கமல் பேட்டி எனக்கு புரியவில்லை என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு இந்த பேட்டியைப் பார்க்கும் வரை.இந்த நையாண்டியும் நக்கலும் கமல் என்ற படைப்பாளிக்கே உரியது.பார்த்து விட்டு ரொம்ப நேரம் சிரித்தேன்.கமலுக்கு எடுத்த பொன்விழா ஆண்டில் எல்லோரும் அவரைப் புகழ்ந்து தள்ளியதால் அவரது சுயத்தை மறந்து விடுவாரோ என்ற சந்தேகம் இருந்தது.
இதை பார்த்தப் பிறகு இல்லை.
இந்த இயல்பான கோபத்திற்காகவே நான் கமலுக்கு என்றும் இரசிகனாகவே இருப்பேன்.
அவர் சும்மா என்று படத்திற்கு பெயர் வைத்தாலும் பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது.அது தலைமுறை தாண்டியும் தொடரும்.
7 comments:
இதேதான் நானும்
கலாச்சாரமும் மாற்றங்கலும்(வீடியோ)
நன்றி
அருமையான சலனம்.. எனது youtube விருப்பங்களில் இதுவும் ஒன்று...
கலாச்சாரத்தை கலாசாரம் என்று மாற்றிவிடுங்கள். கலாசாரம்தான் சரியானது..
அவ்வாறே ஆ.ஞானசேகரன் நீங்களும் கலாசாரமும் மாற்றங்களும் என மாற்றிவிடுங்கள்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
தலைவர் தலைவர் தான் என்ன நக்கல் ? கிருஷ்ணசாமி அண்ணன் இப்போ என்ன செய்கின்றார்?
இது ரொம்ப பழைய வீடியோ பாஸ். பல பேருடைய ஓர்குட் பக்கத்தில் இந்த வீடியோவை பார்க்கலாம் :)
இதை இப்போதான் நீங்க பார்க்கறீங்களா.. இது விருமாண்டி சமயத்துல வந்தது... நானும் இதை பற்றி முன்னர் பதிவு எழுதியிருக்கிறேன்.. http://acchamthavir.blogspot.com/2009/04/blog-post_04.html
கமல் பேட்டி & clippings அருமை.
தாங்கள் அதற்கான காணொளியை இணைத்துள்ளீர்களா? எனக்கு தெரியவில்லையே நண்பா. எப்படியோ இதற்கான உங்களது இடுகையை ரசிக்கிறேன்.
Post a Comment