சென்னை வந்து பல வருடங்கள் ஆனாலும் பத்து வருடங்களுக்கு முன் இந்த காதலர் தினத்தின் அக்கப்போர்கள் எல்லாம் இந்த அளவிற்கு கிடையாது.கிழே விழுந்த கைக்குட்டையை எடுத்து கொடுத்தால் காதல்,கையில் அடிப்பட்டிருக்கும் போது ஐயோ பாவமில்ல என்று சொல்லி விட்டால் அடுத்தது கனவில் டூயட் தான்.தமிழ் சினிமா அந்த அளவிற்கு இருக்கும் எல்லோரையும் கிறுக்காக மாற்றி வைத்திருக்கிறது.
காதல் என்பதற்கு அர்த்தம் தெரியாமலே டீனேஜ் படிக்கட்டுகளில் கால் வைக்கும் பல நெஞ்சங்கள் பூங்கொத்துகளையும்,வாழ்த்து அட்டைகளையும் பறிமாறி கொள்ளும்.
காதலுக்கு நண்பர்கள் உதவி கேட்டு வந்தால் அடுத்த கணமே பத்தடி தள்ளி நிற்பது தான் வழக்கம்.காரணம் அந்த பக்கிகளுக்கு ஒன்றுமே ஆகாது கூட இருக்கும் நமக்கு தான் ஏதாவது ஒரு அரை முதல் அறையில் போட்டு மிதிகளும் கிடைக்கும்.
கல்லூரி முதமாண்டு படிக்கும் போது வந்த சண்டைகளுக்கு அளவேயில்லை.நண்பனிடம் "உனக்கான பெண்ணை எப்படி கண்டுப் பிடிப்பாய்.." என்று கேட்டதற்கு "தொட்டவுடன் ஷாக் அடிக்கணும்.." என்று சொல்ல "அந்த கரண்ட் போஸ்டைப் பிடி ஷாக் மானாவாரியாக அடிக்கும்.." என்று சொல்லி வைக்க அவனுக்கு இதுவரைக்கும் ஏதாவது ஷாக் அடித்ததாக எங்களிடம் குறிப்பாக என்னிடம் சொல்லவில்லை.
நல்ல வேளை வாலண்டேன் மாதிரி யாரும் எதையும் சொல்லித் தொலைக்கவில்லை.உடனே அதற்கும் ஒரு தினம் உருவாகி இருக்கும்.செல்போன் நிறுவனகளுக்கும் இன்னும் பூ,வாழ்த்து அட்டை விற்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.முக்கிய குறிப்பாக டாஸ்மாக்கில் கொண்டாடும் முன்னாள் காதல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
காதல் - அப்படின்னா நமக்கு யார் கூட ஒத்து வருது என்று நினைப்போமா அல்லது ஒத்து வரும் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.
எந்த பொண்ணாவது ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை அடுத்த காதலர் தினம் வரை காத்திருக்காமல் அடுத்த வாரம் ஞாயிறும் கார்டு கொடுக்கலாம்.கார்டு விலை கம்மியாக இருக்கலாம்.இல்லை சந்தையில் விலை போகலாம்.வாலண்டேன் வழியில் போகாமல் உங்க வழியில் போங்கள்.வழியில் முள் இல்லாமல் ஏதாவது ரோஜா இருக்கலாம்.இல்லை காதல் தோல்வியில் துவண்டு கிடப்பவனுடன் சரக்கு அடியுங்கள்.சரக்கு ப்ளஸ் சைட்டிஸ் ஃப்ரீ.டாஸ்மாக்கில் சரக்கு விற்பனை தீபாவளி,பொங்கல்,புத்தாண்டுக்கு அடுத்து வரும் காதலர் தினம் அன்று தான் அதிகம் விற்கும் என்று நினைக்கிறேன்.தோற்ற,ஜெயித்த இரண்டு பக்கிகளும் பார்ட்டி கொடுக்கும்.புள்ளி விபரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படி தான் பதிவு எழுதணும் - இது பிரபலமாக எட்டாவது வழி.தப்பிச்சிட்டடா வால்புள்ள.ஏன் கைப்புள்ள தான் இருக்கணுமா
Thursday, February 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எதிர்பதிவுகள் வரவேற்கப்படுகிறது
இன்னும் காதலுக்கு ஐடியா கேட்ட நண்பனை என்னவெல்லாம் சொன்னேன் என்பது என் டைரியின் கிழிந்தப் பக்கங்களகாகவே இருக்கிறது.
காதல்.......
காதல்
ஒரு கழட்டிப் போட்ட செருப்பு......
சைஸ் சரியா இருந்தா
யாரு வேணா போட்டுக்கலாம்
(நன்றி : விவேக் ஏதோ ஒரு படத்தில்)
பிரபல பதிவர் ஆவது எப்படி என்பதன் தொடர்ச்சியா... வாழ்த்துக்கள்...
காதல் என்பதொரு காக்கை எச்சம்
அது விழுந்தால் துடைதெரிந்து விட்டு போவதும்
தூக்கி முகர்ந்து பார்ப்பது உங்க இஷ்டம்
இவன்
பெயர் தெரியாத கவிஞன்
//காதல் என்பதொரு
காக்கை எச்சம்
அது விழுந்தால்
துடைதெரிந்து விட்டு போ//
enakku romba pidichi irukku
Post a Comment