சசிகுமார் நாடோடிகள் படத்தின் தெலுங்கு பதிப்பான சம்போ சிவ சம்போவில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் என்று இயக்குனர் சமுத்திரகனி ஒரு பேட்டியில் சொன்னார்.நான் கூட அது சின்னமணி வேடமாக இருக்குமோ என்று சந்தேப்பட்டு விட்டேன்.(தீபாவளிக்கு பாலிமர் டிவியில் ரவி தேஜாவும் சசிகுமாரும் பேட்டி கொடுத்தார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார்.மிஸ் பண்ணி விட்டேன்)
பிரம்மானந்தம் இருப்பதால் அவர் தான் நிச்சயம் சின்னமணியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.ரோஜா தான் இதில் மாஜி எம்.பி.இப்படியாவது அவர் எம்பி எம்பி குதித்து எம்.பி ஆனா தான் உண்டு.
ரவிதேஜா,பிரியாமணி இப்படி பெயரை பார்த்தவுடன் எனக்கு டரியல் ஆகி விட்டது.இருந்தாலும் அந்த படம் பார்க்க ஆசை.காரணம் நரேஷ்(நம்ம குறும்பு ஹீரோ) இவ்வளவு உயரமா இருந்துக்கிட்டு ஒருத்தன் குரங்கு சேட்டை பண்ணும் போது நம்மை அறியாமல் மனதில் ஒட்டி கொள்கிறான்.
அவர் நம்ம பரணி நடிச்ச வேடத்துல நடிக்கிறார்.அப்ப தான் குரங்கி சேட்டைக்கு உத்திரவாதம் உண்டு.காது கேட்காத மாதிரி அவர் எப்படி நடிப்பார் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது.
இருந்தாலும் ரவிதேஜாவை நினைச்சா தான் அடிவயிறு கலங்குது.ஆட்டோக்ராப் தெலுங்கு ரீமேக் ரவிதேஜா தான் பண்ணினார்.அவர் நடித்த ஒவ்வொரு பூக்களிலுமே பாட்டு பாத்தேன்..அவர் முகத்தில் வெளிப்படுத்திய ரசங்களைப் பாத்துட்டு நான் பட்ட பாடு..ஒரு பாட்டுக்கே இப்படினா இன்னொரு பாட்டு "நினைவுகள் நெஞ்சினில்.." அதுவும் பார்ல தண்ணியடிக்கிற எப்படி இருந்திருக்கும் - அதை நீங்களே கற்பனை செஞ்சு பாருங்க..
கத்தால கண்ணால பாட்டு இந்த படத்தில் இருப்பதாக ஒரு வதந்தி.
அதுவாவது பரவாயில்ல ரவிதேஜா நேரடி தமிழ் படத்துல நடிக்க போறாராம்.அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில்.அது காமடியா இருந்தா பரவாயில்ல..இல்ல படம் பாக்குறவங்க நிலைமை சிரிப்பா சிரிக்கும்.
கன்னடத்தில் நாடோடிகள் படத்தில் புனித் ராஜ்குமார் நடிக்க போறாராம் - சமுத்திரகனி அவரையும் தமிழுக்கு கூட்டிட்டு வராதீங்க.இங்க இருக்கிறவங்க தொல்லையே தாங்க முடியல.
சசிகுமார் மேட்டருக்கு வருவோம் - என்னுடைய கணிப்பு சரியா இருந்தா அவர் இந்த வேடம் தான் செய்வார்.நாடோடிகள் படத்தில் சசிகுமாருக்கு கோவிலுக்கு திருமணம் செய்து வைக்க போகும் போது ஒருத்தர் பைக்கில் வழி காட்டுவார்.
அப்ப ரவிதேஜாவுக்கு வழி காட்டுவது சசிகுமாரா ??
ஏற்கனவே நான் கிளப்பி விட்ட வதந்தி சசிகுமாரின் அடுத்த படத்தின் ஹீரோ சாரு நிவேதிதாவா ? பொய்யாகி விட்டது.இதுவும் அது மாதிரி ஆனால் யாரும் சண்டைக்கு வர வேண்டாம்..
டிஸ்கி :
தமிழ் ஹீரோவ வம்பு இழுத்தா என்னை எல்லோரும் சேர்ந்து அடிக்கிறாங்க.அதான் பார் ய சேஞ்ச் ரவிதேஜா..அவருக்கு தமிழே சரியா பேச வரல..அதனால அவரு ரசிகர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று நம்பி இதை எழுதினேன்.அவரு தமிழில் நடித்து பிரபலம் ஆகுறதுக்கு முன்னாடி நக்கல் அடிச்சா தான் உண்டு.விசிலடிச்சான் குஞ்சுகள் அவருக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும்.அது அப்படியே முதல்வர் வரைக்கும் போகும்.
அவருகாண்டி பிரபலகாரு ஆயிட்டாருலு எமி நிலமைலு பெத்த சிக்கலு..
காலையில் சாப்பிட்டது பொங்கலு..
இதுக்கு வருமா செங்கலு..
Saturday, October 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வணக்கம் அரவிந்த்
கண்டிப்பா செங்கல்லு தாண்டி உனக்கு
இராஜராஜன்
//அவருகாண்டி பிரபலகாரு ஆயிட்டாருலு எமி நிலமைலு பெத்த சிக்கலு//
ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் நக்கலு "
\\சமுத்திரகனி ஒரு பெட்டியில் சொன்னார்\\
எந்த பெட்டி..? தீப்பெட்டியா..?
\\இதுலயாவது அவர் எம்பி எம்.பி ஆனா தான் உண்டு.\\
சீட்ல நின்னாதான் எம்.பி. ஆக முடியும்.. எம்பினா எப்பிடி ஆக முடியும்..?
\\மனதில் ஓட்டி கொள்கிறான்.\\
மந்தில் என்ன ஓட்டுகிறார்..? பேயா..?
\\கத்தால கண்ணால பாட்டை இந்த படத்தில் இருப்பதாக ஒரு வதந்தி.\\
அது பாட்டை இல்லை பாட்டு அல்லது பாடல்.
\\அவரு தமிழா நடிச்சி பிரபலம் ஆகுறதுக்கு\\
தமிழை எப்படி நடிக்கிறது..?
ஹி..ஹி..வந்துட்டோம்ல...!
//அவருகாண்டி பிரபலகாரு ஆயிட்டாருலு எமி நிலமைலு பெத்த சிக்கலு..
காலையில் சாப்பிட்டது பொங்கலு..
இதுக்கு வருமா செங்கலு.. //
செங்கலு இல்ல கருங்கல்லு தான் தல வரும்.
விடுங்க. அதெல்லாம் நடக்காது........
எனக்கு நம்பிக்கையிருக்கு
நன்றி வனம் - வீடு கட்ட போறேன் செங்கல் தேவை
நன்றி யூர்கன் க்ருகியர்
நன்றி ராஜூ. கூகுள் தமிழ் டிரான்ஸ்லேஷன் யூஸ் பண்ணா நிறைய தப்பு வருது.இனிமே குறைக்கிறேன்.நீங்க வந்தது எனக்கு தெரியும்.பின்னூட்டம் போட்ட பிறகு ஆன்லைன்ல ஆளே இல்ல..இனிமே கூட்டம் எங்கே வர போகுது..
நன்றி அகல் விளக்கு - கருங்கல் கிடைத்தாலும் சரி
M.குமரன் சன் ஆப் மகாலெஷ்மி தெலுங்கு ஒரிஜினல்ல மூஞ்சி முத்தின ரவிதேஜா ஜெயசுதாவிற்கு மகனா வருவாரே.. அதப்பத்தி சொல்லலையா அரவிந்த்...... :))
டி.ராஜேந்தருக்கு பச்சை பேன்ட் மாட்டி தெலுங்கு பேச வைச்சா எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும் ரவிதேஜா தமிழ் பிரவேஷம்
நன்றி துபாய் ராஜா
இதுல கொடுமை என்னனா பிரகாஷ் ராஜ் அந்த படத்துல ரவி தேஜாவுக்கு அப்பா
நகைச்சுவை வேடங்களில் ஜொலிக்க கூடிய நடிகர் ரவி தேஜா....................நான் கிக் பாத்தேன்
நன்றாய் நடித்து இருந்தார்
//அவருகாண்டி பிரபலகாரு ஆயிட்டாருலு எமி நிலமைலு பெத்த சிக்கலு..
காலையில் சாப்பிட்டது பொங்கலு..
இதுக்கு வருமா செங்கலு..//
உங்கலு நக்கலுக்குலு அளவே இல்லலு.. :))
Ravi Tejavoda autograph venumna nalla illama irukkalaaam.... aana he has performed well in vikramarkudu, dubai seenu, or the recent kick.... I have a feeling that nadodigal telugu gonna rock.... Ravi teja and allari naresh good combination
:)
//.. இங்க இருக்கிறவங்க தொல்லையே தாங்க முடியல ..//
இதுல உள்குத்து ஏதும் இருக்கா..?
Post a Comment