Monday, July 19, 2010

குரூரப்பார்வை


வெகு சாதாரணமாக ஆரம்பித்த ஆட்டம்
சிப்பாய்களை காபந்து செய்ய முயன்று
போராட்டமாக மாறியது

எதிரியின் புரவியைப் புணர்ந்த
மந்திரியின் தலை வெட்டுப்பட்டதிலிருந்து
வெறியாக மாறியது

வெட்டப்படும் போதெல்லாம் தெறித்த ரத்தம்
சிகப்பும்,கருஞ்சிவப்புமாய்
சகதியாய் மாறியது

ராணியை இழந்திருந்த நேரத்தில்
இருபக்க இடைவெளியும்
விஸ்தாரமாய் மாறியது

மறுபடியும் சிப்பாயாட்டம்
ராணியாக மாறயிருந்தவ(ளை)னை
யானைகளால் கொலையாய் மாறியது

இன்னொரு ஆட்டம் கேட்டவன்
முகத்தில் தெரிந்த விகாரத்தை ரசிக்க
குரூரமாய் மாறியது

இன்னொரு குரூரத் தருணத்திற்காக
வழியெங்கும் வந்தவர்களின் பிம்பம்
சிப்பாய்களாய் மாறியது

வெட்டுண்ட காய்களும் பலகைகளும்
இன்னொரு யுத்ததிற்காக
சதுரங்கமாய் மாறியது

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

மொக்கையில் அடங்க மறுக்கிறது குருரத்தின் பார்வை ...

அகல்விளக்கு said...

ஏன் தல....

ஏன் இந்த கொலவெறி....

சு.சிவக்குமார். said...

அவ்வளவுதாங்க..இன்னும் கொஞ்சம்..

இன்னும் கொஞ்சம்..டிரை பன்னுங்க..கவிதை நன்றாகவே வரும்.