அசல் பார்ப்பதற்கு அரை மணி நேரம் முன்பு..
ரயில்வே ஸ்டேஷனின் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தேன்.பின்னால் ஒரு பெண்ணின் குரல்.முதலில் ஆங்கிலம்,அப்புறம் ஹிந்தி,கடைசியாக பொறாமை என்று காதில் விழுந்தது.தமிழ் பொண்ணா..கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஏதோ சொல்ல, அவர்களை கடக்க விட்டு பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது.உள்ளுணர்வு எதையோ சொல்லியது.நான் கண்டுக் கொள்ளவில்லை.
இதை அப்படியே அசல் விமர்சனத்திற்கு மாற்றினால்
படம் ஆரம்பித்த அரை மணி நேரம் கழித்து
எழுத்து ஆரம்பித்தப் பிறகு தான் படம் பார்க்க நுழைந்தேன்.திரையில் ஒரு பெண் குரல்.சமீரா ரொட்டி இல்ல ரெட்டி.முதலில் ஆங்கிலம்,அப்புறம் பிரென்ச்,கடைசியாக இதுக்கு ஒருத்தர் இருக்கிறார் என்று காதில் விழ,தமிழ்ப்படம் தான் என்று தெரிந்தது.குடுத்தப் பணம் வீண் போகவில்லை என்று நினைத்தால் கடைசியில் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது.பெண் விஷயத்தில் இருந்த குறியீடை சரியாக கேட்ச் பிடித்திருந்தால் எனக்கு எந்த விரயமும் இல்லை.
அஜித் - நான் பேச மாட்டேன் என்று சொன்னாலும் சொன்னார்.படத்திலும் பேசவில்லை,படமும் பேசவில்லை.பில்லா படத்திற்கு பிறகான ஹாங்க் ஒவர் என்று தீருமோ தெரியவில்லை.அழகான முகத்தை இப்படி கெட்டப் என்று தாடி எல்லாம் வைத்து மறைக்க வேண்டுமா.இரண்டு பாடல்களில் க்ளீன் சேவ்.நைஸ்.அப்பா அஜித்திற்கும் மகன் அஜித்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.அப்பா அஜித் அழகாக இருக்கிறார்.
வில்லன்ஸ் - எல்லாருமே காமெடி பீஸாகயிருக்கிறார்கள்.கொஞ்ச நேரம் மிரட்டிய கெல்லி டோர்ஜியும் இடைவேளியிலேயே காலி.ஆஹா ராஜீவ் கிருஷ்ணா,பூக்களைப் பறிக்காதீர்கள் சுரேஷ்,பருத்தி வீரன் சம்பத்,கஜினி பிரதீப் ராவத்,காக்க காக்க சேது இப்படி கம்பீரமாக பார்த்த நடிகர்கள் திராபையாக இருக்கிறார்கள்.
கதை,திரைக்கதை,வசனம் என்று மூவர் பெயர் வந்தது.அதனால் அவர்கள் நடித்த,இயக்கிய,கதை எழுதிய படங்களின் கலவையாகயிருந்தது.பில்லா கோட் சூட்,வில்லன் போல இரண்டு நாயகிகளின் சண்டை,வரலாறு அப்பா மகன்,வட்டாரம் ஆயுத பேரம்,மோதி விளையாடு ரீச்னெஸ் என்று கலந்து அடிக்கப்பட்ட அஜித் படம்.பெயரில் மட்டும் தான் அசல் இருக்கிறது.
பாவனா - கவர்ச்சி என்று தொடையைத் தட்டி ஆடியிருக்கிறார்.அந்த காட்சியில் எல்லாம் எனக்கு ரன் படத்தில் விவேக் சொல்வது தான் ஞாபகத்திற்கு வந்தது."சின்ன காலாயிருந்தாலும் நல்லாயிருக்குடா..".ஆனால் பாவனாவை பாக்க காமெடியாக இருக்கிறது.பேசாமல் யாரையாவது கல்யாணம் செய்து கலைக்கு சேவை செய்யாமல் இருக்க வேண்டும்.
சமீரா - ஏன் இவரை விட்டு விட்டு இன்னொரு நாயகியுடன் சேர்க்கிறார்களோ தெரியவில்லை.தமிழ் சினிமாவின் ராசி என்ன செய்ய.
பிரபு - ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் சம்பளம் மிச்சம்.
படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம் தாடி தான்.நாயகன் முதல் வில்லன் வரைக்கும் வித்தியாசமான தாடி.ஆட்டுத்தாடி,குறுந்தாடி இன்னும் பல.தாடி வைக்க யோசித்தவர்கள் கொஞ்சம் கதையையும் யோசித்து இருக்கலாம்.
தாடி குறுயீடு தொல்லையால் பாவனா ஏதாவது வெய்த்திருக்கிறாரா என்று கடைசி வரை தேடிக் கொண்டிருந்தேன்.
அஜித் செய்ய வேண்டியது - சரண்,யூகி சேது இந்த கூட்டணியெல்லாம் துரத்தி அடித்து விட்டு நல்ல கதை சொல்லும் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.இல்லை கமீனே படத்தை ரீமேக் செய்யலாம்
கதையின் சூட்சுமம் - அஜித் இரண்டாவது மனைவிக்கு பிறந்த வாரிசு.என்னமா யோசிச்சிருக்காங்க.
யூகி சேதுவும் நடித்திருக்கிறார்.சில இடத்தில் சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவு பிரசாந்த் வெல்டன் குரு பெயர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
பரத்வாஜ் - ஒரே இரைச்சல்.தமிழ் நன்றாக உச்சரிக்கும் பாடகர்களுக்கு தான் வாய்ப்பு என்று சொல்கிறார்.அவர்களின் கொலையை விட இவர் செய்ததது அதிகம்.
அஜித் கோட் சூட்,நடை,சுருட்டு இப்படியே நடித்தால் பார்க்கும் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
ஆனாலும் வேட்டைக்காரனுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.ஆனால் வேட்டைக்காரன் படத்தை காப்பாற்ற சன் பிக்சர்ஸ் இருந்தது.
எனக்காவது ஐம்பது ரூபாய் தான் போச்சு.பிரபுவிற்கு - ????
அஜித் கதை விவாதத்தின் போது சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.அடிக்கடி டை அடிக்க முடியவில்லை.சரணின் பதில் அப்பா கேரக்டரை சாகடித்தி விடலாம்.இப்படி தான் நிறைய காட்சிகள் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
மெர்ஸி - இந்த ஒரு வார்த்தை கற்று தந்த அசலுக்கு நன்றி.அசல் இன்னொரு வேட்டைக்காரன் தான்.மற்ற படங்களின் சாயல் தெரிவதால்.குறிப்பாக வேட்டைக்காரன் தந்த தலைவலி இந்த படத்தால் வரவில்லை.அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
Sunday, February 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அட்டகாசம் பார்த்து விட்டு ஐந்து வருடம் அஜித் படம் பார்க்கவில்லை.இனி அஜித் பட விமர்சனம் 2014லில் வரும்
டேய் இங்கயுமா வேட்டைக்காரனை பற்றி.................... படம் பிடிக்கலனா பிடிக்கலைனு சொல்லிடு அத விட்டுட்டு........ தேவையில்லாம தளபதிய இழுக்காத.........
அது என்னடா படம் மொக்கைனு பதிவு முழுசும் எழுதிட்டு கடேசியா அசித் ரசிகர்களுக்கு பிடிக்கும் அப்படினு......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
100% KUPPAI MOVIE
அத்திரிக்கு ரிப்பீட்டு
do'nt compare with vettaikaranfilm, always ajith film top
its better then vettaikaran.ajith only top most n tamil film
பருத்தி வீரனில் எங்கிட்டு சம்பத் வந்தாரு? பாத்து எழுதுங்கப்பா...
//பருத்தி வீரனில் எங்கிட்டு சம்பத் வந்தாரு? பாத்து எழுதுங்கப்பா...//கார்த்தியோட அப்பாவாக வருவாரே அவர் தான் சம்பத்...
mercy thala.....
நா பாக்கலையே... ஹி ஹி
நேர்மையான விமர்சனம் ...
//எனக்காவது ஐம்பது ரூபாய் தான் போச்சு.பிரபுவிற்கு - ????
கண்டிப்பா வரவுதான்
padam semma mokka.
but tottodain pattu parunga ajith "belly" dance super...
ithu oru pathiuv nanum vanthu padichiyen paru, ennail ellam------
//பாவனாவை பாக்க காமெடியாக இருக்கிறது//
கரெக்டா சொன்னீங்க..
Post a Comment