சுறா படத்தை சன் வாங்கி விட்ட நிம்மதியில் இருக்கிறார் விஜய்.காலையிலேயே சன் பிக்சர்ஸில் இருந்து போன்.
சன் பிக்சர்ஸ் - "திருநெல்வேலியில் படம் ரீலிஸ் பண்றோம்..நீங்க படம் ரீலிஸாகறதுக்கு முன்னாடி ஒரு விசிட் அடிக்கணும்.."
விஜய் - (மனதுக்குள்) "எப்படி இருந்த என்னை.." (மெதுவாக) "பாம்பே தியேட்டர் தானே.."
சன் பிக்சர்ஸ் - "அப்படியே பக்கத்தில் சாத்தாங்குளத்துல நாராயணசுவாமி தியேட்டருக்கும் போயிட்டு வந்துருங்க.."
விஜய் - "அங்கேயுமா.."
சன் பிக்சர்ஸ் - "இன்னும் அதுக்கு பக்கத்துல்ல இட்டமொழி ஊர்ல புஷ்பான்னு ஒரு கொட்டகையிருக்கு..அங்கேயும் படம் ரீலிஸ் பண்றோம்.."
விஜய் - "இன்னும் ஏதாவது ஊர் பாக்கி இருக்கா.." என்று போனை கட் செய்கிறார்.
எஸ்.ஏ.சி - "ஏன் டல்லா இருக்கே.."
விஜய் - "இனிமே அஜித்தை நான் ஃபாலோ பண்ணப் போறேன்.."
எஸ்.ஏ.சி - "எதுக்கு விஷப்பரிட்சை..அதுக்கு 3 இடியட்ஸ் ரீமேக் பண்ணலாம்.."
விஜய் - "முதல்வர் பாராட்டு விழாவுல பேசினாலும் பேசினார்..எல்லார் கவனமும் அங்க தானிருக்கு.."
எஸ்.ஏ.சி - "நாம அப்படியெல்லாம் பேச முடியாது..புறம்போக்கு இடம்,கல்யாண மண்டபம் எல்லாம் கண் முன்னால வந்துட்டு போகுது.."
விஜய் - "இந்த திரிஷா கூட அஜித்துக்கு சப்போர்ட்.."
எஸ்.ஏ.சி - "நீ படத்துல இப்போ சான்ஸ் தரல..அப்புறம் சப்போர்ட் அங்க தானே போகும்.."
விஜய் - "இனிமே எந்த விழாவுக்கும் அவர் வர வேண்டியதில்லை..நான் கிராமம் கிராமமாய் போறேன்.."
எஸ்.ஏ.சி - "கோபப்படாதே..மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி எல்லாம் பட டிவிடியும் இருக்கு..படம் பாரு ரீமேக் பண்ணலாம்.."
விஜய் - "அஜித்தல ஃபாலோ பண்ணி தளபதின்னு பட்டம் வச்சிருக்கிறவங்க எல்லாம் ஸ்டார் பட்டத்துக்கு மாறப் போறாங்களாம்..விஷால் தான் முதல்ல.."
எஸ்.ஏ.சி - "புரட்சி கலைஞரை உருவாக்கியதே நான் தான்.."
விஜய் - "இதெல்லாம் கூட பரவாயில்ல..இந்த ப்ளாக்கர்ஸ் அஜித்தை தலையில் வைத்து ஆடுகிறார்கள்.."
எஸ்.ஏ.சி - "அதுதான் கலைஞர் டிவில அவரை புறக்கணிச்சுடாங்களே.."
விஜய் - "அது தமிழ் நாட்டுல..உலகம் புல்லா இந்த பசங்க பரவிக் கிடக்காங்க..அங்க ஒருத்தன் இருக்கான்..என் ரசிகன் என்று கோட்ஸ் போட்டு சொல்லுவான்..ஆனா கலாய்க்கிறது எல்லாம் என்னைத்தான்.."
எஸ்.ஏ.சி - "அவன் எல்லாம் ஒரு ஆளா.."
விஜய் - "அசல் விமர்சனம் எழுதினாலும் வேட்டைக்காரனை இழுக்கிறான்.."
எஸ்.ஏ.சி - "சரி என்ன பண்ணப் போற.."
விஜய் - "நானும் வர முடியாதுன்னு அஜித் மாதிரி சொல்லப் போறேன்.."
எஸ்.ஏ.சி - "முதல்ல பேசியவனை கண்டுக்க மாட்டாங்க..பின்னாடி கொடிப் பிடிக்கிறவனை வெளுப்பாங்க.."
விஜய் - "புரியல.."
எஸ்.ஏ.சி - "நாம டிரெண்ட் செட்டரா இருக்கணும்..எப்படின்னா ரசிகன் படத்தில் மாமியாருக்கே சோப் போட்ட..தமிழ் நாடே அதிர்ந்தது..அது மாதிரி ஏதாவது பண்ணணும்.."
விஜய் - "நீங்க எதுக்கோ அடி போடுறீங்க.."
எஸ்.ஏ.சி - "வெளுத்துக் கட்டுன்னு ஒரு படம் எடுக்கிறேன்..நீ நடி..நான் இயக்குறேன்.."
விஜய் - "அதுக்கு நான் இட்டமொழி புஷ்பா தியேட்டருக்கு போவேன்.."
எஸ்.ஏ.சி - "அட்லீஸ்ட் கெஸ்ட் ரோல்..இப்போ பரத் நல்லா வளர்ந்து வர்றான்..அவனை ஹீரோவா போட்டு காலி பண்றேன்..என்ன சொல்ற.."
விஜய் - "அப்பா,நீங்களே சொல்லி இருக்கீங்க..2011ல தான் நான் அவார்ட் படம் நடிப்பேன்னு..அது நடந்தா இதுவும் நடக்கும்.." மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்."நமக்கு வேட்டு வைக்க ஆள் வெளியேயிருந்து வர வேண்டியதில்ல.."
Friday, February 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஐ நான்தான் பஸ்டு நான்தான் பஸ்டு
என்னா தல அஜித் கூட எதுவும் டீலிங்கா
//.அவனை ஹீரோவா போட்டு காலி பண்றேன்// :)
//.அவனை ஹீரோவா போட்டு காலி பண்றேன்// :)
நரேன்
நிதின்சத்யா
வரிசையில்
தம்பி எப்ப சென்னை வர்ற..........
மிகுந்த ஆவலுடன்......
அத்திரி
//அதுக்கு நான் இட்டமொழி புஷ்பா தியேட்டருக்கு போவேன்.
//
:-))
துவைச்சு தொங்க விடுறதுன்னு ஒரு வாட்டி நீங்க முடிவு எடுத்திட்டா உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்க.. அப்படித்தானே?
//"முதல்ல பேசியவனை கண்டுக்க மாட்டாங்க..பின்னாடி கொடிப் பிடிக்கிறவனை வெளுப்பாங்க.."//
என்னவொரு புத்திசாலித்தனம்.. நச்'ன்னு இருந்துச்சு
kalakkiputtengo....
Post a Comment