கவுண்டமணி ஸ்போகன் இங்கிலீஸ் சென்டரில் ஆங்கிலம் கத்துத் தருகிறார்.இந்த வேலையையும் கெடுக்க செந்தில் அங்கு வந்து சேர்கிறார்.
கவுண்டமணி - "மும்பை மாநகரத்துல ராமசந்திரா யுனிவர்சிடில வேலை பார்த்த எனக்கு இன்னைக்கு கிரகம் சரியில்ல..உங்களுக்கு எல்லாம் பாடம் எடுக்க வேண்டிய நிலைமை.."
செந்தில் - (முணங்குகிறார்) "ஏன் நீங்க பத்தாவது பெயில் ஆனது நாஸருக்கு தெரிஞ்சு போச்சா ?"
கவுண்டமணி - "டேய் டிக்ஸ்னரி தலையா..நீ மைண்ட் வாய்ஸ்ல பேசினாலும் எனக்கு கேட்கும்..அங்க வந்தேன் உன் பல்ல எல்லாம் ஒண்ணு விடாம புடுங்கிப் போடுவேன்.."
செந்தில் - "சார்..பாடத்துக்கு போங்க..இப்படி பேசியே க்ளாஸ் எடுக்காம சமாளிக்காதீங்க..எங்க பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாது.."
கவுண்டமணி - "ஆமா..இவரு பத்தினி தெய்வம்..பாவம் சும்மா விடாம சொறிஞ்சு விடுமா..நேத்து எடுத்த பாடத்துல இருந்து ஏதாவது சொல்லுடா தயிர்சட்டி தலையா.."
செந்தில் - "ஐ கேன் வாக் இங்கிலீஸ்,லாப் இங்கிலீஸ்,டாக் இங்கிலீஸ்.."
கவுண்டமணி - "டேய் மண்டையா நிறுத்து.. லாப் இதுக்கு அர்த்தம் சொல்லு.."
செந்தில் - "இது கூட தெரியல..நீங்க எங்களுக்கு வாத்தியார்..வெளியே சொல்லாதீங்க..வேற வழியா சிரிப்பாங்க.. லாப்னா கொட்டாவி விடுறது.."
கவுண்டமணி - "அப்படியே ஒன்னு விட்டேன் உன் உடம்புல இருக்கிற கெட்ட ஆவி தனியா பிரிஞ்சி வந்துரும்..வேற வழியா சிரிச்சா அதுக்குப் பேர் வாயுத்தொல்லைடா சிலிண்டர் தலையா..அடிக்கடி உன் இடத்துல இருந்து சிரிப்பு சத்தம் கேட்குது..அது இது தானா.."
செந்தில் - "அந்த நிகழ்ச்சி பேரு அது இது எது..நான் கூட பார்ட்டிசிபேட் பண்ணியிருக்கேன்.."
கவுண்டமணி - "என்ன எதை விட்டுட்டேனா..அப்படியே ஒரு ஏத்து விட்டேன் தலை தனியா ஓடிப் போயிரும்.."
புதிதாக ஆங்கில டீச்சர் வருகிறார்.
கவுண்டமணி - "இவங்க ஆண்டிபட்டியில மீன் வித்துக்கிட்டு இருந்தாங்க..ஸாரி ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடில படிச்சவங்க..சரி ஒவ்வொருத்தரா அறிமுகம் பண்ணிக்கோங்க..டேய் பன்னி முதல்ல நீ ஆரம்பி.."
செந்தில் - "மிஸ்டர் மிஸ் வாட் இட் இஸ் யுவர் நேம்.."
கவுண்டமணி - "டேய் அண்டா வாயா..உன்ன அறிமுகப்படுத்த சொன்னா நீ என்னடான்னா கேள்வி கேக்குற..அதுவும் எப்படி மிஸ்டர்..மிஸ்..தப்பு தப்பா இங்கிலீஸ்.." போய் நாலு அப்பு அப்புகிறார்.
செந்தில் - "சார் நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க.."
கவுண்டமணி - "யாரு நான் நான்சென்ஸ்..உன் இங்கிலீஸ் எப்படி இருக்கும் சொல்றேன் அதுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.."
செந்தில் உடனே கீழே பார்க்கிறார்.
கவுண்டமணி - "ப்ளாஷ்பேக்ன்ன மேல பாக்கனும்டா கபோர்ட் வாயா..பேக்ல இருக்கிறப் பிளாஸ்க பாக்காதே..ஆறு மாசம் முன்னாடி உன்னை மிஸ்டர்ன்னு சொன்னவனைக் அர்த்தம் தெரியாம கடிச்சு வைச்சுட்ட..இன்னும் அவன் கோமாவுல சாக கிடக்குறான்..கொஞ்சம் உஷாரா இருங்க இல்ல ப்ளாஸ்க இந்த நாய் கவ்விக்கிட்டுப் போயிரும்.."
ஆங்கில டீச்சர் - "எம் பேரு பார்பரா.."
செந்தில் - "அப்ப உங்க அப்பா ஹார்பரா.."
கவுண்டமணி - "சும்மா இருடா டோமரு.."
ஆங்கில டீச்சர் - "உங்க கூட பேசி எனக்கு தலை வலிக்குது..சீக்கிரம் உங்க பேர சொல்லுங்க.."
செந்தில் - "ஐம் மெடிசன்.."
கவுண்டமணி - "அவங்களுக்கு தலைவலினா உன் செல்லப் பேரு எடிசனை மெடிசன்னு மாத்தி சொல்லாதடா அயர்ன் பாக்ஸ் மண்டையா..அவரு எவ்ளோ பெரிய ஆளு என்ன எல்லாம் கண்டுப் பிடிச்சி இருக்காரு..நல்லவேளை இந்த அசிங்கம் நடக்கும் தெரிஞ்சு தான் அவர் முன்னாலே போய் சேர்ந்துட்டார்.."
ஆங்கில டீச்சர் - "என்ன மெடிசனா.."
கவுண்டமணி - "ஆமா அவன் மருந்து தான் ஆனா காலாவதி ஆன மருந்து..(செந்திலிடம்)உன்ன பார்த்த உடனே மயங்க இவரு நாட்டாமை தம்பி பாரு.."
ஆங்கில டீச்சர் - "நாட்டாமை தம்பி..யூ மீன் பசுபதி.."
கவுண்டமணி - "இவன் நாட்டாமை இல்ல காட்டாமை..அவனை அடிக்கத் துரத்தினா தலைய அந்த முண்டா பனியனுக்குள்ள போயிரும்..கால் அந்த கொட்டாப்பட்டிகுள்ள போயிரும்..உருண்டு உருண்டு தப்பிச்சுருவான்.."
செந்தில் இந்த குற்றசாற்றுகளைக் கேட்டு கதறிக் கதறி அழுகிறார்.
பார்பரா - "டோன்ட் வொரி..ஐ வில் டீச் யூ.."
கவுண்டமணி - "அய்யோ அவனுக்குத் தமிழே சரியா வராது..டேய் கோண வாயா..புஷ்பம் சொல்லு.."
செந்தில் - "புஇபம்.."
கவுண்டமணி - "இந்த வருஷம் தீபாவளிக்கு டென் தவுசண்ட் வாலா கொளுத்தி உன் வாயிலப் போடுறேன்..அப்பத்தான் வாய் லேசா சேதாரம் ஆகி நீ ஒழுங்கா உச்சரிப்ப.."
பார்பரா - "சும்மா சும்மா திட்டாதீங்க.."
கவுண்டமணி - "சரி இன்னொரு டெஸ்ட்..மேடம் சொல்லு.."
செந்தில் - "மேம்.."
கவுண்டமணி - "பாருங்க ஒரு எழுத்த விட்டுட்டான்..உன் நாக்குல வசம்பத் தான் தடவனும்.."
பார்பரா - "இதுல இருந்தே தெரியுது நீங்க பத்தாவது பெயில்னு..இந்த லட்சணத்துல நீங்க பாடம் எடுத்தா எப்படி இருக்கும்.."
செந்தில் - "கோண வாயன் கொட்டாவி விட்ட மாதிரி இருக்கும்.." சொல்லி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
கவுண்டமணி - "தோசக்கல் தலையா..கோண வாயன் கொட்டாவி விட்டு பார்த்து இருக்கியா..எவனாவது சொன்னா அத உடனே பிடிச்சிகிறது..நான் கோண வாயன் கொட்டாவி விட்டு பார்த்ததே இல்ல..இங்க வா உன் வாய் ஷேப்ப கொஞ்சம் மாத்துறேன்.."
செந்தில் - "பழமொழி சொன்னா அனுபவக்கனும்..ஆராயக் கூடாது.."
கவுண்டமணி - "இப்போ உன்ன பிரிச்சு ஆராயப் போறேன்..அப்புறம் நீ அனுபவி.."
மணி அடிக்கும் கம்பியை எடுத்து கொண்டு செந்திலைத் துரத்துகிறார்.குறி பார்த்து வீசும் போது செந்தில் குனிந்து விட கோச்சிங் செண்டர் ஓனர் மீது விழுந்து விடுகிறது.கவுண்டமணிக்கு வேலை போய் விடுகிறது.
பார்பரா - "எடிசன்..உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே..ஐ வில் மேரி யூ.."
கவுண்டமணி - "யாரு இந்த மொள்ளமாரியையா..நீ மேரி..சரிதான் முதல்ல அடிப்பட்டவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டுப் போங்க.."
செந்தில் - (பாடுகிறார்) "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..நடுவில மானே,தேனே அப்படி ஏதாவது நீயே போட்டுக்கோ.."
கவுண்டமணி - "அந்தப் பாட்ட நீ பாடாத..பன்னிங்க காதலைப் பன்னி மேய்கிறவனால மட்டும் தான் உணர முடியும்.."
செந்தில் - "அப்ப உங்களுக்கு கட்டாயம் புரியும்.."
கவுண்டமணி - "ஒருநாள் இல்ல ஒரு நாள் உனக்கு என் கையால தாண்டா சாவு..நீ நல்லாவே இருக்க மாட்ட.."
மறுநாள் பார்பராவைத் திருமணம் செய்து கவுண்டமணியிடம் ஆசீர்வாதம் வாங்க வருகிறார்.
கவுண்டமணி - "டேய் புண்ணாக்கு அது பார்பரா இல்ல..எனக்கு பணம் தர வேண்டிய வடக்குபட்டி ராமசாமி பேத்தி பாப்பம்மா.. நாந்தான் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வைச்சேன்.."
செந்தில் - "குடுத்தக் கடனை வசூல் பண்ணத் தெரியல..ஒரு இடத்துலையும் வேலையில நிலைக்கிறது கிடையாது..உங்களுக்கு எல்லாம் எப்போ தான் கல்யாணம் ஆகுமோ..அதுக்குள்ள கருமாதி வந்துரும் போல இருக்கே.."
கவுண்டமணி - "உனக்கு கருமாதி பண்ணிட்டு தான் எனக்கு மறுவேலை.."
கவுண்டமணி துரத்த செந்தில் மரத்தில் ஏறி கொள்கிறார்.
கவுண்டமணி - "இனி நீ அங்கேயே தான் இருக்கனும்..முதல் ராத்திரியும் கிடையாது..முதல் பகலும் கிடையாது..இந்த பன்னிக்கு முதல்ல மரபணு சோதனை செஞ்சா நமக்கு ஒரு நோபெல் பரிசு கிடக்கும்..பன்னியால மரத்துல ஏற முடியுமா.."
செந்தில் - "யோவ் வாத்தி ஒண்ணும் பண்ண முடியாது.."
கவுண்டமணி - "டேய் பன்னி உன் உடம்பு இளைச்சா தானா வருவ..அப்போ இருக்குடி உனக்கு.."
***************
ரெண்டு வருடம் கழித்தும் கவுண்டமணி செந்திலைப் பிடிப்பதற்கு அதே இடத்தில் இருக்கிறார்.உடம்பு இளைத்து பதினாறு வயதினிலே கால கவுண்டமணி போல இருக்கிறார்.செந்தில் முன்னை விட நன்றாகத் திரண்டுக் கொழுத்து இருக்கிறார்.
"யோவ் வாத்தி ஒண்ணும் பண்ண முடியாது.." - குரல் வேறு மாதிரி இருக்கிறது.
திரும்பி பார்த்தால் செந்திலின் ரெண்டு வயது மகன் இதை சொல்லி விட்டு கவுண்டமணியைப் பார்த்து கை கொட்டி சிரிக்கிறான்.
கவுண்டமணி - "எப்போ கீழே வந்தான்..அந்த குழந்தை எப்படி வந்தது..இந்த பதிவு எழுதியவனை முதல்ல வெளுக்கனும்.. எப்படியாவது அவனை காப்பாத்தி எல்லா தடவையும் எனக்கே ஆப்பு வைக்கிறான்.."
***************
Friday, October 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
// மைண்ட் வாய்ஸ்ல //
புது வாய்ஸa இருக்கு?
//இவன் நாட்டாமை இல்ல காட்டாமை//
நல்லாருக்கு.
//இந்த பன்னிக்கு முதல்ல மரபணு சோதனை செஞ்சா நமக்கு ஒரு நோபெல் பரிசு கிடக்கும்..பன்னியால மரத்துல ஏற முடியுமா.//
நல்ல கற்பனை.
நல்லாருக்கு அர்விந்த்.... கற்பனை சூப்பரா இருக்கு. கொஞ்சம் ஜெர்க். சரிபண்ணிக்கோ...
ஓட்ட போட்டாச்சு.
பிரபாகர்.
/கவுண்டமணி - "எப்போ கீழே வந்தான்..அந்த குழந்தை எப்படி வந்தது..இந்த பதிவு எழுதியவனை முதல்ல வெளுக்கனும்.. எப்படியாவது அவனை காப்பாத்தி எல்லா தடவையும் எனக்கே ஆப்பு வைக்கிறான்.."//
:) லொல்...
//இவங்க ஆண்டிபட்டியில மீன் வித்துக்கிட்டு இருந்தாங்க..ஸாரி ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடில படிச்சவங்க..சரி ஒவ்வொருத்தரா அறிமுகம் பண்ணிக்கோங்க..டேய் பன்னி முதல்ல நீ ஆரம்பி//
Koundarai பார்த்த மாதிரி இருக்கு தல
நிறைய வசனங்கள் அப்படியே கவுண்டமணி பேசுவது போலவே இருந்தது அரவிந்த்.
கவுண்டர் - செந்தில் கற்பனைதான் உன்னுடைய பெஸ்ட்ன்னு சொல்லுவேன்.
சூப்பர் இரும்பு..,
ஆமா நண்பா பேசாம நீங்க குறும்புத்திரை அரவிந்த்‘ன்னு பேரு வைச்சிக்கலாம்...
காமடிகள் நல்லாருக்கு...(voted 2/2)
சூப்பர் ணா...
so nice & hilarious
Keep going
:)))))))
அருமை... அருமை....
இன்னைக்கு நாய் புடிக்கற வண்டி வரட்டும், உங்கள் புடிச்சு குடுக்கறன இல்லையா பாருங்க..
//இந்த பதிவு எழுதியவனை முதல்ல வெளுக்கனும்//
ஆமா.
நல்ல கற்பனை சக்தி பா உனக்கு... சூப்பர் காமெடி... :))
Post a Comment