Thursday, October 1, 2009

வாட்ஸ் யுவர் ராசி - ஹிந்தி பட விமர்சனம்

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த படத்தின் விமர்சனம் உங்களுக்காக..முதலில் படத்திற்குப் போன கதை

நான் பாட்டுல செவனேன்னு ஆபிஸ்ல உக்காந்து(வேலை பாத்து இருக்க மாட்டீயே..) பாக் - ஆஸி மாட்ச் ஸ்கோர் செக் பண்ணிகிட்டு இருந்தா..ஒரு போன் என் அருமை நண்பரிடம் இருந்து வந்தது. நான் வேற அப்ப ரொம்ப சோகத்தில் இருந்தேன்.ஆஸி ஜெயித்து விட்டது(உண்மையான காரணம் இருந்த ஒரு நல்ல பொண்ணும் வேலைய விட்டு போயிருச்சு)."இந்த பார்ல இருக்கேன்..உடனே வரவும்.." என்று அடுத்த போன்.நான் ஆடி அசைந்து போய் சேரும் போது அவர் அடித்து முடித்து(உரையை இல்ல சரக்கை) இருந்தார்.

அவரிடம் போன் இல்லை.என் போனில் ரீசார்ஜ் செய்து கொண்டு சாப்பிடப் புறப்பட்டோம்.பேச்சு சிவா மனசுல சக்தி படத்தில் வந்து நின்றது.அப்பவே நான் உஷார் ஆயிருக்கனும்."எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை..காரணம் தெரியவில்லை.." என்று சொன்னேன்.அவருடைய நண்பரின் நண்பன்(நாடோடிகள்) எஸ்.எம்.எஸ் படத்தைப் பார்த்ததாக சொன்னார்.அதற்கும் காரணம் தெரியவில்லை அல்லது அவர் சொல்லவில்லை.

படம் பார்க்க போகலாம் என்று தீடிர் முடிவு எடுத்து டிக்கட்டும் எடுத்தப் பிறகு தான் சிவா மனசுல சக்தி படம் பிடிக்காமல் போனதற்கு காரணம் தெரிந்தது.அவருடைய நண்பி சரியாக தியேட்டரில் நுழைவதற்கு முன்னால் கால் செய்தார்.இருவரும் சண்டை போட ஆரம்பித்தார்கள்.சிவா மனசுல சக்தி படத்தில் வரும் சந்தானம் போல நான் திருதிரு என்று முழித்துக் கொண்டு இருந்தேன்.என் போன் உடைவது போல ஒரு பிரமை.மழை வேறு.சண்டை மும்முரத்தில் அவர் அதை சட்டை செய்யாமல் நனைந்து,வெளியே நனைத்து கொண்டார்.என் டப்பா போனை அவர் கோபத்தில் வீசினாலும் விழுந்தாவது பிடித்து விட வேண்டும் என்று நானும் நனைந்தேன்.

சண்டை முடிந்ததும் ரெஸ்ட் எடுத்து விட்டு அடுத்த சண்டையை ஆரம்பித்தார்கள்.சந்தானம் என் மனக்கண்ணில் வந்து வந்து போனார்.போஸ்டரில் இருக்கும் பிரியங்கா சோப்ராவை சரியாக ரசிக்க முடியாமல் சண்டை முடியக் காத்திருந்தேன்.சண்டையின் முடிவில் என் போனில் சார்ஜ் இல்லை. எதிர்முனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

"வாங்க படத்துக்கு போகலாம்.." என்று இழுத்தால் அவர் என்னை வேறு கடைக்கு இழுத்து சென்று(தரதர என்று கற்பனை செய்ய வேண்டாம்) அடுத்த ரவுண்ட் ஆரம்பித்தார்.இங்கே உரையை அடித்து முடிக்கும் போது மணி 10.40.ஓரு வழியாக உள்ளே போனால் அடுத்த இருபது நிமிடத்தில் இடைவேளை.

ஹர்மன் அவர் திருமணம் செய்ய ஒவ்வொரு பெண்ணாக பார்க்கிறார்.12 ராசியில் 12 பிரியங்கா கோப்ரா ஸாரி சோப்ரா.தமிழன் படத்திற்கு (விஜய் படத்தை இழுக்கலைனா தூக்கம் வராதே) இந்த படத்தில் மிக கேவலமாகத் தெரிந்தார். மொத்தமே இருபது பேர் தான்.தமிழில் பேசி இருந்தவர்களையும் பார்க்க விடாமல் கத்தினோம்.ஹிந்தியில் ஒரு சாதாரண வார்த்தை தமிழில் கெட்ட வார்த்தையாக தெரிந்தது.

பாட்டு வரும் போது அவர் சத்தம் போட்டு பாடினார்.அந்த சமயத்தில் பின்னால் இருந்த ஸ்பீக்கர் (எதிர்கட்சியின் சத்தம் வரும் போது இவரும் சத்தம் போடுவார்) வேலை செய்தது.அதனால் எங்களுடைய சத்தம் வெளியே கேட்கவில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்த பிரியங்கா எல்லாம் அட்டாகத் தெரிய ஒரு டாக்டர் பிரியங்கா சோப்ரா வந்தார்.(விருச்சிக ராசி என்று நினைக்கிறேன்) தொடர்ந்து ஒரு அருமையான பாடல்.

"பசிக்குது வாங்க போகலாம்.." என்று இழுத்துக் கொண்டு வந்து விட்டார்.ஒவ்வொரு இட்லி கடையாக சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினால் மணி 12.00.சுவர் ஏறிக் குதித்து வாட்ச்மேனை எழுப்பி உள்ளே நுழைந்தால் கே டி.வியில் "சட்டம் ஒரு இருட்டறை" படம்.

"லைட்ட அணைங்க.." என்று சொல்ல "இந்த படத்தையாவது என்னை பார்க்க விடுங்க.." என்று சொல்லி விட்டு நான் படம் பார்த்தேன்.

டிஸ்கி :

எம்.ஜி.ஆர் நடித்த நவரத்தினம் படத்த சுட்டு இப்படி ஒரு மொக்கை படம் எடுத்து இருக்கீங்களே.ஒரு சராசரி தமிழ் படத்தை விட படம் படு மொக்கை. (இப்படி ஒரு படம் யாருமே பார்த்து இருக்க மாட்டார்கள்.முதல் மற்றும் கடைசி ஒரு மணி நேரம் படம் பார்க்கவில்லை)

வருத்தம் :

ரிஷப ராசிக்கு பிரியங்கா சோப்ரா எப்படி இருப்பார் என்று பார்க்கவில்லை.

டிஸ்கியோட பிஸ்கி :

ஆக மொத்தம் நேத்து என் ராசி சரியில்ல..பதிவு படிச்சவங்களுக்கு இன்னைக்கு ராசி சரியில்ல..

12 comments:

கலையரசன் said...

சட்டம் ஒரு இருட்டறை என்பதால லைட் போட்டு பாத்தீங்களா?
ஏதாவது தெரிஞ்சிதா?

shortfilmindia.com said...

நான் ஏற்கனவே எஸ்கேப்

கேபிள் சஙக்ர்

பிரபாகர் said...

//எம்.ஜி.ஆர் நடித்த நவரத்தினம் படத்த சுட்டு இப்படி ஒரு மொக்கை படம் எடுத்து இருக்கீங்களே.ஒரு சராசரி தமிழ் படத்தை விட படம் படு மொக்கை. //

நவரத்தினமே மொக்கை, எடுத்த தயாரிப்பாளர் மண்டைய போடற அளவுக்கு... அதவிட மொக்கையா?

ஆனாலும் அர்விந்துக்கு மன தைரியம் ரொம்ப ஜாஸ்தி...

பிரபாகர்.

லோகு said...

படம் பார்க்க போகும் போது ராசி பலன் பார்த்து போயிருக்கலாம்..

துபாய் ராஜா said...

டிஸ்கி,டிஸ்கியோட பிஸ்கி... எல்லாம் இருக்கட்டும்.. எத்தனை ரவுண்டு விஸ்கி அடிச்சீங்கன்னு மொதல்ல சொல்லுங்க..... :))

அமுதா கிருஷ்ணா said...

உங்க ராசி என்ன அரவிந்த்...

Ashok D said...

கலந்துகட்டி அடிச்சிரிக்கீங்க வசந்த்.
சுவை நகைச்சுவை.

ஜெட்லி... said...

//ஒவ்வொரு இட்லி கடையாக சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினால் மணி 12.00//

எத்தனை கடைல அப்பு சாப்ப்டிங்க

Thamira said...

யோவ்.. இதுக்குப்பேரு சினிமா விமர்சனமா?

Sabarinathan Arthanari said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. இதுக்குப்பேரு சினிமா விமர்சனமா?//

repeettu

ஈரோடு கதிர் said...

//டிஸ்கியோட பிஸ்கி//
இது டாப்


எங்கயிருந்து இந்த கிரியேட்டிவிட்டி வருது

பொறாமையா இருக்கு அரவிந்

தினேஷ் said...

நினைச்சேன் தலைப்ப பார்த்து,பயபுள்ள உள்ளே என்னன்ன குத்து வைக்கபோகுதோன்னு..

வெறும் 20 நிமிடம் பார்த்து விட்டு விமர்சனம்-- உலக வலைப்பதிவுகளில் முதன்முறையாக் நீ தான் தலை எழுதியிருக்கே..