அனுபவம் தான் சிறந்த ஆசிரியர்.எழுத்தாக வாசிப்பவனையும் அல்லது காட்சியாக பார்ப்பவனையும் அல்லது சொல்லாக கேட்பவனையும் நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று குறைந்தபட்சம் இமையோரத்தில் லேசாக ஈரம் படர செய்தால் அதுவே சிறந்த இலக்கியம் என்பேன்.முதல் மூன்று சிறுகதைகள் அல்லது முதல் இரண்டு சினிமா அல்லது முதன் முதலாக அம்மா சொன்ன கதை அதுவும் சோறு ஊட்டிக் கொண்டே எல்லாம் அனுபவத்தின் வாயிலாகயிருக்கும்.சாப்பிடும் குழந்தை ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லக் கேட்கும்.ரீப்பிடட் ஆடியன்ஸ்.
சினிமாவின் தூண்கள் என்று சொல்லப்பட்ட ஜனநாதன்,அமீர்,செல்வராகவன்,வெங்கட் பிரபு சறுக்கியது எல்லாம் இங்கே தான்.நால்வரும் இரும்புத்திரையில் தோரணம் கட்டப்பட்டார்கள்.பின்னூட்டத்தில் எனக்கு தோரணம் கட்டினார்கள்.இவர்களின் மாஸ்டர் பீஸ் என்று பார்த்தால் முறையே ஈ,பருத்தி வீரன், 7/ஜி ரெயின்போ காலனி,சென்னை - 600028.இது அவர்களின் அனுபவமோ அல்லது ஏதோ அவர்கள் சரியாக உள்வாங்கிய நிகழ்வின் தாக்கமே அதை தமிழ் நாடே தூக்கி வைத்து கொண்டாடியது.தற்போது அவர்கள் குடுத்துள்ள காமெடி பீஸ் படங்களைப் பார்ப்போம் அதுவும் முறையே பேராண்மை,யோகி,ஆயிரத்தில் ஒருவன்,கோவா.(பட்டியலில் யாரோ விடுபட்டுயிருப்பது போல் உள்ளது.அவர் படம் வெளி வந்தப் பிறகு அவரை சேர்த்துக் கொள்வோம்).எல்லா பெருமைகளும் விருதுகளும் முறையே ரஷ்ய,ஆப்பிரிக்க மற்றும் ஆங்கில இயக்குனர்களுக்கு போய் சேர வேண்டும்.
தோல்விகளுக்கு காரணம்
1.அனுபவம் எல்லாம் முதல் இரண்டு படத்தில் இறக்கி வைத்து விட்டதால்.
2.அடுத்த கதைக்கருவை யோசிக்க நேரமில்லாத அளவுக்கு பணம் கொடுக்க க்யூவில் நிற்கும் ஆட்கள்.
3.உலக படத்தை அவர்கள் ரசிக்கும் முன்பே தமிழக மக்களும் டிவிடியில் பார்த்து விடுவது.
4.என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற கர்வம்.
இதையெல்லாம் அவர்கள் யோசித்து சக மனிதனை கூர்ந்து கவனித்தால் இன்னொரு முறை தமிழகம் கொண்டாடும்.கேட்டால் கதையேயில்லை என்று சொல்வார்கள்.பிறக்கும் எல்லோருக்கும் பின்னும் இரண்டு வெற்றி படங்கள் கொடுக்கும் அளவிற்கு கதையிருக்கிறது.
இப்படி ஜல்லியடிக்கலாம் (பின்ன பாதுகாப்பாக தப்பிக்க இது ஒண்ணு தான் வழி)
வரதட்சணை,பெண்ணுரிமை,பெண் சுதந்திரம்,கற்பு இப்படி மெஜாரிட்டி மக்கள் அல்லது மைனாரிட்டி மக்கள் ஆதரவளிக்கும் பக்கத்தில் இருந்து ஜல்லியடிக்கலாம்.வரதட்சணை வாங்க மாட்டேன் இப்படி இணையத்தில் ஜல்லியடித்து விட்டு சில ஓட்டுகளையும்,பல பின்னூட்டங்களையும் வாங்கி விட்டு யாரோ ஒரு முகம் தெரியாத பெண் வீட்டாரிடம் பேரம் பேசலாம்.யாருக்காவது தெரிந்து போனால் இதுக்கு நான் காரணமில்லை என்று பழியை யார் மீதாவது போடலாம்.இப்படியும் ஜல்லியடிக்கலாம்.
பெண் சுதந்திரம் என்றால் என்ன என்று யோசித்து பார்த்தேன்.பக்கத்து ஆபிஸ் வரண்டாவில் புகைப் பிடிக்கும் பெண் அவள் வீட்டில் புகைப் பிடித்தால் அது சுதந்தரத்தின் உச்சமா என்று என்னையே கேட்டுப் பார்த்தேன்.கொடுக்க நான் யார்.காலம் மாறும் போது அதுவும் மாறும்.அதற்கு உதாரணம் தான் இரு கோடுகள் படத்தில் வரும் இரண்டு கோடுகள்.ஒன்று ஆரம்பத்திலேயே பெரிதாகயிருக்கும்.ஒன்று சின்னதாகயிருக்கும்.அதை 80களின் தொடக்கம் என்று வைத்து கொள்ளலாம்.பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதை பெரிதாக்க வேண்டும் என்று சவால்.சின்ன கோட்டை பெரிதாக வரைந்து விடுவார்கள்.அது இன்றைய காலம் என்று வைத்து கொள்வோம்.வளர்ந்த அளவு,அதற்கு எடுத்து கொண்ட காலம் எல்லாம் தான் பெண் சுதந்திரம்.இப்படி ஜல்லியடிக்கலாம்.திஸ் இஸ் ஃபார் மை சேப்டி.
விதாண்டாவாதம் செய்வதற்கே ஒரு கோஷ்டி இருக்கும்.அதாவது பெண் காலில் ஆண் விழ வேண்டும்,அல்லது நிச்சயதார்த்ததின் போது பெண் வீட்டார் காலில் ஆண் விழ வேண்டும்,கல்யாணம் செய்து கொள்ள ஆண் வரதட்சிணை கொடுக்க வேண்டும்.இது டிட் பார் டாட்.நான் சொல்வது எதுவுமே வேண்டாம் என்று தான்.இப்படி ஜல்லியடிக்கலாம்.இதுவும் சேப்டி தான்.
நினைத்தை எல்லாம் எழுதி விட்டு அல்லது எடுத்து விட்டு தொடகத்திலேயே இது புனைவு என்று போட்டு விட்டு எப்படி வேண்டுமானாலும் ஜல்லியடிக்கலாம்.
வினவுக்கு முன்னாடியே வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட சிறந்த படம் என்று நான் சொன்னேன் என்று ஜல்லியடிக்கலாம்.எனக்கும் வினவுக்கும் இரசனை ஒத்துப் போகிறது என்று கூட ஜல்லியடிக்கலாம்.
பதிவையே படிக்காமல் ஸ்மைலி,மீ த பர்ஸ்டு போட்டு ஜல்லியடிக்கலாம்.
அரசியல் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே என்றால் எனக்கு அரசியலே தெரியாது அல்லது அரசியல் செய்ய தெரியாது என்று சொல்லி ஜல்லியடிக்கலாம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்படவில்லை.நேற்று அதே அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.இப்படி ஜல்லையடிக்கலாம்.
இப்படி எல்லாம் ஜல்லியடிக்காமலிருக்க நல்லப் புத்தகங்களையும்,சினிமாக்களையும்,மனிதர்களையும் வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.இதோடு ஜல்லியடித்து முடித்து கொள்கிறேன்.இதற்கு முழுப் பொறுப்பு அண்ணன் தண்டோராவையே சேரும்.நானும் கொஞ்சம் பேசுகிறேன் பதிவோடு முழுக்க முழுக்க ஒத்துப் போனதன் விளைவே இந்த ஜல்லி.
Thursday, February 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஜல்லி ரொம்ப வச்சுருந்தா சென்னைக்கு கொஞ்சம் அனுப்புங்க . ஜல்லி ஆர்டர் பண்ணா லேட் ஆகுது வந்து சேர .
இலக்கியவாதி ஆயிட்ட(டா)!!
இன்றய போட்டிக்கான கேள்வி. இந்த இடுகையில் எத்தனை முறை ஜல்லி என்கின்ற வார்த்தை வருகின்றது ? சரியான விடை தருவோர்க்கு அண்ணன் இரும்புத்திரை உடன் ஒரு நாள் ஜல்லி அடிக்கும் அதிர்ஷ்டம் கிட்டும். என்ஜாய் ஜல்லி அடிச்சிங்க்.
ஜல்லிய வச்சே உங்கள அடிக்கணும் தலைவா..
ஹி ஹி..(இந்த "ஹி ஹி" - திஸ் இஸ் ஃபார் மை சேப்டி.)
ஒரு லோடு எவ்வளோ..., தல ரெண்டு ஃபாலோயர காணும் கவனிச்சிங்களா....
/பதிவையே படிக்காமல் ஸ்மைலி,மீ த பர்ஸ்டு போட்டு ஜல்லியடிக்கலாம்/
:)))(((
Post a Comment