Thursday, February 25, 2010

சச்சின்,ஜட்டி,சாரு,பிரபலம்,ஹிட்ஸ்,எதிர்வினை

சச்சின் :

இன்று காலையில் படித்தேன்.படித்தவுடன் சச்சினைப் புகழ லாரா,பாண்டிங் போன்ற தலை சிறந்த வீரர்களை இழிவுபடுத்தியத்தோடு இல்லாமல் கங்குலி என்ற அருமையான மனிதனையும் இழுத்து பதிவுக்குள் விட்டது எனக்கு சொல்ல முடியாத வேதனையை தந்தது.நீங்கள் எத்தனை முறை விளக்கம் குடுத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திரும்ப திரும்ப உங்களுக்கு வந்து பின்னூட்டங்கள் என் கருத்தை சொல்லியிருக்கும்.நீங்கள் ஏதோ ஒரு இணையதளத்தில் எவனோ எதையோ கிறுக்க போக அதை அன்றே கண்டிக்காமல் சச்சின் சதமடித்தப் பின் பத்தியாய் எழுதி என் உயிரை வாங்கியதற்கு எதற்காக.பாண்டிங்கின் திற்மைகள் தெரியுமா.கேப்டன் பதவிக்கு முன் குடித்து விட்டு சண்டை போட்டுயிருக்கிறார்.சூதாடியிருக்கிறார்.அது சச்சினால் முடியுமா என்று நான் கேள்வி எழுப்பினால் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்.நாளைக்கு என்றாவது சச்சின் சகாப்தம் முடிவுக்கு வரும் போது சச்சின் பெராரி காருக்கு வரி கட்டவில்லை,மும்பையில் இருப்பதால் தெரியும் என்று நினைக்கிறேன் மாநகராட்சிக்கு வரி கட்டவில்லை என்று வம்பு இழுப்பார்கள்.அதையும் சச்சின் சதம் அடிக்கும் வரை காத்திருக்காமல் உடனே எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.முக்கியமாக கங்குலி,டிராவிட்,லாரா,பாண்டிங்கை இழுக்காமல் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.இல்லை எத்தனை பின்னூட்டம் போட்டு எனக்கு எடுத்து சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஜட்டி :

நடுஇரவில் தயவு செய்து துணி துவைக்க வேண்டாம்.காரணம் வம்புச் சண்டைகளைத் தேடித் தேடி படித்து விட்டு இரவு துணி துவைத்தால் ஜட்டி காயாது.ஆபிஸ்க்கு சீக்கிரம் போக வேண்டுமென்றால் ஜட்டியை ஈரத்தோடு அணிய வேண்டியதிருக்கும் அல்லது ஜட்டியே போடாமல் போக வேண்டியிருக்கும்.

சாரு :

இதை கேட்ட நான் என்று கேட்டால் நான் தான் முன்னரே துப்புக் கொடுத்தேனே.ஜட்டி என்ற வார்த்தையை பதிவுக்குள் கொண்டு வரும் போதே தெரிய வேண்டாம்.நான் சாருவுடைய அதி தீவிர ரசிகன் என்று.இன்னமும் நம்பாமல் பெயர் கேட்டால் கண்ணாடித்திரை என்று வைத்து கொள்ளலாம்.பெயர் மறக்காமலிருக்கும்.

பிரபலம் :

பிரபலத்தின் அளவுகோலே எனக்கு புரியவில்லை.அதிகப்படியான பதிவுகள் அல்லது நிறைய பின்னூட்டங்கள் அல்லது ஃபாலோயர் அல்லது ஹிட்ஸ் எதை வைத்து இந்த வார்த்தை தீர்மானிக்கப்படுகிறது."உங்களுக்கென்ன நீங்க பிரபலம்.." இப்படி ஏத்தி ஏதாவது பதிவில் சொல்லியிருந்தால் அதை அங்கேயே மறந்து விட வேண்டும்.அந்த வார்த்தை போதையில் ஏதாவது எழுதினால் தேவையில்லாமல் என் குருநாதரை எல்லாம் இழுக்கிறார்கள்."பிரபலமாக இப்படி செய்யாதீர்கள்.." என்று சொல்வார்கள்.தேவையா உங்களுக்கு.

ஹிட்ஸ் :

உங்களுடைய எல்லா பதிவுகளின் தலைப்பும் அருமை.ஹிட்ஸ் மட்டுமே கிடைக்க தகுதியுள்ளது.நேற்றைய பதிவின் தலைப்பு முதலில் எப்படி இருந்தது.பின்னர் எதிர்ப்பு கிளம்பியதும் எப்படி மாறியது என்று நானும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன்.அப்புறம் பதிவு எழுதும் கேப்டனாக இருந்தது கங்குலியா இல்லை டிராவிட்டா என்று தெரியாமல் எழுதக் கூடாது.விக்கிபீடியாவில் போய் பீடியை எடுப்பது மாதிரி தேடி எடுத்து சமாளித்தால் உங்கள் பதிவின் மேலிருக்கும் நம்பகத்தன்மை குறையும்.அது உண்மையாகவே இருந்தாலும்.இதனால் ஹிட்ஸ் குறைய வாய்ப்பு உண்டு.

எதிர்வினை :

வெண்ணிற இரவு கார்த்திக்கு சச்சின் பிரபலம் அதனால் சச்சினை வெளுத்தார்.மற்றவர்களுக்கு கார்த்தி பிரபலமாகத் தெரிந்தார்.அதனால் அவரை வெளுக்கப் பார்த்தார்கள்.எனக்கு நீங்கள் தான் பிரபலம்.அதான் உங்களை வெளுத்து நான் பிரபலம் ஆகிறேன்.இன்னும் என்னிடம் ப்ளாக்கர் அக்கவுண்ட் இல்லை.இருந்தாலும் உங்கள் பதிவு எல்லோரையும் சேர உங்கள் வலைப்பூவில் இடம் தந்தது எனக்கு ஆச்சர்யம் தான்.நான் போனப் பிறகு பின்னாடியே ஆள் விட்டு வெளுக்க வேண்டாம்.எனக்கு எதிர்வினைகள் எழுதி மிரட்டல் விடுத்து இன்னும் பதிவுலகத்தில் காலே வைக்காத குழந்தையின் காலை உடைத்து விடாதீர்கள்.

நான் எந்த பதிவிற்கு எதிர்பதிவு போட்டேன் என்று குழப்பம் யாருக்காவது வந்தால் அந்த பிரபலத்தின் (எனக்கு மட்டுமே) பதிவை இங்கு சென்று பார்க்கலாம்.

வெந்ததைத் தின்று விட்டு வந்ததை எல்லாம் இனிமேல் எழுதாதீர்கள்.பதிவுலக வழக்கப்படி கண்டபடி திட்டினாலும் கடைசியில் இப்படி ஏதாவது போட வேண்டும் :-(((((((((((((((((((((( வேண்டாமா இதை வைத்துக் கொள்ளுங்கள் :-)))))))))))))))))))))

8 comments:

இரும்புத்திரை said...

நல்ல அருமையான பதிவு.

இரும்புத்திரையின் இந்த வாய்ப்பு உங்களுக்கு தந்ததிற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அப்படியே என்னுடைய பக்கத்திருக்கும் வந்து உங்களுக்கு பிரபல போதை இன்னும் தாக்கவில்லை என்று காட்டுங்கள்.

உங்களின் இந்தப் பதிவிற்கு நான் நேற்றே எதிர்வினை எழுதிவிட்டேன்.நீங்கள் வருவீர்கள் என்று காத்திருக்கிறேன்.வந்து பின்னூட்டம் போட்டு அப்படியே ஓட்டும் போடுங்கள் வருங்கால பிரபலமே.

அந்த பதிவை இங்கே பார்க்கலாம்.

அத்திரி said...

நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்த......... யாருப்பா அது தம்பிய ஏன் இவ்ளொ டென்சன் படுத்துறீங்க

Anonymous said...

என்ன கொடுமை சார் இது

அகல்விளக்கு said...

ரைட்டு.......

Unknown said...

என்ன சார் இது? ராத்திரி போட்டது இன்னும் இறங்கலையா? கண்ணாடியப் பாத்து இப்பிடிப் பேசிக்கிட்டே இருக்காதீங்க..

Sarav said...
This comment has been removed by the author.
Unknown said...

என்ன இது.........,

Tech Shankar said...

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos