Wednesday, October 7, 2009

பா.ம.க எப்பவுமே க.மா.பா தானா ?

இந்த தலைப்பைக் கண்டவுடன் அவர்கள் சங்கீதம் படிக்கிறார்கள் என்று யாரும் நினைத்து, எச்சில் தெறிக்க சிரித்து யாரையும் நனைத்து விட வேண்டாம்.க.மா.பா - அதன் விரிவாக்கம் இது தான் கட்சி மாறும் பாட்டாளிகள்.இந்த பதிவைப் படித்து விட்டு யாரும் பெட்டியைத் தூக்க வர வேண்டாம்.என் அறையில் இருப்பது ஒரே ஒரு அட்டைப்பெட்டி தான்.அதுவும் என்னுடையது இல்லை.

நீங்கள் கூட்டணி மாறும் செய்தியைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும் கேரக்டர் மனோரமா.சம்சாரம் அது மின்சாரம் படத்தில் யார் பேச்சையும் கேட்காமல் நீ கம்முன்னு கிட டைவர்ஸ் டைவர்ஸ் தான் என்று வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்ய வைப்பார்.அப்படித்தான் ஒவ்வொரு முறையும் சின்னப் பிள்ளைகள் மாதிரி "மிஸ் இவன் என்னை நுள்ளிட்டான்..,என்னை கிள்ளிட்டான்..,என்னை தள்ளிட்டான்.." என்று ஏதாவது காரணம் காட்டி கூட்டணியை ரத்து செய்கிறீர்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் சி.வி.சண்முகம் என்ற அ.தி.மு.க உறுப்பினர் ஏதோ ஒரு கொலைவழக்கில் பா.ம.க கட்சி உறுப்பினர்கள் பெயரைச் சேர்த்து விடுகிறார்.அதை கொட நாட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் அந்த கட்சியின் தலைவி தட்டிக் கேட்கவில்லை என்பது தான் உங்களின் குற்றம்.மக்கள் பிரச்சனையே இரண்டாம் பட்சமாக இருக்கும் போது இது என்ன அவர்களுக்கு பெரிய சிக்கலா."டீச்சர் என் பையனை அந்த பையன் நுள்ளி,கிள்ளி,தள்ளி இருக்கான்..உங்க கிட்ட புகார் குடுத்தும் நீங்க ஒண்ணுமே கேட்கவில்லை..நாங்கள் இந்த பள்ளியை விட்டு வெளியேறுகிறோம்.." என்று சொல்லும் பெற்றோர்கள் போல் உள்ளது உங்கள் வாதம்.உடனே அந்த ஆசிரியர் சொல்கிறார் "ஏப்ரல் மாசம் தான் அந்த ஸ்கூல் சரியில்லன்னு இங்க வந்தீங்க..இப்போ இது சரியில்ல சொல்லிட்டு வெளியே போறீங்க..அப்போ நீங்க தான் சரியில்லை.." என்று சொன்னால் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்."எங்கேயும் சேர்க்கவில்லை என்றால் உங்கள் நிலைமை என்ன.

வாய்சவடால் தான் பா.ம.க கட்சி அழிய காரணம்.கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்.அது வரலாறு,புவியியல் என்று சொன்ன வரலாறு நோட்டு புத்தகம் என்ன இன்று பூகம்பத்தில் தொலைந்து விட்டதா.இல்லை மக்கள் உங்கள் கூட்டணியைத் துவைத்து விட்டார்களா?(அழுக்கு போயிருச்சா..போயிருச்சா அப்புறம் ஏன் இன்னும் தேய்க்கிறீங்க..)வரலாறு என்றுமே மாறுவதில்லை அது சொல்லும் பாடம் உங்களால் எங்கும் இருக்க முடியாது நிரந்தரமாக.

உங்களுக்கு ஏழு இடம் தந்தேன் ஒரு பலனும் இல்லை.ஆனால் ம.தி.மு.க கூட ஒரு இடத்தில் வென்று இருக்கிறது என்று அவர்கள் கேட்டால் என்ன செய்ய முடியும் (அட இதுவும் வரலாறு தான்).ஜெயித்தால் மக்கள் சக்தி காரணம்.தோற்று போனால் மக்கள் பணம் வாங்கி விட்டார்களா இல்லை வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லையா ?

தி.மு.க கூட்டணி உடைந்த போது ஒரு தி.மு.க உடன்பிறப்பு சொன்ன காரணம் இதை நினைத்தால் இன்று கூட சிரிப்பு வருகிறது."மானாட மயிலாட" - இந்த நிகழ்ச்சியை அவர் விமர்சித்த விதம் தான் காரணம் என்று சொன்னார்.அப்படி என்ன சொன்னார் என்று கேட்டதற்கு வந்த பதில் "மானாட மயிலாட மார்பாட" என்று சொல்லி விட்டார்.கூட்டணி உடைந்து விட்டது.அதெல்லாம் இருக்காது என்று நான் சொன்னேன்.இன்று நீங்கள் சொல்லும் காரணத்தைப் பார்த்தால் அது உண்மையா என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்படியே கூட்டணி மாறி கொண்டே இருந்தால் வரும் சட்டசபை தேர்தலிலும் உங்களுக்கு தோல்வி தான்.விஜயகாந்த் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் தான் தெரியும் என்று சொல்லும் போது கேட்காத நீங்கள் இன்று யாருமே சேர்க்கவில்லை என்றதும் அதே கருத்தைச் சொல்கிறீர்கள்.யாராவது சேர்த்து கொண்டால் மறுபடியும் கூட்டணியாக தான் போட்டி இல்லை யாருமே கூட்டணி வைக்க கூடாது.(என்ன கொடுமையான கொள்கை பா.ம.க இது)

"நானோ ஏன் பிள்ளையோ கட்சியில் ஏதாவது பொறுப்பையோ இல்லை பதவி கிடைத்தாலும் வகிக்க மாட்டோம்" - இந்த வார்த்தைகள் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா.சரி நானே ஞாபகப்படுத்துகிறேன்.இது ஆரம்ப கால பா.ம.க நிறுவனரின் கொள்கை முழக்கம்.அப்பொழுது அவர் மூன்று ரூபாய்க்கு ஊசி போடும் மருத்துவர்.இன்று அப்படியா.ஆட்சிக்கு ஆட்சி கொள்கையும் மாறும் கூட்டணியும் மாறும்.

யாருமே சேர்க்கவில்லை என்றால் அவர்களின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்துடன் கூட்டணி வைப்பார்கள்.பிறகு ரத்து செய்து வருகாலத்தில் விசை கட்சி ஆரம்பித்தால் அவருடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள்.முடியவில்லை என்றால் வேறு கூட்டணி.

டிஸ்கி :

இனி வரும் ஒரு தேர்தலில் மட்டுமாவது அவர்களை எந்த கூட்டணியிலும் சேர்க்காதீர்கள்.தயவு செய்து ஒரு அரசியல் அனாதையை உருவாக்குங்கள்.

20 comments:

மணிஜி said...

அனாதை ஆயிட்டாங்க..அவிங்க அவ்வளவுதான் தம்பி

தினேஷ் said...

அவிங்க டவுசர கிழிச்சது காடுவெட்டிதான்

தினேஷ் said...

"மானாட மயிலாட மார்பாட" இது எதும் புது நிகழ்ச்சி டைட்டிலா?

நாடோடி இலக்கியன் said...

டிஸ்கியை வ மொ.

:)

லோகு said...

அவங்கனால ஆட்டோ அனுப்ப முடியாதுங்கறதுக்காக இப்படியா??? பாவம்...

ஈரோடு கதிர் said...

//தயவு செய்து ஒரு அரசியல் அனாதையை உருவாக்குங்கள். //

என்ன புதுசா சொல்றீங்க...

வினோத் கெளதம் said...

ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க..விடுங்க லூஸ்ல..

உடன்பிறப்பு said...

சூப்பர் பதிவு தல

Robin said...

//வாய்சவடால் தான் பா.ம.க கட்சி அழிய காரணம்.// True!

துபாய் ராஜா said...

அருமையான பதிவு அரவிந்த்...

எல்லோருக்கும் தெரிந்த கதை என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதம் அழகு.

என் குடும்பத்தினர் யாராவது அரசியலுக்கு வந்தால் நடுரோட்டில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று வாய்ச்சவடால் விட்டவரை போன தேர்தலில் பொதுமக்கள் வாக்குச்சவுக்கால் விளாசிவிட்டனர்.

அய்யாவும், அம்மாவும் மாறி,மாறி ஆதரவு கொடுப்பதை நிறுத்தினாலும் அய்யா மருத்துவர் விஜயகாந்த், விஜய் போன்றோரின் 'அண்டர்வேரை' துவைத்தாவது பிழைப்பு நடத்திவிடுவார்.

மானம்.ஈனம்,சூடு,சொரணை எதுவும் இல்லாதவர்கள் தான் அவரும், அவரது கட்சிக்காரர்களும், அந்த கட்சிக்கு ஓட்டு போடுபவர்களும்....

மருத்துவர் எனும் சந்தர்ப்பவாத சாக்கடை புழுவால் மாம்பழம் அழுகி எவ்வளவோ நாளாச்சி......

seeprabagaran said...

அரசியல், பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டவர்கள் அனைவருமே விமனர்சனத்திற்கு உரியவர்கள்தான். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அந்த வகையில் உங்களுடைய பதிவை வரவேற்கிறேன். இருப்பினும் பாட்டாளி மக்கள் கட்சியையும் அதன் நிறுவனரையும் குறிவைத்து தொடர்ந்து விமர்சனம் செய்யும் ஊடகங்கள், வலைப்பதிவர்கள், அரசியல் விமர்சகர்கள், மாற்றுக்கட்சியினர் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதில் மாற்று கட்சியினர், அரசியல் அடிப்படையிலும், சமுதாய அடிப்படையிலும் பா.ம.க.விற்கு எதிரானவர்கள் அவர்களை விமர்சனம் செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நடுநிலையாளர்கள், எனக்கு நாற்றுப்பற்று உள்ளது என்று சொல்லிக்கொள்பவர்கள், தூய்மையான அரசியல் வேண்டும் என்று சொல்லிக்கொள்பவர்கள் பா.ம.க.-வை மட்டும் வேகமாக முண்டியடித்துக்கொண்டு விமர்சிப்பது ஏன்? இந்த வேகம் மற்ற தலைவர்கள் பிற கட்சியினர் தவறு செய்யும்போது இல்லாமல் இருப்பது ஏன்? அல்லது அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

பொதுவாக பா.ம.க.-மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு,

தேர்தலுக்குத் தேர்தல் பா.ம.க. கூட்டணி மாறுகிறது!

கூட்டணியே மாறாத அரசியல் கட்சி என்று ஏதாவது இந்தியாவில் உள்ளதா? அல்லது தனித்துப் போட்டியிடும் அரசியல் கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் பலகட்சிகளுடன் பேரம் பேசுவது இல்லையா?

அடுத்த குற்றச்சாட்டு அவரது மகன் அரசியலுக்கு வந்தது. “எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்” என்று உறுதியளித்ததே தவறானது. ஒருவர் அரசியலுக்கு வரவேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட நபரே தவிர, பிறர் அல்ல.

மேலும் தங்களுடைய கட்டுரையில் “ஏதோ ஒரு கொலைவழக்கில் பா.ம.க கட்சி உறுப்பினர்கள் பெயரைச் சேர்த்து விடுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஏதோ ஒரு உறுப்பினர் அல்ல. மருத்துவர் இராமதாசு, மருத்துவர் அன்புமணி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பெயர்களை உயர்நீதிமன்றம் வழக்கிலிருந்து இரண்டுமுறை நீக்கிய பிறகும் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

பிரபாகர் said...

பா.மா.க வ திருப்பி போட்டு பெண்டு எடுத்திட்டியே... கலக்குற தம்பி... மதுரக்கார பயலுவ நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பு...

ரொம்ப நல்லாருக்கு அர்விந்த்.

அண்ணனின் அன்பு ஓட்டுக்களும் உனக்கு விழுந்தாச்சு...

பிரபாகர்.

யாசவி said...

இன்னும் கொஞ்சம் ஆழமா எழுதியிருக்கலாம்

நையாண்டி நைனா said...

super pathivu...

கரிகாலன் said...

துபாய் இராஜா அவர்களுக்கு வணக்கம். தங்களுடைய பின்னூட்டத்தில் "மானம்.ஈனம்,சூடு,சொரணை எதுவும் இல்லாதவர்கள் தான் அவரும், அவரது கட்சிக்காரர்களும், அந்த கட்சிக்கு ஓட்டு போடுபவர்களும்...." என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள “மானம்.ஈனம்,சூடு,சொரணை” போன்றவை உண்மையாகவே உள்ளவங்க எந்த கட்சிக்கு ஓட்டுப்போடுவாங்கன்னு நீங்க சொன்னங்கின்னா நல்லா இருக்கும்.

நீங்க சொன்னமாதிரி “மானம்.ஈனம்,சூடு,சொரணை” என இந்த நாளும் இல்லாத எங்கள மாதிரி ஆளுங்களுக்கு நீங்க யாருன்னு புரிஞ்ச மாதிரியும் இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

//இனி வரும் ஒரு தேர்தலில் மட்டுமாவது அவர்களை எந்த கூட்டணியிலும் சேர்க்காதீர்கள்.தயவு செய்து ஒரு அரசியல் அனாதையை உருவாக்குங்கள். //

ம்ம்ம்ம்ம்ம்

Unknown said...

இதுக்கெல்லாம் உங்களை (மாண்புமிகு வாக்காளப் பெருமக்களை) சொல்ல வேணும். இப்ப கொஞ்ச நாளா உங்களுக்காக ஒரு துரும்பையும் நகர்த்தாத ஜெயலலிதாவும் இன்னொரு முறை முதல்வர் ஆவார்.. நிச்சயமாக. ஏனென்றால் தி.மு.க. போரடித்தால் அ.தி.மு.க. , அ.தி.மு.க. போரடித்தால் தி.மு.க. இதென்ன தொலைக்காட்சியில் சானல்களா பார்க்கிறீர்கள் (அதே வா. பெ. ம).. தேர்தலில் மிரட்டி வாக்குப் போட வைக்கிறார்கள் என்கிறீர்கள். ஒரு பூத்தில் இருக்கும் 10 இளைஞர்கள் ஒன்றாய்த் திரண்டால் ரவுடிகள் மிரட்டி ஓட்டுப் போட வைக்க முடியுமா? தருகிற பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராக ஓட்டுப் போட்டு ‘பணத்தின் மகிமை' இவ்வளவுதான் என்று ஒருமுறை காட்டிவிட்டால் பணமும் பிரியாணியும் தந்து அடுத்த தேர்தலில் ஓட்டுக் கேட்க முடியாது. ஆனால் பிரச்சினை என்ன என்றால் ‘பணமும் பிரியாணியும்' வாங்கும் ஏழை நிச்சயம் ஓட்டுப் போடுவான். படித்த, அரசியலை விமர்சிக்கிற நடுத்தர, மேல்தட்டு மக்கள் ‘நானெல்லாம் பூத் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன்' என்று பெருமை பேசுவார்கள். அவர்களுக்குப் பதிலாக அவர்களின் ஓட்டை தி.மு.க. சுப்பனோ, அ.தி.மு.க குப்பனோ போட்டுவிட்டுப் போவான்...

kanavugalkalam said...

கட்சி மாறும் பாட்டாளி கட்சி... என் புதிய கட்சிக்கு தலைப்புக்கு நன்றீ........

பீர் | Peer said...

அசத்திட்டீங்க.. அரவிந்த். சூப்பர்...

Unknown said...

hello dubai raja..arasiyal la yarume yogyam kidayathu..ithula P.M.K vithi vilakalla,.neenga oru thala patchama soldringa.matha katchinga ellam enna yogyama,ellame manaketta yethara pudicha katchinga than,anntha katchikku vote potu neengalum oru manaketa eethera than..srilankan tamilar prachanaikkaga delhi poi pesatha kalainger avanga katchikku MP seat kaga delhi ponare athu ungalukku aniyayama theriyalaya,illa koda nattulu irunthutu summa ve arikka vidra JJ seirathu neyayama.yar than katchi mari kootani vekkala..common na pesunga raja..ellame therinja mari pesakudathu,,congress,dmk kootani coming election la udaya than poguthu..makkal kooda matum than kootani nu soldra vijayakanth yar kuda kootani vekka porarunu pakka thana poringa...appa unga vai ellam enna pesa poguthunu pakkathane poran...