Sunday, February 14, 2010

காதலர் தினக்கவித - சரக்கு வாசனையோடு

பாவி மவ ரத்தினமே
காதல சொன்னாலும் ஒத்துக்காதே
சரக்கு வாங்க காசில்ல
இன்னைக்கு நிராகரிச்சு
நாளக்கு ஏத்துக்கோயேன்
ஓசி சரக்கு அடிச்சி நாளாவுது
வெள்ளக்காரன் கண்டுப்பிடிச்ச
எய்ட்ஸ் தினம் எத்தனாம் தேதி
ஞாபகம் இருந்தா சொல்லித் தொலயேன்
விழிப்புணர்வு பதிவு போடணும்
விலவாசி ஏத்தத்துல
ரப்பர் விலையும் ஏறிப்போச்சாம்
உன் நினைப்ப அழிக்க ஒரு
வழி சொல்லேன் பாக்கியவதி
பாடாவதி காதலுக்கு
இத்தன பதிவா
இதுக்கு மேல தெளியல
மிச்சத்த டூவிட்டா கொட்டுறேன்
உவாக் உவாக்
யாரோ எடுத்தது
என் மேல தெறிக்குது
எவ நினைப்போ தெரியலயே

6 comments:

இரும்புத்திரை said...

காதலர் தினத்தின் போதை நாளையோடு முடியுமா

cheena (சீனா) said...

முடியலாம் - தொடரலாம் - தொடர்ந்து முடியலாம் - முடிந்து தொடரலாம் - தொடராமலும் முடியாமலும் இருக்கலாம்- போதை இல்லையா - அப்படித்தான் இருக்கு

லோகு said...

அட்டகாசம் அண்ணா.. சூப்பர்!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

காதலர் தின வாழ்த்துக்கள்

அத்திரி said...

ஏன் இப்படி..இந்த கொலைவெறி.....................ஒரு கவிதை கூட உருப்படியா எழுத மாட்டியா

மதார் said...

//ஏன் இப்படி..இந்த கொலைவெறி.....................ஒரு கவிதை கூட உருப்படியா எழுத மாட்டியா//
supper