ஒரே ஒரு முறை தான் நான் என் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறேன்.அதுவும் "மற்றவர்களுக்காக".ஏன் கொண்டாடுவதில்லை என்று யாராவது கேட்டால் என் பிறந்தநாளை தமிழ் நாடே கொண்டாடும் என்று கர்வமாக சொல்வதுண்டு.இன்னொரு காரணம் அது விடுமுறை நாளில் வருமென்பதால் பள்ளியில் படிக்கும் போது மிட்டாய் கூட குடுத்ததில்லை.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு சென்றால் அவர்கள் மறந்து இருப்பார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் பார்த்து விட்டு விவாதிக்கும் போது எனக்கு வாழ்த்துகள் சொல்ல கூட யாருக்கும் நினைவு இருக்காது.செலவு மிச்சம் என்று நினைத்து கொள்வேன்.பள்ளியில் படிக்கும் போது ஒரு தடவை கொண்டாடியது கிடையாது.
கல்லூரியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் இரண்டு பெண்களிடன் ரொம்ப நெருங்கிய நட்பு(நட்பு மட்டும் தான் நட்பு மட்டும் தான்) உண்டு.இந்த நட்பு தொடங்க முக்கிய காரணம் அவர்கள் எனக்கு அசைன்மெண்ட் எழுதி தந்தது தான்.என் நேரம் நான் பழகிய இருவரும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே எதிரிகள்(விளங்கிரும்).முதல் செமஸ்டர் ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு வந்து விட்டதால்,அசைன்மெண்ட் எழுத தேவை இல்லாமல் போய் விட்டது.இப்படி எந்த தேவையும் இல்லாத்தால் அவள் என்ன சொன்னாலும் கேட்பதேயில்லை.அடிக்கடி சண்டை.செமஸ்டர் எப்படி எழுதினாய் என்று கூட இருவரும் கேட்கவில்லை.செமஸ்டர் முடிந்து பத்து நாட்களில் புது வருடம்.அவள் வாழ்த்து சொல்வாள் என்று நானும்,நான் வாழ்த்து சொல்வேன் என்று நானும் கடைசி வரை சொல்லவேயில்லை.இருவருக்கும் ஈகோ கொளுந்து விட்டு எரிந்தது.இறண்டு நாள் களித்து நீ ஏன் வாழ்த்து சொல்லவில்லை,இப்போ சொல்லு என்று சண்டை போட்டாள்.அப்பவும் நான் சொல்லவில்லை.
இரண்டாவது செமஸ்டர் திரும்பவும் அசைன்மெண்ட் எழுத வேண்டிய கட்டாயம்.திரும்பவும் ஈகோ.நான் எழுதி தர கேட்பேன் என்று அவளும், கேட்காமல் எழுதி தந்தால் என்ன குறைந்து விடுவாளா என்று நானும் இருந்து விட்டோம்.நானே எழுதி அதிகம் திட்டு வாங்கி,என்ஜினீரிங் டிராயிங் வரைய முடியாமல் அடுத்தவன் வரைந்ததை திருடி அவன் பெயரை அழித்து விட்டு என் பெயரைப் போட்டு விட்டு அதிலும் திட்டு வாங்கி(நான் எது குடுத்தாலும் எப்படிதான் தவறு கண்டுப்பிடிப்பார்களோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்) திரும்ப வேறு பையனுடையதைத் திருடி திரும்ப திட்டு வாங்கி பிறகு இதுவே தொடர்கதையாகி விட்டது.(கடைசியில் அந்த பாடத்தில் நான் 77 மார்க் வாங்கியதும் அதிர்ச்சியில் அந்த ஆசிரியைக்கு பேச்சு வரவில்லை)
இந்த திட்டுகளைத் தாங்க முடியாமல் அவளுடன் சண்டையை முடித்து கொள்ளலாம் என்று அந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தேன்.அவளுக்குகாக ஒரு சாக்லேட் தனியாக வைத்து இருந்தேன்.அவள் சொல்ல வருவாள் சாக்லேட் குடுத்து சண்டையை முடித்து விடலாம் என்று நான் பிளான் போட்டு இருந்தேன்.(ஓப்பனிங்க் எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா..).நான் சாக்லேட் குடுக்க வரும் போது சொல்லலாம் என்பது அவளுடைய திட்டம்.கடைசியில் அவளுக்கு சாக்லேட் குடுப்பது மாதிரி போய் அவள் தோழிக்கு குடுத்து விட்டு வந்தேன்.(பிடுங்கி தின்று இருப்பாள்..அது வேற விஷயம்..)
அவளுக்காக ஒரு கவிதை மாதிரி
நீ - திமிர்
நான் - புதிர்
நாம் - திமிரு(று)ம் புதிர்.
அவளுடைய எதிரி என்னுடைய இன்னொரு தோழி எனக்கு கார்டும்,ஒரு பரிசும் குடுத்தாள்.பின்னர் யார் மீது இருந்த கோபத்தில் அவள் குடுத்த கார்டை எறித்து விட்டேன்.பரிசு அந்த சமயத்தில் கிடைக்காத காரணத்தால் தப்பி விட்டது.(இந்த பதிவு எழுதும் போது அது என் முன்னால் மேஜையில் இருக்கிறது).பின்னர் அவளிடம் போய் நீ குடுத்த கார்டை நான் எறித்து விட்டேன்.எனக்கு இன்னொரு கார்டு கொடு.நான் பத்திரமாக வைத்து கொள்வேன் என்று கேட்டேன்.அடுத்த பிறந்த நாளுக்கு என்று சொன்னாள்.
அப்படி ஒரு நாள் இதுவரை வரவில்லை.நானும் கொண்டாடவில்லை.அவளும் தரவில்லை.
அவள் அந்த வெள்ளி கிழமை குடுத்த பரிசு பொருளில் இப்படி இருக்கிறது.
The Candles,
the Cake,
the friends,
the wishes,
the hopes,
the splendour,
the moments,
the celebrations,
the gifts, May all of
them tell you one
and the same thing
"You are special"
பசங்களுக்கு ஒரு பார்ட்டி குடுக்க முடிவு செய்து அடையார் போய் சாப்பிட்டு விட்டு வரும் போது பார்க்காமல் சாலையை கடக்க, நடக்க இருந்த விபத்தில் இருந்து ஜஸ்ட் மிஸ்.ஒரு சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நடந்து இருந்தால் நிச்சயம் உயிர் போய் இருக்கும்.ஒன்னும் ஆகவில்லை.
Because Iam special for somebody.(always)
டிஸ்கி :
கடைசியாக ஒரு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து சட்டை எடுக்கலாம் என்று கிளம்பிய போது சரக்கடிக்க காசு கேட்ட நண்பனுக்கு அந்த காசைக் குடுத்து விட்டு அறையில் தூங்கி விட்டேன்.
Thursday, October 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//கடைசியாக ஒரு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து சட்டை எடுக்கலாம் என்று கிளம்பிய போது சரக்கடிக்க காசு கேட்ட நண்பனுக்கு அந்த காசைக் குடுத்து விட்டு அறையில் தூங்கி விட்டேன்.//
ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு
//கடைசியாக ஒரு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து சட்டை எடுக்கலாம் என்று கிளம்பிய போது சரக்கடிக்க காசு கேட்ட நண்பனுக்கு அந்த காசைக் குடுத்து விட்டு அறையில் தூங்கி விட்டேன்.//
இவ்ளோ நல்லவரா நீங்க?
உங்அள் பிறந்த நாள் ஜனவரி 13ஆ / 14ஆ ?
//கடைசியாக ஒரு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து சட்டை எடுக்கலாம் என்று கிளம்பிய போது சரக்கடிக்க காசு கேட்ட நண்பனுக்கு அந்த காசைக் குடுத்து விட்டு அறையில் தூங்கி விட்டேன். //
அம்புட்டு நல்லவரா நீங்க??????????
உங்கள மாதிரி எனக்கு ஒரு பிரண்டு இல்லையேன்னு ரொம்ப வருத்தமாயிருக்கு.....
Post a Comment