Friday, October 23, 2009

பேராண்மை,கமல்,குலால்,சாரு,ஆஸ்கர்

நான் இந்திய சினிமாவை பற்றி பேசும் போது அடிக்கடி உச்சரிக்கும் வாக்கியம்."நாம் முப்பது வருடங்கள் பின் தங்கி இருக்கிறோம் ஆங்கிலம் அல்லது கொரியன் ரஷ்யன் அல்லது வேறு எந்த மொழி(இந்திய மொழிகள் தவிர்த்து) சினிமாவுடம் ஓப்பிடும் போது அது கதையாக இருந்தாலும் சரி தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி) இன்று அந்த வார்த்தைகள் பொய்யாகி இருக்கிறது.அது முப்பது வருடம் அல்ல இன்னும் ஏழு வருடங்கள் அதிகம் என்று உணர்த்தியிருக்கிறார் ஜனநாதன்.காரணம் பேராண்மை படம் 1972லில் வெளி வந்த ஒரு ரஷ்ய படத்தின் தழுவல்(உருவல் என்று சொன்னால் மிகச் சரியாக பொருந்தும்).

இதே ஜனநாதன் சஞ்சய் லீலா பன்சாலி சாவாரியா(சாவுரியா இல்ல) படம் எடுத்தவுடன் இயற்கை படத்தை உருவி விட்டார் என்று தைய தக்கா என்று குதித்தார்.அது போல அந்த ரஷ்ய இயக்குனர் குதிக்க மாட்டார் என்பது நிச்சயம்.அவருக்கு இதையெல்லாம் பார்த்தால் தானே தெரியும்.நான் அடிக்கடி சொல்லும் இன்னொரு வாக்கியம் "பணம் சேர சேர மூளையும் குறுக்கு வழியிலே போகும் என்று.." அதுவும் உறுதியாகி இருக்கிறது.நாம் என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று யாரும் நினைத்து எந்த படைப்பையும் உருவாக்கி விட வேண்டாம்.அது நிச்சயம் பல்ப் வாங்கி பிரகாசமாக எரியும்.ஆனால் இயற்கை படமே ரஷ்ய(ரூஷ்ய) நாவலான வைட் நைட்ஸ் என்பதின் தழுவலே.(இந்த நாவலை பற்றி இன்னும் ஆழமாக விவாதிக்க என் உயிர் நண்பன் வெண்ணிற இரவுகள் என்ற பெயரில் பதிவு எழுதி வரும் கார்த்திக்கிடம் பேசலாம்)

இயற்கை படத்தை கூட நான் தழுவல் என்று ஓத்துக் கொள்வேன்.ஆனால் பேராண்மை(இதற்கு எனக்கு அர்த்தம் தெரியுமா என்று ஒரு அருமை நண்பர் கேட்கிறார்) படத்தை உருவல் என்று தான் சொல்ல முடியும்.அந்த ரஷ்ய படத்தில் வருவதைப் போல 5:16 என்ற ரேஷியோவில் எதிரிகளை அழிக்கிறார்கள்.(இந்த எண்ணிக்கையை கூடவா மாத்தக் கூடாது)

நான் இந்த சண்டையை ஒரு பதிவோடு நிறுத்தி விடலாம் என்று தான் நினைத்தேன்.ஆனால் நேற்று ஒருவர் வந்து பேராண்மை பதிவு என்று நினைத்து கொண்டு ஆதவன் பதிவில் "கமல் என்ன பெரிய ஆளா.." என்று பின்னூட்டம் போடுகிறார்.எனக்கு பதிலுக்கு பின்னூட்டம் போட முடியாத காரணத்தினால் இங்கே அதற்கு பதில் சொல்கிறேன்.ஆமாம் பெரிய ஆள் தான்.உன்னை போல் ஒருவன் படத்தில் திரைக்கதை என்பதில் கமல் பெயருடன் நீரஜ் பாண்டே என்று வரும்.என் தம்பி சிரித்து விட்டு சொன்னான் கமல் பெயர் எப்படி அதில் வரலாம் என்று.இதுவே மற்றவர்களாக இருந்தால் அவர்கள் பெயர் மட்டும் தான் வரும்.உதாரணம் வேண்டாம் என்று நினைக்கிறேன்.கமல் மிக பெரிய வெற்றி படத்தில் அந்த இயக்குனர் பாதியில் படத்தை விட்டு விட்டு சென்று விட்டார்.கமல் தான் பாதி படத்தை இயக்கினார்.இயக்கம் என்பதில் கமல் தன் பெயரை போடவில்லை.(இதற்கு உதாரணம் தருகிறேன்..மன்மதன் படத்தை உண்மையில் இயக்கியது யார்..).இந்த பேராண்மை சண்டைக்கு கமலை இழுக்க வேண்டாம்.

நான் தப்பாக எழுதி விட்டேன் என்று முதல் பாயிண்டை மட்டும் காப்பி செய்து ஆர்கூட்டில் பேஸ்ட் செய்து விவாதிக்கிறார்கள்.சரி அதுவும் தவறு இல்லை என்று விளக்கத்தோடு சொல்லி விட்டேன்.மத்த கேள்விகளுக்கு பதில் என்ன..நான் படமே பார்க்காமல் விமர்சனம் எழுதியிருக்கிறேன் என்று சொல்வது போல் உள்ளது.சாருவின் குலால் விமர்சனத்தில் ஒரு சின்ன தவறு இருக்கிறது.உடனே அவர் படம் பார்க்கவில்லை என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த சாட்டிலைட் விவாதம்.இந்த கட்,காப்பி,பேஸ்ட் முறையால் நானும் ஒரு ரவுடியாக உருவாகி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

ஜன நாதன் நல்ல திறமையான இயக்குனர்.கதை கிடைக்காமல் படத்தை உருவுவதை விட்டு விட்டு நல்ல கதாசிரியர்களிடம் இருந்து கதையை வாங்கி படம் எடுக்கலாம்.கூட்டு முயற்சிக்கு ஒரு உதாரணம் குலால்.அந்த படத்தின் நாயகன் ராஜ் சிங்க் சௌத்ரி தான் திரைக்கதை.கே.கே.மேனனின் அண்ணனாக(மன நிலை பாதிக்கப்பட்ட) நடித்த பியூஸ் மிஸ்ரா தான் இசை.நாங்கு பாடல்கள் பாடியுள்ளார்.

இங்கு கதைகள் கொட்டி கிடக்கிறது.எடுக்க தான் ஆள் இல்லை.திறமையான பதிவர்கள்(நான் இல்லை) இருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டால் கதை என்ன இன்னும் நிறைய திறமைகளைக் காட்டுவார்கள்.இன்று பத்திரிக்கை வரை வந்து விட்ட பதிவர்கள் நாளை சினிமாவிலும் சாதிப்பார்கள்.

ஆஸ்கர் விருதை என்றாவது தட்டி விடுவோம் என்று கனவு காணுபவர்களுக்கு அமீர்கான் சொன்னதை ஒரு முறை நினைத்து பார்க்கவும். "அவர்கள் எடுத்த படத்தையே திரும்ப எடுத்து விருதிற்கு பரிந்துரை செய்தால் எப்படி விருது கிடைக்கும்.."

டிஸ்கி :

பொன்வண்ணனைக் கொன்று விட்டு எதிகளை அழிக்கும் போது இறந்து விட்டார் என்று அவர் மனைவியிடம் விருதை கொடுப்பது மாதிரி படம் எடுத்து இருந்தால் ஒருவேளை நான் இத்தனை கேள்விகள் கேட்டு இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.ஜாதிபேதம் இல்லை என்று யார் கூறினாலும் இப்படி படம் எடுத்து இருக்கிறது என்று ஞாபகப்"படுத்துகிறார்கள்".வனத்தை காப்போம் என்று சொல்லிவிட்டு இந்த படம் எடுக்க காட்டையே அழித்து இருக்கிறார்கள்.

மதிமாறனின் பேராண்மை விமர்சனம் படிக்கவும்.

மக்கள் தொலைகாட்சியில் வெளியான அந்த ரஷ்யப் படத்தை பார்த்து இருந்தால் காசும் மிச்சம் சண்டையும் மிச்சம்.

23 comments:

நையாண்டி நைனா said...

present sir.

M.G.ரவிக்குமார்™..., said...

நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க!.....கமல் பேட்டி குடுத்த மாதிரி இருக்கு!...........

அகல்விளக்கு said...

எல்லாரும் பாத்துக்கங்க

நம்மாளும் ரவுடிதான்...

நம்மாளும் ரவுடிதான்...

ஈரோடு கதிர் said...

அரவிந்த் ரொம்ப சினிமாவிலேயே மிதக்கிறீங்க...

கொஞ்சம் வெளியே வாங்க

...ப்ளீஸ்

Unknown said...

நீங்க என்னதான் கத்தினாலும் யாரும் திருந்த போகிறது இல்ல.. இனி வரும் காலங்களில் கண்டேன் காதலை, வேட்டைக்காரன் போன்ற அட்டு படங்களை விமர்சனம் செய்து கால விரையம் செய்யாமல் கதை கவிதை என திசை மாறினால் இதமாக இருக்கும்.

பீர் | Peer said...

குட்.

பீர் | Peer said...

அடுத்த பதிவில் புது சப்ஜக்ட் புடிப்பீங்களா? :)

ஆ.ஞானசேகரன் said...

இங்க என்னமோ நடக்குது! ம்ம்ம்ம்ம்

வெண்ணிற இரவுகள்....! said...

பேராண்மை கருத்தியல் ரீதியாக நல்ல படம் .......................
உலக சினிமா ரசிகர்கள் எப்படி எடுத்தாலும் பார்பார்கள் ....................
இங்கே வடிவேலு இல்லாமல் காய் நகர்த்த முடியாது ...........
நீங்கள் கேட்கலாம் ஏன் சுப்ரமணியபுரம் இல்லையா பருத்தி வீரன் இல்லையா என்று ...................நம் மக்கள் எதார்த்தமான படத்தில் காதல் இருந்தால் வரவேற்பார்கள் .................நல்ல படங்கள் "அன்பே சிவம்""கற்றது தமிழ்" ஏன் வெற்றி பெற வில்லை ...................................................................

வெண்ணிற இரவுகள்....! said...

ஏன் பொன்வண்ணனுக்கு விருது கொடுக்க பட்டது ..................
ஆம் அது இந்தியாவில் புதைந்துள்ள ஆதிக்கத்தை தான் சொல்கிறது ..................
உழைக்கும் வர்க்கம் உழைக்க ...............
சுரண்டும் வர்க்கம் சுரண்டுகிறது .................
அதை இதை விட எப்படி சொல்ல முடியும்

வெண்ணிற இரவுகள்....! said...

வடிவேலு தேவையா என்று கேட்பிர்கள் ................வடிவேலு ஒரு குணசித்திர நடிகராக தான் உள்ளார்...................."நீங்க அவங்களுக்கு உலைகரத விட்டு நம்ம புள்ள குட்டிகளா காப்பாத்துங்க " "செருப்பு தக்கறவன் செருப்பு தான் தைக்கணுமா .................."அந்த வசனம் பேசுவரே கவனிக்க வில்லையா நண்பா

வெண்ணிற இரவுகள்....! said...

வடிவேலு வணிக ரீதி என்றால் ...............கமல் படத்தில் ஏன் பாடல்களை வைக்கிறார் ...............பாடல்கள் தேவை இல்லையே ..........நல்ல நிலைமையில் இருக்கிற உலக நாயகனுக்கே பாடல் தேவை படுகிறது ..........................பேராண்மைக்கு வடிவேலு தேவை படுகிறார்

வெண்ணிற இரவுகள்....! said...

எப்படி கன ரக ஆயுதங்கள் கல்லூரி மாணவிகள் உபயோக படுத்துகிறார்கள் என்பது உங்கள் கேள்வி ..................................
படத்தை நான் நான்கு முறை பார்த்து விட்டேன் ....................
m14 ரக கன்னி வெடிகளை எப்படி வைக்க வேண்டும் என்று ரவி சொல்கிறார் ......
இந்த ஆய்தம் pistol type என்று சொல்கிறார் ...அதை நாம் பார்க்கும் போது நமக்கே
எப்படி உபயோக படுத்தலாம் என்று தெரியும் ................படித்தவர்கள் NCC ஏன் அவர்களால் உபயோக படுத்த முடியாதா

வெண்ணிற இரவுகள்....! said...

நாய் துறத்துகிறது என்றால் நாம் வேகமாக ஓடுவோம்..............கடினமான சமயங்களில் நம் திறமை வெளிப்படும் .............சம்பவங்கள் நமக்கு பல விடயங்கள் கற்று கொடுக்கும் ............ஈழ தலைவன் அண்ணன் பிரபாகரன் வெடிகளை தயாரிக்க தானே கற்று கொண்டானாம் ...........................எது அவனுக்கு கற்று கொடுத்தது அப்படி இருக்கும் போது இந்த ஆயுதம் பயன்படுத்துவது ...............ஒரு விடயமா

வெண்ணிற இரவுகள்....! said...
This comment has been removed by the author.
வெண்ணிற இரவுகள்....! said...

"உன்னை போல் ஒருவனுக்கு" வருவோம் .....................ஒரு நான்கு தீவிர வாதிகளை கொன்றால் போதுமா .........அவர்கள் அம்புகள் ....அவர்களை எய்தவர்கள் .....................இது கௌதம் மேனன் encounter போன்ற சிறு பிள்ளைத்தனம் .......................ஒரு அரசியல் பார்வை வேண்டாமா ................

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் உன்னை போல் ஒருவனில் .................அந்த விஜய் நடிகரை கிண்டல் செய்திருப்பார்கள் படத்துக்கு தேவையா ..............வாங்க டாக்டர் என்று அவரை பார்த்து சொல்வர் .........கமலும் டாக்டர் விஜயும் டாக்டர் ......அந்த எரிச்சல் தெரிய வில்லையா

வெண்ணிற இரவுகள்....! said...

அந்த IIT மாணவன் சொல்வானே "அபிவாதயே" அந்த வசனம் எதற்கு ..........
அதை நீங்கள் கவனித்திற்களா என்று தெரியாது ....................நான் ஐயர் அதனால் எனக்கு தெரியும் ...........அந்த வசனம் எதற்கு ..................IIT student என்றால் பார்பனாக தான் இருக்க வேண்டுமா நண்பா .................இது கமலுக்கு தெரியாமலா இருக்கும் நான் நம்ப போவதில்லை

வெண்ணிற இரவுகள்....! said...

உன்னை போல் ஒருவன் பாடலில் ஒரு சுலோகம் வரும் .............அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா .............."உலகம் அழியும் போதும் மனித உருவத்தில் இறைவன் வருவான் "...................பேசுவது நாத்திகம் ................உள்ளே நுழைப்பது பார்பனீயம் .........
இது நல்லதா சொல்லுங்கள் .................................

வெண்ணிற இரவுகள்....! said...

ஏன்முஸ்லீம் தான் தீவிரவாதியா .......................இது அமெரிக்கா உலகத்திற்கு சொல்லி தந்தது ...................அப்துல் கலாமை அவமான படுத்தினர் நியாபகம் இல்லையா .................இது முதலாளித்துவம் .........அதை தான் செய்கிறார் உலக நாயகன் ....................என் பேராண்மை நாயகன் உலக அரசியலை படிக்க சொல்கிறார் ....ரஷ்ய படமாகவே இருந்து விட்டு போகட்டும் ......................அடி தட்டு மக்களுக்காக பேசுகிறார் என் நாயகன் ரவி

வெண்ணிற இரவுகள்....! said...

இது wednesday எல்லாருக்கும் தெரியும் அதனால் உலக நாயகன் அந்த பெயரை போட்டுள்ளார் ..............கமலின் அன்பே சிவம் முதல் கொண்டு நகல் எடுத்த படங்களே ..................அதில் எல்லாம் அந்த திரைகதை ஆசிரியர் பெயரை ஏன் போடவில்லை .......இயக்குனர்களுக்கே நிறைய படங்களில் இருந்து நகல் எடுப்பதை கற்று கொடுத்தவர்கள் கமலும் மணிரத்னமும்

வெண்ணிற இரவுகள்....! said...

அமீர் கான் சொல்கிறார் ஆஸ்கார் என்று அது அமெரிக்கன் கொடுப்பது அவனுக்கு எப்படி நம் கலாச்சாரம் தெரியும் ......................நமக்கு ஆஸ்கார் தேவை இல்லை .......என் பதிவை அமெரிக்கா காரன் புரிந்து கொள்ள முடியுமா சொல் நண்பா

ஜெட்லி... said...

நண்பரே பேராண்மை பத்தி இன்னும் எத்தனை போஸ்ட் போடறதா உத்தேசம்??