கேபிள் சங்கர் அண்ணனை அவருடைய மகன் "எங்கப்பா ஒரு காமெடி பீஸ்.." என்று சொன்னான் என்று தெரிந்தவுடன்,உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் கேட்டது.அவன் நிச்சயம் அவருடைய இரண்டாவது மகனாகத்தான் இருக்கும் என்று.பிறகு பதிவுகளில் படித்து தெரிந்து கொண்டேன் நான் நினைத்தது சரி தான் என்று.காரணம் எங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது,இன்னும் நிறைய வீடுகளில் நடந்திருக்கும்.இனிமேலும் நடக்கும்.இது மாதிரி சந்தர்ப்பங்களில் தான் ச்சே மூத்த மகனாக பிறந்து தொலைத்து விட்டோமே ஒரு வருத்தமிருக்கும்.
சினிமா பார்க்கலாம் என்று போனால் ரஜினி படங்களைத் தவிர பெரும்பாலான படங்களில் அண்ணன் ஒரு வெத்துவேட்டாக இருப்பான்.உதாரணம் கொடுக்க வேண்டுமானால் அது தேவர் மகன் தொடங்கி இன்று அசல்,ஸ்டைக்கர் வரை தொடர்கிறது.இதனாலேயே ரஜினி படங்களின் மீது ஈர்ப்பு வந்திருக்கலாம்.இன்னும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் ரஜினி அவர் வீட்டில் கடைக்குட்டி அண்ணனாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஆசையே அவர் நிறைய படங்களில் அவர் நடித்திருக்க காரணமாக இருக்கலாம்.
எனக்கு தம்பி மேல் பொறாமையா என்று கேட்டால் இருக்கலாம்.நான்கு வருடங்களாக வீட்டுக்கு காசு மட்டும் தான் கொடுத்திருக்கிறேன்.அவன் கூடவே இருந்து அதை ஒன்றுமில்லாமல் செய்து விட்டான்.அவன் மேல் எனக்கு ஆச்சர்யங்கள் நிறைய உண்டு.எனக்கு மூன்று வருடம் கழித்து பிறந்தாலும் என்னுடைய அவன் இல்லாத முதல் மூன்று வருடங்களையும் சேர்த்தே கொண்டு வளர்ந்துள்ளான்.என்னுடைய மைனஸ்,ப்ளஸ் இரண்டுமே அவனுக்கு ப்ளஸாக இருக்கிறது.அதனால் தான் தம்பிகள் எல்லாம் ஹீரோக்களாக இருக்கிறார்களா.
கடைசி மகன் மீது கொஞ்சம் அதிகமான பாசம் அப்பாகளுக்கு உண்டு,மூத்த மகன் மீது அதிகப்படியான பாசம் அம்மாகளுக்கு உண்டு என்று சொல்வார்கள்.அந்த பாசத்திற்காக இல்லாமல் இந்த கடமைகளில் இருந்து கொஞ்சம் விலகி வெளியே இருக்க கடைசி மகனாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியிருக்கிறது.
இதற்கு ஒரு உதாரணம்(ராமாயணம்,மகாபாரதம் இதிகாசங்களில் இருந்து).ராமன் லட்சுமணனிடம் நீ அடுத்த ஜென்மத்தில் நீ என் அண்ணாக பிறப்பாய் என்று சொல்கிறார்.அது போல கிருஷ்ணரின் அண்ணனாக பலராமன் பிறக்கிறார்.எல்லாம் கடமை உணர்ச்சிகளில் இருந்து தப்பவே என்று நினைக்கிறேன்.
ஆக மொத்தம் அக்கரைக்கு இக்கரை பச்சை.விமர்சனங்கள் செய்யவும்,கடமையுணர்வுகளிலும் இருந்து தப்பிக்க என்னை யாராவது தம்பியாக தத்து எடுத்து கொள்ளுங்கள் ஐயா.இப்படி சொல்வதற்கு காரணம்.நான் பழைய புத்தகங்கள் தந்தாலும் வாங்கி கொள்வேன்.புத்தகக் கண்காட்சிக்கு வர முடியாத காரணத்தால் அங்கு வாங்கிய புத்தங்களை யாராவது எனக்கு ஓசியில் கொடுத்தால் நன்றாகயிருக்கும்.(தண்டோரா,கேபிள்,நர்சிம்,ஆதி போன்ற புத்தகம் எழுதியவர்களும்,எழுதப் போகிறவர்களும் தம்பியாக தத்து எடுத்து புத்தகம் இரவல் குடுத்தால் நன்றாக இருக்கும்).
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஓசியில் புத்தகம் வாங்க இது ஒரு வழி.அவர்கள் எழுதியதை வாங்க அல்ல.புத்தகக் கண்காட்சியில் வாங்கியதை வாங்க.புத்தக விமர்சனம் எழுதி எனக்கு படிக்க குடுத்து வைக்கலையே என்று புலம்வ வேண்டியிருக்காது.
ஏன் இந்த கொலை வெறி.
புத்தகம் வேணும்னா என்கிட்டே கேளுங்க.
//ராமன் அடுத்த ஜென்மத்தில் நீ என் அண்ணாக பிறப்பாய் என்று சொல்கிறாய்.//
யார், யாருகிட்ட சொன்னதுங்க இது?
//புத்தகம் வேணும்னா என்கிட்டே கேளுங்க.//
என்ன புத்தகம்னு மொதல்ல கேளுங்க ! தெரியாத் தனமா கேட்டுட்டமேன்னு ஆயிடக் கூடாது !
////ராமன் அடுத்த ஜென்மத்தில் நீ என் அண்ணாக பிறப்பாய் என்று சொல்கிறாய்.//
யார், யாருகிட்ட சொன்னதுங்க இது?//
மம்முட்டி ரஜினி கிட்ட சொன்னதா இருக்குமோ ?
//நான்கு வருடங்களாக வீட்டுக்கு காசு மட்டும் தான் கொடுத்திருக்கிறேன்.//
விடுங்க பாஸ் ...... உங்க மைன்ட் வாய்ஸ் எல்லாருக்கும் கேட்டுருச்சு
//என்னை யாராவது தம்பியாக தத்து எடுத்து கொள்ளுங்கள்//
அதுக்கு ராம்கிய ஹீரோவா போட்டு ரெண்டு படம் எடுக்கலாம் !
//தம்பியாக தத்து எடுத்து புத்தகம் இரவல் குடுத்தால் நன்றாக இருக்கும்).//
என்னென்ன தேவைகள் ....
அண்ணனைக் கேளுங்கள் ....
ஒரு கூட்டுக் கிளியாக .....
ரைட்டு. என்னவோன்னு நினைச்சு பயந்திட்டேன்.
தம்பி!
Post a Comment