Friday, February 19, 2010

பதிவுலக அரசியல்,டிவிட்டர்,விஜய்,உலக சினிமா

உலக சினிமா என்பது அந்தந்த ஊரில் ஓடாத படம்.அப்படியென்றால் ஆதி,வில்லு எல்லாம் அவர்களுக்கு உலக சினிமாவா?

3 இடியட்ஸ் அமீர்கான் வேடத்தில் விஜய் - யோசனை தந்த இடியட் யாரு இது விஷப்பரிட்சையா இல்ல விஷம் வைக்கிற பரீட்சையா?

நான் காதல் வயப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் போதை தரும் ஹஸ்கி வாய்ஸ்.நானும் அப்படி பேச முயற்சித்தேன்.உளறாதே என்கிறார்கள் என்ன செய்ய

தூக்கக்கலக்கத்தில் யாருக்கு காலை வணக்கம் சொன்னேன்னு தெரியல.கேக்கவும் பயமா இருக்கு சாருவோட காலை வணக்கம் படிச்சதுலயிருந்து.

பதிவர்கள் தயவு செய்து கவர்ச்சி படங்கள் போட்டு பதிவெழுதாதீங்க.எங்கேயோ மச்சம்னு சொல்வாங்களே அதை தேட சொல்லுது மனசு.அதுவும் ஆபிஸ்ல

நான் ஒரு டிரெண்ட்செட்டர்.நான் தியேட்டருக்கு ஜட்டியே போடாம போனேன்.அப்புறம் தான் சாரு அப்படி ஐநாக்ஸ் போனாரு.அப்போ எனக்கு வயசு ரெண்டு.

பதிவுலகச்சண்டை=புட்பால்.சப்ஸிடிடூட் தான் நல்லது.ரெண்டு பக்கமும் வேண்டியவங்க இருப்பாங்க.கோல் போட்டா ஷேம்சைடு.போடலைன்னா பதிவு போயிரும்.

பேஸிக்கா நான் ரொம்ப சோம்பேறி.ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு பத்து டிவிட்டுக்கு மேல யோசிக்க முடியல

எனக்கு பின்னூட்டம் கம்மியா வருது.அந்த சோகத்தை சாரு,எஸ்.ராமகிருஷ்ணன் பார்த்து தீர்த்து கொள்கிறேன்.அவங்களுக்கு பின்னூட்டமே வர்றதில்லை.

பிறப்பு,வளர்ப்பு,ஈர்ப்பு,சுகிப்பு,எதிர்ப்பு,மறுப்பு,தவிப்பு,இறப்பு - என் டிவிட்டர் நாவலின் அத்தியாயங்கள்.

சைட்ல இருக்கும் விட்ஜெட்ல என் டிவிட்டர் முகவரி.வாங்க பேசலாம்.

3 comments:

இரும்புத்திரை said...

மைனஸ் ஓட்டு மன்னர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Nathanjagk said...

விஷுவல் பேஸிக்கா நானும் ஒரு ​சோம்பேறி. ஒரு நாளைக்கு மூணு ​வேளைக்கு ​மேல சாப்பிட முடியறதில்ல தம்பி!

நல்லா ட்விட்டரீங்க அர்விந்த்!!

Nathanjagk said...

//நான் ஒரு டிரெண்ட்செட்டர்.நான் தியேட்டருக்கு ஜட்டியே போடாம போனேன்.அப்புறம் தான் சாரு அப்படி ஐநாக்ஸ் போனாரு.அப்போ எனக்கு வயசு ரெண்டு.//

நானும் ட்ரெண்ட்செட்டர்தான்!!
உங்களுக்கு முன்னாடியே ஜ.போ. சினிமாவுக்குப் போயிருக்கேனே:))
(ரொம்ப ​யோசிச்சா ஆதாம்தான் ​பெரிய ட்ரெண்ட்செட்டர் போலிருக்கு)