Thursday, July 22, 2010

ஏதோ தோணிச்சி அதான் சொல்றேன்

சாரு டான்ஸ் ஆடி முட்டி எல்லாம் கழன்று விட்டது என்று சொல்லும் போதே சந்தேகமிருந்தது. குசும்பன் பதிவு பார்த்தப் பிறகு தான் நிவர்த்தியானது. மிஷ்கின் சாருவிடம் மிதி வாங்கும் நாள் தூரத்தில் இல்லை என்பது நிதர்சனம். நடந்து நடந்து முட்டி கழன்று விட்டது போலும். இதுக்கா சாரு பயங்கரமாக பிராக்டிஸ் செய்தார். அப்பாடி நான் குசும்பனுக்கு முன்னாலே இதை பற்றி எழுதி வடையை கேட்ச் பிடித்து விட்டேன். டிவிட்டர்,ஃபேஸ்புக் என்று சுட்டித் தந்து அமர்களப்படுத்தி விட்டார்கள் சாருவின் விசிறிகள். அதன் சுட்டி இதுதான்.

ப்ளாக் எழுதவே கூடாது என்று நினைத்தாலும் சும்மா இருக்க முடியவில்லை. ஆடிய வாயும், சொறியும் கையும் சும்மாவே இருக்காது என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. சொறிய சொறிய சுகம். அதுவும் அடுத்தவர் சரி வேண்டாம் விடுங்க.ஏதாவது எழுதினால் ப்ளாக் பாலோயர் ஓடி விடுகிறார்கள்.பாலோயர் யாரும் ஓடி விடக்கூடாது என்று டிவிட்டர் மற்றும் பஸ்ஸில் எழுதுவதேயில்லை.ஆனால் தொடரும் நபர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.என்ன லாஜிக் இது.நான் எழுதாமல் இருப்பது நல்லது என்று சொல்கிறார்களா.

சாருவைப் பற்றி எழுதவே மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்தாலும் எழுதாமல் இருக்க முடிவதில்லை.அதுவும் குறிப்பாக சிலருக்கு அதிலும் குறிப்பாக எனக்கு. சாரு எழுதுகிறார் என்றால் வாங்காமலிருந்த ஆனந்த விகடன் எல்லாம் வாங்குகிறேன் என்றால் பாருங்களேன். ஸ்கீரின் ஷாட் எடுக்க அவர் தளத்தில் பழியாய் கிடக்குறேன். காலை,மதியம்,சாயங்காலம்,இரவு நேரம் காலம் பார்க்காமல் அங்கேயே தஞ்சம் கிடக்கிறேன்.ஆனாலும் எனக்கு ஜெயமோகன் தான் பிடிக்கும். ஆனால் என்ன செய்ய சாரு பற்றி எழுதினால் தான் இலக்கியவாதிகள் வருகிறார்கள். ஜெயமோகனை பிடித்தாலும் அவரை பற்றி எழுதினால் கல்லா கட்ட முடிவதில்லை.மனங்கொத்தி பறவை சரியில்லையே சிங்க மாமிசம் எல்லாம் எங்காவது கிடைக்குமா என்ன கொடுமை சார் இப்படி வாராவாரம் புலம்பிக் கொண்டு இருக்கிறேன்.ஜெயமோகன் படித்து நல்ல இலக்கியங்களை எல்லாம் அறிமுகப் படுத்த நினைத்தாலும் இந்த கிசுகிசு எழுத்தாளரைப் பற்றி எழுதாமல் இருக்க முடிவதில்லை.அந்த அளவுக்கு தூக்கத்தில் கூட அவர் தான் நிரம்பியுள்ளார். ஒரு வேளை சாரு என்ற பெயர் தான் காரணமாகயிருக்குமோ. ஜெயமோகனை கூட ஜெ என்று சொல்கிறார்கள்.அது இந்த அளவிற்கு வசீகரமாக இல்லையே.நான் என்னை சொன்னேன்.

செல்போன்,கணினி இல்லாத தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எல்லாம் நாவலாசிரியர்கள் புரட்சி செய்தார்கள்.இன்று எந்த கதையை எடுத்தாலும்,எழுதினாலும் நாயகியைப் புணராமல் விடுவதில்லை. கடைசியாக படித்த இரண்டு ஜெயமோகன் நாவல்களிலும் இதுதான் நடக்கிறது. இதை தாண்டி சிந்தனை வருவதேயில்லை.ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டூ டெக்னாலஜி. எனக்கு ஜெயமோகனை வாசிப்பதில் ஏதோ ஒரு தடை இருந்தாலும் கொஞ்சம் அவர் பக்கம் வசீகரிக்கப்படுகிறேன். வயதாகி வருகிறதோ என்னவோ.

மற்ற நாடுகளில் இருந்து யாராவது படிக்கும் அடி மனதில் ஒரு சந்தோஷமிருந்தாலும் அதீத சந்தோஷத்தை தருவது அந்த நாட்டு கொடிகள். அந்துமணி ஒருமுறை சொன்னது உண்மை தான். அவருக்கு ஒரு வாசகர் ஆப்கனில் இருந்து கடிதம் எழுதினாராம். அந்த நேரத்தில் தாலிபான் - அமெரிக்கா சண்டை உச்சத்தில் இருந்ததாம். அங்கிருந்து படித்தது அவர் எழுத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொன்னார். அது தரும் பரவசம் கொஞ்சம் அதிகம் தான்.

வாசகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஒரு பிரபல பத்திரிக்கை. அவர் சொல்வார் ஆணாதிக்கவாதிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்று. ஆனால் பெண்கள் பத்திரிக்கையைக் கிண்டல் அடித்து அவர் ஆணாதிக்கத்தை வெளியே காட்டினார்.ஒரு வாசகர் வந்து நீங்கள் என்ன ஒழுங்கா என்று எகிறவும் அந்த பக்கம் இணையத்தளத்திலிருந்து காணாமல் போய் விட்டது. அப்படி ரசித்த இன்னொரு கமெண்ட் டேய் ஸ்ரீலங்காவும் இந்தியாவும் என்ன ஹோமோவா எப்பவும் மாத்தி மாத்தி மச்சான் நீ ப்ரியா என்று விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒருவர் சொல்லியிருந்தார். எல்லாம் அரசியல் பாஸ் அரசியல்.

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

கோபி கண்ணன், நகுலன், சுஜாதா, பாலகுமாரன் போன்றோர் தீவிரமாக எழுதி கொண்டு இருந்த காலங்களில் வலைப்பதிவுகள் அதிகம் வரவில்லை. ஒரு வேளை அதனால் தான் அவர்கள் இந்த அளவு நையாண்டி, கேலி, கிண்டலுக்கு ஆளாக வில்லையோ.

இப்போதும் வண்ணதாசன, வண்ண நிலவன் போன்றோர் வலைப்பக்கங்கள் பக்கம் அதிகம் வருவது இல்லை. இருந்தும் இவர்கள் இருவரும் அதிகம் நையாண்டி செய்யப் படுவதில்லை.
எஸ் ரா, மாலன், வாஸந்தி போன்றோர் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை.

ஏன் இவர்கள் (charu nivethitha & jeyamohan) இருவர் பெயர் மட்டும் வலைப்பக்கத்தில் அதிகம் தென்படுகிறது என்பது புரிய வில்லை. ஒரு வேளை வாசகர்களுடன் நெருங்கி வருவா தாலா (மின்னஞ்சல், பின்னூட்டங்கள் மூலம்)

வால்பையன் said...

அப்படியா!?

இரும்புத்திரை said...

நானா எழுதுறேன்..சிங்க மாமிசம் தான் இப்படி சொல்ல வைக்குது..அவ்வ் நான் என்னை சொன்னேன்..

Vikram said...

ஆமாம்.. எனக்கும் இந்த இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி சலித்து விட்டது.. மூன்று ஆண்டுகளில் மூன்று டெஸ்ட் தொடர்கள்... தென் ஆப்பிரிக்கா, நியூ சிலாந்து என ஆட வேண்டிய அணிகள் நிறைய இருந்தும் .. இப்படியே திட்டம் தீட்டுகிறார்கள்...