தாஜ்மகாலும் பிண்ணனியில் பெட்டிகோட் ஆட்சியும்
படிக்க
ஜஹானாரா பேகம் இவர் தான் மும்தாஜ் இறந்த உடன் அவர் இடத்தை நிரப்பியவர்.மும்தாஜ்-ஷாஜகானின் மகள்.மும்தாஜ் இறந்த சமயம் அவர் வைத்திருந்த பணம் ஒரு கோடி.அதில் பாதி இவருக்கு கிடைத்தது.அவருடைய அதிகாரம் எப்படி இருந்தது என்றால் பெண்களுக்கு தனி அரண்மனை கிடையாது அதை உடைத்தவர் இவர் தான்.
இவருக்கு பிறகு பிறந்த தாராவின் மீது பாசம் அதிகம்.1644ல் தீ விபத்தில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பிறகு பிழைத்தவர்.தாரா ஆட்சிக்கு வர உழைத்தவர்.அந்த ஒரு காரணத்தினாலே அவுரங்கசீப்பின் கோபத்திற்கு ஆளானவர்.தாராவை ஆதரிக்க அவருக்கு தாரா குடுத்த வாக்குறுதி தான் காரணம்.
அக்பர் காலத்தில் முகலாய இளவரசிகள் திருமணம் செய்ய கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.மகள் வயிற்று வாரிசுகள் சண்டை இறங்காமல் இருக்க கண்டுப் பிடித்த வழி தான் அது.அதை தாரா ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுகிறேன் என்று வாக்கு கொடுக்க, இவரும் ஆதரவு கொடுக்க,ஆவுரங்கசீப் கோபம் கொள்ள.....
ஷாஜகானுக்கு உடம்பு சரியில்லாமல் போக,அதை காரணம் காட்டி வாரிசுகள் சண்டையில் இறங்க,தாராவை வென்று கொன்று விட்டு ஆட்சிக்கு வருகிறார் ஆவுரங்கசீப்.அப்பாவை ஒரு அறையில் தள்ளி பூட்டி விட்டு அரியணையில் அமர்கிறார்.கூடவே ஒரு பெட்டிகோட்டும் வருகிறது.அது தாராவின் தங்கையும்,அவுரங்கசீப்பிற்கு முன்னால் பிறந்த அக்காவும் ஆன ரோஷானாரா பானு.அக்காகளுக்கு என்றுமே அடுத்து பிறக்கும் தம்பியின் மீது பாசம் அதிகம்.அதற்கு உதாரணம்..
ஜஹானாரா பேகம் - தாரா.
ரோஷானாரா பேகம் - அவுரங்கசீப்.
தம்பிக்காக கொலை செய்ய கூட செய்ய தயங்காத அக்காமார்கள்.தமிழகத்தில் கூட அந்த சர்ச்சை உண்டு.இராஜ ராஜ சோழனின் மீது உள்ள பாசத்தால் குந்தவையே ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சதி செய்தார் என்ற வதந்தி உண்டு.ஆதித்த கரிகாலன் இறக்கும் போது அந்த அறையில் வந்தியத்தேவனும் உண்டு.இவர் தான் குந்தவையின் கணவர்.(ஐயா சாமிகளா அது வதந்தி தான் இதுக்கு என்னை வெளுக்க வர வேண்டாம்.இப்படி எதையாவது கிளப்பி விட்டால் அந்த சந்தேகம் தீரும் என்ற ஆசை தான்..தோசை தான்..)
தாராவும்,ஷாஜகானும் அவுரங்கசீப்பிற்கு கடிதம் அனுப்பி வரவழைத்து தீர்த்து கட்ட முடிவு செய்ய,ஜஹானாரா பேகமும் உடன் இருக்க குறுக்கு வழியில் ரோஷானாரா பேகம் ஒரு கடிதம் அனுப்பி அவுரங்கசீப் தலை நகரத்திற்கு வராமல் பார்த்து கொண்டார்.அந்த பாசம் தான் ஆட்சிக்கு வந்ததும் வெளிப்பட்டது.
தாராவின் தலையை வெட்டி பார்சலில் அனுப்ப உதவியதே அருமை அக்கா ரோஷானாரா தான்.அக்பர் ஒரு சட்டம் கொண்டு வந்தால் தாரா வேண்டுமானால் அதை நீக்க நினைப்பார்.அவுரங்கசீப் அக்பருக்கு நாலுப்படி முன்னால் தான் நிற்பார்.முகலாய இளவரசிகள் திருமணம் செய்யாமல் இருக்க போட்ட சட்டத்தை இவர் எப்படி நீக்குவார்.
பல காதலர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.ஒரு காதலனுடன் ரோஷானாரா கையும் களவுமாக பிடிப்பட்டவுடன் இருவரும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்கள்.
திரும்பவும் ஜஹானாரா ஹாரத்தின் தலைவியாக வருகிறார்.ஷாஜகான் இறந்தவுடன் அவுரங்கசீப் இந்த பதவியைத் தருகிறார்.அப்பாவுடன் இவரும் எட்டு ஆண்டுகள் அவருக்கு துணையாக வீட்டு சிறையில் இருக்கிறார்.
ஷாஜகான் ஆசைப்பட்டு கேட்டது அவருக்காக ஒரு கருப்பு தாஜ்மகால் கட்ட வேண்டும் என்பதே.அதை மகன் அவுரங்கசீப் மறுத்து விடுகிறார்.அதற்கு சொன்ன காரணம் அது ஒரு தண்டசெலவு.மும்தாஜ் கல்லறைக்கு பக்கத்தில் அவரை புதைத்து விடுகிறார் அவுரங்கசீப்.
ஷாஜகானுக்கும் அவருடைய மகள் ஜஹானாராவிற்கும் காதல் இருந்ததாக ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.ஜஹானாரா தீக்காயம் பட்டு இருந்த போது அவருக்கு மருத்துவம் செய்ததே ஒரு ஆங்கில மருத்துவர் என்று பீலா விட்ட வரலாற்று நிபுணரும் உண்டு.அதை இல்லை என்று நிரூப்பித்தவரும் ஒரு ஐரோப்பிய ஆசிரியர் தான்.இந்த காதலை எந்த அளவிற்கு நம்புவது என்று எனக்கு தெரியவில்லை.யாமம் நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன் இதை பற்றி எழுதியிருக்கிறார்.
ஆவுரங்கசீப் ஆட்சியில்,அக்பர் ஆட்சியிலும் தொடக்கத்தில் பெட்டிகோட் ஆதிக்கம் இருந்தாலும் அவர்கள் அதை உடைத்து விட்டார்கள்.சொந்த மகனையும்,அப்பாவையும் சிறையில் தள்ளிய பெருமை இவருக்கு தான் உண்டு.அந்த அளவிற்கு இவர் கண்டிப்பானவர்.
குடிப்பழக்கம் கிடையாது.ஒரு பெண்ணிற்காக அதுவும் அவள் காதலொடு கேட்டதற்காக இவர் உதடு வரை கொண்டு சென்றுள்ளார்.ஆனால் அந்த பெண் தட்டி விட,குறுகிய காலத்தில் அந்த பெண் இறந்து விட துக்கத்தில் காட்டில் வேட்டையாட சென்றாராம்.(நாம என்ன செய்வோம் இந்த நேரத்தில் குடிக்க கற்று கொள்வோம்.) காட்டில் மிருகங்கள் கணிசமாக குறைந்த பின் தான் இவர் துக்கம் தீர்ந்ததாம்.
இறக்கும் போது கூட அந்த செலவிற்கும் அவர் குல்லா தைத்து விற்று காசு சம்பாதித்து கொடுத்தாராம்.இவர் இருக்கும் வரை ஸ்ராங்காக இருந்த பேஸ்மென்ட் அவர் இறந்த பின் வீக் என்ட் தோறும் வீக்காக மாறியது.
டிஸ்கி :
தாஜ்மகால் ஷாஜகானுக்கும் கட்டியிருந்தால் எப்படியிருக்கும்...அப்படி அவுரங்கசீப் கட்டியிருந்தால் காதலிகளுக்கு வெள்ளை தாஜ்மகால் பரிசாக கிடைப்பது போல தந்தைகளுக்கும் ஏதாவது தாஜ்மகால் பரிசாக கிடைத்து இருக்கும்.
Wednesday, October 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//தந்தைகளுக்கும் ஏதாவது தாஜ்மகால் பரிசாக கிடைத்து இருக்கும்.//
அப்டீன்றீங்க... எனக்கென்னவோ நம்பிக்கையில்ல.. ;)
//.. பீர் | Peer said...
//தந்தைகளுக்கும் ஏதாவது தாஜ்மகால் பரிசாக கிடைத்து இருக்கும்.//
அப்டீன்றீங்க... எனக்கென்னவோ நம்பிக்கையில்ல.. ;) ..//
எனக்கும் நம்பிக்கை இல்லைங்க..??!!
//ஷாஜகானுக்கும் அவருடைய மகள் ஜஹானாராவிற்கும் காதல் இருந்ததாக ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்//
யாமம் நாவலை நானும் படிக்க வேண்டும் ..............நல்ல தகவல் நண்பா...........வரலாற்றை பற்றிய பதிவுகள் இனும் நிறைய எதிர்பார்கிறேன்
அப்படி தந்தை மகள் காதல் என்றால் ....sigmund freud சொல்வது தவறில்லையே....................
உண்மையாக கூட இருக்கலாம்
//காட்டில் மிருகங்கள் கணிசமாக குறைந்த பின் தான் இவர் துக்கம் தீர்ந்ததாம்.//
சரியாச் சொன்னீங்க தல.
நாம என்ன பண்ணுவோம்...
பாட்டிலோ இல்ல காசோ காலியான பின்தான் துக்கம் தீர்ந்திருக்கும்.
Post a Comment