சுப்ரமணியபுரம் படத்தை எல்லோரும் ஆகா,ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள்.நான் பெரிதும் மதிக்கும் சாரு கூட அந்த படத்தைத் துரோகங்களின் காவியம் என்று புகழ்ந்தார்.அவரை கவர்ந்த படங்களில் ஒன்றாக புதுப்பேட்டை படமும் உண்டு என்று சொன்னார்.அந்த படம் பார்த்தப் பிறகு எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பெரிய விவாதமே நடந்தது.கஞ்சா கருப்பு தான் துரோகி என்று சொன்னார்கள்.நான் அந்த பெண் சுவாதி தான் துரோகி என்று சொன்னேன்.அது குடும்பத்திற்காக அவள் செய்த தியாகம் என்று சொன்னார்கள்.நான் கஞ்சா கருப்பு செய்தது துரோகம் இல்லை.அவன் பணத்திற்காக அலையும் ஒருவன்,பணம் குடுத்தால் எதுவும் செய்வான் என்று ஒரு காட்சியில் தெரிந்தது.அதுவே முடிவில் நடந்ததால் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.தொடர்ந்து அந்த பெண்ணைக் குறை சொன்னதால் ஆணியவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.
கல்லூரியில் படிக்கும் உருகி உருக்கி காதலித்து விட்டு அமெரிக்கா சென்று சாலையில் நின்று படம் எடுத்து கொண்டு ஆர்குட்டில் படத்தைப் போடும் பெண்ணை விமர்சிக்கும் நான் ஆணியவாதி தான்.அவளை அசிங்கமாகத் என்னிடம் திட்டி விட்டு அவளுடன் சாட் செய்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்க.சொல்லுங்கள் அப்படியே கூப்பிடுகிறேன்.நான் சொல்வது இதுதான் அவளைத் திட்டினால் அவளுடன் பேசாதே..பேசினால் திட்டாதே..இப்படி நான் ஏதாவது சொன்னால் நான் பிழைக்கத் தெரியாதவன்.என் வீட்டிலும் அதுதான் சொல்கிறார்கள்.
கஞ்சா கருப்பின் துரோகம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.காரணம் அதை விட சில நண்பர்களின் துரோகம் வித்தியாசமாக இருக்கிறது."நான் எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.." - இப்படி ஒரு நாள் குடிக்கும் போது உளறிய நண்பர்கள் என்னிடமே கற்றுக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலை தேடிய அனுபவம் உண்டு.போட்டிக்கு வந்து விடக்கூடாதாம்.
நான் அறிமுகப்படுத்தி வைத்த நண்பர்கள் என்னை விட்டு விட்டு அவர்கள் நெருங்கி பழகினால் பொறாமை வருவதில்லை.மாறாக அவர்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்களிடம் அவர்களுக்கு மனஸ்தாபம் வந்தால் நானும் பேசக் கூடாதாம்.அவர்கள் திரும்ப பேசினால் நானும் பேச வேண்டுமாம். நான் பேசாமல் இருப்பவர்களிடன் என் நண்பர்கள் நெருங்கி பழகினால் கூட எனக்கு கோபம் வராது.அவனிடம் பேசாதே..இவனிடம் பேசாதே.. இப்படி சொல்லும் நண்பனிடம் கோவப்பட்டால் நான் பிழைக்கத் தெரியாதவன் தான்.
கடைசி வருடம் புராஜக்ட் செய்யும் போது நாம் ஒன்றாக செய்கிறோம் என்று சொல்லி விட்டு கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய நண்பனிடம் கூட எனக்கு கோபம் வரவில்லை.காரணம் கல்லூரியில் போராட்டம் பண்ணியப் பிறகு என்னை தனியாக அழைத்து விட்டு விடு..அவர்களுடன் சேராதே.. பின்னாளில் உன்னை கழற்றி விடுவார்கள் என்று என்னை எச்சரித்த ஆசிரியையின் வார்த்தைகள் உண்மையானது தான் அதிக வருத்தத்தை தந்தது.
என்னிடம் ஒன்று சொல்லி விட்டு மற்றவர்களிடம் வேறு மாதிரி சொல்லும் நண்பர்களைப் பார்க்கும் சற்று ஆயாசமாக இருக்கிறது.
இதே நண்பர்களுடன் இன்றும் சிரித்து பேசுகிறேன்.காரணம் நான் கூட யாருக்காவது துரோகம் செய்து இருக்கலாம்.செய்ய நினைக்கலாம்.
நான் இன்று இப்படி குறை சொல்லும் நண்பர்கள் பதிவு எழுதினால் நான் அவர்களின் துரோகிகளின் பட்டியலில் முதலிடத்தில் வரலாம்.காரணம் இடியாப்பத்தின் இரு நுனிகளைப் பிடித்து கொண்டு நிற்கிறோம் இருவரும்.
வெள்ளை காகிதத்தில் இருக்கும்
கரும்புள்ளியைப் போல
தனித்து தெரிகிறது
அவன் செய்த ஒரேவொரு துரோகம்.
அதை மறக்க நினைத்தால்
இன்னும் விகாரமாக தெரிகிறது
அடித்து திருத்தி எழுதப்பட்ட
வினாத்தாள் போல.
Tuesday, October 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
துரோகங்களை நன்றாக ஞாபகம் வைத்துள்ளீர்கள். ரொம்ப நல்லது.
துரோகங்களை நன்றாக ஞாபகம் வைத்துள்ளீர்கள். ரொம்ப நல்லது.
துரோகம் பற்றி பிரபல கவிஞர் D.R.Ashok ஒரு கவிதயே எழுதியிருக்கிறார். அதன் லிங்க் கீழே.
http://ashokpakkangal.blogspot.com/2009/09/blog-post.html
//அந்த பெண்ணைக் குறை சொன்னதால் ஆணியவாதி//
ஆணியவாதி - ஆணி புடுங்கறவங்கலாப்பா?
சாரு நாடோடியை கிழித்திருக்கிறாரே படிக்கவில்லையா அரவிந்த்
இப்படி அடிக்கடி பதிவு போட்டா நாங்க பின்னோட்டம் போட்டே டயர்ட் ஆகிடுவோம் போல
நன்றி Karthikeyan G
நன்றி D.R.Ashok
உங்க கவிதையை நான் ஏற்கனவே படித்து இருக்கிறேன்.ஏன்னா நீங்க ஒரு பிரபலம்.
படித்தேன் சாருவைப் படிக்காமலா..
அரவிந்த்,
துரோகத்தின் அளவுகோல் ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் எதைத் துரோகம் என்கிறீர்களோ அது இன்னொருவரால் சமயோசிதம் எனப் புகழப்படும்.
போலவே இடத்திற்கிடம் அதற்கு வேறு பெயர்களுமுண்டு. அரசியலில் அது ராஜதந்திரம். வியாபரத்தில் அது தனித்திறமை.
One man's food is another's poison - என்பதெக்காலமும் மாறாவுண்மை.
பிரபலமா........?
அரவிந்த் வரவர உன் காமெடி சென்ஸுக்கு அளவில்லாமா போயிடிச்சு... :)
முதுகில் குத்துவது துரோகம் அவ்வளவே..
//சொல்லாமல் கொள்ளாமல் வேலை தேடிய அனுபவம் உண்டு.போட்டிக்கு வந்து விடக்கூடாதாம்.
//
இதை விட கொடுமை வேற இல்ல...
கல்லூரியில் படிக்கும் உருகி உருக்கி காதலித்து விட்டு அமெரிக்கா சென்று சாலையில் நின்று படம் எடுத்து கொண்டு ஆர்குட்டில் படத்தைப் போடும் பெண்ணை விமர்சிக்கும் நான் ஆணியவாதி தான்.//
யாரு அந்த பெண் மச்சி
//வெள்ளை காகிதத்தில் இருக்கும்
கரும்புள்ளியைப் போல
தனித்து தெரிகிறது
அவன் செய்த ஒரேவொரு துரோகம்.
அதை மறக்க நினைத்தால்
இன்னும் விகாரமாக தெரிகிறது
அடித்து திருத்தி எழுதப்பட்ட
வினாத்தாள் போல. //
எல்லோருக்கும் நடக்கும் விடயங்கள்... உங்களுக்கு நடந்துள்ளது
என்னங்க திடீர்னு துரோகத்த பத்தி..??!!
//இடியாப்பத்தின் இரு நுனிகளைப் பிடித்து கொண்டு நிற்கிறோம் இருவரும்//
ஆமாம்பா ஆமாம்
அண்ணாச்சியை வழிமொழிந்து கொள்கிறேன் அர்விந்த். எழுத்தில் மெச்சூரிட்டி கூடிக்கொண்டே செல்கிறது.
Post a Comment