Saturday, February 13, 2010

Inglourious Basterds விமர்சனம் - புனைவின் உச்சக்கட்டம்

Quentin Tarantino - பெயரை தமிழில் எழுதி தவறாக உச்சரிக்காமல் இருப்பதே அவருக்கு தரும் மரியாதை.அதே போல எடுத்த அல்லது சுட்ட படத்தை புனைவு என்று டைட்டில் கார்ட் போட்டு ஏமாற்றுபவகர்கள் கண்ணில் இந்த படம் பட்டாலும் இந்த படத்தை அப்படியே விட்டு வைப்பது தான் மரியாதை.காரணம் பத்து ஆண்டுகள் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குனர்.அப்புறம் நடிகர்கள் தேர்வு.நாம் என்ன செய்கிறோம் ஒரு வெற்றி படம் குடுத்தவரை தேடி செல்கிறோம்.பத்து வருடம் திரைக்கதையை அவர் ஒரே வருடத்தில் எடுத்து முடித்து விட்டார்.இதுவே தமிழாக இருந்தால் ஸ்பாட்டில் டிவிடி பார்த்து படம் எடுக்க மூன்று வருடம் எடுத்து உலகத்தரம்,ஆஸ்கர் என்று பேசுவோம்.முக்கிய குறிப்பு படத்திற்கு எட்டு ஆஸ்கர் நாமினேஷன்.இதில் இருந்து தெரியும் உலகத்தரம் என்றால் என்னவென்று.கதை சொல்லும் விதம் வித்தியாசமாக உள்ளது.கதை ஒவ்வொரு அத்தியாயமாக பின்னப்பட்டுள்ளது.ஆங்கிலம்,பிரென்ஸ், இட்டாலியன்,ஜெர்மன் என்று நான்கு மொழி பேசுகிறார்கள்.

முதல் அத்தியாயம் நாஸி கைப்பற்றி இருந்த பிரான்ஸில் படம் ஆரம்பிக்கிறது.யூதர்கள் மறைந்திருந்தால் அவர்களை கண்டுப் பிடித்து கொல்வது தான்.அப்படி ஒரு விவசாயி மறைத்து வைத்திருப்பதாக கேள்விப்பட்டு விசாரணைக்கு வரும் சான்ஸ் லாண்டா பேசி பேசியே மறைந்திருப்பவர்களைக் காட்டிக் கொடுக்க வைக்கிறார்.வீரர்களை அழித்து வீட்டின் அடியில் இருப்பவர்களை கொலை செய்கிறார்.அதில் ஒரு பெண் தப்பி ஓடுகிறாள்.

அத்தியாயம் இரண்டு - எட்டு அமெரிக்க யூத வீரர்கள் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கும் ரெய்னே ஒவ்வொரு வீரனும் தலா நூறு எதிரிகளை கொல்ல வேண்டும் என்று சொல்கிறார்.ஜெர்மானியர்களுக்கு பயம் வர வேண்டும் என்று சொல்கிறார்.அப்படி பயத்தை உருவாக்க சிறு ஜெர்மானிய வீரர்கள் குழுவைப் பிடித்து ஒருவனை மட்டும் ஹிட்லரிடம் அனுப்பி வைக்கிறார்கள்.நெற்றியில் முத்திரையோடு மற்றவர்களுக்கு நேர்ந்த நிலையை சொல்ல.

அத்தியாயம் மூன்று - முதல் அத்தியாயத்தில் தப்பி வந்த பெண் பாரிஸில் ஒரு திரையரங்கு நடத்துகிறார்.அவளை ஒரு ஜெர்மானிய வீரம் கவர முயற்சி செய்கிறான்.பிறகு தான் தெரிகிறது அவன் தனியாக 300 வீரர்களுடம் சண்டையிட்டு கொன்றவன் என்று.அவன் வைத்து ஒரு படம் எடுக்கிறார்கள்.அவனே நடிக்கிறான்.அந்த படத்தை இவள் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று அரசியல் புள்ளி கம் படத்தின் இயக்குனர் விரும்ப அதை ஜெர்மானிய இயக்குனரின் மொழிபெயர்க்கும் பெண் இவளிடம் சொல்கிறாள்.அவள் அது தவிர என்ன செய்கிறாள் என்று காட்டும் இடத்தில் இயக்குனர் ஷேர் போட்டு அமர்கிறார்.ஜெர்மானியர்கள் மட்டும் படம் பார்க்க முடிவு செய்கிறார்கள்.திரையரங்குக்கு பாதுகாப்பு தரும் லாண்டா(அவளின் குடும்பத்தைக் கொன்றவர்) அவளிடம் விசாரிக்கிறார்.உன்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் நினைக்கிறேன்,ஆனால் ஞாபகமில்லை என்று சொல்கிறார்.அவள் நீக்ரோ காதலனிடம் சேர்ந்து ஜெர்மானியர்களோடு திரையரங்கை எரிக்க முடிவு செய்கிறாள்.

அத்தியாயம் நான்கு - ஜெர்மானிய நடிகை கம் டபுள் ஏஜெண்ட் இந்த விபரத்தை பாஸ்டர்ஸிடம் சொல்ல பாருக்கு அழைக்கிறாள்.ஏற்கனவே மகன் பிறந்ததிற்காக பார்ட்டி தரும் ஜெர்மானிய வீரன் குழுவுடன் இருக்கிறான்.அங்கு வரும் மூன்று பாஸ்டர்ஸ்களிடன் லேசாக வாய் தகராறு வர,நடக்கும் சண்டையில் மிஞ்சுவது நடிகையும்,அப்பாவான வீரனும் மட்டுமே.ரெய்னே வந்து சரணடைய சொல்ல அதை நம்பி துப்பாக்கியைக் கீழே போடுபவனை நடிகை கொல்கிறாள்.அவளை சித்ரவதை செய்து ரெய்னே உண்மையை வாங்க அவளுடைய இத்தாலிய பாதுகாவலர்களாக மூவர் செல்கிறார்கள்.இதே சமயத்தில் சம்பவ இடத்திற்கு வரும் லாண்டா செருப்பை வைத்து தப்பித்த நடிகையை கண்டுப்பிடிக்கிறார்.

அத்தியாயம் ஐந்து - திரையரங்கை வெடிக்க வைக்க தயாராகும் ஷோசனா அவள் ஒரு படம் எடுத்து ஜெர்மானியர்களை வழியனுப்ப முடிவு செய்கிறாள்.பிண்ணனி இசையும்,பாடலும் அருமை.நடிகையை தனியறையில் விசாரிக்கும் லாண்டா செருப்பை குடுத்து அணிய சொல்கிறார்.சிண்டரல்லா கதை ஞாபகத்திற்கு வந்தது.அது சரியாக சேர்ந்ததும் எதிர்பாராமல் பாய்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்கிறார்.ரெய்னே கைது செய்யப்படுகிறார்.ரெய்னே வைத்திருந்த வெடிகுண்டை ஹிட்லர் சீட்டுக்கு அடியில் வைக்கிறார்.விசாரணைக்கு எடுத்து செல்லப்படும் ரெய்னேவிடம் உங்கள் திட்டத்தை சொல்லவா என்று ஆரம்பித்து ரெய்னே விடம் சரணடைய முடிவு செய்கிறார்.ஷோசனாவின் நீக்ரோ காதலன் எல்லா கதவுகளையும் அடைத்து விட்டு பற்றி எரியும் நைட்ரேட் ப்லிமை எரிக்க காத்திருக்கிறான்.அவளிடம் வழியும் ஜெர்மானிய வீரன் மற்றும் படத்தின் நாயகன் ஆபரேட்டர் அறைக்கு வந்து என்னை ஏன் தவிர்க்கிறாய் என்று சண்டையிட கதவைப் பூட்டச் சொல்லி விட்டு சுட்டுத் தள்ளுகிறாள்.300 பேரை கொன்றவன் ஒரு பெண்ணால் சாகிறான்.இந்த _______ தலை தலையாய் அடிக்கிறேன் காதல் கருமாந்திரம் எல்லாம் வேண்டாம் என்று.சாகும் தருவாயிலும் அவளை கொல்கிறான்.அவள் உருவம் திரையில் வந்ததும் அவளின் காதலன் பிலிமை கொளுத்துகிறான்.நடிகையின் பாதுகாவர்களாக வந்த ரெய்னேவின் ஆட்கள் பாக்சுக்குள் புகுந்து
ஹிட்லர்,இயக்குனர்,எல்லா மொழியையும் பெயர்த்தவள் என்று எல்லோரையும் கொல்கிறார்கள்.வெறி அடங்காமல் எல்லோரையும் சுட்டுக் கொல்கிறார்கள் லாண்டா வைத்த வெடிகுண்டு வெடிக்கும் வரை.எல்லையில் ரெய்னேவை விட்டு விட்டு அவரிடம் சரணடையும் லாண்டாவுக்கு அதிர்ச்சி தருகிறார்கள்.ஓட்டுனரைக் கொன்று விட்டு லாண்டா நெற்றியில் முத்திரை பதிக்கிறார்கள்.இதுதான் என்னுடைய மாஸ்டர் பீஸ் முத்திரை என்று சொல்கிறார் ரெய்னே.

லாண்டாவாக நடித்தவரின் உடல் மொழி அபாரம்.ஏனோ பார்த்திபன் நடித்த சோழ மன்னன் உடல் மொழியுடன் மனம் ஒப்பிட்டுப் பார்த்த என்னை என் மனசாட்சியே கேவலமாக சிரித்தது.

விடுபட்டவை - படத்தில் வன்முறை நிகழப் போவதே தெரியாத வண்ணம் மெதுவாக ஆரம்பித்து முடிக்கும் போது அந்த வேகத்தோடு நான் பயணித்தேன்.பாருங்கள் நீங்களும் பயணிக்கலாம்.ஹிட்லர் எப்படி இறந்தார் என்று நமக்கு தெரியும்.சும்மா பெயருக்கு கடைசியில் இது வெறும் கற்பனையே என்று போடுகிறார்கள்.

இதை முப்பது வருடம் கழித்து தமிழில் எடுத்து விட்டு நான் தான் எடுத்தேன் என்று பீற்றிக் கொள்ளும் இயக்குனர் இனி பிறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

இரும்புத்திரை said...

இந்த விமர்சனத்திற்கு வரும் திட்டுகளுக்கு நான் எத்தனை பதிவில் பதில் சொல்வேனோ.இதுக்கு தான் படமே பார்ப்பதில்லை.கடவுளே கடவுளே.

மதார் said...

//இந்த விமர்சனத்திற்கு வரும் திட்டுகளுக்கு நான் எத்தனை பதிவில் பதில் சொல்வேனோ.இதுக்கு தான் படமே பார்ப்பதில்லை.கடவுளே கடவுளே//
சொல்றதையும் சொல்லிட்டு என்ன பதுங்கல் ? 1 /1000 பிடிக்கலேன்னா சும்மா இருங்க .

லோகு said...

இப்போதைக்கு விடமாட்டீங்க போல.. நடத்துங்க..