Thursday, February 18, 2010

மிஸ்ஸான சில வடைகள்

வீட்டில் இருக்கும் போது பதிவெழுத யோசித்தால் ஒண்ணுமே கற்பனை குதிரையில் ஏற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.அதுவே ஆபிஸில் எழுதினால் வடைகள் கணக்கில்லாமல் இலக்கில்லாமல் வந்து விழுகிறது.ஆபிஸ் வேலையை ஆபிஸில் செய்யாமல் வீட்டில் செய்தால் எப்படி சரியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து ஆபிஸில் வடைகளை ஊற விட முடிவு செய்து இருக்கிறேன்.

ஆபிஸில் இருக்கும் ஒரே பிரச்சனை யாராவது வந்து விட்டால் அவசரமாக க்ளோஸ் செய்வதால் சில சமயம் அடித்தது எல்லாம் சேமிக்க முடியாமல் போய் திரும்ப அடிக்கும் போது கோர்வை வர மறுக்கிறது.

இன்னொரு பிரச்சனை ஏற்கனவே எழுதி வைத்திருந்த கதையின் மேலேயே சேமித்து விட்டேன்.வட போச்சே நான் வருத்தமிருந்தாலும் எப்படியும் அதை எழுதி படிப்பவர்களுக்கு தொல்லை தர வேண்டும்.

நான் உச்சரித்த
நல்ல வார்த்தைகள் எல்லாம்
காற்றில் எங்கோ போய் விட
முடியாத சந்தர்ப்பத்தில்
உச்சரித்தது மட்டும்
சுழலாய் சுற்றி
நம்மிருவருக்கும் நடுவே உள்ள
இடத்தில் இடைவெளியாய் அமர்கிறது
சூழ் நிலை கைதிகளாய் நாம்.

இப்படியெல்லாம் கவிதை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பலாம் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயம் மதிக்க மாட்டார்கள்.என் கவிதை வந்தால் பதினெழு ரூபாய் தெண்டம் அழணும்.(இப்படி சொல்வதற்கு காரணம் ஆனந்த விகடன் இடத்தை விரைவில் குங்குமம் அல்லது சூர்யகதிர் படிக்கும்.)

டிவிட்டர் மோகம் பிடித்து ஆட்டுவதால் இனி பாதி வடைகளை அங்கு கடன் குடுக்க வேண்டும்.

ஒரு தொடர்கதை ஆரம்பித்து அந்தரத்தில் நிற்கிறது.அதை முடிக்க வேண்டும்.

டிவிட்டரின் அடுத்த வடை இதுதான் - உலக சினிமா என்பது அந்தந்த ஊரில் ஓடாத படம்.அப்படியென்றால் ஆதி,வில்லு எல்லாம் அவர்களுக்கு உலக சினிமாவா?

பின்னூட்டதில் அஜித் நடித்த உலக சினிமாக்களின் வடைகளை தரலாம்.என்னை மாதிரி "விஜய்" இரசிகர்கள் சந்தோஷப் படுவார்கள்.

கடமை என்னும் வடை அழைக்கிறது.மிச்சமிருக்கும் வடைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் கேட்ச் பிடிக்கலாம்.

6 comments:

இரும்புத்திரை said...

நண்பர்கள் வடைகளில் காரம் குறைவாக இருப்பதாக சொன்னதால் வரும் பதிவுகளில் மசாலா தூவப்படும்

sathishsangkavi.blogspot.com said...

//நண்பர்கள் வடைகளில் காரம் குறைவாக இருப்பதாக சொன்னதால் வரும் பதிவுகளில் மசாலா தூவப்படும்//

ஆமாங்க காரம் வரவர கம்மியாகிவிட்டது ஏனோ?

Rajan said...

அண்ணா வணக்கம்

வல்லிசிம்ஹன் said...

வடைல காரம் குறைந்தால் எங்களுக்கெல்லாம் நல்லது. ஜீரணத்துக்கு:)
பதிவுகளை, கடிதங்களாகா எழுத ஆரம்பிங்களேன்.
ஏதோ கம்யுனிகேஷன்னு நினச்சுட்டுப் போயிடுவாங்க:)

Raju said...

@ராஜன்
கலைஞர் வணக்கம்.

Marimuthu Murugan said...

//3 இடியட்ஸ் அமீர்கான் வேடத்தில் விஜய் - யோசனை தந்த இடியட் யாரு இது விஷப்பரிட்சையா இல்ல விஷம் வைக்கிற பரீட்சையா?//

ட்விட்டர்லயுமா...