Sunday, February 28, 2010

நாணயம்,தீராத விளையாட்டுப் பிள்ளை - ஒன் பை டூ விமர்சனம்

நாணயம் - ரிச்னெஸ் இருக்கு.என்ன இருந்து என்ன பண்ண.மொக்கை வில்லன்.பாடாதி டூவிஸ்ட்.மனதில் ஒட்டாத பாட்டு.சேர் எல்லாம் எடுத்து அடிக்கிற என்று இறுதியில் சிபிராஜ் சொல்லும் போது கண்ணைக் கட்டி விட்டது.காரணம் மணி இரண்டு.பாட்டில் கவனம் செலுத்தியிருந்தால் கொஞ்சமாவது படம் பிழைத்திருக்கும்.ஒரு பேட்டியில் சரண் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது."எனக்கு கதை கேட்கும் போது தூக்கம் வராமலிருந்தால் அதை தயாரிப்பேன்..".அப்படி அவர் தூங்கி மிஸ் பண்ணிய படம் தான் பசங்க.குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும்,நாணயம்,மழை இந்த படத்தின் கதை கேட்கும் போதெல்லாம் தூக்கம் வரவில்லை போலும்.பார்த்த எனக்கு தான் தூக்கம் வந்து விட்டது.

தீராத விளையாட்டுப் பிள்ளை - சொல்ல என்ன இருக்கு.பசங்க படம் பிடிக்காமல் இருந்தால் இதை ரசிக்கும் மன நிலைக்கு நான் வரலாம்.விடுகதை,கோகுலத்தில் சீதை,காதல் கோட்டை என்று பெண்களுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து இயக்கிய அகத்தியனுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை.பெயர் அதை விட முரண்பாடு திரு.முரண்பாடுகள் நிறைந்தது தான் வாழ்க்கை போலும்.அடுத்து சன் பிக்சர்ஸ் சுறா விடுவார்கள்.வெற்றி வெற்றி என்று கத்துவார்கள்.நம்பகத்தன்மை குறையும்.அதன் பாதிப்பு எந்திரனில் தெரியும்.

விமர்சனம் தான் படத்தின் மேல் இல்லை.எடுத்தவர்களின் மேல்.

Saturday, February 27, 2010

எனக்கு கிரிக்கெட் பிடிக்காது

ஆமா..எனக்கு கிரிக்கெட் பிடிக்காது.அதுவும் இன்னைக்கு இந்தியா விளையாடும் போது கிரிக்கெட் பிடிக்கலை.காரணம் சச்சின் இல்லை.சச்சின் அடிக்காமல் இருந்தாலும் அன்னைக்கு நாம மேட்ச் ஜெயித்திருக்கிறோம்.அவர் இருந்தாலே யோகமும் கூடவே இருக்கிறது என்று நான் சொல்வேன்.இன்னைக்கு இந்தியா நிச்சயம் பல்ப் வாங்கும் என்பது என் கணிப்பு.

இப்போ ஏன் இவ்வளவு பில்டப்.எல்லாம் தொடர்பதிவுக்கு தான்.சங்கர் கூப்பிட்டு இருந்தார்.நான் படித்தால் அதை எழுதலாம் என்று சொல்லியிருந்தார்.என்ன கொடுமை.நானெல்லாம் கூப்பிட மாட்டார்களா என்று ஏங்கித் தவித்திருக்கிறேன்.

சச்சின் இன்னும் நூறு போட்டி டக் அடித்தாலும் நான் அவர் புகழ் பாடுவது நிச்சயம்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

எனக்கு எந்த அளவிற்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.பத்து வருடங்களுக்கு முன் பபிள்கம்முடன் கிரிக்கெட் கார்ட் தருவார்கள்.ஒரு அட்டையும் விடாமல் சேர்த்து என் அப்பாவின் காசை கொஞ்சம் நான் மென்று துப்பியிருக்கிறேன்.அது இன்னும் என் வீட்டில் இருக்கிறது.எந்த கேள்விக்கும் பதில் சச்சினாக இருக்காது.கேள்விகளுக்குள் அவரை அடக்க பிடிக்கவில்லை.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்
கில்கிறிஸ்ட்,லாரா,கிப்ஸ்

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
இஜாஸ் அகமது(89 பந்தில் 139 ரன்கள் அதுவும் இந்தியாவுடன்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்
மெக்ராத், வாசிம் அக்ரம், முகமது அமீர்(சொல்லி சச்சின் விக்கெட்டை எடுத்ததால் சச்சின் இடது கை பந்து வீச்சாளர்களிடம் திணறுவார்.நிறைய உதாரணம் கொடுக்கலாம்)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்
ஓலங்கா,காஸ்ப்ரோவிச்,கேடிக்(சச்சினிடம் வாய்விட்டு வாங்கி கட்டியதால்)

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்
சக்லைன், முரளிதரன்,க்ளார்க்(மைக்கேல்)

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்
சுழலே இல்லாமல் பந்து போடும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்(அதுக்கு விளக்கம் வேறு தருகிறார்)

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
பாண்டிங் (கால் நகர்த்தல்),மார்க் வா(ஸ்டைலாக விளையாடுவதில் இன்னும் இவருக்கு மாற்றி வரவில்லை)

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
அப்ரிடி(நேரகாலம் தெரியாமல் அடிப்பது),அக்மல்

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்
கில்கிரிஸ்ட், கங்குலி

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர்
ஜிம்மி ஆடம்ஸ்,அமீர் சோகைல்

11. பிடித்த களத்தடுப்பாளர்
ஜடேஜா, ஜான்டி ரோட்ஸ், பால் கோலிங்குட்

12. பிடிக்காத களத்தடுப்பாளர்
க்ளூசனர்,நிடினி

13. பிடித்த ஆல்ரவுண்டர்
அக்ரம்,ஃப்ளிண்டாப்

13.1 பிடிக்காத ஆல்ரவுண்டர்
வாஸ்,காலிஸ்

14. பிடித்த நடுவர்
பில்லி பாவுடன், சைமன் டோபல்

15. பிடிக்காத நடுவர்
ஸ்டீவ் பக்னர்,அசோக டி சில்வா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்
ஹர்ஷா போக்லே, வாசிம் அக்ரம்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் குறிப்பாய் யாருமில்லை
ரவி சாஸ்திரி (எதிர் அணிக்கு படம் போட்டு காட்டுவார் இங்கு ஆள் இல்லை என்று),

18. பிடித்த அணி
ஆஸ்திரேலியா(கடைசி வரை போராடும் குணம்)

19. பிடிக்காத அணி
ஆஸ்திரேலியா(ஏமாற்றத் துடிப்பது)

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி
இந்தியா - பாகிஸ்தான்(இதில் எனக்கு நாட்டுப்பற்று காட்டத் தெரியாது.சயீத் அன்வர் சதம் அடித்த போதும்,சென்னை டெஸ்டில் வென்று விட்டு மைதானத்தைச் சுற்றி பாகிஸ்தான் அணியினர் ஓடினார்கள்.எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.நான் அந்த கூட்டத்தில் ஒருவன்)

22. பிடித்த அணி தலைவர்
ஸ்டீவ் வா,கங்குலி(இருவருக்கும் பிறகு தான் இரண்டு அணியும் விஸ்பரூபம் எடுத்தது)

23. பிடிக்காத அணித்தலைவர்
லாரா,கெயில்,வக்கார் யூனிஸ்

24. பிடித்த போட்டி வகை
டெஸ்ட் போட்டி (இதில் தான் சச்சினுக்கு உண்மையான போட்டி இருக்கிறது)

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
சேவாக் - கம்பீர்(டெஸ்ட்), ஜெயசூர்யா - கலுவித்ரனா(ஒரு நாள்)
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
சேவாக் - வாசிம் ஜாபர்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
இந்த கேள்விக்கு பதில் தர விரும்பவில்லை.அவர் பெயரைத் தான் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டேனே.

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்

வெண்ணிற இரவுகள் கார்த்தி (திரும்ப அழைக்கிறேன்)

பேனா மூடி

Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - ஜெட்லிக்கு பக்கத்துவினை

ஜெட்லி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மொக்கை என்று சொல்லி விட்டார்.எப்படி இப்படி சொல்லாம்.கௌதம் மேனன் மாதிரி ஒய்வே இல்லாமல் படம் எடுக்கும் இயக்குனரை பார்த்து சொல்லி விட்டால் அவருக்கு இது மாதிரி வித்தியாசமான படங்கள் எடுக்க எப்படி தோன்றும்.பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை.இகழாமல் இருக்கலாமே.தமிழனுக்கு இல்லப்பா இல்ல மலையாளிக்கு தமிழன் தான் எதிரி என்று இதன் மூலம் நிருபணம் ஆகிறது.

விமர்சனம் செய்யும் உங்களுக்கு படமெடுக்கத் தெரியுமா என்று நாங்கள் கேட்டால் எனக்கு சாப்பிடத் தெரியும் சமைக்கத் தெரியாது என்று ஜகா வாங்குவீர்கள்.

இன்னும் வேறன்ன போட்டாங்க..நான் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதும் போது நிறைய சொன்னார்களே.அட மறந்து போச்சே.இருந்தாலும் ஜெட்லியை விடாமல் பறந்து பறந்து தாக்கணும்.

இப்படி எதிர்மறையான விமர்சனம் செய்தால் படம் எப்படி ஓடும்.தயாரிப்பாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.அது ஆங்கிலப் படத்தின் தழுவலாகவே இருந்தாலும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா என்று கேட்கலாமா.இது ஒரு பின்நவீனத்துவ படம்.இரண்டு வயது பெரியப் பெண்ணை காதலிப்பது போல் யார் எடுப்பார்கள்.இப்படி நீங்கள் விமர்சனம் செய்தால் அவரும் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை தான் காதலிக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட மாட்டாரா.ஏன் இப்படி அரிய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறீர்கள்.ஊரோடு உங்களால் ஒத்துப் போக முடியாதா ஜெட்லி.முடியல என்னால சிரிப்ப அடக்க முடியல.

இவ்வளவு தான் முடியும்.இன்னும் நாலு பெயர் இதை படித்து ஜெட்லிக்கு கண்டன விமர்சனம் எழுதி தல உங்க பதிவு அருமை.நானும் ஒரு பக்கத்து வினை எழுதியிருக்கிறேன்.நீங்கள் வந்து பார்த்து உங்கள் கருத்தை சொல்ல வேண்டும் என்று போடுங்கள்.பதிலுக்கு அங்கு வந்தும் நாலு கத்துக்குட்டிகள் சொம்பு தூக்கும்.

இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று தெரியாதவர்கள் கௌதம் மேனனுக்கு கொடி பிடித்து பக்கத்து வினை,எதிர் வினை,செய்வினை,செய்யப்பாட்டு வினை என்று எதையாவது எழுதி ஜெட்லி அவருடைய வலைப்பூவை அழிக்கும் வரை விடக்கூடாது.

Thursday, February 25, 2010

சச்சின்,ஜட்டி,சாரு,பிரபலம்,ஹிட்ஸ்,எதிர்வினை

சச்சின் :

இன்று காலையில் படித்தேன்.படித்தவுடன் சச்சினைப் புகழ லாரா,பாண்டிங் போன்ற தலை சிறந்த வீரர்களை இழிவுபடுத்தியத்தோடு இல்லாமல் கங்குலி என்ற அருமையான மனிதனையும் இழுத்து பதிவுக்குள் விட்டது எனக்கு சொல்ல முடியாத வேதனையை தந்தது.நீங்கள் எத்தனை முறை விளக்கம் குடுத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திரும்ப திரும்ப உங்களுக்கு வந்து பின்னூட்டங்கள் என் கருத்தை சொல்லியிருக்கும்.நீங்கள் ஏதோ ஒரு இணையதளத்தில் எவனோ எதையோ கிறுக்க போக அதை அன்றே கண்டிக்காமல் சச்சின் சதமடித்தப் பின் பத்தியாய் எழுதி என் உயிரை வாங்கியதற்கு எதற்காக.பாண்டிங்கின் திற்மைகள் தெரியுமா.கேப்டன் பதவிக்கு முன் குடித்து விட்டு சண்டை போட்டுயிருக்கிறார்.சூதாடியிருக்கிறார்.அது சச்சினால் முடியுமா என்று நான் கேள்வி எழுப்பினால் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்.நாளைக்கு என்றாவது சச்சின் சகாப்தம் முடிவுக்கு வரும் போது சச்சின் பெராரி காருக்கு வரி கட்டவில்லை,மும்பையில் இருப்பதால் தெரியும் என்று நினைக்கிறேன் மாநகராட்சிக்கு வரி கட்டவில்லை என்று வம்பு இழுப்பார்கள்.அதையும் சச்சின் சதம் அடிக்கும் வரை காத்திருக்காமல் உடனே எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.முக்கியமாக கங்குலி,டிராவிட்,லாரா,பாண்டிங்கை இழுக்காமல் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.இல்லை எத்தனை பின்னூட்டம் போட்டு எனக்கு எடுத்து சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஜட்டி :

நடுஇரவில் தயவு செய்து துணி துவைக்க வேண்டாம்.காரணம் வம்புச் சண்டைகளைத் தேடித் தேடி படித்து விட்டு இரவு துணி துவைத்தால் ஜட்டி காயாது.ஆபிஸ்க்கு சீக்கிரம் போக வேண்டுமென்றால் ஜட்டியை ஈரத்தோடு அணிய வேண்டியதிருக்கும் அல்லது ஜட்டியே போடாமல் போக வேண்டியிருக்கும்.

சாரு :

இதை கேட்ட நான் என்று கேட்டால் நான் தான் முன்னரே துப்புக் கொடுத்தேனே.ஜட்டி என்ற வார்த்தையை பதிவுக்குள் கொண்டு வரும் போதே தெரிய வேண்டாம்.நான் சாருவுடைய அதி தீவிர ரசிகன் என்று.இன்னமும் நம்பாமல் பெயர் கேட்டால் கண்ணாடித்திரை என்று வைத்து கொள்ளலாம்.பெயர் மறக்காமலிருக்கும்.

பிரபலம் :

பிரபலத்தின் அளவுகோலே எனக்கு புரியவில்லை.அதிகப்படியான பதிவுகள் அல்லது நிறைய பின்னூட்டங்கள் அல்லது ஃபாலோயர் அல்லது ஹிட்ஸ் எதை வைத்து இந்த வார்த்தை தீர்மானிக்கப்படுகிறது."உங்களுக்கென்ன நீங்க பிரபலம்.." இப்படி ஏத்தி ஏதாவது பதிவில் சொல்லியிருந்தால் அதை அங்கேயே மறந்து விட வேண்டும்.அந்த வார்த்தை போதையில் ஏதாவது எழுதினால் தேவையில்லாமல் என் குருநாதரை எல்லாம் இழுக்கிறார்கள்."பிரபலமாக இப்படி செய்யாதீர்கள்.." என்று சொல்வார்கள்.தேவையா உங்களுக்கு.

ஹிட்ஸ் :

உங்களுடைய எல்லா பதிவுகளின் தலைப்பும் அருமை.ஹிட்ஸ் மட்டுமே கிடைக்க தகுதியுள்ளது.நேற்றைய பதிவின் தலைப்பு முதலில் எப்படி இருந்தது.பின்னர் எதிர்ப்பு கிளம்பியதும் எப்படி மாறியது என்று நானும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன்.அப்புறம் பதிவு எழுதும் கேப்டனாக இருந்தது கங்குலியா இல்லை டிராவிட்டா என்று தெரியாமல் எழுதக் கூடாது.விக்கிபீடியாவில் போய் பீடியை எடுப்பது மாதிரி தேடி எடுத்து சமாளித்தால் உங்கள் பதிவின் மேலிருக்கும் நம்பகத்தன்மை குறையும்.அது உண்மையாகவே இருந்தாலும்.இதனால் ஹிட்ஸ் குறைய வாய்ப்பு உண்டு.

எதிர்வினை :

வெண்ணிற இரவு கார்த்திக்கு சச்சின் பிரபலம் அதனால் சச்சினை வெளுத்தார்.மற்றவர்களுக்கு கார்த்தி பிரபலமாகத் தெரிந்தார்.அதனால் அவரை வெளுக்கப் பார்த்தார்கள்.எனக்கு நீங்கள் தான் பிரபலம்.அதான் உங்களை வெளுத்து நான் பிரபலம் ஆகிறேன்.இன்னும் என்னிடம் ப்ளாக்கர் அக்கவுண்ட் இல்லை.இருந்தாலும் உங்கள் பதிவு எல்லோரையும் சேர உங்கள் வலைப்பூவில் இடம் தந்தது எனக்கு ஆச்சர்யம் தான்.நான் போனப் பிறகு பின்னாடியே ஆள் விட்டு வெளுக்க வேண்டாம்.எனக்கு எதிர்வினைகள் எழுதி மிரட்டல் விடுத்து இன்னும் பதிவுலகத்தில் காலே வைக்காத குழந்தையின் காலை உடைத்து விடாதீர்கள்.

நான் எந்த பதிவிற்கு எதிர்பதிவு போட்டேன் என்று குழப்பம் யாருக்காவது வந்தால் அந்த பிரபலத்தின் (எனக்கு மட்டுமே) பதிவை இங்கு சென்று பார்க்கலாம்.

வெந்ததைத் தின்று விட்டு வந்ததை எல்லாம் இனிமேல் எழுதாதீர்கள்.பதிவுலக வழக்கப்படி கண்டபடி திட்டினாலும் கடைசியில் இப்படி ஏதாவது போட வேண்டும் :-(((((((((((((((((((((( வேண்டாமா இதை வைத்துக் கொள்ளுங்கள் :-)))))))))))))))))))))

Wednesday, February 24, 2010

சச்சினை தரித்திரம் என்று திட்டிய வாய் இன்று????

இரண்டு நாட்களுக்கு முன் ரெடிஃப் இணையத்தில் சச்சின் எல்லாம் ஒரு ஆளா என்று பாண்டிங்குடன் ஓப்பீடு செய்து ஒரு பின்னூட்டம்.கிட்டத்தட்ட இந்த தலைப்பை பிரதிபலிக்கும் வார்த்தைகள்.இன்று அந்த நபரின் வாயும் கையும் புகழ்ந்து கொண்டே எங்காவது பின்னூட்டம் போடும்.சச்சின் தரித்திரம் அல்ல சரித்திரம் என்று.

முதலில் சச்சினை பாண்டிங் அல்லது லாரா அல்லது சயீத் அன்வர் என்று யாருடனாவது ஓப்பீடு செய்வது தான் நம் வேலை.நிச்சயம் இந்த மூவரையும் விட அவர் சிறந்தவர்.ஒரு காலத்தில் சச்சினுக்குப் போட்டியாக இருந்த அன்வர்,லாரா இருவரும் இன்று களம் இறங்குவதே இல்லை.பாண்டிங் என்ற இன்றைய சகாப்தத்திற்கும் இதே நிலைமை ஏற்படும்.சச்சினுடன் ஓப்பீடு செய்ய புதிதாக யாராவது வருவார்கள்.

சேவக் தான் முதல் ஆளாக ஒரு தினப்போட்டியில் இரட்டை சதமடிப்பார் என்று என் நண்பர்கள் நான் சொன்னேன் சச்சினுக்கும் வாய்ப்புள்ளது என்று மெல்லிய குரலில் சொன்னேன்.காரணம் சச்சின் கதை முடிந்து விட்டது என்று எல்லோரும் கருதிய,எழுதிய,சொல்லிய நாட்கள் அது.

பாண்டிங்,லாரா,அன்வர் இவர்கள் எல்லாம் டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று இடங்களில் தான் பேட் செய்வார்கள்.சச்சின் நாலாவதாகத்தான் இறங்குவார்.அதனால் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் ஆடுபவர்களால் அதிக இன்னிங்க்ஸ் ஆட முடியும்.அதுவும் டிராவிட் என்ற நங்கூரத்தையும் தாண்டி ஆட வாய்ப்பு கிடைத்து சாதனை புரிய வேண்டுமென்றால் அது சச்சின் என்ற ஒருவரால் மட்டுமே முடியும்.ஒரு தினப் போட்டியில் அவர் சாதனையை கொஞ்சம் கூட நெருங்க முடியாமல் பாண்டிங் தவிக்க காரணம் சச்சின் முதலில் களமிறங்குகிறார்.தவிர 1995லில் டெஸ்ட் ஆடத் துவங்கிய பாண்டிங் ஆடிய டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 142.சச்சின் 1989லில் இருந்து ஆடுகிறார் அவர் ஆடிய போட்டிகள் 166.நடுவே அவர் விளையாடாமல் இருந்ததை கணக்கில் எடுத்தாலும் அது 180 போட்டிகளைத் தாண்டாது.பாண்டிங் பெரிய வீரராக உருவெடுத்த சமயம் வால்ஸ்,ஆம்புரோஸ்,அக்ரம்,யூனிஸ் போன்ற தலை சிறந்த வீரர்கள் ஓய்வு அடைந்து விட்டார்கள்.சச்சின் அப்படியல்ல மெக்ராத்,வார்ன்,வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்ஷல்,இம்ரான் கான்,ஹாட்லி,மெக்டர்மோட் என்று வேகம் அனல் பறந்தப் போதும் சச்சின் ஆடியுள்ளார்.பாண்டிங் எப்படி இஷாந்த் சர்மா பந்தில் திணறினார் என்று உலகமே பார்த்தது.

சச்சின் இரட்டை சதமோ,இல்லை சதமோ அடிக்கும் போது அதை எடுக்க விடாமல் தடுப்பது எதிர் அணியில் விளையாடும் வீரர்கள் கிடையாது.நம் அணியில் விளையாடுபவர்கள் தான்.இன்று தோனி செய்ததை தான்,இலங்கையுடன் தினேஷ் கார்த்திக் செய்தார்,ஆஸ்திரேலியாவுடன் ரவிந்திர ஜடேஜா செய்தார்.பாகிஸ்தானுடன் விளையாடும் போது அருமையான கேப்டன் (அப்போதைய) கங்குலி டீக்ளேர் செய்தார்.என்ன கொடுமை.

இன்று சச்சின் இரட்டை சதம் அடித்தவுடன் எத்தனை வாய் அவர் பெயரை உச்சரித்திருக்கும்,எத்தனை காது அதை கேட்டிருக்கும்,என் எதிரி கூட மகிழ்ந்திருப்பான்.எத்தனை கைகள் என்னை மாதிரி தட்டச்சு செய்து கொண்டிருக்கும்.நாளை பதிவுலகத்தில் அனல் பறக்கும்.இந்த சாதனை மட்டும் கிரிக்கெட் போட்டியில் பெண்களுக்கு பிறகு நிகழ்த்தியதாக இருக்கும்.

எல்லாம் மறந்த தினத்தில் சச்சின் ஆட்டத்தை விட்டு விலகி விடலாம் என்று விமர்சனம் வரும்.அதையும் நாம் வேடிக்கை பார்த்து விட்டு ஆஸ்திரேலியாவை உதாரணம் காட்டி பேசுவோம்.சரியாக சொல்கிறார்களே என்று உச் இச் பச் சொச் என்று எதையாவது கொட்டுவோம்.

நாளை மராத்திய மண்ணின் மைந்தன் என்று தலையங்கம் மும்பையில் நிச்சயம் வரும்.எண்டுல்கர் என்று எழுதிய இங்கிலாந்து பத்திரிக்கைகள் சச்சின் படத்தை முதல் பக்கத்தில் போட்டு விற்பார்கள்.போங்கடா மானம் கெட்டப் பசங்களா.

Tuesday, February 23, 2010

இஷ்கியா - ஹிந்தி பட விமர்சனம்

இஷ்கியா இந்த படம் பார்த்தே ஆக வேண்டும் என்று அறையில் இருக்கும் போதும் மறந்து விடாமலிருக்க இந்த படத்தின் பெயரை உச்சரித்து கொண்டிருந்தேன்.காரணம் மூன்று விஷால் பரத்வாஜ் இயக்கிய ஓம்காரா,கமீனே ஏற்படுத்திய ஆச்சரியங்கள்.வித்யா பாலனின் முத்தக்காட்சி,கவுண்டமணி செந்திலுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க சூடுப் போட்டு விட்டு இஷ்கியா என்று கேட்பார்.

வித்யாபாலனில் இருந்து படம் ஆரம்பிக்கிறது.சாப்பிடும் போது தான் பிரச்சனைகளை எழுப்புவார்கள் மனைவிகள்.அப்படி ஒரு சராசரி பெண்ணாக வித்யா பாலன்.சந்தோஷமாக இருந்து விட்டு அப்படியே இருக்க ஆசைப்பட்டு கிரிமினல் கணவனை சரண்டர் ஆக சொல்ல வாக்குவாதங்களுக்கு பின் வீட்டிற்குள் சென்று திரும்பி வரும் வித்யாபாலன் வெடிகுண்டு விபத்தில் சிக்க,குற்றுயிரும் குலையுருமாக கிடக்கிறார்.

ஒவர் டூ நஸ்ரூதீன் ஷா,அர்ஷாத் வர்ஸி.சின்ன சின்ன திருட்டுகள் செய்து விட்டு சந்தோஷமாக இருக்கும் இருவரும் தலைவனிடம் வேலையை காட்ட,விஷயம் தெரிந்த தலைவன் காலில் நஸ்ரூதீன் ஷா விழுந்து கெஞ்சுகிறார்.(கவனிக்க இந்த படத்தை மொழிமாற்றம் நிச்சயம் செய்ய மாட்டார்).குழிக்குள் இறக்கப்படும் இருவரும் ஏமாற்றி பணத்தோடு தப்பித்து எங்கேயும் போக வழி தெரியாமல் அலைகிறார்கள்.யாரும் அடைக்கலம் தராத காரணத்தால் வித்யாபாலன் கணவன் நினைவுக்கு வர அங்கு வந்தால் விதவையாக வித்யாபாலன்.பின்னாலே தலைவனும் துரத்துகிறான்.

பணத்தை எடுத்து சந்தோஷமாக செலவு செய்யும் இருவரையும் தலைவன் வந்து புரட்டி எடுக்கிறான்.வீட்டில் பணத்தைத் தேடினால் பணமில்லை.அர்ஷாத் வர்ஸிக்கு வித்யாபாலன் மீது சந்தேகம்.வித்யாபாலன் நெற்றியில் துப்பாக்கி வைக்கப்பட நஸ்ரூதீன் ஷாவிற்கு சந்தேகம் வரவில்லை.திரும்பவும் கெஞ்சி கூத்தாடி அவகாசம் வாங்கி கொள்கிறார்கள்.பணம் சம்பாதிக்க வழி சொல்கிறார் வித்யாபாலன்.கணவனின் கடத்தல் தொழிலை கைத்தொழிலாக மாற்ற திட்டம் தீட்டுகிறார்கள்.நடுவே முறையே ஷாவிற்கும்,வர்ஸிக்கும் வித்யா மீது காதல்,காமம்.

திட்டம் தீட்டி ஒன்றுமே சரிவராமல் அவன் கோவிலில் அதிக நேரம் இருக்கிறானா எண்டு சந்தேகத்தில் துப்புத் துலக்க அது சின்ன வீட்டுக் கதையாக மாறுகிறது.சின்ன வீட்டின் கை ஏன் ஓங்கியிருக்கிறது என்று அந்த காட்சியைப் பார்க்க வேண்டும்.ஓளிந்திருந்து பார்க்கும் வர்ஸியும்,வித்யாவும் ஷாவின் முன்னால் அடக்க மாட்டாமல் சிரிக்க,ஷா முழிக்க.

கடத்தலுக்கு கார் தேவை என்று கார் திருட இருவரும் போக,நடுவழியில் வர்ஸி கழன்று கொள்ள நஸ்ரூதீன் ஷா மட்டும் போக அதுவும் வித்யாவின் காதல் ஞாபகத்திலேயே போக பஸ்ஸில் அவரை தவிர எல்லோரும் பெண்கள் அதற்கு அந்த பெண்ணும் அவரும் கொடுக்கும் உணர்வுகள்.இங்கே வீட்டிற்கு வரும் பூனைப் பானையை உருட்டி விட,நான் சொன்ன முத்தக்காட்சி பார்த்து விட்டு காதில் புகை வரலாம்.காரை திருடி விட்டு வரும் ஷா இருவரின் நெருக்கத்தையும் பார்க்க,கண்களில் கண்ணீர் ஒளிர்கிறது.மனுஷன் பின்னியெடுக்கிறார்.

காலையில் கடத்தலுக்கு போக,ஷா வர்ஸி மீது கோபத்தைக் காட்ட,திட்டத்தில் ஓட்டை விழுந்தாலும் ஆளைப் பிடித்து விடுகிறார்கள்.வாக்குவாதத்தில் இருவரும் அடித்து கொள்ள வித்யாபாலன் பணம் மட்டும் ஆளுடன் பறக்கிறார்.வித்யாவின் சூழ்ச்சி தெரிகிறது.

கடத்தியவனை விசாரித்து கணவன் இறந்த விதத்தை தெரிந்து கொள்ளும் வித்யாவை ஷாவும்,வர்ஸியும் அடித்து கட்டிப் போட்டு விட்டு அவனிடமிருந்து பணம் தர சொல்ல, அவனுடைய சின்ன வீடும்,பெரிய வீடும் ஒரே இடத்தில் இருக்க,வாங்க செல்லும் ஷாவும்,வர்ஸியும் எதிர்பாராத ஆளை சந்திக்க,சிறுவன் ஒருவனிடம் அவர்களை அந்த ஆள் கொல்ல சொல்லி விட்டு வித்யாவின் வீட்டிற்கு செல்ல,சிறுவன் ஏற்கனவே அறிமுகம் என்பதால் அவன் விட்டு விடுகிறான்.வரும் போது நடக்கும் கலாட்டாவில் போலீஸ் துரத்த அங்கு இருக்கும் கும்பலுக்கும்,போலீஸுக்கும் நடக்கும் சண்டையில் அவர்கள் தப்பித்து வித்யாவை காப்பாற்ற முயல,களேபரத்தில் மூவரும் தப்பிக்க வந்த எதிர்பாராத ஆள் மட்டும் கொல்லப்படுகிறான்.வித்யாவுடன் இருவரும் செல்ல,தலைவன் அவர்களை சுடாமல் குறிப்பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.காரணம் தொலைபேசியில் அவனுடைய மனைவி தடுக்கிறாள்.

வித்யாவை கொலை செய்ய முடியாமல் தவிக்கும் ஷாவுக்கும்,வர்ஸிக்கும் நடக்கும் உணர்வு போராட்டம் அருமை.

Monday, February 22, 2010

துவையல் - கும்மாங்குத்து ஸ்பெஷல்

அஜித்துக்கு வாயில் சனி தான்.இனிமே சளி பிடித்து தொண்டையைச் செருமி துப்பினால் கூட அதை பிடித்து அரசியல் செய்ய முடியுமா என்று கிளறுவார்கள்.ஊர்ல சொல்லுவாங்க "நல்லவனா அவன்..அப்ப அவனை நாய்க்கு பிடிச்சி கட்டி வை.." என்று.இது தான் சந்தர்ப்பம் என்று உலக மகா உத்தமர் ஜாக்குவார் அவருடைய கிழிந்த டங்குவாரை இழுத்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.ஜாக்குவார் இயக்கிய சூர்யா படத்தில் வந்த சண்டைகளை எண்ணி முடிப்பதற்குள் படம் முடிந்து விட்டது.அப்படி எல்லோரையும் வெளுத்து கட்டிய சூராதி சூரன் அவருடைய மகன் அவர் வீட்டை தாக்கும் எங்கு பம்மியிருந்தார் என்று சொன்னால் எனக்கும் ஆட்டோ அனுப்பும் போது நானும் பம்ம வசதியாகயிருக்கும்.

ரஜினி பற்றி சொல்லவே வேண்டாம்.அவருக்கு இது தேவைதான்.பாபா படப்பெட்டியைத் தூக்கியப் போது அவருக்கு யார் உதவி செய்தது.அதிலும் பாடம் கற்றுக் கொள்ளாமலிருந்தால் ஜக்குபாய்,பத்திரிக்கைகளுக்கு எதிரான போராட்டம்,உண்ணாவிரதம்,இன்னும் நடிகர் சங்கத்தில் சட்டி காணாமல் போனது,வருங்காலத்தில் வரும் தலைவருடைய ஜட்டி காணாமல் போனால் இப்படி எல்லா விஷயத்திற்கும் கண்டனம் தெரிவிக்க ரஜினி தேவை.அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் கைகள் தானாக மேலேயும் கீழேயும் மூடிக் கொள்ளும்.உங்களை கோமாளி என்று காமாளி,காவாலி சொன்னது உண்மையில் ரஜினி கோமாளி அல்ல ஏமாளி.இன்னும் ஏமாறுவார்.

இப்படியே விழா கொண்டாடுங்கள்.இன்னும் ஒரு வருடம் தான்.கொட நாடு ஆட்சியைக் கைப்பற்றினால் அங்கு சென்றும் குத்து ஆட தயாராவார்கள்.ரஜினி,அஜித் எல்லோரும் வர வேண்டும் என்று "அன்போடு" அழைப்பார்கள்.நம் ஆட்கள் ஜாதி வெறியில்,மொழி வெறியில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல அதுவும் குறிப்பாக நடிகர்கள் விஷயத்தில்.

திருமாவளவனுக்கு ஈழப்பிரச்சனை எல்லாம் இரண்டாம் பட்சம் ஆகி விட்டது போல.நடிகர்கள் வெளுத்துக் கட்டுகிறார்.அவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் தான்.எப்போ ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்தார் என்று தெரியவில்லை.

இன்னும் கருத்து சொல்லாமல் இருப்பது கேப்டன் தான்.அவர் நடிகராக இருக்கிறாரா இல்லை இயக்குனர் சங்கத்தில் சேர்ந்து விட்டாரா இல்லை அரசியல்வாதியா எல்லாம் அவருக்கு தான் வெளிச்சம்.அதனால் தான் விழாவுக்கு வராத போதும் அவரை ஒன்றும் சொல்லவில்லையா?

சரத்குமாருக்கும்,விஜய.டி.ராஜேந்தருக்கும் அடுத்த கூட்டணியில் இடம் கிடைக்கும் போல.அதனால் தான் இன்னும் டண்டணக்கா டணக்குணக்கா என்று தாளம் வரவில்லை.குரல் குடுத்தால் ஜக்குபாய் சாட்டிலைட் உரிமைக்கு குடுத்த காசை திரும்ப கேட்பார்கள்.அவருக்கு அவர் எடுக்கும் புதிய காவியம் வீராசாமி இரண்டாம் பாகம் வெளிவராது.மக்கா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.அமிதாப் பச்சனை யார் மிரட்டி விழாவுக்கு அழைத்து வந்தார்கள் அல்லது இழுத்து வந்தார்கள்.

Sunday, February 21, 2010

சாரு,தமிழ்மணம்

சாருவின் இணையத்தளத்தில் வைரஸ் பரவியுள்ளது.அதனால் அவர் தளத்திற்கு போக முடியவில்லை.அவர் எழுதுவதற்கு கண்டனப் பதிவு போடுபவர்களுக்கும்,எதிர்பதிவு இடுபவர்களுக்கும் இனி வரும் இரண்டு நாட்கள் எதுவும் கிடைக்காது.ரெண்டு வாரங்கள் ஆனால் சண்டை இல்லாமல் பதிவுலகமா என்று போரடித்து விடும்.யாராவது ஏதாவது செய்து சரி செய்து விடுங்கள்.

தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துறையில் முகப்பு பக்கத்தில் வர முன்னர் நான்கு ஓட்டுகள் தான் அளவுகோலாக இருந்தது.தற்போது அது ஏழு ஓட்டாக மாறி எனக்கு எட்டாத கனவாகி விட்டது.பழைய காலம் அதுவும் "ராமராஜன்" மாதிரி நான் ஹிட் கொடுத்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்மணத்தின் அளவுகோலான ஏழு ஓட்டை நான் மைனஸிலே வாங்கி சாதனை படைத்து இருக்கிறேன்.அது ஒரு கனா காலம்.பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.

ரெண்டு விஷயத்தையும் பதிவர்கள் நோட் பண்ணுங்க.ஏதாவது உதவி செய்யுங்கள்.(இன்னைக்கு மைன்ஸ் கன்பார்ம்.)

Saturday, February 20, 2010

தண்டோரா,கேபிள்,நர்சிம்,ஆதி யாராவது என்னை தத்து எடுத்துக்கோங்க

கேபிள் சங்கர் அண்ணனை அவருடைய மகன் "எங்கப்பா ஒரு காமெடி பீஸ்.." என்று சொன்னான் என்று தெரிந்தவுடன்,உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் கேட்டது.அவன் நிச்சயம் அவருடைய இரண்டாவது மகனாகத்தான் இருக்கும் என்று.பிறகு பதிவுகளில் படித்து தெரிந்து கொண்டேன் நான் நினைத்தது சரி தான் என்று.காரணம் எங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது,இன்னும் நிறைய வீடுகளில் நடந்திருக்கும்.இனிமேலும் நடக்கும்.இது மாதிரி சந்தர்ப்பங்களில் தான் ச்சே மூத்த மகனாக பிறந்து தொலைத்து விட்டோமே ஒரு வருத்தமிருக்கும்.

சினிமா பார்க்கலாம் என்று போனால் ரஜினி படங்களைத் தவிர பெரும்பாலான படங்களில் அண்ணன் ஒரு வெத்துவேட்டாக இருப்பான்.உதாரணம் கொடுக்க வேண்டுமானால் அது தேவர் மகன் தொடங்கி இன்று அசல்,ஸ்டைக்கர் வரை தொடர்கிறது.இதனாலேயே ரஜினி படங்களின் மீது ஈர்ப்பு வந்திருக்கலாம்.இன்னும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் ரஜினி அவர் வீட்டில் கடைக்குட்டி அண்ணனாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஆசையே அவர் நிறைய படங்களில் அவர் நடித்திருக்க காரணமாக இருக்கலாம்.

எனக்கு தம்பி மேல் பொறாமையா என்று கேட்டால் இருக்கலாம்.நான்கு வருடங்களாக வீட்டுக்கு காசு மட்டும் தான் கொடுத்திருக்கிறேன்.அவன் கூடவே இருந்து அதை ஒன்றுமில்லாமல் செய்து விட்டான்.அவன் மேல் எனக்கு ஆச்சர்யங்கள் நிறைய உண்டு.எனக்கு மூன்று வருடம் கழித்து பிறந்தாலும் என்னுடைய அவன் இல்லாத முதல் மூன்று வருடங்களையும் சேர்த்தே கொண்டு வளர்ந்துள்ளான்.என்னுடைய மைனஸ்,ப்ளஸ் இரண்டுமே அவனுக்கு ப்ளஸாக இருக்கிறது.அதனால் தான் தம்பிகள் எல்லாம் ஹீரோக்களாக இருக்கிறார்களா.

கடைசி மகன் மீது கொஞ்சம் அதிகமான பாசம் அப்பாகளுக்கு உண்டு,மூத்த மகன் மீது அதிகப்படியான பாசம் அம்மாகளுக்கு உண்டு என்று சொல்வார்கள்.அந்த பாசத்திற்காக இல்லாமல் இந்த கடமைகளில் இருந்து கொஞ்சம் விலகி வெளியே இருக்க கடைசி மகனாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியிருக்கிறது.

இதற்கு ஒரு உதாரணம்(ராமாயணம்,மகாபாரதம் இதிகாசங்களில் இருந்து).ராமன் லட்சுமணனிடம் நீ அடுத்த ஜென்மத்தில் நீ என் அண்ணாக பிறப்பாய் என்று சொல்கிறார்.அது போல கிருஷ்ணரின் அண்ணனாக பலராமன் பிறக்கிறார்.எல்லாம் கடமை உணர்ச்சிகளில் இருந்து தப்பவே என்று நினைக்கிறேன்.

ஆக மொத்தம் அக்கரைக்கு இக்கரை பச்சை.விமர்சனங்கள் செய்யவும்,கடமையுணர்வுகளிலும் இருந்து தப்பிக்க என்னை யாராவது தம்பியாக தத்து எடுத்து கொள்ளுங்கள் ஐயா.இப்படி சொல்வதற்கு காரணம்.நான் பழைய புத்தகங்கள் தந்தாலும் வாங்கி கொள்வேன்.புத்தகக் கண்காட்சிக்கு வர முடியாத காரணத்தால் அங்கு வாங்கிய புத்தங்களை யாராவது எனக்கு ஓசியில் கொடுத்தால் நன்றாகயிருக்கும்.(தண்டோரா,கேபிள்,நர்சிம்,ஆதி போன்ற புத்தகம் எழுதியவர்களும்,எழுதப் போகிறவர்களும் தம்பியாக தத்து எடுத்து புத்தகம் இரவல் குடுத்தால் நன்றாக இருக்கும்).

Friday, February 19, 2010

அஜித் வழியில் விஜய்

சுறா படத்தை சன் வாங்கி விட்ட நிம்மதியில் இருக்கிறார் விஜய்.காலையிலேயே சன் பிக்சர்ஸில் இருந்து போன்.

சன் பிக்சர்ஸ் - "திருநெல்வேலியில் படம் ரீலிஸ் பண்றோம்..நீங்க படம் ரீலிஸாகறதுக்கு முன்னாடி ஒரு விசிட் அடிக்கணும்.."

விஜய் - (மனதுக்குள்) "எப்படி இருந்த என்னை.." (மெதுவாக) "பாம்பே தியேட்டர் தானே.."

சன் பிக்சர்ஸ் - "அப்படியே பக்கத்தில் சாத்தாங்குளத்துல நாராயணசுவாமி தியேட்டருக்கும் போயிட்டு வந்துருங்க.."

விஜய் - "அங்கேயுமா.."

சன் பிக்சர்ஸ் - "இன்னும் அதுக்கு பக்கத்துல்ல இட்டமொழி ஊர்ல புஷ்பான்னு ஒரு கொட்டகையிருக்கு..அங்கேயும் படம் ரீலிஸ் பண்றோம்.."

விஜய் - "இன்னும் ஏதாவது ஊர் பாக்கி இருக்கா.." என்று போனை கட் செய்கிறார்.

எஸ்.ஏ.சி - "ஏன் டல்லா இருக்கே.."

விஜய் - "இனிமே அஜித்தை நான் ஃபாலோ பண்ணப் போறேன்.."

எஸ்.ஏ.சி - "எதுக்கு விஷப்பரிட்சை..அதுக்கு 3 இடியட்ஸ் ரீமேக் பண்ணலாம்.."

விஜய் - "முதல்வர் பாராட்டு விழாவுல பேசினாலும் பேசினார்..எல்லார் கவனமும் அங்க தானிருக்கு.."

எஸ்.ஏ.சி - "நாம அப்படியெல்லாம் பேச முடியாது..புறம்போக்கு இடம்,கல்யாண மண்டபம் எல்லாம் கண் முன்னால வந்துட்டு போகுது.."

விஜய் - "இந்த திரிஷா கூட அஜித்துக்கு சப்போர்ட்.."

எஸ்.ஏ.சி - "நீ படத்துல இப்போ சான்ஸ் தரல..அப்புறம் சப்போர்ட் அங்க தானே போகும்.."

விஜய் - "இனிமே எந்த விழாவுக்கும் அவர் வர வேண்டியதில்லை..நான் கிராமம் கிராமமாய் போறேன்.."

எஸ்.ஏ.சி - "கோபப்படாதே..மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி எல்லாம் பட டிவிடியும் இருக்கு..படம் பாரு ரீமேக் பண்ணலாம்.."

விஜய் - "அஜித்தல ஃபாலோ பண்ணி தளபதின்னு பட்டம் வச்சிருக்கிறவங்க எல்லாம் ஸ்டார் பட்டத்துக்கு மாறப் போறாங்களாம்..விஷால் தான் முதல்ல.."

எஸ்.ஏ.சி - "புரட்சி கலைஞரை உருவாக்கியதே நான் தான்.."

விஜய் - "இதெல்லாம் கூட பரவாயில்ல..இந்த ப்ளாக்கர்ஸ் அஜித்தை தலையில் வைத்து ஆடுகிறார்கள்.."

எஸ்.ஏ.சி - "அதுதான் கலைஞர் டிவில அவரை புறக்கணிச்சுடாங்களே.."

விஜய் - "அது தமிழ் நாட்டுல..உலகம் புல்லா இந்த பசங்க பரவிக் கிடக்காங்க..அங்க ஒருத்தன் இருக்கான்..என் ரசிகன் என்று கோட்ஸ் போட்டு சொல்லுவான்..ஆனா கலாய்க்கிறது எல்லாம் என்னைத்தான்.."

எஸ்.ஏ.சி - "அவன் எல்லாம் ஒரு ஆளா.."

விஜய் - "அசல் விமர்சனம் எழுதினாலும் வேட்டைக்காரனை இழுக்கிறான்.."

எஸ்.ஏ.சி - "சரி என்ன பண்ணப் போற.."

விஜய் - "நானும் வர முடியாதுன்னு அஜித் மாதிரி சொல்லப் போறேன்.."

எஸ்.ஏ.சி - "முதல்ல பேசியவனை கண்டுக்க மாட்டாங்க..பின்னாடி கொடிப் பிடிக்கிறவனை வெளுப்பாங்க.."

விஜய் - "புரியல.."

எஸ்.ஏ.சி - "நாம டிரெண்ட் செட்டரா இருக்கணும்..எப்படின்னா ரசிகன் படத்தில் மாமியாருக்கே சோப் போட்ட..தமிழ் நாடே அதிர்ந்தது..அது மாதிரி ஏதாவது பண்ணணும்.."

விஜய் - "நீங்க எதுக்கோ அடி போடுறீங்க.."

எஸ்.ஏ.சி - "வெளுத்துக் கட்டுன்னு ஒரு படம் எடுக்கிறேன்..நீ நடி..நான் இயக்குறேன்.."

விஜய் - "அதுக்கு நான் இட்டமொழி புஷ்பா தியேட்டருக்கு போவேன்.."

எஸ்.ஏ.சி - "அட்லீஸ்ட் கெஸ்ட் ரோல்..இப்போ பரத் நல்லா வளர்ந்து வர்றான்..அவனை ஹீரோவா போட்டு காலி பண்றேன்..என்ன சொல்ற.."

விஜய் - "அப்பா,நீங்களே சொல்லி இருக்கீங்க..2011ல தான் நான் அவார்ட் படம் நடிப்பேன்னு..அது நடந்தா இதுவும் நடக்கும்.." மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்."நமக்கு வேட்டு வைக்க ஆள் வெளியேயிருந்து வர வேண்டியதில்ல.."

பதிவுலக அரசியல்,டிவிட்டர்,விஜய்,உலக சினிமா

உலக சினிமா என்பது அந்தந்த ஊரில் ஓடாத படம்.அப்படியென்றால் ஆதி,வில்லு எல்லாம் அவர்களுக்கு உலக சினிமாவா?

3 இடியட்ஸ் அமீர்கான் வேடத்தில் விஜய் - யோசனை தந்த இடியட் யாரு இது விஷப்பரிட்சையா இல்ல விஷம் வைக்கிற பரீட்சையா?

நான் காதல் வயப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் போதை தரும் ஹஸ்கி வாய்ஸ்.நானும் அப்படி பேச முயற்சித்தேன்.உளறாதே என்கிறார்கள் என்ன செய்ய

தூக்கக்கலக்கத்தில் யாருக்கு காலை வணக்கம் சொன்னேன்னு தெரியல.கேக்கவும் பயமா இருக்கு சாருவோட காலை வணக்கம் படிச்சதுலயிருந்து.

பதிவர்கள் தயவு செய்து கவர்ச்சி படங்கள் போட்டு பதிவெழுதாதீங்க.எங்கேயோ மச்சம்னு சொல்வாங்களே அதை தேட சொல்லுது மனசு.அதுவும் ஆபிஸ்ல

நான் ஒரு டிரெண்ட்செட்டர்.நான் தியேட்டருக்கு ஜட்டியே போடாம போனேன்.அப்புறம் தான் சாரு அப்படி ஐநாக்ஸ் போனாரு.அப்போ எனக்கு வயசு ரெண்டு.

பதிவுலகச்சண்டை=புட்பால்.சப்ஸிடிடூட் தான் நல்லது.ரெண்டு பக்கமும் வேண்டியவங்க இருப்பாங்க.கோல் போட்டா ஷேம்சைடு.போடலைன்னா பதிவு போயிரும்.

பேஸிக்கா நான் ரொம்ப சோம்பேறி.ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு பத்து டிவிட்டுக்கு மேல யோசிக்க முடியல

எனக்கு பின்னூட்டம் கம்மியா வருது.அந்த சோகத்தை சாரு,எஸ்.ராமகிருஷ்ணன் பார்த்து தீர்த்து கொள்கிறேன்.அவங்களுக்கு பின்னூட்டமே வர்றதில்லை.

பிறப்பு,வளர்ப்பு,ஈர்ப்பு,சுகிப்பு,எதிர்ப்பு,மறுப்பு,தவிப்பு,இறப்பு - என் டிவிட்டர் நாவலின் அத்தியாயங்கள்.

சைட்ல இருக்கும் விட்ஜெட்ல என் டிவிட்டர் முகவரி.வாங்க பேசலாம்.

Thursday, February 18, 2010

மிஸ்ஸான சில வடைகள்

வீட்டில் இருக்கும் போது பதிவெழுத யோசித்தால் ஒண்ணுமே கற்பனை குதிரையில் ஏற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.அதுவே ஆபிஸில் எழுதினால் வடைகள் கணக்கில்லாமல் இலக்கில்லாமல் வந்து விழுகிறது.ஆபிஸ் வேலையை ஆபிஸில் செய்யாமல் வீட்டில் செய்தால் எப்படி சரியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து ஆபிஸில் வடைகளை ஊற விட முடிவு செய்து இருக்கிறேன்.

ஆபிஸில் இருக்கும் ஒரே பிரச்சனை யாராவது வந்து விட்டால் அவசரமாக க்ளோஸ் செய்வதால் சில சமயம் அடித்தது எல்லாம் சேமிக்க முடியாமல் போய் திரும்ப அடிக்கும் போது கோர்வை வர மறுக்கிறது.

இன்னொரு பிரச்சனை ஏற்கனவே எழுதி வைத்திருந்த கதையின் மேலேயே சேமித்து விட்டேன்.வட போச்சே நான் வருத்தமிருந்தாலும் எப்படியும் அதை எழுதி படிப்பவர்களுக்கு தொல்லை தர வேண்டும்.

நான் உச்சரித்த
நல்ல வார்த்தைகள் எல்லாம்
காற்றில் எங்கோ போய் விட
முடியாத சந்தர்ப்பத்தில்
உச்சரித்தது மட்டும்
சுழலாய் சுற்றி
நம்மிருவருக்கும் நடுவே உள்ள
இடத்தில் இடைவெளியாய் அமர்கிறது
சூழ் நிலை கைதிகளாய் நாம்.

இப்படியெல்லாம் கவிதை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பலாம் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயம் மதிக்க மாட்டார்கள்.என் கவிதை வந்தால் பதினெழு ரூபாய் தெண்டம் அழணும்.(இப்படி சொல்வதற்கு காரணம் ஆனந்த விகடன் இடத்தை விரைவில் குங்குமம் அல்லது சூர்யகதிர் படிக்கும்.)

டிவிட்டர் மோகம் பிடித்து ஆட்டுவதால் இனி பாதி வடைகளை அங்கு கடன் குடுக்க வேண்டும்.

ஒரு தொடர்கதை ஆரம்பித்து அந்தரத்தில் நிற்கிறது.அதை முடிக்க வேண்டும்.

டிவிட்டரின் அடுத்த வடை இதுதான் - உலக சினிமா என்பது அந்தந்த ஊரில் ஓடாத படம்.அப்படியென்றால் ஆதி,வில்லு எல்லாம் அவர்களுக்கு உலக சினிமாவா?

பின்னூட்டதில் அஜித் நடித்த உலக சினிமாக்களின் வடைகளை தரலாம்.என்னை மாதிரி "விஜய்" இரசிகர்கள் சந்தோஷப் படுவார்கள்.

கடமை என்னும் வடை அழைக்கிறது.மிச்சமிருக்கும் வடைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் கேட்ச் பிடிக்கலாம்.

சாருவின் பொடியாள்,டிவிட்டர்,தண்டோரா,ஷகீலா,டக்கீலா

இரண்டு நாட்களாக டிவிட்டரில் குடியிருக்கிறேன்.தொடர,கும்மியடிக்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

ஆங்கிலப்படத்தின் நிர்வாண காட்சிகளுக்கு சிலிர்க்காத மனசு தமிழில் வரும் முத்தக்காட்சிகளுக்கே சிலிர்ப்பதேன்.இதுதான் மொழிப்பற்றா?

சாப்பிடும் போதும் ஷிட் என்று சொல்கிறார்கள்.தமிழில் சொன்னால் மட்டும் முகம்சுளிப்பு.ஆங்கிலத்தில் சொன்னால் வேறு அர்த்தம் தருதா என்ன?

எழுத்து தாள்களில் வந்தால் எழுத்தாளர்கள் அதுவே ஃபார் அ சேஞ்ச் கோமணத்தூணியில் பொறித்தால் எழுத்துக்கோமான்களா?

திரையுலகினர்,அரசியல்வாதிகள் எல்லாம் ப்ளாக் படிப்பதால் பொறுப்பாக எழுத வேண்டுமாம்.நான் டூவிட்டருக்கு மாறிட்டேன்.இங்கேயும் வந்துராதீங்க.

ப்ளாக்கில் பக்கங்களில் எழுதி சாருவுக்கு கொடி பிடித்தால் அடியாள் பட்டம்.140 எழுத்துகளில் இங்கு கொடி பிடித்தால் பொடியாள் பட்டம் கிடைக்குமா.

சிம்பு கோ படத்திலிருந்து விலகியதற்கு காரணம் அவருக்கு கோ(மணம்) பிடிக்காதாமே

எல்லாமே ஒரே இடத்தில் கிடைத்தால் சுவாரஸ்யம் இருக்காது.டூவிட்டர் ஸ்கூட்டரில் போய் கூகிள் பஸ்ஸை ஒவர்டேக் அடிக்கிறேன்.

பதிவர் தண்டோராவுக்கும் விஜயகாந்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா கலைஞர் எதிர்ப்பு,முரசு சின்னம் ஒற்றுமைகளால் கேட்டேன்

டக்கீலாவுக்கும் ஷகீலாவுக்கும் உள்ள சம்பந்தம்.அவங்க டக்கீலா அடிப்பாங்களான்னு தெரியாது.ஆனா நாம டக்கீலா அடிச்சிட்டு ஷகீலா படம் பார்க்கலாம்.

Wednesday, February 17, 2010

சரக்கு கிடைக்காத செந்தில்,குடுக்காத கவுண்டமணி

கவுண்டமணியின் பேட்டிக்காக எடிட்டர் குடுத்த சரக்குடன் அவரை சந்திக்கிறார் இரும்புத்திரை.சரக்கின் மீதிருந்த ஆர்வத்தால் பேட்டி தருகிறார்.பாதி பேட்டியில் சரக்கைப் பிடிங்கி பார்க்கிறார்.பாதி தான் இருக்கிறது.எப்படி என்று தெரியாதவர்களுக்கு சுட்டி இங்கே.

இனி..

கவுண்டமணி - "எனக்கு அப்பவே தெரியும் நீ உடைப்பேன்னு..முன்னப் பின்ன சரக்கடிச்சிருந்தா தானே அதோட அருமை தெரியும்.நல்ல வேளை முழு பேட்டியும் குடுக்கல..ஒரு சொட்டு கூட மிஞ்சிருக்காது.."

இன்னும் கண்டபடி வைது விட்டு சரக்கடிக்க ஆரம்பிக்கிறார்.

இரும்புத்திரை - "மிச்ச பேட்டி.."

கவுண்டமணி - "செந்தில் வருவான் அவன் கிட்ட வாங்கு இல்ல வாங்காம போ..எனக்கென்ன உம் பாடு அவன் பாடு..இல்ல அவனே ஒரு _டு.."

செந்தில் வருகிறார்.பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

கவுண்டமணி - "என்னடா சிரிக்கிற.."

செந்தில் - "சரக்கடிக்கிறவன் எல்லாம் தேவதாஸ் ஆக முடியுமா.."

கவுண்டமணி - "ஆமா நான் தேவதாஸ் தான்..என்ன நக்கலா...நாய்தான் இல்ல..பரவாயில்ல அதான் நீ வந்துட்டியே..ஒழுங்கா என்னை மாதிரியே பேட்டி குடுக்கணும்.."

செந்தில் - "நான் ரொம்ப பிஸி.."

கவுண்டமணி - "மூடிக்கிட்டு பேட்டி குடு..போகும் போது இந்த மூடியில சரக்க தர்றேன்.."

இரும்புத்திரை - "பிடித்த விளையாட்டு.."

செந்தில் - "டிக்கிலோனா.."

கவுண்டமணி - "ஏன் அது விளையாடி உதை வாங்கியது மறந்து போச்சா.."

செந்தில் - "அப்புறம் ஸ்பூன்லிங்கு.."

கவுண்டமணி - "அந்த கம்பிய அடுப்புல காய்ச்சு..போன வாட்டி சூடு சரியா விழல போல.."

இரும்புத்திரை - "கண்ணாடி அணிபவரா.."

செந்தில் - கண் மூடி யோசிக்கிறார்.ஜெயிந்த் படத்தின் முள்ளம்பன்றி தலையும் ஞாபகம் வருகிறது.கூடவே கண்ணாடியும்.கூடவே கவுண்டமணி உதையும். "இல்ல..அணிவது கிடையாது.."

கவுண்டமணி - "நீ எந்த சீனை நினைச்சன்னு எனக்குத் தெரியும்.."

இரும்புத்திரை - "எப்படிப்பட்ட படம் பிடிக்கும்.."

செந்தில் - "பேட்டா காசும்,லன்சும் தர்ற சினிமா பிடிக்கும்.."

இரும்புத்திரை - "கடைசியாக பார்த்த படம்.."

செந்தில் - "ஜக்குபாய்.."

கவுண்டமணி - "நெட்ல ரீலிஸ் பண்ணது நீ தானா.."

இரும்புத்திரை - "பிடித்த பருவ காலம்.."

செந்தில் - "குளிர்காலம்.."

கவுண்டமணி - "நீ இப்படி ஹின்ட் குடுத்தா நான் சரக்கை குடுத்திருவேனா..முதல்ல பேட்டிய முடி.."

இரும்புத்திரை - "இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்.."

செந்தில் - "டூ ஸ்டேட்ஸ்.."

கவுண்டமணி - "என்ன டூ பாத்ரூம் வருதா..இங்க போயிராத..வெளியே குழி வெட்டி வைச்சிருக்கேன்..போனப்பிறகு மண்ணுப் போட்டு மூடிடு.."

செந்தில் - "நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க.."

கவுண்டமணி - "யாரு நானா..டூ ஸ்டேட்ஸ் அர்த்தம் தெரியுமா உனக்கு..பேச்சப் பாரு..பழமையப் பாரு.."

இரும்புத்திரை - "உங்கள் முன்னறையில் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு தடவை மாத்துவீங்க.."

செந்தில் - "தினமும்.."

கவுண்டமணி - "நீ பல்லு விளக்குறதைப் பத்தி கேக்கல.."

இரும்புத்திரை - "பிடித்த சத்தம்..பிடிக்காத சத்தம்.."

செந்தில் - "பிடித்த சத்தம் - பஸ் காரன் சத்தம்"

கவுண்டமணி - "டபுள் மீனிங்கு வருதுடா போண்டா தலையா.."

செந்தில் - "பிடிக்காத சத்தம் - சரக்கை உறியும் போது வரும் சத்தம்.."

கவுண்டமணி - (மனதுக்குள்) "உனக்கு ஒரு மூடி சரக்கும் கட்டுடா.."

இரும்புத்திரை - "வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகப் பட்ச தொலைவு.."

செந்தில் - "லண்டன்,அமெரிக்கா,இன்னும் பல நாடுகள்.."

கவுண்டமணி - "போக ஆசைப்பட்டான்..நடக்கல.."

இரும்புத்திரை - "உங்களுக்களிடம் தனித்திறமை ஏதாவது இருக்கிறதா.."

செந்தில் - "இருக்கு.." மெதுவாக "அப்புறமா சொல்றேன்.."

கவுண்டமணி - "சேர்ந்து இருக்கும் குடும்பத்தைப் பிரிச்சு விடுவான்..இதை விட தனித்திறமை வேணுமா.."

இரும்புத்திரை - "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.."

செந்தில் - "பக்கத்தில் இருப்பவர்களுக்கு தராமல் சாப்பிடுவது.."

கவுண்டமணி - "இதுவே அவன் பண்ணினா ஏத்துக்குவான்.."

இரும்புத்திரை - "உங்களுக்குள்ளே இருக்கும் சாத்தான்.."

செந்தில் - "பாசம் தான்.."

கவுண்டமணி - "அவனே ஒரு சாத்தான் தான்..அதான் அவனை வைச்சு சாத்தான் சொல்லைத் தட்டாதே படம் எடுத்தாங்க.."

இரும்புத்திரை - "உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்.."

செந்தில் - "நிலா.."

கவுண்டமணி - "பலான இணையத்தளம் தான் அவனுக்கு ரொம்ப பிடித்த தலம்,தளம்.."

இரும்புத்திரை - "எப்படி இருக்கணும்னு ஆசை.."

செந்தில் - "இப்படியே அரை டவுசர் போட்டுக்கிட்டு ஜாலியா.."

கவுண்டமணி - "அதையும் கழட்டிட்டு ஊருக்குள்ள சுத்து..இன்னும் ஜாலியா இருக்கும்..கிங்கிணி மங்கிணி.."

இரும்புத்திரை - "மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்.."

செந்தில் - "துணி துவைக்கிறது..பாத்திரம் கழுவுறது..இப்படி சின்ன சின்ன வேலை என்றாவது.."

கவுண்டமணி - "அவயிருக்கும் போது செஞ்சா சரியா செய்யலைன்னு அடி விழும்..அதான் பன்னி உஷாராத்தானிருக்கு.."

இரும்புத்திரை - "வாழ்வு பற்றி ஒரு வரி.."

செந்தில் - "வாழ்க்கைங்குறது வேட்டி மாதிரி..கட்டுனா கிழிஞ்சிரும்..கட்டலைன்னா இத்துரும்.."

கவுண்டமணி - " வேட்டியப் பத்தி நீயெல்லாம் பேசவே கூடாது..என்னைக்காவது கட்டியிருக்கியா.."

செந்தில் - "இப்போ கட்டப் போறேனே.." சொல்லி விட்டு கவுண்டமணி அசந்து இருக்கும் நேரத்தில் அவருடைய வேட்டியை உருவிக் கொண்டு ஓடுகிறார்.

கவுண்டமணி - "நான் உள்ள ஒண்ணும் போடலைடா..மரியாதையா குடுத்திரு.." என்று காலியான பாட்டிலை செந்தில் மீது எறிகிறார்.அது யூ டர்ன் அடித்து கவுண்டமணி மீதே விழுகிறது.கோபத்தை இரும்புத்திரை மீது திருப்பலாம் என்று வலியோடு தேடினால் ஆளை காணோம்.

Tuesday, February 16, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

"அமர்..என்னை தெரியுதா.." ஒரு பெண் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தேன்.அழகாவே இருப்பதாகத் தெரிந்தது.அழகா முக்கியம் அவள் குரல் எனக்கு பிடித்திருந்தது.சற்றே ஆண்மை கலந்த குரல்.அதுவும் ஹஸ்கி வாய்ஸில் பேசியது எனக்கு போதையேற்றியது.

"தெரியல.." என்று சொன்னால் பேச்சு தொடராதோ என நினைப்பு வேறெங்கோ போய் வந்தது.கண் கொஞ்சம் பெரிதாக இருந்தது.இது மாதிரி கண்ணை நான் பார்த்தாக நினைவில்லை.

"என்ன யோசிக்கிற..தெரியலையா.." அவள் சொல்லும் போதே மெட்டி அணிந்திருக்கிறாளா என்று காலை பார்த்தேன்.ஷூ மறைத்திருந்தது.கொஞ்சம் நஞ்சமல்ல ஏமாற்றம்.

"பார்த்தியா.. மறந்துட்ட.." பதில் சொல்லலாம் என்று யோசித்து முடியாமல் அவள் உதடு அசைவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதாவது துப்பு குடுப்பாளா என்று அவளை இன்னும் நெருக்கினால் பார்க்க துப்பு கிடைக்காது எச்சில் தான் தெறிக்கும் என்பதால் இரண்டடி பின்னால் நகர்ந்தேன்.

"நீ கடைசியா பஸ்ல போகும் பார்த்த பார்வையை நான் இன்னும் மறக்கல.." முதல் துப்பு கிடைத்த சந்தோஷத்தில் பஸ் சம்பவம் எல்லாம் யோசிக்க விழுந்து வாறியது,டிக்கெட் எடுக்காமல் மாட்டி முழித்தது என்று சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ சம்பவங்கள் காட்சியாய் விரிந்தது.

"இன்னும் ஞாபகம் வரல..என்னை சுத்தமா மறந்துட்ட.." கண்ணில் அலை அடிக்க தொடங்கியது போல் தெரிந்தது.துடைக்க கைக்குட்டை எடுத்து நீட்டி அவள் பார்க்கும் முன் கையை மடக்கி கொண்டேன்.துவைச்சிருந்தால் கொடுத்திருக்கலாம்.

"என்ன பார்த்தா பைத்தியக்காரி மாதிரி இருக்கா.." தலையை ஆட்டினால் கூட சட்டையைப் பிடிக்கும் அபாயம் தெரிந்ததால் தலை மறந்தும் ஆடாமல் பார்த்துக் கொண்டேன்.

"நீ என் வாட்ச் கட்டுறதில்லை..உன் வாட்ச் எப்பவாது உடைஞ்சிருக்கா.." அவள் பேச்சில் சுவாரஸ்யம் இழந்து கொண்டிருந்தேன்.

"எனக்காக விண்ணைத் தாண்டி வருவேன்னு சொன்னது பொய்யா.." கோபத்தில் அவளுக்கு உதடு துடித்தது.எனக்கு நல்ல நாள்ல கூட ரொமண்டிக்கா பேச வராது நான் சொல்லியிருக்க மாட்டேன் என்று உறுதியாக நம்பினேன்.

"அப்போயெல்லாம் கணக்குல செண்டம் வாங்குவ..இப்போ சைபர் தான் வாங்குவ முண்டம்.." கடைசி க்ளூ எனக்காக குடுத்தது போலிருந்தது.

"இனி என் மூஞ்சிலேயே முழிக்காத.." போய் விட்டாள்.ஷிஸ் கான்.

ஏதோ புரிவது போல் தெரிந்தது.விஷயம் தான் முழுமையாக தெரியவில்லை.

கவனத்தை வேறு பக்கம் செலுத்தினேன்.இண்டர்வியூவில் தோற்ற பையனிடம் அவன் நண்பன் சொல்லிக் கொண்டிருந்தான்."இப்போ வந்து எல்லாம் சொல்லு..உள்ள பதில் சொல்லாம கோவில் மாடு மாதிரி தலையாட்டுனா எப்படி வேலை கிடைக்கும்.."

கண்டுப்பிடித்து விட்டேன்.விண்ணைத் தாண்டி வருவாயா ஃப்ரம் மின்சார கனவு.வருசம் 1997.நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன்.மேக்ஸ்ல செண்டம் ஒரு தடவை தான் வாங்கல.ஆற்றாமையில் வாட்ச்சை உடைத்து விட்டேன்.சமாதானப்படுத்த வந்த பெண்ணை திட்டினேன்.பெரிய கண்களாலே ஆறுதல் சொன்னாள்.கடைசி நாள் பஸ்ஸில் வரும் போது அவளை பார்த்துக் கொண்டே வந்தேன்.

"ஜெனிபர்..கிவ் மீ அனதர் சான்ஸ்.." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு "ஜெனிபர்..ஜெனிபர்.." என்று கத்திக் கொண்டே அவளை தேடியலைந்தேன்.

"பாருடா..கடலோரக் கவிதைகள் பார்ட் டூ ஓடுது.." நண்பனை தேற்ற என்னை பகடைகாய்களாக்கி கேலி செய்தவன் மீது பாய்ந்து என் கோபத்தை தீர்த்துக் கொண்டேன்."ஜெனிபர்..ஜெனிபர்.." எண்டு அடிக்கும் போதும் சரி அடி வாங்கும் போது வாய் மட்டும் அவள் பெயரை உச்சரித்து கொண்டிருந்தது.

என்ன முடிவா..சண்டையில் கிழியாத சட்டை,மூத்திர சந்து,ரொம்ப நல்லவன் இப்படி எல்லாம் கற்பனையை அலைய விட வேண்டாம்.

Monday, February 15, 2010

துவையல் - சண்டை ஸ்பெஷல்

பதிவுலகத்தில் நுழையும் போது இரண்டாவது அடியே சண்டையோடு தான் எடுத்து வைத்தேன்.அதே போல் டூவிட்டரிலும் நடந்தது தான் மென்சோகம்.சரி பிற்காலத்தில் நான் ஒரு பிராபல டிவிட்டராக வருவேன் என்பதை நான் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பது தோராயமாகத் தெரிந்து விட்டது.இனி டிவிட்டர் பாடு அதை தொடரும் நண்பர்கள் பாடு.சின்ன வயதில் இருந்தே இருக்கும் பொழுதுபோக்கு வம்பிழுப்பது அல்லது வம்பளப்பது.இப்படி செய்யும் போது பால்யம் நிழலாடுகிறது.சின்ன வயதில் எங்கு சண்டை நடந்தாலும் நான் இல்லாவிட்டாலும் அவன் இருந்தானா என்று என்னைப் பற்றி கேட்டு விட்டே அடுத்த கட்டமாய் விசாரணை நகரும்.டிவிட்டரில் என்னுடைய அதிரடிகள் இன்று முதல் தொடங்குகிறது.சாம்பிளுக்கு இங்கு போய் பார்க்கலாம்.பிடிச்சவங்க தொடரலாம்.பிடிக்காதவங்க வெளுக்கலாம்.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவாயா என்று அத்திரியுடன் பேசும் போது கேட்டார்.இல்லை என்று சொன்னேன்."என் புத்தகம் எல்லாம் வெளிவருமா.." என்று அவரை வம்புக்கு இழுத்து பார்த்தேன்."வரும் ஆனா வராது.." என்று வடிவேலு பாணியில் சொன்னார்."எப்படி சொல்றீங்க.." என்று தொடர்ந்து கேட்டேன்."நீ சண்டை போடாமல் இருந்தால் வரும்.." என்று சொன்னார்."அப்ப இந்த ஜென்மத்தில் கிடையாது.." என்று சொன்னேன். பின்ன என்ன வரும் 26ம் தேதி விண்ணைத் தாண்டி வருவாயா வருது.டிவி இல்லாத காரணத்தால் ட்ரைலர் விமர்சனம் போட முடியவில்லை. மலையாள படங்கள் தான் சிறந்தது என்று சொல்லி விட்டு தமிழில் படம் எடுக்கும் இயக்குனரின் படம் அது.சண்டை தொடங்குகிறது.

வலைப்பதிவுகளால் ஐந்து லட்சம் பேர் படம் பார்க்க முடிவு செய்கிறார்களாம்.ஐம்பது பதிவர்கள் ஐம்பது லட்சம் பதிவர்களுக்கு சமம் என்று சி.எஸ் அமுதன் சொன்னாராம்.அதற்கு நன்றிகள்.இனி இந்த வெற்றி தொடர்ந்து கிடைக்க அமுதன் இனி ஐந்து வருடங்களுக்கு ஸ்கூப் படம் எடுக்காமல் இருக்க வேண்டும்.முதல் பாதியில் விளையாடியவர்கள் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு இருக்கிறார்கள்.நான் ஏதோ பழைய பதிவில் சொன்னது போல அதிக அளவு கிண்டல் இரண்டாம் பாதியில் மொக்கை ஆகி விட்டது.இரவுடிகளை கொலை செய்யும் விதம்,டி யார்,நாயகனின் அப்பா அம்மாவைத் தேடுவது என்று நீளளளளளளளளளளளமான காட்சிகள்.அதனால் தான் ஒரு சந்தேகத்தில் மன்னர் ப்லிம்சிடம் கைமாற்றிய படம் ஓட ஆரம்பித்தப் பிறகு மீண்டும் தயாரிப்பாளரின் கைக்கு வந்திருக்கிறது.நல்ல வேளை நான் படம் பார்க்கவில்லை.ஒரு சண்டையும்,மூணு பதிவும் ஒரு இருபத்திரண்டே கால்(மூணு ஏழரை) பின்னூட்டங்களும் மிச்சம்.படத்தைப் பற்றி தம்பியின் பார்வையும்,தெனாலி விமர்சனமும்,என்னுடைய கணிப்பும் சரியாக பொருந்தியிருந்தது.

சின்ன வயதிலிருந்தே அப்பா சொல்வார்."சின்னப் பசங்களுடன் மோதாதே..உன்னை விட வலியவுடம் மோது..".இதை ஃபாலோ செய்து சண்டையிட்டு ரத்தக் காயத்தோடு யாருக்கும் தெரியாமல் மருந்திட்டுக் கொள்வது வழக்கம்.சின்னப் பசங்களிடம் மோதி தெரியாமல் அவர்களிடம் அடி வாங்கி விட்டால் அவர்களை நாமே வளர்த்து விடுவது போல் ஆகும்.மை நேம் இஸ் கான் என்ற மொக்கை படத்திற்கு சிவசேனா குடுத்த பப்ளிகூட்டியும் இந்த வகையை சார்ந்ததே.சாதாரண படத்திற்கு வம்பு வந்தால் எப்படி பப்ளிசிட்டி செய்வது என்று ஷாரூக்கான் அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் பாடம் எடுப்பார்.அதையும் மீடியா ஒரு நாள் செய்தி போடும்.இந்த சண்டையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயந்து செத்த மும்பை மக்கள் அதை பார்ப்பார்கள்.

சண்டை வெங்காயத்தை நாம் பாதிக்கப்படும் போது தான் எடுக்கிறோம்.பெண்ணாகரம் தேர்தல் அசலுக்கு பா.ம.க எதிர்ப்பு.அசல் படத்திற்கு எதிர்ப்பு முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத்தின் பேச்சு.ரஜினியின் கைத்தட்டல் பாபா படத்தின் பெட்டி கடத்தலின் எதிரொலி.சக நடிகர்கள் ஆதரவு - பூனைக்கு மணி கட்டும் போது சாகும் முதல் எலி.நடிகர்களின் கட் அவுட்டில் பாலாபிஷேகம் பாரதிராஜா எதிர்ப்பு அஜித் பேச்சு பிடிக்கவில்லை.அஜீத்தின் கோபம் - எந்த விழாவிற்கும் போகாத தன்னை அங்கு வரவழைத்து விட்டார்களே என்ற ஆதங்கம்.இந்த பதிவில் எதிர்ப்புக்கு காரணம் - திரு நெல்வேலியில் காவல் துறை அதிகார்களின் கொலையாளிகள் என்னவானர்கள் தண்டனை கிடைத்தா அப்படி ஒரு செய்தியும் வராத காரணமும் ஒன்று.

படமோ,கவிதையோ,கதையோ,பதிவோ பொதுவில் வைத்தப் பிறகு அது படைப்பாளிக்கு சொந்தமில்லை என்பது தான் என் கருத்து.மிக சரியாக விமர்சனம் செய்து சண்டை போடுகிறோமோ என்றால் அது தான் இல்லை.மூனிச் படம் பார்த்தேன்.மொஸார்ட்டில்.மூனிச் ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேல் விளையாட்டு வீரர்களுக்காக அதன் பிண்ணனியில் இருந்தவர்களை பழி வாங்கும் கதை.தனக்கே திரும்பும் போது பயத்தில் நடுங்கும் நாயகன் பிறகு மொஸார்ட்டில் இருந்து விலகி விடுகிறான்.அதே போல் விமர்சனம் செய்ய பயமோ,சண்டையிட தயக்கமோ வரும் போது நானும் விலகி விடுவேன்.

Sunday, February 14, 2010

காதலர் தினக்கவித - சரக்கு வாசனையோடு

பாவி மவ ரத்தினமே
காதல சொன்னாலும் ஒத்துக்காதே
சரக்கு வாங்க காசில்ல
இன்னைக்கு நிராகரிச்சு
நாளக்கு ஏத்துக்கோயேன்
ஓசி சரக்கு அடிச்சி நாளாவுது
வெள்ளக்காரன் கண்டுப்பிடிச்ச
எய்ட்ஸ் தினம் எத்தனாம் தேதி
ஞாபகம் இருந்தா சொல்லித் தொலயேன்
விழிப்புணர்வு பதிவு போடணும்
விலவாசி ஏத்தத்துல
ரப்பர் விலையும் ஏறிப்போச்சாம்
உன் நினைப்ப அழிக்க ஒரு
வழி சொல்லேன் பாக்கியவதி
பாடாவதி காதலுக்கு
இத்தன பதிவா
இதுக்கு மேல தெளியல
மிச்சத்த டூவிட்டா கொட்டுறேன்
உவாக் உவாக்
யாரோ எடுத்தது
என் மேல தெறிக்குது
எவ நினைப்போ தெரியலயே

Saturday, February 13, 2010

Inglourious Basterds விமர்சனம் - புனைவின் உச்சக்கட்டம்

Quentin Tarantino - பெயரை தமிழில் எழுதி தவறாக உச்சரிக்காமல் இருப்பதே அவருக்கு தரும் மரியாதை.அதே போல எடுத்த அல்லது சுட்ட படத்தை புனைவு என்று டைட்டில் கார்ட் போட்டு ஏமாற்றுபவகர்கள் கண்ணில் இந்த படம் பட்டாலும் இந்த படத்தை அப்படியே விட்டு வைப்பது தான் மரியாதை.காரணம் பத்து ஆண்டுகள் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குனர்.அப்புறம் நடிகர்கள் தேர்வு.நாம் என்ன செய்கிறோம் ஒரு வெற்றி படம் குடுத்தவரை தேடி செல்கிறோம்.பத்து வருடம் திரைக்கதையை அவர் ஒரே வருடத்தில் எடுத்து முடித்து விட்டார்.இதுவே தமிழாக இருந்தால் ஸ்பாட்டில் டிவிடி பார்த்து படம் எடுக்க மூன்று வருடம் எடுத்து உலகத்தரம்,ஆஸ்கர் என்று பேசுவோம்.முக்கிய குறிப்பு படத்திற்கு எட்டு ஆஸ்கர் நாமினேஷன்.இதில் இருந்து தெரியும் உலகத்தரம் என்றால் என்னவென்று.கதை சொல்லும் விதம் வித்தியாசமாக உள்ளது.கதை ஒவ்வொரு அத்தியாயமாக பின்னப்பட்டுள்ளது.ஆங்கிலம்,பிரென்ஸ், இட்டாலியன்,ஜெர்மன் என்று நான்கு மொழி பேசுகிறார்கள்.

முதல் அத்தியாயம் நாஸி கைப்பற்றி இருந்த பிரான்ஸில் படம் ஆரம்பிக்கிறது.யூதர்கள் மறைந்திருந்தால் அவர்களை கண்டுப் பிடித்து கொல்வது தான்.அப்படி ஒரு விவசாயி மறைத்து வைத்திருப்பதாக கேள்விப்பட்டு விசாரணைக்கு வரும் சான்ஸ் லாண்டா பேசி பேசியே மறைந்திருப்பவர்களைக் காட்டிக் கொடுக்க வைக்கிறார்.வீரர்களை அழித்து வீட்டின் அடியில் இருப்பவர்களை கொலை செய்கிறார்.அதில் ஒரு பெண் தப்பி ஓடுகிறாள்.

அத்தியாயம் இரண்டு - எட்டு அமெரிக்க யூத வீரர்கள் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கும் ரெய்னே ஒவ்வொரு வீரனும் தலா நூறு எதிரிகளை கொல்ல வேண்டும் என்று சொல்கிறார்.ஜெர்மானியர்களுக்கு பயம் வர வேண்டும் என்று சொல்கிறார்.அப்படி பயத்தை உருவாக்க சிறு ஜெர்மானிய வீரர்கள் குழுவைப் பிடித்து ஒருவனை மட்டும் ஹிட்லரிடம் அனுப்பி வைக்கிறார்கள்.நெற்றியில் முத்திரையோடு மற்றவர்களுக்கு நேர்ந்த நிலையை சொல்ல.

அத்தியாயம் மூன்று - முதல் அத்தியாயத்தில் தப்பி வந்த பெண் பாரிஸில் ஒரு திரையரங்கு நடத்துகிறார்.அவளை ஒரு ஜெர்மானிய வீரம் கவர முயற்சி செய்கிறான்.பிறகு தான் தெரிகிறது அவன் தனியாக 300 வீரர்களுடம் சண்டையிட்டு கொன்றவன் என்று.அவன் வைத்து ஒரு படம் எடுக்கிறார்கள்.அவனே நடிக்கிறான்.அந்த படத்தை இவள் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று அரசியல் புள்ளி கம் படத்தின் இயக்குனர் விரும்ப அதை ஜெர்மானிய இயக்குனரின் மொழிபெயர்க்கும் பெண் இவளிடம் சொல்கிறாள்.அவள் அது தவிர என்ன செய்கிறாள் என்று காட்டும் இடத்தில் இயக்குனர் ஷேர் போட்டு அமர்கிறார்.ஜெர்மானியர்கள் மட்டும் படம் பார்க்க முடிவு செய்கிறார்கள்.திரையரங்குக்கு பாதுகாப்பு தரும் லாண்டா(அவளின் குடும்பத்தைக் கொன்றவர்) அவளிடம் விசாரிக்கிறார்.உன்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் நினைக்கிறேன்,ஆனால் ஞாபகமில்லை என்று சொல்கிறார்.அவள் நீக்ரோ காதலனிடம் சேர்ந்து ஜெர்மானியர்களோடு திரையரங்கை எரிக்க முடிவு செய்கிறாள்.

அத்தியாயம் நான்கு - ஜெர்மானிய நடிகை கம் டபுள் ஏஜெண்ட் இந்த விபரத்தை பாஸ்டர்ஸிடம் சொல்ல பாருக்கு அழைக்கிறாள்.ஏற்கனவே மகன் பிறந்ததிற்காக பார்ட்டி தரும் ஜெர்மானிய வீரன் குழுவுடன் இருக்கிறான்.அங்கு வரும் மூன்று பாஸ்டர்ஸ்களிடன் லேசாக வாய் தகராறு வர,நடக்கும் சண்டையில் மிஞ்சுவது நடிகையும்,அப்பாவான வீரனும் மட்டுமே.ரெய்னே வந்து சரணடைய சொல்ல அதை நம்பி துப்பாக்கியைக் கீழே போடுபவனை நடிகை கொல்கிறாள்.அவளை சித்ரவதை செய்து ரெய்னே உண்மையை வாங்க அவளுடைய இத்தாலிய பாதுகாவலர்களாக மூவர் செல்கிறார்கள்.இதே சமயத்தில் சம்பவ இடத்திற்கு வரும் லாண்டா செருப்பை வைத்து தப்பித்த நடிகையை கண்டுப்பிடிக்கிறார்.

அத்தியாயம் ஐந்து - திரையரங்கை வெடிக்க வைக்க தயாராகும் ஷோசனா அவள் ஒரு படம் எடுத்து ஜெர்மானியர்களை வழியனுப்ப முடிவு செய்கிறாள்.பிண்ணனி இசையும்,பாடலும் அருமை.நடிகையை தனியறையில் விசாரிக்கும் லாண்டா செருப்பை குடுத்து அணிய சொல்கிறார்.சிண்டரல்லா கதை ஞாபகத்திற்கு வந்தது.அது சரியாக சேர்ந்ததும் எதிர்பாராமல் பாய்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்கிறார்.ரெய்னே கைது செய்யப்படுகிறார்.ரெய்னே வைத்திருந்த வெடிகுண்டை ஹிட்லர் சீட்டுக்கு அடியில் வைக்கிறார்.விசாரணைக்கு எடுத்து செல்லப்படும் ரெய்னேவிடம் உங்கள் திட்டத்தை சொல்லவா என்று ஆரம்பித்து ரெய்னே விடம் சரணடைய முடிவு செய்கிறார்.ஷோசனாவின் நீக்ரோ காதலன் எல்லா கதவுகளையும் அடைத்து விட்டு பற்றி எரியும் நைட்ரேட் ப்லிமை எரிக்க காத்திருக்கிறான்.அவளிடம் வழியும் ஜெர்மானிய வீரன் மற்றும் படத்தின் நாயகன் ஆபரேட்டர் அறைக்கு வந்து என்னை ஏன் தவிர்க்கிறாய் என்று சண்டையிட கதவைப் பூட்டச் சொல்லி விட்டு சுட்டுத் தள்ளுகிறாள்.300 பேரை கொன்றவன் ஒரு பெண்ணால் சாகிறான்.இந்த _______ தலை தலையாய் அடிக்கிறேன் காதல் கருமாந்திரம் எல்லாம் வேண்டாம் என்று.சாகும் தருவாயிலும் அவளை கொல்கிறான்.அவள் உருவம் திரையில் வந்ததும் அவளின் காதலன் பிலிமை கொளுத்துகிறான்.நடிகையின் பாதுகாவர்களாக வந்த ரெய்னேவின் ஆட்கள் பாக்சுக்குள் புகுந்து
ஹிட்லர்,இயக்குனர்,எல்லா மொழியையும் பெயர்த்தவள் என்று எல்லோரையும் கொல்கிறார்கள்.வெறி அடங்காமல் எல்லோரையும் சுட்டுக் கொல்கிறார்கள் லாண்டா வைத்த வெடிகுண்டு வெடிக்கும் வரை.எல்லையில் ரெய்னேவை விட்டு விட்டு அவரிடம் சரணடையும் லாண்டாவுக்கு அதிர்ச்சி தருகிறார்கள்.ஓட்டுனரைக் கொன்று விட்டு லாண்டா நெற்றியில் முத்திரை பதிக்கிறார்கள்.இதுதான் என்னுடைய மாஸ்டர் பீஸ் முத்திரை என்று சொல்கிறார் ரெய்னே.

லாண்டாவாக நடித்தவரின் உடல் மொழி அபாரம்.ஏனோ பார்த்திபன் நடித்த சோழ மன்னன் உடல் மொழியுடன் மனம் ஒப்பிட்டுப் பார்த்த என்னை என் மனசாட்சியே கேவலமாக சிரித்தது.

விடுபட்டவை - படத்தில் வன்முறை நிகழப் போவதே தெரியாத வண்ணம் மெதுவாக ஆரம்பித்து முடிக்கும் போது அந்த வேகத்தோடு நான் பயணித்தேன்.பாருங்கள் நீங்களும் பயணிக்கலாம்.ஹிட்லர் எப்படி இறந்தார் என்று நமக்கு தெரியும்.சும்மா பெயருக்கு கடைசியில் இது வெறும் கற்பனையே என்று போடுகிறார்கள்.

இதை முப்பது வருடம் கழித்து தமிழில் எடுத்து விட்டு நான் தான் எடுத்தேன் என்று பீற்றிக் கொள்ளும் இயக்குனர் இனி பிறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, February 12, 2010

கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகலை

எனக்கு முதன் பார்வையிலே அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது.முதல் பார்வையிலே அவள் என் மதமில்லை என்பது மட்டும் நிச்சயமாக தெரிந்தது.யாரோ எதையோ கடும் குரலில் அவளிடம் கேட்க கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.கண்ணீர் வழியாமல் உருண்டி ஓடியது.இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் கண்ணீர் பந்து தரையில் சிதறிய சத்தம் கூட எனக்கு கேட்டிருக்கும்.

மே மாதமே டியுசன்.அதுவும் இதுவரை டியுசன் பக்கமே தலை வைக்காத நான் போக வேண்டுமாம்.எல்லாம் என் தலையெழுத்து ப்ளஸ் ஒன் மட்டும் ஒழுங்காக படித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.சாயங்காலம் ஏழு மணிக்கு டியுசன்.விருகம்பாக்கத்தில் இருந்து அடுத்த மூலையான சாந்தோம் பள்ளிக்கு போக வேண்டும்.கிரிக்கெட் நாலு மணிக்கு எல்லாம் சூடுப் பிடித்திருக்கும்.அதுவும் நான் ஆட வேண்டிய சமயத்தில் தான் வீட்டில் டியுசன் போக சொல்லி வற்புறுத்துவார்கள்.எரிச்சலோடு கிளம்புவேன்.

வருடத்திற்கு ஒரு பிள்ளை காதல்.பத்தாவது படிக்கும் போது ப்ளஸ் டூ பெண்ணின் மீது பிள்ளைக்காதல்.ஒரு பஸ் விபத்தின் மூலம் அது கிழிந்து போனது.

ப்ளஸ் ஒன் படிக்கும் போது இன்னொரு பிள்ளை காதல்.எனக்கல்ல என் மீது என் தம்பி வயதேயிருக்கும் ஒரு பெண் வைத்த காதல்.என்னை விட மூன்று வயது சின்னப்பெண்.கிராமத்தில் இருந்து வந்ததால் அவ சின்னப்பொண்ணுடா என்று சொல்லியே அவளை தவிர்த்திருக்கிறேன்.இப்ப யோசித்து பார்த்தால் நான் தான் சின்னப் பையனாக இருந்திருக்கிறேன்.இன்னொரு காரணம் அவளுடைய அக்கா.எங்களை எல்லாம் மதிக்கவே மாட்டாள்.நிராகரிக்கும் பெண்களைத் தான் எனக்கு பிடிக்கும் போல.

எப்பவும் டியுசனுக்கு கடைசி நேரத்தில் தான் போவேன்.அவள் அழுத சம்பவத்திற்குப் பிறகு முதல் ஆளாகயிருப்பேன்.அவள் அழுது விடுவாள் என்றே யாரும் அவளுடன் பேச மாட்டார்கள்.நான் மட்டும் அவளை பார்ப்பது அவளுக்கு பிடித்திருந்தது.

உடனே இப்படி ஏதாவது நடந்தால் தான் ஆண்டவனுக்கே பொறுக்காதே.கடும் காய்ச்சல்.வாந்தி,மயக்கம்.கடும் காய்ச்சலோடு வடபழனியில் நிற்கிறேன்.பத்தாவது வரை என்னோடு படித்த உயிர் நண்பன்.ஒரு வருடமாக அவனை பார்க்கவில்லை.பேரை சொல்லி தோள் தொட்டான்.நிற்க முடியாத நிலையில் "மச்சான் வீட்டுக்கு வாயேன்..பேசலாம்.." என்று சொல்ல பெயிலான காரணத்தால் பேச மறுக்கிறான் என்று நினைத்து விட்டானோ என்னவோ.இரண்டு வருட நட்பு முடிவுக்கு வந்திருந்தது.அவனை கடைசியாக பார்த்தது அன்று தான்.

உடம்பு சரியான உடன் டியுசன் நேரத்தை மாற்றியிருந்தேன்.அவளை,அவனை,அவர்களை முற்றிலுமாக மறந்திருந்தேன்.டியுசன் வந்து போக முடியாமல் ஆர்.ஏ.புரத்தில் ஒரு புறா கூண்டில் குடி வந்தோம்.பழைய நேரத்திற்கு வரவா என்று கெமிஸ்ட்ரி சாரிடம் கேட்க வேண்டாம் இடமில்லை என்று சொல்லி விட்டார்.என் வாழ்க்கையில் சல்பூரிக் ஆசிட் அடித்து விட்டார்.

விளைவு இன்னொரு பேட்ச்.ஒரே பள்ளியை சேர்ந்த இரண்டு பசங்க.இருவருக்கும் ஆகாது.எங்க செட்டில் மருந்துக்கு கூட பெண்கள் கிடையாது.பழைய பேட்ச்சில் திகட்ட திகட்ட அமிர்தமாய் பெண்கள்.ஒரு பெண்ணை மட்டும் சைட் அடித்து வீணாகப் போய் விட்டேனே என்று வருத்தம் வந்தது.இரண்டு பசங்களுக்கும் நடுவில் நான்.அசிங்க அசிங்கமாய் திட்டி கொள்வார்கள்.எல்லா கெட்ட வார்த்தைகளும் என் காதில் பட்டு வழியும்.

அந்த பெண்ணை நான் மறந்தே விட்டேன்.சாரிடம் கேட்கலாம்.ரொம்ப ஜாலியாகயிருப்பார்.கேட்டால் கொட்டடித்து விடுவார் என்ற பயத்திலே அடக்கி வாசித்தேன்.

பிறகு அதே சாயலில்,அதே மதத்தில் ஒரு பெண்ணை ஒரு பையன் காதலிப்பதாக ஒரு சினிமா பார்த்தேன்.எனக்கு படம் "பிடிச்சிருக்கு.." என்று சொல்ல வைத்தது.சர்ச் ட்சர்ச்சாக தேடி அலையும் ஹீரோ கடைசியில் அவளை கண்டுப்பிடிப்பான்.எனக்கு இது தோணாமல் போய் விட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.தோணியிருந்தாலும் போயிருக்க மாட்டேன்.காரணம் எல்லாம் என் வாழ்வில் வர வேண்டும் நினைப்பேனே தவிர அடுத்தவர் வாழ்க்கையில் நான் உள் நுழைய மாட்டேன்.நுழைந்திருந்தால் இன்னும் நிறைய பதிவுகள் தேறியிருக்கும்.

Thursday, February 11, 2010

காதலர் தினம் - வாலண்டேனின் அக்கப்போர்

சென்னை வந்து பல வருடங்கள் ஆனாலும் பத்து வருடங்களுக்கு முன் இந்த காதலர் தினத்தின் அக்கப்போர்கள் எல்லாம் இந்த அளவிற்கு கிடையாது.கிழே விழுந்த கைக்குட்டையை எடுத்து கொடுத்தால் காதல்,கையில் அடிப்பட்டிருக்கும் போது ஐயோ பாவமில்ல என்று சொல்லி விட்டால் அடுத்தது கனவில் டூயட் தான்.தமிழ் சினிமா அந்த அளவிற்கு இருக்கும் எல்லோரையும் கிறுக்காக மாற்றி வைத்திருக்கிறது.

காதல் என்பதற்கு அர்த்தம் தெரியாமலே டீனேஜ் படிக்கட்டுகளில் கால் வைக்கும் பல நெஞ்சங்கள் பூங்கொத்துகளையும்,வாழ்த்து அட்டைகளையும் பறிமாறி கொள்ளும்.

காதலுக்கு நண்பர்கள் உதவி கேட்டு வந்தால் அடுத்த கணமே பத்தடி தள்ளி நிற்பது தான் வழக்கம்.காரணம் அந்த பக்கிகளுக்கு ஒன்றுமே ஆகாது கூட இருக்கும் நமக்கு தான் ஏதாவது ஒரு அரை முதல் அறையில் போட்டு மிதிகளும் கிடைக்கும்.

கல்லூரி முதமாண்டு படிக்கும் போது வந்த சண்டைகளுக்கு அளவேயில்லை.நண்பனிடம் "உனக்கான பெண்ணை எப்படி கண்டுப் பிடிப்பாய்.." என்று கேட்டதற்கு "தொட்டவுடன் ஷாக் அடிக்கணும்.." என்று சொல்ல "அந்த கரண்ட் போஸ்டைப் பிடி ஷாக் மானாவாரியாக அடிக்கும்.." என்று சொல்லி வைக்க அவனுக்கு இதுவரைக்கும் ஏதாவது ஷாக் அடித்ததாக எங்களிடம் குறிப்பாக என்னிடம் சொல்லவில்லை.

நல்ல வேளை வாலண்டேன் மாதிரி யாரும் எதையும் சொல்லித் தொலைக்கவில்லை.உடனே அதற்கும் ஒரு தினம் உருவாகி இருக்கும்.செல்போன் நிறுவனகளுக்கும் இன்னும் பூ,வாழ்த்து அட்டை விற்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.முக்கிய குறிப்பாக டாஸ்மாக்கில் கொண்டாடும் முன்னாள் காதல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

காதல் - அப்படின்னா நமக்கு யார் கூட ஒத்து வருது என்று நினைப்போமா அல்லது ஒத்து வரும் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

எந்த பொண்ணாவது ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை அடுத்த காதலர் தினம் வரை காத்திருக்காமல் அடுத்த வாரம் ஞாயிறும் கார்டு கொடுக்கலாம்.கார்டு விலை கம்மியாக இருக்கலாம்.இல்லை சந்தையில் விலை போகலாம்.வாலண்டேன் வழியில் போகாமல் உங்க வழியில் போங்கள்.வழியில் முள் இல்லாமல் ஏதாவது ரோஜா இருக்கலாம்.இல்லை காதல் தோல்வியில் துவண்டு கிடப்பவனுடன் சரக்கு அடியுங்கள்.சரக்கு ப்ளஸ் சைட்டிஸ் ஃப்ரீ.டாஸ்மாக்கில் சரக்கு விற்பனை தீபாவளி,பொங்கல்,புத்தாண்டுக்கு அடுத்து வரும் காதலர் தினம் அன்று தான் அதிகம் விற்கும் என்று நினைக்கிறேன்.தோற்ற,ஜெயித்த இரண்டு பக்கிகளும் பார்ட்டி கொடுக்கும்.புள்ளி விபரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி தான் பதிவு எழுதணும் - இது பிரபலமாக எட்டாவது வழி.தப்பிச்சிட்டடா வால்புள்ள.ஏன் கைப்புள்ள தான் இருக்கணுமா

Wednesday, February 10, 2010

பிரபலமாக அல்லது பிரபல பதிவராக ஆவது எப்படி

முதல்ல பிரபலத்தின் உச்சக்கட்டமான தகுதி - சாருவிடம் போய் காலை வணக்கம் சொல்லி வாங்கி கட்டினால் அது பிரபலமாக ஆக உதவாது.சாரு எனக்கு மத்தியான வணக்கம் சொன்னார்,மாலை வணக்கம் சொன்னார்,இரவு வணக்கம் சொன்னார்,அட அதிகாலை வணக்கம் சொன்னார் என்று புரளியை கிளப்பி வயிற்றில் புளியைக்(கொட்டை எடுத்தது தான்) கரைக்க வேண்டும்.அவருக்கு தெரிந்தால் நம்மை திட்டுவார்,ராஜன் எதிர்பதிவு போடுவார்,சில அன்பு நெஞ்சங்கள் மைனஸ் ஓட்டு குத்தி விளையாடுவார்கள்.இதெல்லாம் நமக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அதனால் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை அப்படியே ஃபாலோ செய்தால் நாம் பிராபலமாகி இல்லங்க பிரபலமாகி விடுவோம்.

இனி விதிமுறைகள்.

எல்லோரும் கொண்டாடும் சினிமாவை நாம் வெளுத்து காயப் போட்டு பிறகு இஸ்திரி போட வேண்டும்.எப்படியும் மூணு பதிவுக்கு நான் கேரண்டி.அனானி ஆப்சனை எடுத்து விடவும்.பின் விளைவுகள் பயங்கரமாகயிருக்கும்.அதுவே எல்லோரும் நிராகரிக்கும் சினிமாவை நான் தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும்.தமிழ் ரசிகனின் இரசனையை கேள்வி குறியாக்க வேண்டும்.

கதையோ,கவிதையோ படிக்கும் யாருக்குமே புரியவே கூடாது.முக்கியமாக உங்களுக்கே புரியுமாறு எழுதக் கூடாது.சிம்பிளாக உதட்டில் முத்தம் கொடுத்தார்கள் என்று இருக்கும் வாக்கியத்தை மாற்றி சொல்ல வேண்டும்.அதற்காக கொடுத்தார்கள் முத்தம் உதட்டில் என்று சொன்னால் ஹாலிவுட் படத்தை டப் செய்தது போலிருக்கும்.இப்படி எழுதவும்.

எச்சில் அருவிகள் கலக்கும்
சுழலில் உருவான மின்சாரம்
என்னையும் தாக்க துரத்த
யாருமே இல்லாத தனிமையை தேடினேன்.

என்ன சொன்னேன் என்று எனக்கே புரியவில்லை.அப்படி எழுதினால் இலக்கியவியாதி என்ற இலக்கை அடைய முடியும்.

யாராவது உங்களுக்கு பட்டம் கொடுக்க முன் வந்தால் சண்டை போடாமல் பட்டத்தை வாங்கி வேறு யாரிடமாவது மாஞ்சா வாங்கி அதை காற்றில் விட்டு விட்டு அடுத்த பட்டத்திற்காக காத்து இருக்கவும்.

சண்டை நடக்கும் பதிவில் போய் போன பதிவிற்கான பின்னூட்டத்தைப் போட்டால் என்ன சொல்ல வருகிறான் என்று தெரியாமல் சண்டை கொஞ்ச நேரம் நிற்கும்.நிறைய பேருக்கு நீங்களும் ஒரு இரத்தப் பூமியில் நடக்கும் ஆள் தான் என்று புரியும்.

எதிர்பதிவு,பக்கத்து பதிவு,சைட் பதிவு இப்படி ஒரண்டை இழுத்து வேட்டியில் எதையாவது விட்டு கொள்ள வேண்டும்.குத்தினாலும்,குடைந்தாலும் அமைதியாக இருந்து விட்டு பொறுமையாக பாத்ரூமில் அழுது விட்டு வந்து அடி வெளுக்க வேண்டும்.திரும்பவும் அடி வாங்கினால் இருக்கவே இருக்கு இன்னொரு பாத்ரூம்.

தலைப்பு வைக்கும் போது பயங்கரமாக வைக்க வேண்டும்.அவளும் நானும் இப்படி வைக்க வேண்டும்.அதை விட்டு விட்டு அவலும் நானும்,அளவும் நானும் இப்படி எல்லாம் தப்பாக தலைப்பு வைத்து விட்டு பின்னாடி பீல் பண்ணக் கூடாது.வடையை சரியாக கேட்ச் பிடிக்க வேண்டும்.காட்சஸ் கேன் வின் மேட்சஸ்.

இதுக்கு மேல நான் சொல்லிக் குடுத்தால் என்னுடைய இலக்கியவாதி இலக்கில் ஓட்டை விழுந்து விடும்.நான் தூங்கப் போறேன்.ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

Tuesday, February 9, 2010

அமில உதடுகள்

பிரிவுக்கு முன் கடைசி முத்தம்
தீப்பிழம்பாய் எரிகிறது
நினைவில் நிழலாடும் பொழுது
புகைத்து புதைக்கிறேன்
முதல் முத்தத்தின் தித்திப்பு
சக்கரையாய் கரைகிறது
யாரோ அமில உதடுகளால்
முத்தமிடும் சப்தத்தில்
அவனுக்கு முதலா கடைசியா
அனுமானிக்க தெரியாத
பைத்தியக்காரனாய் நான்

Monday, February 8, 2010

துவையல் - விமர்சனம் ஸ்பெஷல்

அஜித் பேச்சுக்கு ரஜினி கை தட்டினார் என்பதை விட அந்த விழாவில் பேசியது பிடித்திருந்தது.இது தான் வஞ்சப் புகழ்ச்சியா என்று யோசித்து கொண்டேயிருக்கிறேன்.பின்ன என்ன நீங்க தான் செய்யணும் ஐயா என்று அடுத்தடுத்து கோரிக்கைகள் வைத்து சரவேடி வெடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அஜித் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தாப்.பெண்ணாகரம் தேர்தலுக்கு அசலில் அஜித் வலித்த அல்லது குடித்த பீடியை பிடுங்க பார்த்தப்போது நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தது.ஒரு அறிவிப்பு கூட கிடையாது.ரஜினியின் கைத்தட்டலுக்கு காரணம் தேடினால் அவர் பாபாவில் வாங்கிய ஆறாத ரணம் தான்.அஜித்துக்கு பதில் விஜய் விமர்சனம் செய்தால் சுறா சுருண்டு இறாவாகி விடும்.விமர்சனம் எல்லோராலும் செய்ய முடியாது என்பதற்கு இது சாட்சி.

நான் சரியாக சொல்வதை தவறு என்று கேலி செய்கிறார்கள்.அதுவே தவறாகயிருந்தால் வந்து மெதுவாக சொல்லி விட்டு திருத்துங்க என்று தட்டிக் கொடுக்கிறார்கள்.எனக்கு இந்த விதமான விமர்சனமும் பிடித்திருக்கிறது.அதுவும் ஒருத்தர் மட்டும் உள்குத்தோடு சொல்வார்.சில சமயம் என்ன சொன்னார் என்று அவரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்வேன்.

விஜய் படத்திற்கு போய் படம் பார்த்து விட்டு படம் பிடிக்கவில்லை என்று விமர்சனம் செய்யும் அஜித் ரசிகர் அசல் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்கிறார்.அது மாதிரி "விஜய் ரசிகரான" (சொல்லும் போதே சிரிப்பு வருதா) நான் அஜித் படம் பார்த்தேன்.இப்போ தெரியுதா ஏன் அஜித் படம் பப்படம் ஆகுது.விஜய் படம் ஹிட் ஆகுது என்று.அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம்.விஜய் படம் பாக்குறாங்க. விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாகயிருந்தால் அஜித் படம் ஹிட்டடிக்குமோ.இன்னைக்கு தர்மயடி கன்பார்ம்.

தெனாலி.காம் விமர்சனமும் என் விமர்சனமும் சரியாக ஒத்துப் போகிறது.அசல்,தமிழ்ப்படம்,கோவா,ஆயிரத்தில் ஒருவன் இதில் அந்த இணையத்தளம் என்னோடு நூறு சதவீதம் ஒத்துப் போனது.ஆனந்த விகடன்,குமுதம் விமர்சனத்திற்கு சரியான மாற்று.விமர்சனம் எழுதுவதில் ஜெட்லி,கேபிள் சங்கருடன் போட்டிப் போடுகிறார்கள்.முதல் நாளே வருகிறது விமர்சனம்.

வாரமலரில் வரும் தொடர்கதைகளில்,அல்லது வந்த தொடர்களில் கடந்த பதினைந்து வருடத்தில் நான் படிக்காமல் விடும் முதல் தொடர் எல்லாப் பூக்களும் எனக்கே.மதுனிகா ராணி எழுதுகிறார்.வாசகர் ஒருவர் வந்து மதுனிகா ராணி சாருவின் அலைஸ் என்று சொல்லியதோடு இல்லாமல் அவர் சாருவின் பெரிய ரசிகராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.படித்து விட்டு நீங்களும் காரணம் சொல்லலாம் கதையில் ஆபாசம் வழிகிறது.ஆபாசமாக எழுதும் எல்லோரும் சாருவாகி விட முடியாது என்பது தான் உண்மை.இதுக்கும் இருக்குடி உனக்கு என்று யாரோ சொல்கிறார்கள்.வாசகர்களின் விமர்சனம் களை கட்டுகிறது.

Sunday, February 7, 2010

அசல் - இன்னொரு வேட்டைக்காரன்

அசல் பார்ப்பதற்கு அரை மணி நேரம் முன்பு..

ரயில்வே ஸ்டேஷனின் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தேன்.பின்னால் ஒரு பெண்ணின் குரல்.முதலில் ஆங்கிலம்,அப்புறம் ஹிந்தி,கடைசியாக பொறாமை என்று காதில் விழுந்தது.தமிழ் பொண்ணா..கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஏதோ சொல்ல, அவர்களை கடக்க விட்டு பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது.உள்ளுணர்வு எதையோ சொல்லியது.நான் கண்டுக் கொள்ளவில்லை.

இதை அப்படியே அசல் விமர்சனத்திற்கு மாற்றினால்

படம் ஆரம்பித்த அரை மணி நேரம் கழித்து

எழுத்து ஆரம்பித்தப் பிறகு தான் படம் பார்க்க நுழைந்தேன்.திரையில் ஒரு பெண் குரல்.சமீரா ரொட்டி இல்ல ரெட்டி.முதலில் ஆங்கிலம்,அப்புறம் பிரென்ச்,கடைசியாக இதுக்கு ஒருத்தர் இருக்கிறார் என்று காதில் விழ,தமிழ்ப்படம் தான் என்று தெரிந்தது.குடுத்தப் பணம் வீண் போகவில்லை என்று நினைத்தால் கடைசியில் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது.பெண் விஷயத்தில் இருந்த குறியீடை சரியாக கேட்ச் பிடித்திருந்தால் எனக்கு எந்த விரயமும் இல்லை.

அஜித் - நான் பேச மாட்டேன் என்று சொன்னாலும் சொன்னார்.படத்திலும் பேசவில்லை,படமும் பேசவில்லை.பில்லா படத்திற்கு பிறகான ஹாங்க் ஒவர் என்று தீருமோ தெரியவில்லை.அழகான முகத்தை இப்படி கெட்டப் என்று தாடி எல்லாம் வைத்து மறைக்க வேண்டுமா.இரண்டு பாடல்களில் க்ளீன் சேவ்.நைஸ்.அப்பா அஜித்திற்கும் மகன் அஜித்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.அப்பா அஜித் அழகாக இருக்கிறார்.

வில்லன்ஸ் - எல்லாருமே காமெடி பீஸாகயிருக்கிறார்கள்.கொஞ்ச நேரம் மிரட்டிய கெல்லி டோர்ஜியும் இடைவேளியிலேயே காலி.ஆஹா ராஜீவ் கிருஷ்ணா,பூக்களைப் பறிக்காதீர்கள் சுரேஷ்,பருத்தி வீரன் சம்பத்,கஜினி பிரதீப் ராவத்,காக்க காக்க சேது இப்படி கம்பீரமாக பார்த்த நடிகர்கள் திராபையாக இருக்கிறார்கள்.

கதை,திரைக்கதை,வசனம் என்று மூவர் பெயர் வந்தது.அதனால் அவர்கள் நடித்த,இயக்கிய,கதை எழுதிய படங்களின் கலவையாகயிருந்தது.பில்லா கோட் சூட்,வில்லன் போல இரண்டு நாயகிகளின் சண்டை,வரலாறு அப்பா மகன்,வட்டாரம் ஆயுத பேரம்,மோதி விளையாடு ரீச்னெஸ் என்று கலந்து அடிக்கப்பட்ட அஜித் படம்.பெயரில் மட்டும் தான் அசல் இருக்கிறது.

பாவனா - கவர்ச்சி என்று தொடையைத் தட்டி ஆடியிருக்கிறார்.அந்த காட்சியில் எல்லாம் எனக்கு ரன் படத்தில் விவேக் சொல்வது தான் ஞாபகத்திற்கு வந்தது."சின்ன காலாயிருந்தாலும் நல்லாயிருக்குடா..".ஆனால் பாவனாவை பாக்க காமெடியாக இருக்கிறது.பேசாமல் யாரையாவது கல்யாணம் செய்து கலைக்கு சேவை செய்யாமல் இருக்க வேண்டும்.

சமீரா - ஏன் இவரை விட்டு விட்டு இன்னொரு நாயகியுடன் சேர்க்கிறார்களோ தெரியவில்லை.தமிழ் சினிமாவின் ராசி என்ன செய்ய.

பிரபு - ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் சம்பளம் மிச்சம்.

படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம் தாடி தான்.நாயகன் முதல் வில்லன் வரைக்கும் வித்தியாசமான தாடி.ஆட்டுத்தாடி,குறுந்தாடி இன்னும் பல.தாடி வைக்க யோசித்தவர்கள் கொஞ்சம் கதையையும் யோசித்து இருக்கலாம்.

தாடி குறுயீடு தொல்லையால் பாவனா ஏதாவது வெய்த்திருக்கிறாரா என்று கடைசி வரை தேடிக் கொண்டிருந்தேன்.

அஜித் செய்ய வேண்டியது - சரண்,யூகி சேது இந்த கூட்டணியெல்லாம் துரத்தி அடித்து விட்டு நல்ல கதை சொல்லும் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.இல்லை கமீனே படத்தை ரீமேக் செய்யலாம்

கதையின் சூட்சுமம் - அஜித் இரண்டாவது மனைவிக்கு பிறந்த வாரிசு.என்னமா யோசிச்சிருக்காங்க.

யூகி சேதுவும் நடித்திருக்கிறார்.சில இடத்தில் சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு பிரசாந்த் வெல்டன் குரு பெயர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

பரத்வாஜ் - ஒரே இரைச்சல்.தமிழ் நன்றாக உச்சரிக்கும் பாடகர்களுக்கு தான் வாய்ப்பு என்று சொல்கிறார்.அவர்களின் கொலையை விட இவர் செய்ததது அதிகம்.

அஜித் கோட் சூட்,நடை,சுருட்டு இப்படியே நடித்தால் பார்க்கும் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

ஆனாலும் வேட்டைக்காரனுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.ஆனால் வேட்டைக்காரன் படத்தை காப்பாற்ற சன் பிக்சர்ஸ் இருந்தது.

எனக்காவது ஐம்பது ரூபாய் தான் போச்சு.பிரபுவிற்கு - ????

அஜித் கதை விவாதத்தின் போது சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.அடிக்கடி டை அடிக்க முடியவில்லை.சரணின் பதில் அப்பா கேரக்டரை சாகடித்தி விடலாம்.இப்படி தான் நிறைய காட்சிகள் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

மெர்ஸி - இந்த ஒரு வார்த்தை கற்று தந்த அசலுக்கு நன்றி.அசல் இன்னொரு வேட்டைக்காரன் தான்.மற்ற படங்களின் சாயல் தெரிவதால்.குறிப்பாக வேட்டைக்காரன் தந்த தலைவலி இந்த படத்தால் வரவில்லை.அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Saturday, February 6, 2010

நிர்வாண முகம் - 3

பிப்ரவரி 4 - இதுவே பதினாலாக இருந்தால் பலருக்கு ஏதோ ஒரு மறக்க முடியாத அனுபவமாகயிருக்கும்.நேற்று இந்த நாளை எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை.மதியம் வரை ஞாபகமில்லை.மேலாளர் வந்து "வாயேன் புது ஆபிஸில் ஒரு நடை போய் விட்டு வரலாம்.." என்று சொல்லவும்,போகவும் மனமில்லாமல் மறுக்கவும் முடியாமல் பைக்கில் பயணித்தோம்.

ஏதோ மனதில் மட்டும் சின்ன சஞ்சலம் உறுத்திக் கொண்டேயிருந்தது.கவனிக்காமல் முட்டியில் வைத்திருந்த கை ஏதோ ஒரு கம்பியில் மோத கையெல்லாம் கறுப்பு மை.முதல் குறுயீடு கவனிக்க மறந்து விட்டேன்.

ஹைவேஸில் செல்லும் போது ஒரு நாயை ரோடோடு ரோடாகத் தேய்த்திருந்தார்கள்.குறுயீடு இரண்டு.தம்பியை நினைத்து கொண்டேன்.ரோடோடு ரோட் அவன் மழலையில் சொன்ன வார்த்தைகளை என் வசமாக்கி கொண்டேன்.இன்னைக்கு ஏதோ இருக்கு என்று உள்மனது சொல்லியது.சர்வ நிச்சயமாக தெரிந்து விட்டது.அன்றும் அந்த விபத்து நடப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணை பார்த்திருந்தேன்.

திருப்பத்தில் தான் கவனித்தேன்.முன்னால் ஒரு பெண்.பைக்கில் எவனோ ஒருவனை கட்டிக் கொண்டிருந்தாள்.குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மனதிற்கு அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதலே ஆறுதலாகயிருந்தது.காரணங்கள் கன்னாபின்னாவென இருந்தது.

முகத்தை அவள் துப்பட்டாவில் மறைத்திருந்த காரணம்.கண்ணையாவது பார்த்து விட இருந்த ஆர்வம்.

உடலோடு ஓட்டியிருந்த ஆடை அல்லது ஆடைக்கு ஏற்ப அளவுகள் இருந்த உடற்கட்டு.

கறுப்புமல்லாத சிவப்புமல்லாத நிறம் - சாக்லேட் நிறம்.

யாருமில்லாத அத்துவான காடு - குறிப்பாக பெண்கள்.

நினைத்தால் தான் ஒன்றுமே நடக்காதே.அவன் வளைந்து வளைந்து ஓட்டினான்.அவனை பின் தொடந்தோம்.திருப்பத்தில் எங்கு போவது என்று தெரியாமல் நிற்க,அவளை பார்த்தேன்.இரண்டாம் முறை பார்க்கத்தூண்டும் முகம் தான்.அல்லது பார்க்க பார்க்க பிடிக்கும் முகம்.குறுயீடு மூன்று.

மேலாளர் என்னை பார்க்க நான் வேறு பக்கம் திருப்பினேன் வண்டியை அல்ல பார்வையை.

"நீ ஐஐஎம் எக்ஸாம் எழுதேன்.." அவர் சொன்னது காதில் விழுந்து வழிந்து கொண்டிருந்தது.பார்வை அவள் சென்ற திக்கை நோக்கியிருந்தது.திரும்பி வந்தார்கள்.ஐஐஎம் பேச்சு தீவிரமாகயிருந்ததால் பார்க்க முடியவில்லை.

அலுவலகம் நன்றாகத்தானிருந்தது.பட்ஜெட் நூறு கோடிக்கும் அதிகம்.

போன் கால்ஸ்,அலைச்சல்,எரிச்சல்,இன்னும் இத்யாதி இத்யாதி குடிக்க மறந்த காபி கூட சூடாகயிருந்தது.

வீட்டுக்கு போகும் போது கல்லூரிக்கு நாட்களுக்குப் பிறகு கிடைத்த பேருந்து பயணம்.

வழக்கம் போல கடைசி சீட் தான்.

கண்ணை மூடிக் கொண்டேன்.தெரிந்தவன் எழுப்பினான்.

"ஹேய் படி..நாளைக்கு எங்கள் அணிக்கு எதிராக நீங்கள் விளையாட போறீங்க..ஆள் குறையுது.."

"நான் வரட்டுமா.."

"உங்கள் அணிக்கு எதிராகவா..பட் யூ ஆர் வெல்கம்.."

"ம்..எங்களுக்கு எதிரா நானே விளையாடுவேன்.." சொல்லும் போதே அவனுக்கு இப்படி சோடக்கு பால் போடணும்,இவனுக்கு ஸ்லோ பால் போடணும் என்று சென்னை 600028 படத்தில் ஜெய் சொல்வது நிழலாடியது.

திரும்பவும் தூங்கி விட்டேன்.யாரோ பக்கத்தில் அமர்வது தெரிந்தது.

"எப்பவும் கடைசி தானா.." அவன் கேட்டது என்னை கொஞ்சம் அதிகமாகவே சீண்டியது.

"ஆமா வாழ்க்கையிலும் கடைசி..இங்க சீட்ல உக்காருமிடமும் கடைசி.."

"அப்ப எப்பத்தான் முந்துவ.." அதிமாக சீண்டியது போலிருந்தது.

"அதுவா சாகும் போது.."

"எப்ப சாவே.." கலகலப்பாக பேசுகிறதா நினைப்பு.

"நீ சாவதற்கு ஒரு நாள் முன்னாடி.." என் பேச்சில் அனல் தெரித்தது.

"அப்ப நீ நூறு வயசு வரைக்கும் வாழணும்.."

"அப்ப உனக்கு நூத்திப்பத்து வயசு வரைக்கும் இருக்கணுமா.." பேச்சில் கொக்கி போட்டேன்.

"ஏதாவது பேசு..நேரத்தை கொல்வோம்.."

"இங்க இருந்து நாலு வரிசை முன்னாடி ஒரு சூப்பர் பிகர் இருக்கு..அவளுக்கு எதிரே ஒரு இடம் காலியா இருக்கு..அங்க போய் இரு..நேரம் போகும்.."

"அந்த பொண்ணு வரும் போது நீ தூங்கிட்டுல்ல இருந்த..அப்புறம் எப்படி..உன் இடத்துல இருந்து அவ தெரிய மாட்டாளே.."

"இது கடைசி கேள்வியாகயிருந்தால் பதில் சொல்கிறேன்.."

"ம்..சரி சொல்லு.."

"உன் கண் அடிக்கடி அங்க போச்சு..அவ பக்கத்தில் ஒருத்தன் இருக்கான்..அவன் தலை திரும்பவேயில்ல..ஒவராக கறுகுது..போய் நீயும் கொஞ்சம் கறுக்கு.."

"நீ என்ன ஒழுங்கா..உனக்கு ஆசையில்லையா.."

"சரி உன் மொபைல் குடு..ஏதாவது படம் இருந்தா பார்த்துட்டு தர்றேன்.."

"இப்ப வைக்கிறது கிடையாது.."

"ஏன் கல்யாணம் ஆனப்பிறகு நீ மிஸ்டர் க்ளீனா..நீ எப்படியோ அது மாதிரி தான் நானும்.ஒரு நாளைக்கு ஒரு பெண்ணை தான் சைட் அடிப்பேன்.."

"யார் அந்த பொண்ணு..நம்ம ஆபிஸா.."

"எந்திரிச்சு போடா சாலே.." கத்தியவுடன் எனக்கே ஆயாசமாகயிருந்தது.வெளியே தலையை நீட்டி வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.வழி தெரியாமல் அவள் திரும்ப எனக்கு தரிசனம் தர வருவாளா என்று.

பின் குறிப்பு :

அவன் இடம் வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கி விட்டான்.நான் இறங்கும் இடமும் அதுவே.நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி அவனை திட்டியிருக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே நடந்தேன்.

பிப்ரவரி நாலில் நடந்த சம்பவம் எந்த இடத்திலும் வரவில்லை.என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யோசித்து எனக்கு புது பிரச்சனை இருப்பதாக சொல்லலாம்.நானும் தெரிந்து கொள்வேன்.இது ஒரு புது முயற்சி.

நிர்வாண முகம் 2 இன்னும் எழுதிக் கொண்டிருப்பதால் அது வரவில்லை.அட இதுவும் புது முயற்சி.

இது என் தம்பிக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவர்களுக்கு சமர்ப்பணம்.இருவரது பதிவிலும் மொழி விளையாடும்.அவர்கள் ஜ்யோவ்ராம்சுந்தர் மற்றும் நர்சிம்.

Friday, February 5, 2010

உன் நடை (அ) நடத்தை சரியில்லை

சடாரென வந்து விழுந்த வார்த்தைகள்
உன் நடை சரியில்லை
கொஞ்சம் சரிந்து நடந்தேன்
சரித்து நடந்தேன்
பூனை நடை தான் பாக்கி
ஊர்ந்து சென்றால் நடை தெரியுமா
முயற்சி செய்து முட்டிவலி மிச்சம்
விதம் விதமாக நடந்து காட்டினேன்
புரியாமல் கோமாளி என்றார்
புரிந்தபின் எழுத்து நடையை
சொன்னேன் என்றார்
நல்லவேளை நடத்தையைச் சொல்லவில்லை
நினைத்துக் கொண்டே
பழைய நடை போட்டேன்
அதுவும் சரிவராமல்
நொண்டியாகிப் போனேன்.

Thursday, February 4, 2010

வாசிப்பேயில்லாமல் ஜல்லியடிக்கலாம் - எதிர்பாராதபதிவு

அனுபவம் தான் சிறந்த ஆசிரியர்.எழுத்தாக வாசிப்பவனையும் அல்லது காட்சியாக பார்ப்பவனையும் அல்லது சொல்லாக கேட்பவனையும் நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று குறைந்தபட்சம் இமையோரத்தில் லேசாக ஈரம் படர செய்தால் அதுவே சிறந்த இலக்கியம் என்பேன்.முதல் மூன்று சிறுகதைகள் அல்லது முதல் இரண்டு சினிமா அல்லது முதன் முதலாக அம்மா சொன்ன கதை அதுவும் சோறு ஊட்டிக் கொண்டே எல்லாம் அனுபவத்தின் வாயிலாகயிருக்கும்.சாப்பிடும் குழந்தை ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லக் கேட்கும்.ரீப்பிடட் ஆடியன்ஸ்.

சினிமாவின் தூண்கள் என்று சொல்லப்பட்ட ஜனநாதன்,அமீர்,செல்வராகவன்,வெங்கட் பிரபு சறுக்கியது எல்லாம் இங்கே தான்.நால்வரும் இரும்புத்திரையில் தோரணம் கட்டப்பட்டார்கள்.பின்னூட்டத்தில் எனக்கு தோரணம் கட்டினார்கள்.இவர்களின் மாஸ்டர் பீஸ் என்று பார்த்தால் முறையே ஈ,பருத்தி வீரன், 7/ஜி ரெயின்போ காலனி,சென்னை - 600028.இது அவர்களின் அனுபவமோ அல்லது ஏதோ அவர்கள் சரியாக உள்வாங்கிய நிகழ்வின் தாக்கமே அதை தமிழ் நாடே தூக்கி வைத்து கொண்டாடியது.தற்போது அவர்கள் குடுத்துள்ள காமெடி பீஸ் படங்களைப் பார்ப்போம் அதுவும் முறையே பேராண்மை,யோகி,ஆயிரத்தில் ஒருவன்,கோவா.(பட்டியலில் யாரோ விடுபட்டுயிருப்பது போல் உள்ளது.அவர் படம் வெளி வந்தப் பிறகு அவரை சேர்த்துக் கொள்வோம்).எல்லா பெருமைகளும் விருதுகளும் முறையே ரஷ்ய,ஆப்பிரிக்க மற்றும் ஆங்கில இயக்குனர்களுக்கு போய் சேர வேண்டும்.

தோல்விகளுக்கு காரணம்

1.அனுபவம் எல்லாம் முதல் இரண்டு படத்தில் இறக்கி வைத்து விட்டதால்.

2.அடுத்த கதைக்கருவை யோசிக்க நேரமில்லாத அளவுக்கு பணம் கொடுக்க க்யூவில் நிற்கும் ஆட்கள்.

3.உலக படத்தை அவர்கள் ரசிக்கும் முன்பே தமிழக மக்களும் டிவிடியில் பார்த்து விடுவது.

4.என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற கர்வம்.

இதையெல்லாம் அவர்கள் யோசித்து சக மனிதனை கூர்ந்து கவனித்தால் இன்னொரு முறை தமிழகம் கொண்டாடும்.கேட்டால் கதையேயில்லை என்று சொல்வார்கள்.பிறக்கும் எல்லோருக்கும் பின்னும் இரண்டு வெற்றி படங்கள் கொடுக்கும் அளவிற்கு கதையிருக்கிறது.

இப்படி ஜல்லியடிக்கலாம் (பின்ன பாதுகாப்பாக தப்பிக்க இது ஒண்ணு தான் வழி)

வரதட்சணை,பெண்ணுரிமை,பெண் சுதந்திரம்,கற்பு இப்படி மெஜாரிட்டி மக்கள் அல்லது மைனாரிட்டி மக்கள் ஆதரவளிக்கும் பக்கத்தில் இருந்து ஜல்லியடிக்கலாம்.வரதட்சணை வாங்க மாட்டேன் இப்படி இணையத்தில் ஜல்லியடித்து விட்டு சில ஓட்டுகளையும்,பல பின்னூட்டங்களையும் வாங்கி விட்டு யாரோ ஒரு முகம் தெரியாத பெண் வீட்டாரிடம் பேரம் பேசலாம்.யாருக்காவது தெரிந்து போனால் இதுக்கு நான் காரணமில்லை என்று பழியை யார் மீதாவது போடலாம்.இப்படியும் ஜல்லியடிக்கலாம்.

பெண் சுதந்திரம் என்றால் என்ன என்று யோசித்து பார்த்தேன்.பக்கத்து ஆபிஸ் வரண்டாவில் புகைப் பிடிக்கும் பெண் அவள் வீட்டில் புகைப் பிடித்தால் அது சுதந்தரத்தின் உச்சமா என்று என்னையே கேட்டுப் பார்த்தேன்.கொடுக்க நான் யார்.காலம் மாறும் போது அதுவும் மாறும்.அதற்கு உதாரணம் தான் இரு கோடுகள் படத்தில் வரும் இரண்டு கோடுகள்.ஒன்று ஆரம்பத்திலேயே பெரிதாகயிருக்கும்.ஒன்று சின்னதாகயிருக்கும்.அதை 80களின் தொடக்கம் என்று வைத்து கொள்ளலாம்.பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதை பெரிதாக்க வேண்டும் என்று சவால்.சின்ன கோட்டை பெரிதாக வரைந்து விடுவார்கள்.அது இன்றைய காலம் என்று வைத்து கொள்வோம்.வளர்ந்த அளவு,அதற்கு எடுத்து கொண்ட காலம் எல்லாம் தான் பெண் சுதந்திரம்.இப்படி ஜல்லியடிக்கலாம்.திஸ் இஸ் ஃபார் மை சேப்டி.

விதாண்டாவாதம் செய்வதற்கே ஒரு கோஷ்டி இருக்கும்.அதாவது பெண் காலில் ஆண் விழ வேண்டும்,அல்லது நிச்சயதார்த்ததின் போது பெண் வீட்டார் காலில் ஆண் விழ வேண்டும்,கல்யாணம் செய்து கொள்ள ஆண் வரதட்சிணை கொடுக்க வேண்டும்.இது டிட் பார் டாட்.நான் சொல்வது எதுவுமே வேண்டாம் என்று தான்.இப்படி ஜல்லியடிக்கலாம்.இதுவும் சேப்டி தான்.

நினைத்தை எல்லாம் எழுதி விட்டு அல்லது எடுத்து விட்டு தொடகத்திலேயே இது புனைவு என்று போட்டு விட்டு எப்படி வேண்டுமானாலும் ஜல்லியடிக்கலாம்.

வினவுக்கு முன்னாடியே வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட சிறந்த படம் என்று நான் சொன்னேன் என்று ஜல்லியடிக்கலாம்.எனக்கும் வினவுக்கும் இரசனை ஒத்துப் போகிறது என்று கூட ஜல்லியடிக்கலாம்.

பதிவையே படிக்காமல் ஸ்மைலி,மீ த பர்ஸ்டு போட்டு ஜல்லியடிக்கலாம்.

அரசியல் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே என்றால் எனக்கு அரசியலே தெரியாது அல்லது அரசியல் செய்ய தெரியாது என்று சொல்லி ஜல்லியடிக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்படவில்லை.நேற்று அதே அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.இப்படி ஜல்லையடிக்கலாம்.

இப்படி எல்லாம் ஜல்லியடிக்காமலிருக்க நல்லப் புத்தகங்களையும்,சினிமாக்களையும்,மனிதர்களையும் வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.இதோடு ஜல்லியடித்து முடித்து கொள்கிறேன்.இதற்கு முழுப் பொறுப்பு அண்ணன் தண்டோராவையே சேரும்.நானும் கொஞ்சம் பேசுகிறேன் பதிவோடு முழுக்க முழுக்க ஒத்துப் போனதன் விளைவே இந்த ஜல்லி.

Wednesday, February 3, 2010

தைரியம் - படம் விமர்சனம் தைரியம் இருந்தால் படிக்கவும்

முன் குறிப்பு - இது யாருடைய பதிவையும் பகடி செய்யவில்லை,செய்வதாக நினைத்து கொண்டால் அதற்கு அவர்களே பொறுப்பு

தைரியம் விமர்சனம் யாருமே எழுதாத காரணத்தால் வெகுண்டெழுந்து நான் எழுத முடிவு செய்தேன்.ஜக்குபாய்,கதை இந்த படத்திற்கு கூட விமர்சனம் எழுதி விட்டார்கள்.தியேட்டரில் ரீலிஸ் ஆகாத காரணத்தால் நேரே சிடி கடைக்கு போய் தைரியம் படம் குடுங்க என்று சொன்னால் கேட்டால் டப் செய்யப்பட்ட படம் எல்லாம் வரலை என்று சொல்ல அதிர்ச்சியில் பின் வாங்கியிருந்தேன்.இருந்தாலும் எப்படியும் விமர்சனம் எழுதியே தீர வேண்டிய கட்டாயம்.காரணம் என்னையும் மதித்து வந்த கடிதம்

Dear irumbuthirai,

As I was suffering from fever,iam unable to watch the movie thairiyam for last three days.So please take my tickets and watch the movie along with G friend(if you have).Dont forget to write review.I want to read review in your narrating style.

Yours Obediently,
Ravan currently in shooting of maniratram's film

இப்படி எல்லாம் என் வாசகர் கேட்டப் பிறகு நான் பொங்காமல் இருப்பேனா

நண்பர்களிடம் எல்லாம் கேட்டு அவர்கள் பார்த்திருந்தால் விமர்சனம் எழுதி விடலாம் என்று அவர்களை கெஞ்சி கேட்டேன்.

என் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு நண்பன் மட்டும் இருடா சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.

படத்தில் குமரன் ‌ஜிம் வைத்திருப்பவராக வருகிறார்.படத்தில் ஹீரோவான இவருக்கு தீபு, கார்த்திகா என்று இரண்டு ஹீரோயின்கள். இவர் காதலிப்பது தீபுவை. அதே நேரம் கார்த்திகாவும் இவரை காதலிக்கிறார். இந்த‌க் காதல் குழப்பம், காதலுக்கு எதிர்ப்பு, நாயகனின் தனிப்பட்டப் பிரச்சனை எல்லாவற்றையும் அடிதடியுடன் சொல்கிறது தை‌ரியம்.

"ம்..மேலே சொல்லு.." விடாமல் கேட்டேன்.விமர்சனம் ஆச்சே.

"பத்துக் கோடி பட்ஜெட்.."

"கதைக்கு வாடா.."

"க்ளைமேக்ஸ் சண்டைக்கு மட்டும் ஒன்றரை கோடி.."

"கதையை சொல்லுடா.."

"முதல்ல சரோஜ்குமார் தான் படத்தை இயக்கியதாக இருந்தது..என்ன நடந்ததோ இயக்குனர் இடத்தில் குமரன் பெயர்.."

"டேய் கதைடா.."

"ஷூட்டிங் நடந்து‌க் கொண்டிருந்த போது சரோ‌ஜ்குமாருக்கு உடல் நலமில்லாமல் போனது. அதனால் தான் குமரன் பெயர்..ஆனா உண்மையா வேற மாதிரி சொல்றாங்க.."

"இது ஆவுறதில்லை.."

ஏதோ தோண கூகுளில் தைரியம் விமர்சனம் என்று அடித்து பார்க்க அது குடுத்த முடிவில் பார்த்தால் அது வெப்துனியா இணையதளத்தில் அவன் சொன்னது அப்படியே இருந்தது.

வந்த எரிச்சலில் - "மேலே சொல்லு.." குரலில் கொஞ்சம் மாற்றம் காட்டினேன்.

அப்பவும் அசராமல் - "பைட் எல்லாம் செம ரிஸ்க்.."

"டேய் வெப்துனியா வாயா.." என்று கூப்பிட்டேன்.

"என்ன கண்டுப்பிடிச்சிட்ட போல..எத்தனை தடவை எனக்கு பல்ப் குடுத்த அதான் இப்படி.." சொல்லி விட்டு திட்டுவதற்குள் போனை வைத்து விட்டான்.

வட போன வருத்தம்.அதை தாங்கி கொண்டு ராவணுக்கு பதில் பெயிலிட்டேன்.

Dear Ravan,
As I was also suffering from fever,Iam unable to accept your offer.So please dont mistake me and forgive me for disappointing you.

Yours Disobdiently,
Irumbuthirai Watching unknown language movie.

பின் குறிப்பு : இது எந்த பதிவிற்கும் எதிர்பதிவு அல்ல.அப்படி நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.இது அனைத்தும் புனைவு தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

Tuesday, February 2, 2010

ரான் - இந்தி(ய)ப்படம் விமர்சனம்

மாடர்ன் உலகத்தில் வாழும் மனு நீதி சோழனின் கதை.ஆக் படத்தை மீடியா எல்லாம் சேர்ந்து கிழித்துப் போட்டப் பிறகு அடங்காத கோபம் ப்ளஸ் கொலைவெறியில் அடுத்தப் படம் மீடியாவின் நிஜமுகத்தைக் கிழித்து தோரணம் கட்டுகிறேன் என்று சொல்லி இராம் கோபால் வர்மா சொல்லியடித்த கதை.(மீடியாவில் என்ன மாதிரி அடி வாங்கினார் என்று செல்வராகவனும்,வெங்கட் பிரபுவும் தெரிந்து கொள்வது இருவருக்குமே நல்லது).பேக் வித் பாங்க் என்று சொல்வார்கள்.அதை இராம் கோபால் வர்மா நிரூபித்துள்ளார்.

இனி கதை சின்னது தான் - அமிதாப் பச்சன் இந்தியா 24/7 என்ற செய்தி தொலைக்காட்சியை நடத்துகிறார்.அது போட்டி தொலைக்காட்சியால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்க,அப்படி முக்க காரணம் போட்டி தொலைக்காட்சி நடத்தும் மோனிஷ் பேல் - அமிதாப் பச்சனிடம் வேலை பார்த்த முன்னாள் திறமைசாலி.அமிதாப் கொடுக்கும் பார்ட்டியில் அமிதாப் மகனாக சுதீப் மற்றும் மோனிஷ் முட்டிக் கொள்ள,நான் நினைத்தால் உன் சேனல் இல்லாமல் போய் விடும் என்று சவால் விடுகிறார் மோனிஷ்.

அமிதாப்பின் வசீகரித்தால் தான் அந்த செய்தி சேனல் நிற்கிறது.வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அவரிடம் வேலைக்கு சேரும் ரித்தேஷ் தேஷ்முக் என்ற இளம் பத்திரிக்கையாளன்.அவனுக்கு லிவிங்க் டூ கேதர் காதலியாக குல் பனாக்.இவர் 2001ம் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரியை நினைவுப் "படுத்தினார்" நிறையவே.குல் மாதிரி ஒரு பெண்ணுடன் நட்பாகயிருந்தேன்.இவரை பார்த்ததும் அந்த பெண் முகம் நிழலாடியது.நான் குல் பனாக்கின் ரசிகனாக மாறி விட்டேன்.இரசனையின் அளவு இடுப்பில் இருந்து தோள்பட்டைக்கு சுருண்டிருந்தது.

தமிழ் நடிகர்களிடம் ரித்தேஷ் தேஷ்முக் ரோல் நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார்கள்.முதல் பாதியில் ஐந்து காட்சியில் தான் தலையை காட்டுகிறார். எப்பவும் சீரியஸ்.குல் பனாக் கிஸ் அடிக்கும் போது கூட.

அமிதாப்பின் மருமகன் ரஜத் கபூர் ஊழல் செய்யும் அரசியல்வாதியுடன் நட்பாகயிருக்கிறார்.காரணம் அவர் சந்து பொந்து இண்டு இடுக்குத் தேடும் ஒரு தொழிலதிபர்.அவர் போனதோடு மட்டுமில்லாமல் சுதீப்பையும் மிரட்டி,பணத்தைக் காட்டி விலைக்கு வாங்கி நாடகமாடி அமிதாப்பையே பொய் சொல்ல வைத்து அரசியலில் பெரிய காயை வதம் செய்கிறார்.அமிதாப் மீதுள்ள நம்பிக்கை,மீடியாவின் பலம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுகிறது.

விளைவு ஊழல் செய்யும் பரேஷ் ராவல் (பா படத்தில் அமிதாப் பச்சனுக்கு தாத்தா,சீனி கம் படத்தில் மாமனார்) பிரதமர் பதவி,ரஜத் கபூருக்கு நம்பர் ஒன் தொழிலதிபர் பட்டம்.சுதீப்புக்கு சாதனையாளர் விருது.

சந்தேகம் வந்து ரித்தேஷ் தேஷ்முக் தோண்டித் துருவ எனக்குள் இருக்கும் சராசரி தமிழ் ரசிகன் முழித்துக் கொண்டு ரித்தேஷைப் போடத் தாக்கப் போகிறார்கள் எண்டு கூக்குரல் இட ஆரம்பித்தான்.அப்படி எல்லாம் நடக்காமல் ரித்தேஷ் அதை கண்டுப்பிடித்து யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மோனிஷிடம் போக,500 கோடி ரூபாய் பணத்திற்கு அவரும் விலை போக,ரித்தேஷ் கோபத்தில் கொதிக்க..

ஜர்னலிசம் என்ற கன்றுக்குட்டியை வதம் செய்து விட்டார்கள் என்று இளம் பத்திரிக்கையாளப் பசு ஆராய்ச்சி மணியை அடிக்க அதுவும் சுதீப் கல்யாணத்தில்,கல்யாணம் யாருடன் என்று பார்த்தால் முஸ்ஸில் காதலியாக நீது சந்திரா.எப்படியும் தீராத விளையாட்டுப் பிள்ளையில் கேவலமாக காட்டுவார்கள்.அந்த பாவத்தை,சோகத்தை இந்த படம் பார்த்து எல்லோரும் கழுவிக் கொள்ளலாம்.நீது சந்திராவா ஒரு காட்சியில் வாய் தானாக திறந்து விட்டது.அட ஆச்சர்யத்தில் தான்.

அமிதாப் வாசிக்கும் முடிவு மகன்,மருமகன்,அரசியல்வாதி மூவர் கூட்டணிக்கும் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.ரித்தேஷ் தேஷ்முக் என்னாவானார்.

இன்னொரு ஆளை விட்டு விட்டேன்.ராஜ்பால் யாதவ் அதகளப்படுத்தியிருக்கிறார்.அமிதாப் வந்தால் பம்முவதும் இல்லாத சமயம் கும்முவதும் கலக்கல்.மனுஷன் இந்தி சினிமாவின் வடிவேலு தான்.

நளினியாக சேகர் கபூரின் மனைவியான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி.நளினி என்று ரித்தேஷிடம் கூப்பிட சொல்லும் பாங்கு,எனக்கு என்ன அவ்வளவு வயதாகி விட்டதா என்று கேள்வியுடன் வரும் பார்வை,சுதீப்பிடம் திட்டு வாங்கும் ரித்தேஷ்க்கு ஆறுதல் சொல்லுமிடம் எல்லாவற்றிலும் தெரிகிறது அல்பம் மாதிரி யோசிக்கக் கூடாது அனுபவம்.

படம் பாருங்கள்.பார்க்க வேண்டிய படம்.டூயட்,சண்டை எதுவும் இல்லாமல் ரெண்டு மணி நேரத்தில் ஒரு நல்லப் படம் சில தொய்வுகள் இருந்தாலும்.ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம்.குல் பனாக்கிற்காக இன்னொரு தடவை நான் பார்ப்பேன்.

சஸ்பென்ஸ்.த்ரில்லர் என்று எதுவும் இல்லாமல் ஒரு நீட் நாரேஷன்.படம் பார்க்கும் போது எனக்கு தெரிந்த இரண்டு நிதர்ஷனங்கள்.

நிஜ வாழ்க்கையில் மகன் தப்பே செய்திருந்தாலும் விட்டுக் கொடுப்பார்களா.இன்னும் ஒரு நிமிடம் அதை யோசித்ததில் எனக்கு இந்த வசனம் ஞாபகம் வந்தது."பூஜ்ஜிமாவா..அவன் குழந்தைடா..".எப்படியும் காப்பாற்றி விடுவார்கள்.இன்னும் ஏழைகளும்,மிடில் க்ளாஸ் மக்களும் தான் நேர்மை என்று புலம்புகிறார்கள்.

அடுத்தது இதை நான் சொன்னால் "உனக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது.." என்று அடி விழும் வாய்ப்புள்ளதால் நான் சொல்லவில்லை.

Monday, February 1, 2010

துவையல் - நாட்டு நடப்பு ஸ்பெஷல்

தமிழ்படம் எதிர்பார்த்த மாதிரியே ஒரு கலக்கு கலக்கி விட்டது.எனக்கு படம் மிகவும் பிடித்தது.காரணம் அந்த படம் குறி வைத்த நடிகர்கள்.குறிப்பாக 2011 முதல்வர்.சிவாவின் எதிர்காலம் இன்னும் மூன்று படத்தில் முடிந்து விடுமோ என்ற பயம் வந்திருக்கிறது.தமிழக அரசியலை வைத்து அல்லது நையாண்டி செய்து படம் எடுத்தால் யோசிக்கவே பயமாக இருக்கிறது.தமிழ் நாட்டை சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆண்டார்கள் என்பது போல அரசியலையும் சினிமாவையும் க்ளவுட் நைன் மூவிஸ்,ரெட் ஜெயண்ட் மூவிஸ்,சன் பிக்சர்ஸ் ஆட்டிப் படைக்கிறது.இப்படி ஒரு படம் எடுத்தால் பிறகு எப்படி வெளி வரும்.எனி வே இராம் கோபால் வர்மாவுக்கு அடுத்த தீனியாக இதை இடுகிறேன்.(நாளை ரான் பட விமர்சனம் வரும்.இந்த படம் பார்த்ததிலொருந்து இனி தமிழ்படம்(எல்லா படங்களும் அடங்கும்) பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்)

மும்பையில் முழு போதையில் காரை விட்டு மோதி இரண்டு பேரை ஒரு பெண் (பணக்காரப் பெண்) கொலை செய்து இருக்கிறார்.அதில் ஒருவர் சமீபத்தில் மாற்றல் வாங்கி வந்த காவலர்.ஏற்கனவே 2006ம் ஆண்டு காரை விட்டு ஏழு பேரை கொன்ற பெரேரா வெளியே அலைந்து கொண்டிருக்கிறார். இதுவும் அப்படித்தான் ஆகும்.சட்டம் எல்லாம் என்னை போலிருக்கும் சாமானியனிடம் தான் செல்லும்.நானும் பணக்காரன் ஆகணும்,கார் வாங்கணும்,அந்த பெண் மீது பெரேரா மீதும் ஏற்றி விட்டு வெளியே வருமளவிற்கு செல்வாக்காக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.குறிப்பாக தண்ணி அடிக்க வேண்டும்.

பர்தீன் கானிடம் இருந்து கைப்பற்ற போதைப் பொருளில் அவ்வளவு வீரியம் இல்லையாம்.எனவே நிலுவையில் இருக்கும் வழக்கு நீர்த்துப் போகலாம். பின்ன என்ன ஒன்பது வருடம் வழக்கு நடத்தினால் வீரியம் குறையாமல் என்ன செய்யும்.போதைப் பொருளில் அல்ல வழக்கு விசாரணையில்.இதுவே நாங்களாகயிருந்தால் கஞ்சா வழக்கு பாய்ந்து ஒய்த்திருப்பார்கள்.போங்கடா நீங்களும் உங்க மொக்கை வழக்குகளும்.அடுத்த ஜென்பமத்திலாவது ஒரு நடிகனாக குடுப்பினை வேண்டும்.லலித் மோடி மீது போதை பொருள் வழக்கு இருக்கிறது.போதைப் பொருள் வத்திருந்தால் தான் பெரிய ஆள் ஆக முடியும் போல.

ஹெட்லி ஒரு அமெரிக்க ஏஜெண்ட் என்று நினைத்து தான் ராகுல் பட் பழகினாராம்.அவங்க எவ்வளவு தான் காதில் பூ சுத்தினாலும் காது தாங்கும்.இதுவே அப்பாவியாக இருந்தால் மிதித்தே உண்மையை என்று பொய்யை ஒப்புக் கொள்ள செய்திருப்பார்கள்.ராகும் பட்டிடம் செல்லுமா.

காஞ்சிபுரம் அர்ச்சகர் என்னவானார்,ஜான் டேவிட் எங்கே இருக்கிறார் இப்படி நாம் மறந்து போன விஷயங்கள் நிறைய இருக்கிறது.பத்திரிக்கைகள் ஒரு மாதம் கழித்து கண்டு கொள்வதேயில்லை.அப்புரம் ஏன் சிறுமியைக் கெடுத்து விட்டு ஆயிரம் ரூபாய் அபதாரத்தில் வெளியே வர மாட்டார்கள். தொலைக்காட்சி சொல்லவே வேண்டாம் லைவ் என்று அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை. நெல்லையில் போலிஸார் வெட்டுண்டப் போது அமைச்சர்கள் தான் உதவவில்லை.சரி கேமரா புடித்துக் கொண்டிருந்தவன் உதவ வேண்டியது தானே.அதை யாராவது தடுத்திருந்தால் அதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டியது தானே.மும்பை மேரி ஜான் படத்தில் இதை அருமையாக பகடி செய்தார்கள்.தமிழ் நாட்டில் செய்ய முடியுமா.அந்த போலீஸ் அதிகாரிக்கு என்ன நீதி கிடைத்தது.அமைச்சர்களுக்கு ஏதாவது தண்டனை இல்லை வெட்டியவர்களைப் பிடித்தார்களா.யாராவது இதற்கு ஒரு வருடம் கழித்து தான் இரங்கல் தெரிவிப்பார்களா எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.இனி வரும் நாட்களில் வீட்டில் நடக்கும் சண்டை கூட நேரலை செய்யப்படலாம்.நமக்கு நன்றாக பொழுது போகும்.