நாயகன் ஆரம்ப காட்சியில் மாறுவேடத்தில்(மீசை,மரு வைத்தாலே மாறுவேடம் தான்) அந்த ஊருக்கு வருகிறார்.ஒரு வீட்டில் இருக்கும் அம்மா அவருக்கு அடைகலம் தருகிறார்.இவரும் அங்கே நல்ல பிள்ளையாக இருந்து கொண்டு அவர் வந்த நோக்கத்திற்காக பாடுபடுகிறார்.நம்மையும் படுத்துகிறார்.
நாயகியிடம் ஆரம்பத்தில் மோதல்.அவர் செய்யும் அவமானங்களைப் பொறுத்துக் கொள்கிறார்.அதை பல காலமாக பார்க்கும் ரசிகர்களைக் கொல்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் ஆங்கிலம் பேச அதை பார்த்து நாயகி மயங்கி விடுகிறார்.கூடவே நாமும்.பிறகு ஹீரோ மறுக்க மறுக்க அவர் மேல் காதல்.(எழுதும் போதே கை தானாக புல்லரிக்கிறது).பிறகு ஒரு டூயட்.பிறகு நாயகி ஆபத்தில் சிக்கி கொள்ளும் சமயம் ஹீரோ அடி வெளுக்கிறார்.நாயகியின் அப்பா அவமானப் படுத்தும் போது கூட ஒன்றும் பேசாமல் இருக்கிறார்.(இயக்குனர் வசனம் கொடுக்கவில்லையாம்.)
ஒரு கட்டத்தில் இவர் யார் என்று வில்லனுக்குத் தெரிந்து விட நாயகனை அடித்து விடுகிறார்.மயக்கத்தில் கிடக்கும் நாயகன் எழுந்து (டாக்டர் வேண்டாம்,போகாதீங்க என்று தடுத்தும் நர்ஸைத் தள்ளி விட்டு பர்ஸை எடுத்து கொண்டு ஓடுகிறார்.எவன் பில் கட்டுறது..இயக்குனர் வேண்டாம் என்று சொன்னால் தான் நிற்பார்) வில்லனை நாறு நாறாகக் கிழிக்கிறார்.
படத்தில் கவுண்டமணியின் காமெடி சரவேடி..(யோவ் இந்த படத்துல வடிவேல் காமெடி என்று யாரும் சண்டைக்கு வர வேண்டாம்..) இது சூரியன் பட விமர்சனம்.
கவுண்டமணி சொன்னது மாதிரி அரசியல்ல இது எல்லாம் சகஜம்.
இந்த கொசுத் தொல்லை தாங்க முடியாமல் யாரும் மருந்து அடிக்க வர வேண்டாம்.
இப்படி அரதப்பழசான படத்தின் சாயலைக் கொண்டு தான் புதிய படங்கள் வருகிறது.நாமும் போய் ஏமாந்து விட்டு வருகிறோம்.
எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
டிஸ்கி :
கேபிள் சங்கர் அண்ணனலே ஆதவன் விமர்சனம் எழுத முடியலையாம்.போன் பண்ணி ஆதவன் விமர்சனம் எழுத சொன்னாரு.அதான் நானே எழுதிட்டேன்..
வாங்க எல்லோரும் பூ மிதிக்க போவோம்.
இஞ்சாயி..இஞ்சாயி..
ஸ்டார்ட் த ம்யூசிக்..
ஏய் காந்த கண்ணழகி இங்க பூசு..லெப்ட் இப்போ ரைட்.. பேக்ல பூசு..
ஏய் ஸ்டாப் த ம்யூசிக்..
பின்னூட்டம் போட ஆள் வந்துட்டாங்க..நீங்க போகலாம்..
Saturday, October 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அக்மார்க் அரவிந்த் குறும்பு... :))
இரும்புத்திரை....
குறும்பு திரை....
தீபாவளி வாழ்த்துக்கள்.
அவசரத்துல நானே மைனஸ் ஓட்டுப போட்டுபுட்டேன் போல இருக்கே
பதினெட்டு வயது இளமொட்டு மனது..,
:)
பாட்டைப் பத்தி எதுவுமே எழுதலையே நீங்க.. எல்லாமே ஹிட் பாட்டு ஆச்சே!
தூங்குமூஞ்சி மரங்களெல்லாம் வெட்கத்தினாலே
நீ உண்மையிலேயே மோட்டாரு இல்லாத காட்டாறுதான் அரவிந்து..
///அக்மார்க் அரவிந்த் குறும்பு... :))
இரும்புத்திரை....
குறும்பு திரை....///
வழிமொழிகிறேன்
நீங்க நல்லா இருக்கோனுமுங்க..
ராஜா.. பின்னுறியே ராஜா..
குறும்பான இடுகை
ஏன்யா இப்பிடி ஒரு கொலைவெறி...
ஆனாலும் குறும்பு ரசிக்கப்பட்டது..
நானும் ஆதவன் என்று நினைத்து படித்தேன்.........
சிவாஜி, எம்.ஜி.ஆர். நாகேஷ், ஜெயசித்ரா, வாணிஸ்ரீ இவர்களெல்லாம் நடிக்காத படம் என்று ஒரு காலத்தில் விளம்பரம் ஒன்று வந்தது.
அதைப் போல இந்த பதிவும் குறும்பானது.
kamal ena periya aala
Post a Comment