Monday, February 1, 2010

துவையல் - நாட்டு நடப்பு ஸ்பெஷல்

தமிழ்படம் எதிர்பார்த்த மாதிரியே ஒரு கலக்கு கலக்கி விட்டது.எனக்கு படம் மிகவும் பிடித்தது.காரணம் அந்த படம் குறி வைத்த நடிகர்கள்.குறிப்பாக 2011 முதல்வர்.சிவாவின் எதிர்காலம் இன்னும் மூன்று படத்தில் முடிந்து விடுமோ என்ற பயம் வந்திருக்கிறது.தமிழக அரசியலை வைத்து அல்லது நையாண்டி செய்து படம் எடுத்தால் யோசிக்கவே பயமாக இருக்கிறது.தமிழ் நாட்டை சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆண்டார்கள் என்பது போல அரசியலையும் சினிமாவையும் க்ளவுட் நைன் மூவிஸ்,ரெட் ஜெயண்ட் மூவிஸ்,சன் பிக்சர்ஸ் ஆட்டிப் படைக்கிறது.இப்படி ஒரு படம் எடுத்தால் பிறகு எப்படி வெளி வரும்.எனி வே இராம் கோபால் வர்மாவுக்கு அடுத்த தீனியாக இதை இடுகிறேன்.(நாளை ரான் பட விமர்சனம் வரும்.இந்த படம் பார்த்ததிலொருந்து இனி தமிழ்படம்(எல்லா படங்களும் அடங்கும்) பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்)

மும்பையில் முழு போதையில் காரை விட்டு மோதி இரண்டு பேரை ஒரு பெண் (பணக்காரப் பெண்) கொலை செய்து இருக்கிறார்.அதில் ஒருவர் சமீபத்தில் மாற்றல் வாங்கி வந்த காவலர்.ஏற்கனவே 2006ம் ஆண்டு காரை விட்டு ஏழு பேரை கொன்ற பெரேரா வெளியே அலைந்து கொண்டிருக்கிறார். இதுவும் அப்படித்தான் ஆகும்.சட்டம் எல்லாம் என்னை போலிருக்கும் சாமானியனிடம் தான் செல்லும்.நானும் பணக்காரன் ஆகணும்,கார் வாங்கணும்,அந்த பெண் மீது பெரேரா மீதும் ஏற்றி விட்டு வெளியே வருமளவிற்கு செல்வாக்காக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.குறிப்பாக தண்ணி அடிக்க வேண்டும்.

பர்தீன் கானிடம் இருந்து கைப்பற்ற போதைப் பொருளில் அவ்வளவு வீரியம் இல்லையாம்.எனவே நிலுவையில் இருக்கும் வழக்கு நீர்த்துப் போகலாம். பின்ன என்ன ஒன்பது வருடம் வழக்கு நடத்தினால் வீரியம் குறையாமல் என்ன செய்யும்.போதைப் பொருளில் அல்ல வழக்கு விசாரணையில்.இதுவே நாங்களாகயிருந்தால் கஞ்சா வழக்கு பாய்ந்து ஒய்த்திருப்பார்கள்.போங்கடா நீங்களும் உங்க மொக்கை வழக்குகளும்.அடுத்த ஜென்பமத்திலாவது ஒரு நடிகனாக குடுப்பினை வேண்டும்.லலித் மோடி மீது போதை பொருள் வழக்கு இருக்கிறது.போதைப் பொருள் வத்திருந்தால் தான் பெரிய ஆள் ஆக முடியும் போல.

ஹெட்லி ஒரு அமெரிக்க ஏஜெண்ட் என்று நினைத்து தான் ராகுல் பட் பழகினாராம்.அவங்க எவ்வளவு தான் காதில் பூ சுத்தினாலும் காது தாங்கும்.இதுவே அப்பாவியாக இருந்தால் மிதித்தே உண்மையை என்று பொய்யை ஒப்புக் கொள்ள செய்திருப்பார்கள்.ராகும் பட்டிடம் செல்லுமா.

காஞ்சிபுரம் அர்ச்சகர் என்னவானார்,ஜான் டேவிட் எங்கே இருக்கிறார் இப்படி நாம் மறந்து போன விஷயங்கள் நிறைய இருக்கிறது.பத்திரிக்கைகள் ஒரு மாதம் கழித்து கண்டு கொள்வதேயில்லை.அப்புரம் ஏன் சிறுமியைக் கெடுத்து விட்டு ஆயிரம் ரூபாய் அபதாரத்தில் வெளியே வர மாட்டார்கள். தொலைக்காட்சி சொல்லவே வேண்டாம் லைவ் என்று அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை. நெல்லையில் போலிஸார் வெட்டுண்டப் போது அமைச்சர்கள் தான் உதவவில்லை.சரி கேமரா புடித்துக் கொண்டிருந்தவன் உதவ வேண்டியது தானே.அதை யாராவது தடுத்திருந்தால் அதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டியது தானே.மும்பை மேரி ஜான் படத்தில் இதை அருமையாக பகடி செய்தார்கள்.தமிழ் நாட்டில் செய்ய முடியுமா.அந்த போலீஸ் அதிகாரிக்கு என்ன நீதி கிடைத்தது.அமைச்சர்களுக்கு ஏதாவது தண்டனை இல்லை வெட்டியவர்களைப் பிடித்தார்களா.யாராவது இதற்கு ஒரு வருடம் கழித்து தான் இரங்கல் தெரிவிப்பார்களா எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.இனி வரும் நாட்களில் வீட்டில் நடக்கும் சண்டை கூட நேரலை செய்யப்படலாம்.நமக்கு நன்றாக பொழுது போகும்.

5 comments:

எறும்பு said...

Me two vote...

manam - 1
lish - 1

லோகு said...

நாம் வெறுமனே ஆதங்கம் தான் பட முடியும் அண்ணா.. மத்தபடி ஒன்னியும் **ங்க முடியாது.

ராஷா said...

இதுல குடியரசு தினம், கோலாகலமாக கொண்டாடுரோம்..
அண்ணே. கொடி ஏத்துனதும் முட்டாய் தருவாங்க சாப்டுட்டு சும்மா இருக்கனும்..
ஜனநாயகம், வெங்காயம்னுலாம் பேசக்கூடாது..

//கேமரா புடித்துக் கொண்டிருந்தவன் உதவ வேண்டியது தானே.அதை யாராவது தடுத்திருந்தால் அதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டியது தானே//

இதே கேள்வி எனக்கும் தோனுச்சு.

sathishsangkavi.blogspot.com said...

நாம் என்ன செய்யமுடியம் நண்பா.... படிக்கவும் நமது கருத்தை சொல்லவும் தான் முடியும்...

வரதராஜலு .பூ said...

//அரசியலையும் சினிமாவையும் க்ளவுட் நைன் மூவிஸ்,ரெட் ஜெயண்ட் மூவிஸ்,சன் பிக்சர்ஸ் ஆட்டிப் படைக்கிறது.//

என்ன இன்னும் அதிகப்பட்சம் 18 மாதங்கள் ஆட்டிப்படைப்பார்களா? அதுக்கப்புறம் இருக்குடி ஒரிஜினல் ஆட்டம் (இந்த கம்மநாட்டிங்களுக்கு)