அஜித் பேச்சுக்கு ரஜினி கை தட்டினார் என்பதை விட அந்த விழாவில் பேசியது பிடித்திருந்தது.இது தான் வஞ்சப் புகழ்ச்சியா என்று யோசித்து கொண்டேயிருக்கிறேன்.பின்ன என்ன நீங்க தான் செய்யணும் ஐயா என்று அடுத்தடுத்து கோரிக்கைகள் வைத்து சரவேடி வெடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அஜித் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தாப்.பெண்ணாகரம் தேர்தலுக்கு அசலில் அஜித் வலித்த அல்லது குடித்த பீடியை பிடுங்க பார்த்தப்போது நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தது.ஒரு அறிவிப்பு கூட கிடையாது.ரஜினியின் கைத்தட்டலுக்கு காரணம் தேடினால் அவர் பாபாவில் வாங்கிய ஆறாத ரணம் தான்.அஜித்துக்கு பதில் விஜய் விமர்சனம் செய்தால் சுறா சுருண்டு இறாவாகி விடும்.விமர்சனம் எல்லோராலும் செய்ய முடியாது என்பதற்கு இது சாட்சி.
நான் சரியாக சொல்வதை தவறு என்று கேலி செய்கிறார்கள்.அதுவே தவறாகயிருந்தால் வந்து மெதுவாக சொல்லி விட்டு திருத்துங்க என்று தட்டிக் கொடுக்கிறார்கள்.எனக்கு இந்த விதமான விமர்சனமும் பிடித்திருக்கிறது.அதுவும் ஒருத்தர் மட்டும் உள்குத்தோடு சொல்வார்.சில சமயம் என்ன சொன்னார் என்று அவரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்வேன்.
விஜய் படத்திற்கு போய் படம் பார்த்து விட்டு படம் பிடிக்கவில்லை என்று விமர்சனம் செய்யும் அஜித் ரசிகர் அசல் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்கிறார்.அது மாதிரி "விஜய் ரசிகரான" (சொல்லும் போதே சிரிப்பு வருதா) நான் அஜித் படம் பார்த்தேன்.இப்போ தெரியுதா ஏன் அஜித் படம் பப்படம் ஆகுது.விஜய் படம் ஹிட் ஆகுது என்று.அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம்.விஜய் படம் பாக்குறாங்க. விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாகயிருந்தால் அஜித் படம் ஹிட்டடிக்குமோ.இன்னைக்கு தர்மயடி கன்பார்ம்.
தெனாலி.காம் விமர்சனமும் என் விமர்சனமும் சரியாக ஒத்துப் போகிறது.அசல்,தமிழ்ப்படம்,கோவா,ஆயிரத்தில் ஒருவன் இதில் அந்த இணையத்தளம் என்னோடு நூறு சதவீதம் ஒத்துப் போனது.ஆனந்த விகடன்,குமுதம் விமர்சனத்திற்கு சரியான மாற்று.விமர்சனம் எழுதுவதில் ஜெட்லி,கேபிள் சங்கருடன் போட்டிப் போடுகிறார்கள்.முதல் நாளே வருகிறது விமர்சனம்.
வாரமலரில் வரும் தொடர்கதைகளில்,அல்லது வந்த தொடர்களில் கடந்த பதினைந்து வருடத்தில் நான் படிக்காமல் விடும் முதல் தொடர் எல்லாப் பூக்களும் எனக்கே.மதுனிகா ராணி எழுதுகிறார்.வாசகர் ஒருவர் வந்து மதுனிகா ராணி சாருவின் அலைஸ் என்று சொல்லியதோடு இல்லாமல் அவர் சாருவின் பெரிய ரசிகராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.படித்து விட்டு நீங்களும் காரணம் சொல்லலாம் கதையில் ஆபாசம் வழிகிறது.ஆபாசமாக எழுதும் எல்லோரும் சாருவாகி விட முடியாது என்பது தான் உண்மை.இதுக்கும் இருக்குடி உனக்கு என்று யாரோ சொல்கிறார்கள்.வாசகர்களின் விமர்சனம் களை கட்டுகிறது.
Monday, February 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
thuvaiyal nadakkumaa
அஜித்தின் தைரியம் பாராட்டுக்குரியது. யாராவது ஒருவர் பூனை மணி கட்டியே ஆகவேண்டும். ஹேட்ஸ் ஆஃப் டூ யூ அஜித்.
அட... ஆமா நீங்க விஜய் ஃபேன் தான
"விஜய் ரசிகரான" (சொல்லும் போதே சிரிப்பு வருதா)""
நன்றாக இருந்தது
//அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம்.விஜய் படம் பாக்குறாங்க. விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாகயிருந்தால் அஜித் படம் ஹிட்டடிக்குமோ//
ஸ்ஸ்ஸப்பா... நூற்றாண்டின் சிந்தனை இது.
தம்பி நல்லாத்தான் வெளுத்து வாங்குறாரு.
துவையல் இல்லே துவைத்தல்!
Post a Comment