Tuesday, February 2, 2010

ரான் - இந்தி(ய)ப்படம் விமர்சனம்

மாடர்ன் உலகத்தில் வாழும் மனு நீதி சோழனின் கதை.ஆக் படத்தை மீடியா எல்லாம் சேர்ந்து கிழித்துப் போட்டப் பிறகு அடங்காத கோபம் ப்ளஸ் கொலைவெறியில் அடுத்தப் படம் மீடியாவின் நிஜமுகத்தைக் கிழித்து தோரணம் கட்டுகிறேன் என்று சொல்லி இராம் கோபால் வர்மா சொல்லியடித்த கதை.(மீடியாவில் என்ன மாதிரி அடி வாங்கினார் என்று செல்வராகவனும்,வெங்கட் பிரபுவும் தெரிந்து கொள்வது இருவருக்குமே நல்லது).பேக் வித் பாங்க் என்று சொல்வார்கள்.அதை இராம் கோபால் வர்மா நிரூபித்துள்ளார்.

இனி கதை சின்னது தான் - அமிதாப் பச்சன் இந்தியா 24/7 என்ற செய்தி தொலைக்காட்சியை நடத்துகிறார்.அது போட்டி தொலைக்காட்சியால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்க,அப்படி முக்க காரணம் போட்டி தொலைக்காட்சி நடத்தும் மோனிஷ் பேல் - அமிதாப் பச்சனிடம் வேலை பார்த்த முன்னாள் திறமைசாலி.அமிதாப் கொடுக்கும் பார்ட்டியில் அமிதாப் மகனாக சுதீப் மற்றும் மோனிஷ் முட்டிக் கொள்ள,நான் நினைத்தால் உன் சேனல் இல்லாமல் போய் விடும் என்று சவால் விடுகிறார் மோனிஷ்.

அமிதாப்பின் வசீகரித்தால் தான் அந்த செய்தி சேனல் நிற்கிறது.வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அவரிடம் வேலைக்கு சேரும் ரித்தேஷ் தேஷ்முக் என்ற இளம் பத்திரிக்கையாளன்.அவனுக்கு லிவிங்க் டூ கேதர் காதலியாக குல் பனாக்.இவர் 2001ம் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரியை நினைவுப் "படுத்தினார்" நிறையவே.குல் மாதிரி ஒரு பெண்ணுடன் நட்பாகயிருந்தேன்.இவரை பார்த்ததும் அந்த பெண் முகம் நிழலாடியது.நான் குல் பனாக்கின் ரசிகனாக மாறி விட்டேன்.இரசனையின் அளவு இடுப்பில் இருந்து தோள்பட்டைக்கு சுருண்டிருந்தது.

தமிழ் நடிகர்களிடம் ரித்தேஷ் தேஷ்முக் ரோல் நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார்கள்.முதல் பாதியில் ஐந்து காட்சியில் தான் தலையை காட்டுகிறார். எப்பவும் சீரியஸ்.குல் பனாக் கிஸ் அடிக்கும் போது கூட.

அமிதாப்பின் மருமகன் ரஜத் கபூர் ஊழல் செய்யும் அரசியல்வாதியுடன் நட்பாகயிருக்கிறார்.காரணம் அவர் சந்து பொந்து இண்டு இடுக்குத் தேடும் ஒரு தொழிலதிபர்.அவர் போனதோடு மட்டுமில்லாமல் சுதீப்பையும் மிரட்டி,பணத்தைக் காட்டி விலைக்கு வாங்கி நாடகமாடி அமிதாப்பையே பொய் சொல்ல வைத்து அரசியலில் பெரிய காயை வதம் செய்கிறார்.அமிதாப் மீதுள்ள நம்பிக்கை,மீடியாவின் பலம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுகிறது.

விளைவு ஊழல் செய்யும் பரேஷ் ராவல் (பா படத்தில் அமிதாப் பச்சனுக்கு தாத்தா,சீனி கம் படத்தில் மாமனார்) பிரதமர் பதவி,ரஜத் கபூருக்கு நம்பர் ஒன் தொழிலதிபர் பட்டம்.சுதீப்புக்கு சாதனையாளர் விருது.

சந்தேகம் வந்து ரித்தேஷ் தேஷ்முக் தோண்டித் துருவ எனக்குள் இருக்கும் சராசரி தமிழ் ரசிகன் முழித்துக் கொண்டு ரித்தேஷைப் போடத் தாக்கப் போகிறார்கள் எண்டு கூக்குரல் இட ஆரம்பித்தான்.அப்படி எல்லாம் நடக்காமல் ரித்தேஷ் அதை கண்டுப்பிடித்து யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மோனிஷிடம் போக,500 கோடி ரூபாய் பணத்திற்கு அவரும் விலை போக,ரித்தேஷ் கோபத்தில் கொதிக்க..

ஜர்னலிசம் என்ற கன்றுக்குட்டியை வதம் செய்து விட்டார்கள் என்று இளம் பத்திரிக்கையாளப் பசு ஆராய்ச்சி மணியை அடிக்க அதுவும் சுதீப் கல்யாணத்தில்,கல்யாணம் யாருடன் என்று பார்த்தால் முஸ்ஸில் காதலியாக நீது சந்திரா.எப்படியும் தீராத விளையாட்டுப் பிள்ளையில் கேவலமாக காட்டுவார்கள்.அந்த பாவத்தை,சோகத்தை இந்த படம் பார்த்து எல்லோரும் கழுவிக் கொள்ளலாம்.நீது சந்திராவா ஒரு காட்சியில் வாய் தானாக திறந்து விட்டது.அட ஆச்சர்யத்தில் தான்.

அமிதாப் வாசிக்கும் முடிவு மகன்,மருமகன்,அரசியல்வாதி மூவர் கூட்டணிக்கும் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.ரித்தேஷ் தேஷ்முக் என்னாவானார்.

இன்னொரு ஆளை விட்டு விட்டேன்.ராஜ்பால் யாதவ் அதகளப்படுத்தியிருக்கிறார்.அமிதாப் வந்தால் பம்முவதும் இல்லாத சமயம் கும்முவதும் கலக்கல்.மனுஷன் இந்தி சினிமாவின் வடிவேலு தான்.

நளினியாக சேகர் கபூரின் மனைவியான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி.நளினி என்று ரித்தேஷிடம் கூப்பிட சொல்லும் பாங்கு,எனக்கு என்ன அவ்வளவு வயதாகி விட்டதா என்று கேள்வியுடன் வரும் பார்வை,சுதீப்பிடம் திட்டு வாங்கும் ரித்தேஷ்க்கு ஆறுதல் சொல்லுமிடம் எல்லாவற்றிலும் தெரிகிறது அல்பம் மாதிரி யோசிக்கக் கூடாது அனுபவம்.

படம் பாருங்கள்.பார்க்க வேண்டிய படம்.டூயட்,சண்டை எதுவும் இல்லாமல் ரெண்டு மணி நேரத்தில் ஒரு நல்லப் படம் சில தொய்வுகள் இருந்தாலும்.ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம்.குல் பனாக்கிற்காக இன்னொரு தடவை நான் பார்ப்பேன்.

சஸ்பென்ஸ்.த்ரில்லர் என்று எதுவும் இல்லாமல் ஒரு நீட் நாரேஷன்.படம் பார்க்கும் போது எனக்கு தெரிந்த இரண்டு நிதர்ஷனங்கள்.

நிஜ வாழ்க்கையில் மகன் தப்பே செய்திருந்தாலும் விட்டுக் கொடுப்பார்களா.இன்னும் ஒரு நிமிடம் அதை யோசித்ததில் எனக்கு இந்த வசனம் ஞாபகம் வந்தது."பூஜ்ஜிமாவா..அவன் குழந்தைடா..".எப்படியும் காப்பாற்றி விடுவார்கள்.இன்னும் ஏழைகளும்,மிடில் க்ளாஸ் மக்களும் தான் நேர்மை என்று புலம்புகிறார்கள்.

அடுத்தது இதை நான் சொன்னால் "உனக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது.." என்று அடி விழும் வாய்ப்புள்ளதால் நான் சொல்லவில்லை.

5 comments:

மதார் said...

திருந்தவே மாட்டீங்களா?

Unknown said...

சொல்லுங்க சொல்லுங்க...

லோகு said...

ம்ம்.. நல்ல விமர்சனம் அண்ணா..

ரான் / ரன் எது சரி? பத்திரிகைகளில் ரன்னுன்னு தான் எழுதறாங்க..

Athisha said...

விமர்சனம்
நல்லாருக்குங்க.. பாக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன்.

Random Thoughts said...

"அவனுக்கு லிவிங்க் டூ கேதர் காதலியாக குல் பனாக்.இவர் 2001ம் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரியை நினைவுப் "படுத்தினார்" நிறையவே.குல் மாதிரி ஒரு பெண்ணுடன் நட்பாகயிருந்தேன்"

இப்படி எப்போ பார்த்தாலும் நான் மன்மதன் எனக்கு ஆயிரம் பெண் சினேகிதிகள் உண்டு என்று சொல்வதை நிறுத்தினால் உண்மையிலேயே நீங்கள் நல்ல "writer" ஆவதற்கு "chances" உண்டு :)