Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - ஜெட்லிக்கு பக்கத்துவினை

ஜெட்லி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மொக்கை என்று சொல்லி விட்டார்.எப்படி இப்படி சொல்லாம்.கௌதம் மேனன் மாதிரி ஒய்வே இல்லாமல் படம் எடுக்கும் இயக்குனரை பார்த்து சொல்லி விட்டால் அவருக்கு இது மாதிரி வித்தியாசமான படங்கள் எடுக்க எப்படி தோன்றும்.பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை.இகழாமல் இருக்கலாமே.தமிழனுக்கு இல்லப்பா இல்ல மலையாளிக்கு தமிழன் தான் எதிரி என்று இதன் மூலம் நிருபணம் ஆகிறது.

விமர்சனம் செய்யும் உங்களுக்கு படமெடுக்கத் தெரியுமா என்று நாங்கள் கேட்டால் எனக்கு சாப்பிடத் தெரியும் சமைக்கத் தெரியாது என்று ஜகா வாங்குவீர்கள்.

இன்னும் வேறன்ன போட்டாங்க..நான் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதும் போது நிறைய சொன்னார்களே.அட மறந்து போச்சே.இருந்தாலும் ஜெட்லியை விடாமல் பறந்து பறந்து தாக்கணும்.

இப்படி எதிர்மறையான விமர்சனம் செய்தால் படம் எப்படி ஓடும்.தயாரிப்பாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.அது ஆங்கிலப் படத்தின் தழுவலாகவே இருந்தாலும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா என்று கேட்கலாமா.இது ஒரு பின்நவீனத்துவ படம்.இரண்டு வயது பெரியப் பெண்ணை காதலிப்பது போல் யார் எடுப்பார்கள்.இப்படி நீங்கள் விமர்சனம் செய்தால் அவரும் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை தான் காதலிக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட மாட்டாரா.ஏன் இப்படி அரிய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறீர்கள்.ஊரோடு உங்களால் ஒத்துப் போக முடியாதா ஜெட்லி.முடியல என்னால சிரிப்ப அடக்க முடியல.

இவ்வளவு தான் முடியும்.இன்னும் நாலு பெயர் இதை படித்து ஜெட்லிக்கு கண்டன விமர்சனம் எழுதி தல உங்க பதிவு அருமை.நானும் ஒரு பக்கத்து வினை எழுதியிருக்கிறேன்.நீங்கள் வந்து பார்த்து உங்கள் கருத்தை சொல்ல வேண்டும் என்று போடுங்கள்.பதிலுக்கு அங்கு வந்தும் நாலு கத்துக்குட்டிகள் சொம்பு தூக்கும்.

இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று தெரியாதவர்கள் கௌதம் மேனனுக்கு கொடி பிடித்து பக்கத்து வினை,எதிர் வினை,செய்வினை,செய்யப்பாட்டு வினை என்று எதையாவது எழுதி ஜெட்லி அவருடைய வலைப்பூவை அழிக்கும் வரை விடக்கூடாது.

8 comments:

இரும்புத்திரை said...

தல அருமையாக சொன்னீங்க

நானும் கண்டனப் பதிவு எழுதியிருக்கிறேன்.இங்கப் பாருங்க.

இரும்புத்திரை said...

//தல அருமையாக சொன்னீங்க

நானும் கண்டனப் பதிவு எழுதியிருக்கிறேன்.இங்கப் பாருங்க.//

ஜெட்லி said...
@vels

//பிடிக்கலன்னு சொல்ல ஜெட்லி க்கு ரொம்ப தைரியம்தான்.
//

நீங்க சொல்றது கரெக்ட்தான்...
ஒவ்வொரு ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்
என்பதில் தான் எனக்கு உடன்பாடு அதிகம்.......
அதை விட்டுட்டு அடுத்தவன் ரசனை பத்தி பேச யாருக்கும்
உரிமை இல்லை....


இப்படி யாராவது பின்னூட்டம் போட்டா இது தான் பதில்.அதுவும் ஜெட்லி சொன்னது தான்.

அகல்விளக்கு said...

ஒன்னுமே புரியல உலகத்துல.......

:-P

சங்கர் said...

முன், பின் வினையெல்லாம் அப்புறம் வைக்கலாம், நான் ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டுருக்கேன், அதை எழுதுங்க

கார்க்கிபவா said...

ஆமா.. ஆமா..

என்ன சொன்னிங்க?

அதான்.. சரிதான்.. தப்பே இல்லை. ஆமோதிக்கிறேன்

இரும்புத்திரை said...

நன்றி அகல்விளக்கு.

நன்றி சங்கர்.

நன்றி கார்க்கி.நான் கிரிக்கெட் தொடர்பதிவு எழுத முடிவு செய்த்ததும் எல்லா கேள்வியிலும் என் பெயரை போட நினைத்தேன்.அதுக்கும் வழியில்லாமல் போய் விட்டது.

Unknown said...

எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு ......, எனக்கு தலயே வெடிச்சிரும் போல இருக்கு

அமுதா கிருஷ்ணா said...

படம் நல்லாயிருக்கா இல்லையா?