Monday, October 26, 2009

துவையல் - விளையாட்டு ஸ்பெஷல்

செஸ் விளையாடக் கற்று கொண்டவுடன் நான் நேராக என் திறமையைக் காட்ட களம் இறங்கியது மா நில அளவிலான போட்டியில்.முதல் போட்டியே ஒரு பாகாசுரனுடன்.(என் கோட்டையை எடுத்து விட்டான்).நான் செய்யும் மூவ்களை(வலி நிவாரண மருந்து அல்ல..காய் நகர்த்தல்) எழுத தாள் கொடுத்தார்கள்.எனக்கு அது எழுத தெரியாமல் அவனை பார்த்து காப்பியடித்தேன்.அவன் சிரித்து விட்டான்.போட்டியின் நடுவில் கேஸலிங்க்(யானை மற்றும் ராஜாவை இடம் மாற்றுவது) என்ற மூவ் செய்தான்.ஏண்டா தப்பா ஆடுற என்று அவன் கையைப் பிடித்து ஒரே கலாட்டா.நடுவர் தம்பி இப்படியே அடுத்த தடவை பண்ணினா நீ வெளியே கிடப்ப.. என்று சொன்னார்.உடனே நான் சொன்னேன்."இன்னும் இரண்டு மூவ் தான்..அவனே என்னை வெளியே அனுப்பி விடுவான்..அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.." .இதை கேட்டு அவர் சிரித்து விட்டார்.அந்த பையன் வெளியே வந்து அவனுடைய அப்பாவிடம் என்னை காட்டி காட்டி சிரித்து கொண்டியிருந்தான்.ஆறாவது போட்டி முடிவில் அவனை விட பகாசுரன் வந்து அவன் கோட்டியை எடுத்து விட்டான்.நமக்கு வழக்கம் போல தோல்வி தான்.வெளியே வந்து பார்த்தால் அவனுடைய அப்பா அவனை திட்டி தீர்த்து விட்டார்.அவன் நிலைமை எனக்கு சிரிப்பு மூட்டாமல் பரிதாபமாக இருந்தது.முடிவு எனக்கு தான் கடைசி இடம்.நான் கூட இரண்டு வெற்றி பெற்று இருந்தேன்.அதில் ஒரு ஆட்டத்தில் எதிராளி வரவில்லை.

அந்த நடுவர் வந்து தனியாக என்னிடம் கேட்டார்.."உனக்கு வருத்தமேயில்லையா.."."இதில் என்ன வருத்தம்..என்னை விட திறமைசாலிகளிடம் தானே தோற்று போனேன்..".எல்லோரும் விளையாட அப்பா,அம்மா,செஸ் போர்ட்,சாப்பாடு என்று வருவார்கள்.நான் எப்பவும் தனியாகவே போவேன்.செஸ் போர்ட் கூட எடுக்க மாட்டேன்.கை வீசிக் கொண்டு போவேன்.யோசித்து பார்த்தால் நான் தேர்வுக்கு கூட பேனா,பென்சில்,ஸ்கெட்ச் என்று எதுவும் எடுத்து போனதில்லை.அது கூட ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு பெண் தான் எனக்கு எல்லாம் எடுத்து வருவார்.அதுவும் புதிதாக.வழக்கம் போல அந்த நட்பிலும் தோல்வி.(நட்பு தான் வேற எதுவும் இல்லை..என் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்க வேண்டாம்..)

எந்த ஆட்டத்தையும் யாரும் சொல்லி குடுக்காமல் நானே கற்று கொள்வேன்.நான் ஆசையாக கேட்டு கற்று கொண்ட ஒரே விளையாட்டு செஸ்(எழுத்துப் பிழை இல்லை) தான்.அதிலும் பிரன்ச் செஸ்(கிஸ் இல்லை) என்று முறையுண்டு.வித்தியாசமாக இருக்கும்.எப்படி என்றால் யானை மந்திரி கட்டத்திற்கு வந்தால் மந்திரி ஆகிவிடும்.குதிரை கட்டத்தில் (குதிரைக்கு நேராக இருக்கும் எட்டு கட்டத்தில் மட்டும்) யானை வந்தால் குதிரை ஆகிவிடும்.அது போலவே மந்திரியும்,குதிரையும் வேறு கட்டதிற்கு சென்றால் அது மாதிரி மாறி விடும்.பிரன்ச் என்றாலே வித்தியாசம் தான் அது கிஸ்ஸாக இருந்தாலும் சரி செஸ்ஸாக இருந்தாலும் சரி.

நெப்போலியன் ஒரு தீவில் கைதியாக அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு விளையாட செஸ் அட்டையும்,காய்களும் ஒரு நண்பர் பரிசளித்தார்.அந்த காய்களை அடியில் திருப்பினால் அவர் தப்பிக்க ஒரு திட்டம் வைக்கப்பட்டது.நெப்போலியன் கடைசி வரை திருப்பவில்லை.தப்பிக்கவும் இல்லை.அந்த திட்டம் இருந்தது என்று பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் கண்டுப்பிடித்தார்கள்.(சில ஆண்டுகளுக்கு முன்பாக).இதில் இருந்து நமக்கு வேண்டாம் எனக்கு கிடைத்த பாடம் - எந்த நேரத்திலும் தளர்ந்து விட வேண்டாம்.எந்த கஷ்டத்திலும் வெளியே வர ஒரு வழி நிச்சயமாக இருக்கும். நாம் தான் ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும்.

வாசிம் அக்ரமின் மனைவி ஹியுமா இறந்த செய்தியைப் பார்த்து மனசு மிகவும் வலித்தது.எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர்.அது போல ஒரு வேகப் பந்து வீச்சாளரை நம்மால் உருவாக்க முடியாதது நமக்கு அசிங்கமே.நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டும் அவர் தன் திறமையை நிரூப்பித்தார்.இந்த இக்கட்டான நிலைமையிலும் இருந்து அவர் வெளியே வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

நேற்று மதியம் மேட்ச் பார்த்து கொண்டியிருக்கும் போது சச்சின் அவுட்டான உடன் நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நண்பர் சிரித்து விட்டார்.அந்த வார்த்தைகள் .."இப்படியா அடிக்கிறது..நேரா அடிச்சி இருந்தா ஃபோர் தான்..நானே அடிச்சியிருப்பேன்.." .அதோடு நிறுத்தி இருக்கலாம்.என் வாய் தான் சும்மா இருக்க விடாதே..ஹர்பஜனையும்,பிரவீன் குமாரையும் தாறுமாறாக கலாய்த்தேன்.எப்படி என்றால் நடந்து முடிந்த சாலஞ்சர் போட்டியில் ஹர்பஜன் ஒண்டவுன் இறங்கினார்.பிரவீன் தான் உ.பி தொடக்க ஆட்டக்காரர் அவங்க அணி நிலைமை எப்படி இருக்கும் பாருங்க என்றும் சொன்னேன்.இன்னும் கொஞ்சம் அவர்களைப் பற்றி வாயால் வாசித்தேன்.(கெட்ட வார்த்தைகள் கிடையாது..).பார்த்தால் அவர்கள் இருவரும் நேற்று அடித்து வெளுத்தார்கள்.(ஒப்பனிங்கு நல்லாயிருந்தது ஆனா பினிஷிங்கு..) .இன்னும் கொஞ்சம் திட்டி இருக்கலாம்.ஜெயித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இதில் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் - இனிமே என்னை நானே திட்டிக் கொள்ளப் போகிறேன்.(அப்படியாவது நல்லா எழுதலாம்னு ஒரு நல்ல எண்ணம் தான்)

சச்சின் நேற்று ஆப் ஸ்டம்பிற்கு வெளியே போட்ட அல்வாவை எடுத்து ரிக்கி பாண்டிங் கையில் கொடுத்தார்.அதே வாட்சனின் பந்துகளை பஜ்ஜியும் பிரவீனும் அடித்து காயப் போட்டார்கள்.சச்சினிடம் ஒருநாள் பயிற்சி எடுக்க ஏலம் விட்ட தொகை பனிரெண்டு லட்சம்.போய் காசை கரியாக்காமல் பஜ்ஜியிடம் சொஜ்ஜி போட கற்று கொள்ளுங்கள்.எங்கிட்ட வாங்க நான் ரன் எடுக்காமல் அதே சமயம் அவுட் ஆகாமல் மொக்கை(எது எடுத்தாலும் மொக்கை தானா என்று டென்ஷன் ஆக வேண்டாம்.நமக்கு எது வருதோ அதை தான் செய்ய முடியும்.) போடுறது பற்றி சொல்லித் தருகிறேன்.

இந்த வார வம்பு..

வேற யாரு சச்சின் தான்.இப்படி வம்பு இழுத்தால் தான் அடுத்த போட்டியில் அடிப்பார்.

இடது கை வேகப் பந்து வீச்சாளர்களைக் கண்டாலே சச்சின் குலை நடுக்குவது வாடிக்கை.அதற்கு சமீபத்திய உதாரணம்.பாகிஸ்தானின் முகமது அமீர்.பதினெட்டு வயது கூட ஆகவில்லை.சொல்லி கில்லி மாதிரி சச்சின் விக்கெட்டை எடுத்தார்.இடது கை பந்து வீச்சாளர்கள் போடும் இன்சுவிங்கர் சச்சினுக்கு அவுட் சுவிங்கராக வருகிறது.உடனே அதை தேவை இல்லாமல் தோட்டு கீப்பர் அல்லது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டுவார்.இன்னும் நிறைய கொடுக்க முடியும்.இன்றும் அவர் ஆட முடியாமல் தவிக்கும் ஒரு பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.(இதற்கும் என்னை வெளுக்க வர வேண்டாம்..அடிக்கடி வெளுத்தால் என் சட்டையில் சாயம் போகிறது..)

8 comments:

லோகு said...

//நெப்போலியன் கடைசி வரை திருப்பவில்லை.தப்பிக்கவும் இல்லை.அந்த திட்டம் இருந்தது என்று பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் கண்டுப்பிடித்தார்கள்.(சில ஆண்டுகளுக்கு முன்பாக).இதில் இருந்து நமக்கு வேண்டாம் எனக்கு கிடைத்த பாடம்//

விளையாட தெரியுமோ தெரியுதோ, செஸ் போர்டை திருப்பி பார்க்க வேண்டும்..

லோகு said...

//ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு பெண் தான் எனக்கு எல்லாம் எடுத்து வருவார்//

இவங்களை பற்றி குறைஞ்சது 10 போஸ்ட்லயாவது சொல்லி இருப்பீங்க.. சம்திங்.. சம்திங்..

லோகு said...

//இதற்கும் என்னை வெளுக்க வர வேண்டாம்..அடிக்கடி வெளுத்தால் என் சட்டையில் சாயம் போகிறது.//

எல்லாரும் நீங்க ரொம்பபபபப நல்லவர்ன்னு நெனச்சுட்டாங்க போல..

புலவன் புலிகேசி said...

//(இதற்கும் என்னை வெளுக்க வர வேண்டாம்..அடிக்கடி வெளுத்தால் என் சட்டையில் சாயம் போகிறது..)//

போங்க போய் புது சட்ட வாங்குங்க. நெறைய வெளுக்கணும்....

அகல்விளக்கு said...

//பிரன்ச் என்றாலே வித்தியாசம் தான் அது கிஸ்ஸாக இருந்தாலும் சரி செஸ்ஸாக இருந்தாலும் சரி.//

தல!!! நீ கலக்கு தல.

க.பாலாசி said...

//"இதில் என்ன வருத்தம்..என்னை விட திறமைசாலிகளிடம் தானே தோற்று போனேன்//

அதானே...இது சகஜம் தானே....இதுக்குபோய்....

Anonymous said...

செஸ் காய் நகர்த்தல்களை எழுத இரு வேறு முறைகள் உள்ளன. ஆடிய ஆட்டத்தை மீண்டும் ஆடிப்பார்த்து தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் எதிராளியின் பலம் பல்வீனங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.

Nathanjagk said...

அட்டகாசம் அர்விந்த்! ​செஸ் விளையாட்டை இப்படி எழுதி எங்களை ​செக்-மேட் ஆக்கீட்டிங்களே? உங்ககிட்ட ​ரொம்ப பிடிச்சதே உங்களை நீங்களே குஷாலா கலாய்ச்சுக்கறதுதான். ஆனா.. இதுதான் நையாண்டியில் முக்கியமான பாகம்!
நடத்துங்க!