Tuesday, October 27, 2009

கமல் இப்படி செய்தாரா - என்ன கொடுமை இது

சமீபத்தில் நக்கீரன்(வேற வழியில்லாமல்) படித்து தொலைத்ததால் வந்த வினை இது.அதில் குணா என்பவர் இப்படி பேட்டி குடுத்து இருக்கிறார்.என்னுடைய அப்பாவும்,கமலுடைய அப்பாவும் நண்பர்கள்.1955ம் வருடம் கமல் இரண்டாவது அல்லது மூன்றாவது படித்து வந்தார்.அவர் வயது சிறுவர்கள் வெளியே விளையாடும் போது இவர் மட்டும் புத்தகம் படிப்பாராம்.அதுவும் செக்ஸ் புத்தகம்.என்னுடைய அப்பா கமலுடைய அப்பாவிடம் புகார் கூறியும் அவர் கண்டுக் கொள்ளவில்லை.அதற்கு கமல் அப்பா சொன்ன பதில் - "இந்த வயதில் அவன் இந்த புத்தகம் மற்ற சிறுவர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறான்.வேண்டாம் என்று சொன்னால் மறைத்து வைத்து படிப்பான்..அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை.."

இப்படி இருக்கிறது குணாவின் பேட்டி...

இதில் என்ன தப்பு இருக்கிறது என்றால்

1.கமல் பிறந்த வருடம் 1954.

2.1955ல் அவருக்கு வயது ஒன்று.ஒரு வயதில் எந்த குழந்தையாலும் வாசிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

3.இரண்டாவது அல்லது மூன்றாவது படித்தால் அந்த சிறுவனுக்கு வயது ஏழு அல்லது எட்டு வயதாக இருக்கும்.

4.அப்படி ஒரு வயதிலே அவர் செக்ஸ் புத்தகம் படித்தார் என்றால் உண்மையிலே உலக அதிசயம் தான்.

இப்படி யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே எடுத்து விட கூடாது.அதுவும் பத்திரிக்கையில் வேலை செய்பவர்கள் குறைந்த பட்சம் சரி பார்த்து விட்டு போடவும்.நீங்களே தப்பு தப்பாக எழுதி விட்டு வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் போட வேண்டாம்.

தன்னை விட வயது மூத்தப் பெண்ணை விரும்பும் ஒருவன் குடுக்கும் முதல் உதாரணம்.சச்சின் அல்லது காந்திஜி.அவர்கள் சாதித்ததை எல்லாம் விட்டு விடுவார்கள்.

இனிமேல் செக்ஸ் புக் படிப்பவர்களும் உதாரணம் குடுக்க இதை காட்டுவார்கள்.என்னை கேட்டால் அதில் ஒன்றுமேயில்லை.(நான்சென்ஸ் என்று திட்ட எல்லாம் வேண்டாம்.. கேள்வி ஞானம் தான்..)

அதனால் எதை எழுதினாலும் ஆராய்ந்து விட்டு எழுதவும்.

இப்படி எழுதும் நீ என்ன ஒழுங்கா என்று என் மேல் பாய வேண்டாம்.தப்பு - அது எழுத்துப் பிழையோ அல்லது கருத்துப் பிழையோ நீங்கள் எனக்கு சொல்லலாம்.நட்பு கெட்டு விடும் என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்.அது வேற..இது வேற...அடித்து கும்முங்க..

டிஸ்கி :

தம்பி வலைப்பூ ஆரம்பித்து விட்டான்.என்னை விட நகைச்சுவையாக பேசுபவன்.அவன் எழுத தொடங்கினால் நான் நிறுத்தி விட வேண்டும் என்று நினைப்பேன்.அவனுக்கு மிகவும் பிடித்த பதிவர்கள் நர்சிம் மற்றும் குருஜி.சின்ன வயதில் அவன் தளபதி படத்திற்கு போட்ட ரீமிக்ஸ் கேட்டு அதிர்ந்தவர்கள் அதிகம்.அதை இங்கே சொல்ல முடியாத காரணத்தால் சொல்லவில்லை.அது அறியாத வயசு.புரியாத மனசு.

வாழ்த்துகள் தம்பி..இன்னும் போஸ்ட் போடவில்லை என்று நினைக்கிறேன்.மடிப்பாக்கம் என்று அவன் வலைப்பூவின் பெயரில் இருக்கிறது..

7 comments:

Suresh Kumar said...

இருக்கலாம்

மணிஜி said...

எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஈரோடு கதிர் said...

// செஸ் புத்தகம்// என்று சொன்னத அப்படிப் போட்டுட்டாங்களோ என்னவோ...

எதுக்கும் அடுத்த புக் வாங்கிப் படிங்க ஏதாவது மறுப்பு வரலாம்.

(ஆஹா அடுத்த புக் வாங்க உசுப்பேத்தியாச்சு)

அகல்விளக்கு said...

//தன்னை விட வயது மூத்தப் பெண்ணை விரும்பும் ஒருவன் குடுக்கும் முதல் உதாரணம்.சச்சின் அல்லது காந்திஜி.அவர்கள் சாதித்ததை எல்லாம் விட்டு விடுவார்கள்.//

சரியாச் சொன்னீங்க தல

தம்பிய சீக்கிரம் நல்லபடியா எழுத ஆரம்பிக்கச் சொல்லுங்க தல......

லோகு said...

கமல் அந்த புத்தகம் படிச்சு, 55 வருஷம் ஆயிடுச்சு.. யாராவது விழா எடுங்களேன்..

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

யாருப்பா அந்த குனா??? பை தி வே.. பதிவூ சூப்பர்.. :))

ஊர்சுற்றி said...

ஓஹோ.... !