காட்டிற்கு சிங்கம் ராஜா என்றாலும் புலி மீது தான் ஒரு ஈர்ப்பு இன்றும் வருகிறது.சிங்கத்தைக் காட்டின் ராஜா என்று சொல்கிறோம்.காரனம் அந்த கர்ஜனையின் ஒலி ஏற்படுத்தும் கிலி.முதலில் சிங்கம் தான் நமது தேசிய விலங்காக இருந்தது.ஆனால் பின்னர் புலியை தேசிய விலங்காக அறிவித்தார்கள்.சிறுத்தை வேட்டையாடும் விலங்கைக் கூட விடாமல் பிடுங்கி தின்னும் பழக்கம் சிங்கத்திடம் உண்டு.
தவிர்க்க முடியாத நேரத்தில் சிங்கமும்,புலியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் புலி தான் ஜெயிக்கும்.அரிதாக நடக்கும் இந்த மோதலில் சிங்கம் இறந்து போகவும் வாய்ப்புகள் அதிகம்.
மேலே சொன்ன இந்த உதாரணம் காட்டிற்கு மட்டும் பொருந்தாது.இலங்கையிலும் இதுதான் நடந்து முடிந்தது.ஆனால் சிங்கத்தின் பக்கம் தான் நின்று கொண்டு புலியைக் கொன்றோம்.
எதிரிகள் தந்திரமாக நடந்து போரில் தந்த தோல்வியைக் கூட நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் தைரியம் உண்டு.ஏழு நாடுகளின் உதவி மற்றும் முயற்சி தான் இந்த தோல்விக்கு உண்மையான காரணம் என்று சொன்னார்கள்.
என்னால் இதற்கு மேல் சொல்ல முடியவில்லை.மும்பையில் விசாரிக்கிறார்கள் இலங்கையில் நிலத்தில் முதலீடு செய்தால் இலாபம் கிடைக்குமா என்று.நிலத்தை வாங்க இனி போட்டி நடக்கும்.புலி என்று சொல்லியே கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கையை விட கம்மியாகவே இருக்கும் அவர்கள் வாழ்ந்து மடிந்த இடம்.
நமக்கு தேவை பணம் தான்.அது எந்த ரூபத்தில் வந்தால் என்ன அரூபத்தில் வந்தால் என்ன.இன்று அங்கு பார்வையிட சென்ற குழுவின் திடீர் பயணத்திற்கும் இது காரணமாக இருக்குமா.
நீங்கள் வாங்கும் நிலத்தில் விளையும் உணவில் கூட உப்பு வேண்டாம்.அவர்கள் விட்ட கண்ணீர் அதில் கரிக்கும்
கடல் பொங்காதா ? அந்த கண்ணீர் துளி தேசம் தண்ணீரில் மூழ்காதா ?
பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...
ஈரோடு கதிரின் கவிதையில் இருந்து ஒரு சில வரிகள்.
என்னால் இதற்கு மேல் எழுத முடியவில்லை.என் அருமை நண்பன் கார்த்திக் - வெண்ணிற இரவுகள் என்ற பெயரில் எழுதி வருகிறார்.அவர் எழுதிய புனைவுகள் உங்களுக்காக
வலி உள்ளவன் தான் படைப்பாளி என்று சொல்லும் மதுரை படைப்பாளியின் கதை உங்களுக்காக.
இன்னும் இந்த படைப்பாளி நிறைய எழுதட்டும்.வாழ்த்துகள் தோழா..
இந்த கதையில் வக்கிரம் இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம்.அது வலி தான்.
சிங்கம் புலி
கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..!
Monday, October 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//ஏழு நாடுகளின் உதவி மற்றும் முயற்சி தான் இந்த தோல்விக்கு உண்மையான காரணம் என்று சொன்னார்கள்.//
அது போர் இல்லை..
மிகக் கொடிய வியாபாரம்
//பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...//
:(((((((((((
நன்றி தோழா உனது நட்பிற்கு தலை வணங்குகிறேன்
அர்விந்த்......
இதுபோல் எழுதுதலை தவிர வேறேதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம்.... என் செய்ய...
பிரபாகர்.
அருமையான கருத்துக்கள். வலியுணர்ந்தவன் என்ற வகையில் இதற்காக நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.
வலி நிறைந்த தமிழன்...............
நண்பரே உங்களை பற்றி பதிவு போட்டுள்ளேன் படித்து விட்டு சொல்லுங்கள்
http://vennirairavugal.blogspot.com/2009/10/blog-post_12.html
//நமக்கு தேவை பணம் தான்.அது எந்த ரூபத்தில் வந்தால் என்ன அரூபத்தில் வந்தால் என்ன.இன்று அங்கு பார்வையிட சென்ற குழுவின் திடீர் பயணத்திற்கும் இது காரணமாக இருக்குமா.//
ஓஓஒ அப்படியா!
என்னத்த சொல்ல....
வெறுப்புமிகுந்த வெற்றுமனநிலையில் ஏதும் எழுதத்தோணவில்லை.... :((
Post a Comment