Saturday, October 24, 2009

குடிப்பவர்களுக்கு பத்து யோசனை

டிஸ்கி : நான் குடிப்பவர்களுக்கு எதிரி அல்ல.தண்ணி(குழாயில் இல்லை..) அடித்தப் பிறகு இந்த பதிவை படிக்க வேண்டாம்.

1.குடிக்கும் முன் தொலைக்க வேண்டிய முதல் பொருள் பைக் அல்லது கார் சாவி.குடித்தப் பிறகு அவசியம் இருந்தாலும் வண்டியை எடுக்க வேண்டாம். நன்றாக உடம்பை வைத்து இருந்தால் தான் நிறைய நாள் தண்ணி(குழாயிலாவது) அடிக்க முடியும்.

2.குடித்தப் பிறகு யாரிடமாவது பேச சொல்லும் அதனால் குடிப்பதற்கு முன் மொபைலில் உள்ள காசை பேசி தீர்த்து விட வேண்டும்.சோட்டா ரீசார்ஜ் செய்து அந்த காசையும் அழித்து விட வேண்டும்.யாராவது அழைத்தால் அது அவர்களுடைய விதி.(நாம போய் ஆடு திருட கூடாது..ஆடே வந்து தலையை குடுத்தால் வேறென்ன பிரியாணி தான்.)

3. வீட்டிற்கு வாங்கி வாங்கி அடிப்பது சாலச் சிறந்தது.காசும் மிச்சம்.வம்பும் மிச்சம்.ஊறுகாயும் மிச்சம்.

4. வீட்டில் லோயர் ஹேண்டாக இருக்கும் ரங்கமணிகளை உடன் அழைத்து செல்வதை உடனே நிறுத்தவும்.வாங்கி கொடுத்து வாங்கியும் கட்ட வேண்டாம்.

5.நம்மை அறவே கண்டு கொள்ளாத நண்பன்(வேறு வார்த்தை இருந்தால் சொல்லவும்)எதிர்பாராமல் வந்து நமக்கு பார்ட்டி கொடுத்தால் உடனே சுதாரித்து விட வேண்டும்.(சோளியன் குடுமி சும்மா ஆடாது).அவுரங்கசீப்பும் அவருடைய கடைசி தம்பியும் முராத்தும் ஒருவரை ஒருவர் கொல்ல திட்டம் வைத்து இருந்தார்கள்.அண்ணன் செலவு செய்யாதவர்.தம்பி ஊதாரி.அண்ணன் குடிக்க மாட்டார்.தம்பி அதில் குளிப்பார்.அவுரங்கசீப் அவருக்கு நன்றாக ஊத்தி விட்டு பிறகு தீர்த்து விட்டார்.தீர்க்காமல் இருந்திருந்தால் அடுத்த நாள் தம்பி இவருடைய கதையை முடித்து இருப்பார்.

6.குடித்தால் தான் தைரியம் வரும்,நினைப்பதைப் பேசலாம் என்று நினைத்தால் உடனே பேசாமல் காலை வரை தள்ளி போடலாம்.மறந்து விடாமல் இருக்க எழுதி வைத்து கொள்ளலாம்.காலையில் அதை ஒருமுறை படித்து பார்த்து விட்டு பேசலாம் இல்லை எழுதியதைப் படிக்குமாறு குடுக்கலாம்.

7.குடிக்கும் போது நம்மிடம் எதுவும் சொல்லாமல் உடன் இருக்கும் நண்பர்களிடம் குறை சொல்லும் நல்ல உள்ளங்களை உடனே கட்டாங்கி செய்து விடலாம்.

8.தண்ணியடித்து கொண்டியிருக்கும் சமயத்தில் யாராவது உங்களுக்கு நல்லது சொல்வார்கள் அதில் பத்து சதவீதமாவது கேட்டு நடப்பது நல்லது.

9.தண்ணியடித்து விட்டு யாரையும் திட்ட வேண்டாம்.திட்டிய உடன் திட்டியவர்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறது.(குறிப்பாக குறட்டையோடு), வாங்கியவர்களுக்கு தூக்கத்தில் ஒரு கால் போய் துக்கம் தான் எஞ்சி மிஞ்சி நிற்கிறது.

10.சந்தோஷமாக இருக்கும் போது நிறைய குடிக்கவும்,சோககமாக இருக்கும் போது குறைவாக குடிக்கவும்.நாம் இதை மாத்தி செய்கிறோம்.குடிப்பதற்கு காரணத்தை ரெடியாக வைத்து கொள்ளவும்.அவன் என்னை அப்படி சொல்லி விட்டான்,இப்படி சொல்லி விட்டான் என்று சொல்லி யாரும் குழாயில் கூட தண்ணியடிக்க வேண்டாம்.சம்பந்தப் பட்டவர்களிடம் பேசி தெரிந்து கொள்ளலாம்.மூன்றாவது நபர் சொல்லுவதை அப்படியே எடுத்து கொள்ள வேண்டாம்.நீங்களும் எந்த கருத்தையும் சொல்லி விட வேண்டாம்.நீங்கள் சொன்னது மட்டும் பெரிதாக்கபடும்.

பின் டிஸ்கி : இது எல்லாம் கற்பனையே என்று சொன்னால் அது மிகையாகாது.

16 comments:

யூர்கன் க்ருகியர் said...

ரொம்ப நன்றி ...

இரும்புத்திரை said...

நன்றி யூர்கன் க்ருகியர்.அங்கெ இருப்பது எல்லாம் அனுபவம் தான்.

பிரபாகர் said...

//வீட்டிற்கு வாங்கி வாங்கி அடிப்பது சாலச் சிறந்தது.காசும் மிச்சம்.வம்பும் மிச்சம்.ஊறுகாயும் மிச்சம்.
//
ம்.... நமக்கு தேவையில்லாத விஷயம்...ஹி, ஹி, பழக்கமில்லை... இருந்தாலும் யோசனை அருமை தம்பி...

பிரபாகர்.

Prathap Kumar S. said...

9, 10 பாயிண்டு சூப்பர். ரொம்பபேர் பண்ற தப்பு இதுதான். ரொம்ப அனுபவம் போல.
அதுல ஒளரங்கசீப் பற்றி வரலாற்று குறிப்பு வேற குடுத்துட்டீங்க. கலக்கல்.

நிறைய எழுத்துப்பிழைகள் எழுதுவதற்கு முன்னாடி குழாய்ல தண்ணி புடிச்சீங்களா???

லோகு said...

இது குடிச்சிட்டு எழுதியதா.. இல்லை தெளிந்த பின் எழுதியதா.. :)

ஈரோடு கதிர் said...

குடிச்சுப்பார்த்துட்டு எழுது ராசா

Ashok D said...

தண்ணி அடிப்பதுன்னா என்னா அரவிந்த்.

Ashok D said...

1. எதுவும் தொலைத்ததில்லை. அப்ப தான் நம்ம mind powerfulla வேலை செய்யுது

2. குடிச்சிட்டு மொக்கபோடற பழக்கம் இல்லை.

3. வீட்டுல குடிச்சா: அம்மாவுக்கு தெரிஞ்சா.. ஒரு பத்து வருஷமாவது சொல்லிகாட்டுவாங்க. தங்கமனிக்கு தெரிஞ்சா.. இதெல்லாம் வெளியே பாத்துக்கோங்கன்னு சொல்லிடுவாங்க. இதுக்கு மேல என் குட்டி பையன் ‘அப்பா என்ன குடிக்கிற எனக்கு தராம’ன்னு க்ளாஸ புடுங்க ஆரம்பிச்சுட்டான். bachelorskku ok.

Ashok D said...

4. அதுல நம்ம sharppu

5. எப்பவும் லிமிட்தான் so no probs.

6. யோசிக்கவேண்டிய விஷயம்.

7. அது மாதிரி நன்பர்கள் கிடையாது.

8. rittu

9. எப்பனாச்சு இப்டி ஆகிடுதுபா.

10. நல்லாகுதுபா.

வெண்ணிற இரவுகள்....! said...

தல தெளிவா தானே இருக்கீங்க

பீர் | Peer said...

தேவையில்லாத சப்ஜக்ட்தான் இருந்தாலும் வந்ததுக்காக.. :)

அகல்விளக்கு said...

//இது எல்லாம் கற்பனையே என்று சொன்னால் அது மிகையாகாது. //

illaye! Sontha Anubavam mathiri irukku..

Nathanjagk said...

6வது பாயிண்ட்--- ஐ ​லைக் இட்! குடிபோதையில் வண்டி ஓட்ட ​வேண்டாம் என்பதை அரசாங்கம் ​சொன்னதைவிட அர்விந்த் நல்லா ​சொல்லியிருக்கார்! பாயிண்ட் 1க்காக அர்விந்துக்கு சூடா ஒரு கப் பால் யாராவது ​சொல்லுங்களேன்!

நான் குடியில் இருக்கும் போது தானே வந்து மாட்டிக்​கொள்ளும் நண்பர்கள் (நண்பிகள்தான் அதிகம்)

இந்தவாரம் நடந்தது:
வெள்ளி. இரவு. சீகிராம் விஸ்கி குவா அடித்துவிட்டு இருக்கும் போது ​போன். காலேஜ் மேட் சிவா.
"ஹலோ ஜெகன்.. நான் லளிகம் சிவா!
"சொல்லு ​கைப்புள்ள எப்படியிருக்க?"
"என்னது ​கைப்புள்ளயா?"
"நீதாம்பா ​கைப்புள்ள மாதிரி படமெல்லாம் ​போட்டு தீபாவளி வாழ்த்து அனுப்பிச்சிருந்தியே?"
"ஓ அதுவா..! ​ஜெகன் ஒரு ​ஹெல்ப்"
"சொல்லு. உனக்கு இல்லாததா?"
"எனக்கு ​தெரிஞ்ச ​சொந்தகாரங்க.. ஒருத்தர்.. பேங்க் எக்ஸாம் எழுதறாங்க.. அதுக்கு ​கொஸ்டின் புக் வாங்கணும்"
"நிறுத்து.. உனக்குத் ​தெரிஞ்ச.. அந்த ​சொந்தகாரங்க-ங்கிறது.. உன்னோட ​கேர்ள்-ப்ரண்டா??"
"....... ஹிஹி.. எப்படி ஜெகா கரெக்டா ​சொல்லிட்டே?"
"இப்பத்தாம்லே ஒரு குவாட்டர் விட்டிருக்கோம்.. நீ ​மேக்கொண்டு ​சொல்லு"
... சிவா ​கேட்ட ​கொஸ்டின் ​பேப்பரை வாங்கித்தருகிறேன் என்று சத்தியம் பண்ணிக்​கொடுத்துவிட்டு.. மறுநாள் ​நைட் ​போன் பண்ணிக்​கேட்டான். சுத்தமாக மறந்துவிட்டது. அப்புறம் எப்படியோ சமாளித்து..
"கூகிள்ல ​தேடிப்பாரு மச்சி.. கண்டிப்பா சிக்கும்" என்று Sகேப்ப்ப்!

முன்பு ஒரு ​தோழி இரவு 11 மணிக்கு ​போன் பண்ணியிருந்தாள். அப்பயும் மப்பு!
ராஸலீலா (சாரு) புக்கிலிருந்து முதல் இரண்டு பாராவைப் படித்துக் காட்டினேன்.
"டேய்ய்ய்ய்ய்.. உன்னோட க்ரைம்-ரேட் கூடிக்கிட்டே ​போகுது"
என்று ​வேப்பிலை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

போதையில் போன் ​போட்டு பேசறதும்.. ​சொந்த செலவில சூனியம் வச்சுக்கிறதும் ஒண்ணுதாம்பா!!

ரமேஷ் வைத்யா said...

தம்பி வா... தலைமை ஏற்க வா! பத்தும் முத்து!

மணிஜி said...

//தம்பி வா... தலைமை ஏற்க வா! பத்தும் முத்து!//

சிங்கம் களத்துல இறங்கிடுச்சுப்பா

Beski said...

நல்லா எழுதிடிருக்கிங்க. ஆனா வேலைக்காவாது.

அடிக்கிறதுக்கு முன்னாடி
’போன தடவ ஓவரா போயிடுச்சு, இதுல பாதிய மட்டும் அடிச்சுட்டு, மீதிய வச்சுடனும்.
தம்பி, இந்த பாதிய கைக்கு எட்டாத தூரத்துல மேல வையி...’

அடிச்ச அப்புறம் (மேல இருக்குறதையும் சேத்து)
‘தம்பி, போயி ஒரு கோட்டரு வாங்கிட்டு வர்றியா?’