Friday, February 12, 2010

கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகலை

எனக்கு முதன் பார்வையிலே அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது.முதல் பார்வையிலே அவள் என் மதமில்லை என்பது மட்டும் நிச்சயமாக தெரிந்தது.யாரோ எதையோ கடும் குரலில் அவளிடம் கேட்க கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.கண்ணீர் வழியாமல் உருண்டி ஓடியது.இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் கண்ணீர் பந்து தரையில் சிதறிய சத்தம் கூட எனக்கு கேட்டிருக்கும்.

மே மாதமே டியுசன்.அதுவும் இதுவரை டியுசன் பக்கமே தலை வைக்காத நான் போக வேண்டுமாம்.எல்லாம் என் தலையெழுத்து ப்ளஸ் ஒன் மட்டும் ஒழுங்காக படித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.சாயங்காலம் ஏழு மணிக்கு டியுசன்.விருகம்பாக்கத்தில் இருந்து அடுத்த மூலையான சாந்தோம் பள்ளிக்கு போக வேண்டும்.கிரிக்கெட் நாலு மணிக்கு எல்லாம் சூடுப் பிடித்திருக்கும்.அதுவும் நான் ஆட வேண்டிய சமயத்தில் தான் வீட்டில் டியுசன் போக சொல்லி வற்புறுத்துவார்கள்.எரிச்சலோடு கிளம்புவேன்.

வருடத்திற்கு ஒரு பிள்ளை காதல்.பத்தாவது படிக்கும் போது ப்ளஸ் டூ பெண்ணின் மீது பிள்ளைக்காதல்.ஒரு பஸ் விபத்தின் மூலம் அது கிழிந்து போனது.

ப்ளஸ் ஒன் படிக்கும் போது இன்னொரு பிள்ளை காதல்.எனக்கல்ல என் மீது என் தம்பி வயதேயிருக்கும் ஒரு பெண் வைத்த காதல்.என்னை விட மூன்று வயது சின்னப்பெண்.கிராமத்தில் இருந்து வந்ததால் அவ சின்னப்பொண்ணுடா என்று சொல்லியே அவளை தவிர்த்திருக்கிறேன்.இப்ப யோசித்து பார்த்தால் நான் தான் சின்னப் பையனாக இருந்திருக்கிறேன்.இன்னொரு காரணம் அவளுடைய அக்கா.எங்களை எல்லாம் மதிக்கவே மாட்டாள்.நிராகரிக்கும் பெண்களைத் தான் எனக்கு பிடிக்கும் போல.

எப்பவும் டியுசனுக்கு கடைசி நேரத்தில் தான் போவேன்.அவள் அழுத சம்பவத்திற்குப் பிறகு முதல் ஆளாகயிருப்பேன்.அவள் அழுது விடுவாள் என்றே யாரும் அவளுடன் பேச மாட்டார்கள்.நான் மட்டும் அவளை பார்ப்பது அவளுக்கு பிடித்திருந்தது.

உடனே இப்படி ஏதாவது நடந்தால் தான் ஆண்டவனுக்கே பொறுக்காதே.கடும் காய்ச்சல்.வாந்தி,மயக்கம்.கடும் காய்ச்சலோடு வடபழனியில் நிற்கிறேன்.பத்தாவது வரை என்னோடு படித்த உயிர் நண்பன்.ஒரு வருடமாக அவனை பார்க்கவில்லை.பேரை சொல்லி தோள் தொட்டான்.நிற்க முடியாத நிலையில் "மச்சான் வீட்டுக்கு வாயேன்..பேசலாம்.." என்று சொல்ல பெயிலான காரணத்தால் பேச மறுக்கிறான் என்று நினைத்து விட்டானோ என்னவோ.இரண்டு வருட நட்பு முடிவுக்கு வந்திருந்தது.அவனை கடைசியாக பார்த்தது அன்று தான்.

உடம்பு சரியான உடன் டியுசன் நேரத்தை மாற்றியிருந்தேன்.அவளை,அவனை,அவர்களை முற்றிலுமாக மறந்திருந்தேன்.டியுசன் வந்து போக முடியாமல் ஆர்.ஏ.புரத்தில் ஒரு புறா கூண்டில் குடி வந்தோம்.பழைய நேரத்திற்கு வரவா என்று கெமிஸ்ட்ரி சாரிடம் கேட்க வேண்டாம் இடமில்லை என்று சொல்லி விட்டார்.என் வாழ்க்கையில் சல்பூரிக் ஆசிட் அடித்து விட்டார்.

விளைவு இன்னொரு பேட்ச்.ஒரே பள்ளியை சேர்ந்த இரண்டு பசங்க.இருவருக்கும் ஆகாது.எங்க செட்டில் மருந்துக்கு கூட பெண்கள் கிடையாது.பழைய பேட்ச்சில் திகட்ட திகட்ட அமிர்தமாய் பெண்கள்.ஒரு பெண்ணை மட்டும் சைட் அடித்து வீணாகப் போய் விட்டேனே என்று வருத்தம் வந்தது.இரண்டு பசங்களுக்கும் நடுவில் நான்.அசிங்க அசிங்கமாய் திட்டி கொள்வார்கள்.எல்லா கெட்ட வார்த்தைகளும் என் காதில் பட்டு வழியும்.

அந்த பெண்ணை நான் மறந்தே விட்டேன்.சாரிடம் கேட்கலாம்.ரொம்ப ஜாலியாகயிருப்பார்.கேட்டால் கொட்டடித்து விடுவார் என்ற பயத்திலே அடக்கி வாசித்தேன்.

பிறகு அதே சாயலில்,அதே மதத்தில் ஒரு பெண்ணை ஒரு பையன் காதலிப்பதாக ஒரு சினிமா பார்த்தேன்.எனக்கு படம் "பிடிச்சிருக்கு.." என்று சொல்ல வைத்தது.சர்ச் ட்சர்ச்சாக தேடி அலையும் ஹீரோ கடைசியில் அவளை கண்டுப்பிடிப்பான்.எனக்கு இது தோணாமல் போய் விட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.தோணியிருந்தாலும் போயிருக்க மாட்டேன்.காரணம் எல்லாம் என் வாழ்வில் வர வேண்டும் நினைப்பேனே தவிர அடுத்தவர் வாழ்க்கையில் நான் உள் நுழைய மாட்டேன்.நுழைந்திருந்தால் இன்னும் நிறைய பதிவுகள் தேறியிருக்கும்.

11 comments:

Anonymous said...

ஐயோ பாவம் நீங்க

இரும்புத்திரை said...

@V.A.S.SANGAR
வட போச்சே

அகல்விளக்கு said...

அனுபவம் புதுமை....

அவளிடம் கண்டேன்.....

gulf-tamilan said...

டியுசன் கெமிஸ்ட்ரிக்கு மட்டும்தானா?
:)))

gulf-tamilan said...

டியுசன் கெமிஸ்ட்ரிக்கு மட்டும்தானா?
:)))

தாராபுரத்தான் said...

வருடத்திற்கு ஒரு பிள்ளை காதல்

மதார் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் .

பாலாஜி சங்கர் said...

"இன்னும் நிறைய பதிவுகள் தேறியிருக்கும். "

ரசித்தேன்

பாலாஜி சங்கர் said...

physics biology try பண்ண வேண்டியதுதானே

மேவி... said...

"காரணம் எல்லாம் என் வாழ்வில் வர வேண்டும் நினைப்பேனே தவிர அடுத்தவர் வாழ்க்கையில் நான் உள் நுழைய மாட்டேன்.நுழைந்திருந்தால் இன்னும் நிறைய பதிவுகள் தேறியிருக்கும்"


ithu ithu thaan ...i just like it

ராஜ நடராஜன் said...

நல்லா சொல்றீங்க!வாழ்த்துக்கள்.