Thursday, October 15, 2009

இரயில் பயணங்களில்

 விமானத்தில் பயணிக்காமல் மும்பையில் இருந்து சென்னைக்கு வருவதற்கு காரணம் வித்தியாசமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்களை வேடிக்கை பார்ப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைகிறது.நான் இதுவரை பார்க்காமல் இருக்கும் முகங்களில் சிலதை பார்க்கலாம்.அதில் சில முகங்கள் கவிதை வாசிக்கிறது, ஒவியமாக தெரிகிறது, நதியாக பாய்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது, இன்னும் நான் ரசிக்காத சில கலைகளை எனக்கு அறிமுகம் செய்கிறது. நவரசங்கள் தெரிகிறது.அதில் சில ரசங்கள்.ஒரே ஒரு இசம்.

நகைச்சுவை - திருமங்கைகள் காசு கேட்கும் போது பொதுவாக பெண்களையும்,வயதானவர்களையும் தவிர்த்து விடுவார்கள்.வாலிபவர்கள் தான் அவர்கள் குறி.ஒருமுறை அப்படி வந்த ஒரு திருமங்கை யாரும் பணம் தராத காரணத்தால் குடும்பத்தோடு வந்திருந்த ஒரு ஆணிடம் பணம் கேட்டார்.அவர் மறுக்க, திருமங்கை அவர் மனைவியிடம் "அக்கா குடுக்க சொல்லுங்கள்.." என்று சொல்ல பிறகு அவர் பணத்தைக் கொடுத்தார்.அதோடு வாயை வைத்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம். "என்ன அக்காவா..சொல்லவேயில்ல.." சொல்லி முடிக்கும் முன் அவர் முகவாயில் ஒரு குத்து விழுந்தது.(அந்த சமயம் ஆதி-தாமிரா எழுதிய தங்கமணி பதிவுகள் ஞாபகத்திற்கு வந்தது.)இது தான் வாயை குடுத்து வாங்கி கட்டுறதா..

கோபம் - இரண்டு வருடம் முன் பொங்கலுக்கு விடுமுறை கிடைக்காத காரணத்தால் குடியரசு தினத்தில் கிளம்பினேன்.டிக்கெட் வேறு கன்பார்ம் ஆகாமல் வெயிடிங் லிஸ்டில்(விண்டோ லெப்ட் என்றும் சொல்லலாம்) இருந்தது.போக வேண்டிய கட்டாயம்.ஸ்லிப்பர் க்ளாஸில் ஏறினால் அங்கு ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.ஒரே ஒரு இரவு தானே சமாளித்து விடலாம் என்று ஒரு குருட்டு நம்பிக்கை.என்னை போல ஒருவனாக சிலர் இருந்தனர்.ஒரு குரூப் சேர்ந்து விட்டோம்.இரவு வந்தவுடன் கீழே படுக்கலாம் என்று சொன்னான்.முதலில் நீ போ என்று ஒரு இடத்தை காட்டினான்.நான் போகாமல் இருக்க அவன் போய் பேப்பர் விரித்து படுத்து விட்டான்.அங்கு இருந்த ஐம்பது வயது பெண்மணி படுக்க விடாமல் பிரச்சனை செய்ய அவன் எழுந்து வந்து விட்டான்.காரணம் கேட்டால் அவர்கள் மீது கை வைத்து விட்டான் என்று ஏதோ சொல்ல அவன் பாய்ந்து விட்டான்."உங்க வயது என்ன..கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்.." என்று கத்த அந்த பெண்மணி அமைதியாக இருந்து விட்டார்.இதற்கும் இருவரும் ஒரே ஜாதி,ஒரே மதம்,ஒரே மொழி.(அவர்கள் பேசும் போது தெரிந்தது,திருப்பதி போகிறார்கள்).நான் ஒரு அம்மாவின் பக்கத்தில் இருந்தேன்.இரவு வந்ததும் காவலர்கள் வந்து எங்களைத் துரத்த உடனே அந்த அம்மா "என் பிள்ளை தான்..விடுங்கள் என்று சொல்லி விட்டார்.காவலர்களும் விட்டு விட்டார்கள்.இதில் இருந்த அதிசயம் என்ன என்று பார்த்தால் அவர்கள் ஒரு முஸ்லீம்,தாய்மொழி தெலுங்கு.அடுத்த நாள் அந்த பையனைத் துரத்திய பெண்மனி செய்த காரியம் இன்னும் மோசம்.விடைத்தாள்களை அவர் திருத்தி கொண்டும்,பேசிக் கொன்றும் இருந்தார்.கூடவே அந்த பெண்மணியின் புத்திர சிகாமணியும் திருத்தியது.

சோகம் - டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் போகும் போது நல்ல நல்ல பெண்களாக வருவார்கள்.ஊர் சேரும் மன நிலையில் பார்க்கத் தோன்றாது.அதுவே டிக்கெட் கிடைத்து இருந்தால் நான் இருக்கும் கம்பார்ட்மென்டில் எல்லோருமே திருப்பதி வரை போகும் ஆண்களாக இருப்பார்கள்.

பார்க்கும் போது தான்
ஜோடிகளின் நெருக்கம் இன்னும் அதிகரித்து
அடர்த்தியாகத் தெரிகிறது
அவர்களைக் கடக்கும் சமயம் தெரிகிறது
நான் தனியாக பயணிப்பது.

டிஸ்கி :

தமிழ்நாட்டின் எல்லையைத் தொடும் வரை அமைதியாக இருக்கும் நான் தொட்டப் பிறகு அடிக்கடி மணி பார்க்கிறேன்.எதிர்படும் இரயில் நிலையங்களின் பெயர்களை வாசிக்கிறேன்.இன்னும் இன்னும் என்ன என்னமோ செய்கிறேன்.

இங்கு இருந்து திரும்ப போகும் நிலைமை தலைகீழ் இருப்பதிலே தமிழ்நாட்டின் எல்லையை தான் விரைவில் கடக்கிறேன்.

8 comments:

பீர் | Peer said...

//வாலிபவர்கள் தான் அவர்கள் குறி.//

கொஞ்சநாளுக்கு முன்னால இந்தியா டுடே கவர்ஸ்டோரி 'குஷ்புவுக்கு குறி' தான் நினைவு வருது. :)

உங்க நகைச்சுவை நல்லாயிருக்கு, அரவிந்த்.

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்நாட்டின் எல்லையைத் தொடும் வரை அமைதியாக இருக்கும் நான் தொட்டப் பிறகு அடிக்கடி மணி பார்க்கிறேன்.எதிர்படும் இரயில் நிலையங்களின் பெயர்களை வாசிக்கிறேன்.இன்னும் இன்னும் என்ன என்னமோ செய்கிறேன்.

இங்கு இருந்து திரும்ப போகும் நிலைமை தலைகீழ் இருப்பதிலே தமிழ்நாட்டின் எல்லையை தான் விரைவில் கடக்கிறேன்.
//

எதார்த்தங்கள்

அகல்விளக்கு said...

///திருமங்கை அவர் மனைவியிடம் "அக்கா குடுக்க சொல்லுங்கள்.." என்று சொல்ல பிறகு அவர் பணத்தைக் கொடுத்தார்.அதோடு வாயை வைத்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம். "என்ன அக்காவா..சொல்லவேயில்ல.." சொல்லி முடிக்கும் முன் அவர் முகவாயில் ஒரு குத்து விழுந்தது.(அந்த சமயம் ஆதி-தாமிரா எழுதிய தங்கமணி பதிவுகள் ஞாபகத்திற்கு வந்தது.)இது தான் வாயை குடுத்து வாங்கி கட்டுறதா..//

சிரிப்பை அடக்க முடியவில்லை

ஈரோடு கதிர் said...

விண்டோ லெப்ட் (ங்கொன்னியா... என்னா டைமிங்... பாருங்க பிரபாகர்)

நியாமான கோபம்தான் அரவிந்த்

டிஸ்கி ஆயிரம் அர்த்தம் சொல்லுதுபா

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் பதிவுடா தம்பி.ரொம்ப நல்லா எழுதியிருக்க.

நையாண்டி நைனா said...

Nice one. sweet post.

துபாய் ராஜா said...

அழகான பகிர்வு.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வனம் said...

வணக்கம் அரவிந்த்

\\சோகம் - டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் போகும் போது நல்ல நல்ல பெண்களாக வருவார்கள்.ஊர் சேரும் மன நிலையில் பார்க்கத் தோன்றாது.அதுவே டிக்கெட் கிடைத்து இருந்தால் நான் இருக்கும் கம்பார்ட்மென்டில் எல்லோருமே திருப்பதி வரை போகும் ஆண்களாக இருப்பார்கள்.\\

அதுதான் பிள்ள நம்ம லக்கு.

இராஜராஜன்