்வது தவறு ஏனென்றால் தீவிர கம்யூனிஸ்டு எதிர்பாளர்களை விட இந்திய போலி கம்யூனிஸ்டுகளை அதிகம் விமர்சிப்பது வினவு மட்டுமே

இரும்புத்திரை said...

ஏழர - ஏந்த ஆட்சியாக இருந்தாலும் யார் ஆண்டாலும் சரி அது சர்வாதிகார ஆட்சியாக இருக்கலாம்,மன்னராட்சி,ஜனநாயகம்,கம்யுனிச ஆட்சி,ராணுவ ஆட்சி இப்படி எது இருந்தாலும் பட்டை நாமம் தான்.

அது தான் சோவியத்தில் ஏன் சீனாவில் இந்தியாவில் நடக்கிறது

இரும்புத்திரை said...

ஏழர நீங்கள் இந்த விஷயத்தை நாளை வேண்டாம் இன்னும் ஒரு வாரம் கழித்து எழுதினாலும் எனக்கு சந்தோஷம் தான்.போன பதிவில் ஒரு பதிவின் லிங்க் தரப்பட்டுள்ளது.பாருங்கள் உங்களுக்கு கோபம் வந்தால் நீங்களே வினவிடம் எழுத சொல்லலாம்.

ஏழர said...

BRB.. போவதற்கு முன்... ரஸ்யாவில் 90களிலே கம்யூனிச கட்சியையே கலைத்துவிட்டார்கள்.. இப்போ ரசியாவுக்க்மு கம்மூனிசத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை..

வினவு தோழர்கள் முன்வைப்பது சர்வாதிகார மாற்று இல்லை மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை அளிக்கக்கூடிய புதிய ஜனநாயக கூட்டாச்சியே.. இது பற்றி மேலும் பேசுவோம்.. எப்போ இந்தியா வற்றீங்க?

ஏழர said...

ஏற்கனவே ஒரு வாசகர் வினவு பதிவில் கேரள விசயத்தை குறிப்பிட்டுள்ளார்... நானும் பார்த்தேன்.. நிச்சயம் எழுதவேண்டிய ஒன்றுதான்.. இந்தியாவெங்கும் அதிகாரவர்க்கம் மக்களை கிள்ளுக்கீரையாக மதிப்பதற்கு இது இன்னுமொரு உதாரணம்

BRB

இரும்புத்திரை said...

அடுத்த வருடம்..நிச்சயம் பேசுவோம்..கார்த்திக்கு என் ஜிமெயில் முகவரி தெரியும்.வாங்கி கொள்ளுங்கள்.சாட்டில் கூட பேசுவோம்.

ஏழர said...

நல்லது. விவாதித்ததில் மகிழ்ச்சி.
எனது இமெயில் - ezharai(at)gmail(dot) com
டிவிட்டரில் http://twitter.com/ezharai

புலவன் புலிகேசி said...

//இன்னும் இருக்கிறது பிரான்ஸ் துறைமுகத்தில் உள்ளே விடாத கப்பலை நாம் சென்னை துறைமுகத்தில் அனுமதித்தோம்..

பி.டி.கத்திரி,குறைந்து விலை மடிக்கணினி,தக்காளி(தவளையின் ஜீன் சேர்க்கப்படும் நீண்ட நாள் கெட்டுப் போகாது சாப்பிட்டப்பின் நிறைய வியாதிகள் வரும்) எல்லாம் எதிர்க்க வேண்டியது தான்.நான் முழு ஆதரவு தருவேன்.

அடுத்து மருந்து - அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் இங்கே விற்கப்படுகிறது. அங்குள்ள இணையதளங்களில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விவரம் நாம் சேகரிக்க முடியும்.அதை பற்றி பேசுவோம். மக்களுக்கு சொல்வோம்.
//

இந்த யூனியன் கார்பைட கையகப் படுத்தி வச்சிருக்குற டௌ கெமிக்கல்ஸின் வரலாறு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். நீங்க வியாதி வந்த பின் உள்ள ம்ருந்தைப் பற்றி பேச சொல்றீங்க. அது நிச்சயம் பேச வேண்டிய ஒன்னு தான். ஆனா டௌ கெமிக்கல்ஸ் கூவிக் கூவி விக்கிற பயிர்களுக்கான பூச்சி மருந்துகள் பத்தி சொல்லி எதிர்க்கக் கூடாதா?

//### இன்று உலகெங்கும் தடை செய்யப் பட்டிருக்கும் டி.டி.டி எனும் பூச்சிக் கொல்லி மருந்தை "மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கல்ல" என்று விளம்பரம் செய்து விற்பனை செய்தது டௌ.

### டர்ஸ்பன் என்ற பெயரில் பயன் படுத்தப் ப்டும் வீட்டு உபயோக பூச்சிக் கொல்லி மருந்தும் டௌவின் தயாரிப்புதான். இது குழந்தைகளுக்கு நரம்பியல் நோய்கள், பார்வையிழப்பு, மனநோய், புற்றுநோய் ஏற்படுத்தும் என கண்டறியப் பட்டு 1999-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்டது.

1998-ல் இந்த மருந்தை அமெரிக்க மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மீது சோதனை செய்து "இது பாது காப்பானது" எனப் பொய்யாக விளம்பரம் செய்தது. இந்தக் குற்றத்திற்காக 2003-ம் ஆண்டு நியூயார்க் மாநில அரசுக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது.

ஆனால் இதே மருந்து பாதுகாப்பானது என விளம்பரம் செய்து இன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
//

மேலே உள்ளது வேற ஒன்னும் இல்ல அந்த டௌ கெமிக்கல்ஸின் அநியாயங்கள். இதை எதிர்க்க வேண்டாம். போபால் என்பது தீர்ப்பு சொன்னதும் முடிஞ்சி போன விசயம்னு நெனச்சீங்கன்னா இன்னும் சில வருசன்ம் கழிச்சி மறுபடியும் தமிழ்நாட்டுல கூட இது மாதிரி நிகழ்வு நடக்கும். அதை எதிர்ப்பது தவறு என நினைக்கிறீர்களா?

புலவன் புலிகேசி said...

//இன்னும் இருக்கிறது பிரான்ஸ் துறைமுகத்தில் உள்ளே விடாத கப்பலை நாம் சென்னை துறைமுகத்தில் அனுமதித்தோம்..

பி.டி.கத்திரி,குறைந்து விலை மடிக்கணினி,தக்காளி(தவளையின் ஜீன் சேர்க்கப்படும் நீண்ட நாள் கெட்டுப் போகாது சாப்பிட்டப்பின் நிறைய வியாதிகள் வரும்) எல்லாம் எதிர்க்க வேண்டியது தான்.நான் முழு ஆதரவு தருவேன்.

அடுத்து மருந்து - அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் இங்கே விற்கப்படுகிறது. அங்குள்ள இணையதளங்களில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விவரம் நாம் சேகரிக்க முடியும்.அதை பற்றி பேசுவோம். மக்களுக்கு சொல்வோம்.
//

இந்த யூனியன் கார்பைட கையகப் படுத்தி வச்சிருக்குற டௌ கெமிக்கல்ஸின் வரலாறு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். நீங்க வியாதி வந்த பின் உள்ள ம்ருந்தைப் பற்றி பேச சொல்றீங்க. அது நிச்சயம் பேச வேண்டிய ஒன்னு தான். ஆனா டௌ கெமிக்கல்ஸ் கூவிக் கூவி விக்கிற பயிர்களுக்கான பூச்சி மருந்துகள் பத்தி சொல்லி எதிர்க்கக் கூடாதா?

புலவன் புலிகேசி said...

//### இன்று உலகெங்கும் தடை செய்யப் பட்டிருக்கும் டி.டி.டி எனும் பூச்சிக் கொல்லி மருந்தை "மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கல்ல" என்று விளம்பரம் செய்து விற்பனை செய்தது டௌ.

### டர்ஸ்பன் என்ற பெயரில் பயன் படுத்தப் ப்டும் வீட்டு உபயோக பூச்சிக் கொல்லி மருந்தும் டௌவின் தயாரிப்புதான். இது குழந்தைகளுக்கு நரம்பியல் நோய்கள், பார்வையிழப்பு, மனநோய், புற்றுநோய் ஏற்படுத்தும் என கண்டறியப் பட்டு 1999-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்டது.

1998-ல் இந்த மருந்தை அமெரிக்க மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மீது சோதனை செய்து "இது பாது காப்பானது" எனப் பொய்யாக விளம்பரம் செய்தது. இந்தக் குற்றத்திற்காக 2003-ம் ஆண்டு நியூயார்க் மாநில அரசுக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது.

ஆனால் இதே மருந்து பாதுகாப்பானது என விளம்பரம் செய்து இன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
//

மேலே உள்ளது வேற ஒன்னும் இல்ல அந்த டௌ கெமிக்கல்ஸின் அநியாயங்கள். இதை எதிர்க்க வேண்டாம். போபால் என்பது தீர்ப்பு சொன்னதும் முடிஞ்சி போன விசயம்னு நெனச்சீங்கன்னா இன்னும் சில வருசன்ம் கழிச்சி மறுபடியும் தமிழ்நாட்டுல கூட இது மாதிரி நிகழ்வு நடக்கும். அதை எதிர்ப்பது தவறு என நினைக்கிறீர்களா?