Tuesday, October 20, 2009

துவையல் - ஊமைகுத்து ஸ்பெஷல்

முதல் தடவை மும்பை வந்த பின் ஆறு மாதம் கழித்து தான் சென்னைக்கு திரும்பினேன்.கொஞ்ச நேரம் நான் இருந்த சந்தோஷத்தில் எனக்கு தமிழே புரியவில்லை.வெளியே வந்த உடன் ஒரு ஆட்டோகாரர் வந்து "எங்கே.." என்று கேட்டார்.

நானும் அந்த நேரத்தில் எனக்கு தெரிந்த ஒரே ஒரு இந்தி வார்த்தையை சொல்லி விட்டேன்."கியா.."

ஒரு இளிச்சவாயன் சிக்கி விட்டான் என்று அவரும் விடாமல் "வேர்.." என்று சொல்ல

"அண்டர்வேர்.." என்று மனதுக்குள் நினத்து கோண்டு "மடிப்பாக்கம்.." என்று சொன்னேன்.

"400 ரூபிஸ்.."

சரிவராது என்று தலையாட்டினேன்.அவரும் எவ்வளவு என்று என்னை சொல்ல சொன்னார்.

"பதினைஞ்சு..வருமா.." என்று சரளமாக சொல்ல..

"காலையிலே வந்துட்டாங்க.."

"இஸ்கியா.." என்று அவரை பார்த்து சொன்னேன்.(இப்படிதான் சூடு போட்டு விட்டு கவுண்டமணி செந்திலிடம் கேட்பார்.அதற்கு அர்த்தம் வலிக்குதா..)

கவுண்டமணி என்னை அந்த அளவிற்கு பாதித்து இருக்கிறார்.இன்னுமொரு சம்பவம்..

பேராண்மை பாக்க தியேட்டரில் நின்று கொண்டு இருந்தோம்.எனக்கு முன்னால் இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தார்கள்.முதல் ஆள் டிக்கெட்டும் பாக்கியும் வாங்கிய உடன் இரண்டாவது ஆளும் பணம் கொடுத்து விட்டார்.முதல் ஆள் நூரு ரூபாய் கம்மியாக இருக்கு என்று சண்டை போட ஆரம்பித்தார்.சரி பார்த்து பணம் வாங்கி விட்டு சென்றார்.

இரண்டாவது ஆளிடம் அவர் திரும்ப பணம் கேட்க..நான் கொடுத்து விட்டேன் என்று மறுபடியும் ஒரு சண்டை.

உடனே நான் பின்னாடி இருந்து "உங்க சண்டையில நான் குடுத்த ஐ நூரு ரூபாய மறந்துராதீங்க.." என்று சொன்னவுடன் டிக்கெட் கொடுப்பவர் சிரித்து விட்டார்.

*****************

ஊருக்கு போய் விட்டு வந்த பிறகு ஒரே வெறுமையாக இருக்கிறது.பக்கத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பில் அம்மா பேச சொல்லியும் எதுவும் பேசவில்லை.இன்னும் ஒரு வாரம் இதே நிலைமை தான்.எழுதுவதை கூட நிறுத்தி விடலாம் என்ற அளவிற்கு வெறுமை.முந்தா நாள் இதே நேரம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று யோகித்து பார்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊரில் இருக்கும் போது இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு,மூனு தான் இருக்கு இப்படி எண்ணி எண்ணியே நேரம் முடிந்து விடுகிறது.கடைசி நாள் சரியான தூக்கம்.அதிலும் இன்னும் நாலு மணி நேரம் தான் இருக்கு என்ற எண்ணம் வந்து என் மேல் ஊமை குத்துகளாக விழுந்தது.

*****************

நண்பனிடம் பேசும் போது வேட்டைகாரன் பாடல் "நான் அடிச்சா தாங்க மாட்ட..நாலு மாசம் தூங்க மாட்ட.." பற்றி பேச்சு வந்தது.அதற்கு நண்பர் சொன்ன பதில் சென்ஸார் காரணமாக சொல்லப்படவில்லை.

அப்படி சொன்னதை தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்களுக்கு மெயிலில் சொல்கிறேன்.

அவன் சொன்னதை விஜய் கேட்டால் நாலு மாசம் தூங்க மாட்டார்.

*****************

பேராண்மை பார்த்து விட்டு பொறியல் ஆகி இருந்ததால் ஆதவன் பார்க்கவில்லை.ஆதவன் பார்த்து இருந்தால் அந்த படம் என்ன கதி ஆகியிருக்கும் என்பது ரவிகுமாருக்கே வெளிச்சம்.இந்த நேரத்தில் தான் ரவிகுமாரின் பேட்டி ஞாபகம் வந்தது.அவர் சொன்னது.

"படம் நல்லாயில்லை என்று சொல்ல உரிமை இருக்கிறது..ஆனால் பார்க்க வேண்டாம் என்று சொல்ல உரிமையில்லை.."

அவருக்கே தெரிந்து இருக்கிறது படம் எப்படி இருக்கும் என்று.

ஆக மொத்தம் ஒன்று மட்டும் உறுதி.

ஒருத்தருக்கும் படம் செலக்ட் பண்ண தெரியாது என்று.சூர்யா நல்ல படங்கள் செய்ய காரணம் அவரை தேர்வு செய்யும் இயக்குனர்களே.

விஜய் சந்தோஷமாக இருப்பார்.பின்னே இருக்காதா என்ன..அவருக்கு பிறகு ரவிகுமாருடன் மொக்கை படம் குடுத்தது சூர்யா தான்.உதய நிதியுடன் மொக்கை குடுத்ததும் அதே சூர்யா தான்.விஜய்,விக்ரம்,அஜித்,விஷால் வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் என்று ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

வேட்டைகாரன் வெளியாகவில்லை அது மட்டும் தான் என் வருத்தம்.திருப்பாச்சி படமும் வேட்டைகாரன் படமும் சேம்மாமே.

(என்னது ஷேம் ஷேம் பப்பி ஷேம்மா..)

*****************

கார்த்திக் என் தம்பி.அவனுக்கு ஒரு விபத்து.பலத்த காயம்.அவன் நலம் பெற பிராத்திக்கிறேன்.அவனுக்கு அட்வைஸ் சொல்ல எனக்கு தகுதியில்லை.அவனுக்கு ஒரு வேண்டுகோள்.

உறுப்புகளும்,உறவுகளும் இருக்கும் போது அதன் அருமை நமக்கு புரிவதேயில்லை.

"தண்ணியடிச்சா வண்டி ஓட்டாதே..வண்டி ஓட்டுனா தண்ணியடிக்காதே.

*****************

14 comments:

வல்லிசிம்ஹன் said...

துவையல்னு பெயரா இதற்கு!!! புதுத் துகையல்னு நினச்சு இல்ல வந்தேன்:)
நல்ல தொகுப்பு:)

லோகு said...

கார்த்திக் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்..

மற்றபடி ஊமைக்குசும்பு நல்லாவே இருந்துச்சு..

ஈரோடு கதிர் said...

//அவனுக்கு அட்வைஸ் சொல்ல எனக்கு தகுதியில்லை.//

ஏன் என்ன ஆச்சு...

நலமாக இருக்கிறாரா?

க.பாலாசி said...

//அப்படி சொன்னதை தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்களுக்கு மெயிலில் சொல்கிறேன்.

அவன் சொன்னதை விஜய் கேட்டால் நாலு மாசம் தூங்க மாட்டார்.//

அப்படியா நண்பா....

துவயல் நல்லாருக்கு நண்பா....

JesusJoseph said...

முதல் ரெண்டும் ரெம்ப நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

துபாய் ராஜா said...

தம்பியின் தம்பி சீக்கிரம் குணமாக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
இந்த மாதிரி விஷயத்துக்கு அட்வைஸ் பண்ணா தப்பில்லை தம்பி..

துபாய் ராஜா said...

ஆறுமாசமா பேசுற இந்திக்கே தமிழ் கேட்க இம்புட்டு சந்தோஷம்னா ஆண்டாண்டு காலமா அரேபி பேசற எங்களை மாதிரி ஆளுங்களுக்கு தமிழ் கேட்டா எம்புட்டு சந்தோஷமா இருக்கும் தம்பி... :))

துபாய் ராஜா said...

ஊருக்கு போவதை நினைத்து நினைத்து சந்தோஷப்படும் மனம் திரும்பிய பின் வெறுமையாக இருப்பதை வெளிப்படுத்தியிருப்பது உண்மையான உண்மை....

துபாய் ராஜா said...

தொடர்ச்சியான தோல்விகளால் தமிழ்பட உலகத்திற்கு இது மிகவும் சோதனையான நேரம்.... :((

நம்பி செல்லும் ரசிகர்களுக்கு மிகவும் வேதனையான நேரம்.... :((

அகல்விளக்கு said...

//தண்ணியடிச்சா வண்டி ஓட்டாதே..வண்டி ஓட்டுனா தண்ணியடிக்காதே//

செம மேட்டருங்கோ..

பார் பில்லுல இத நேத்துத்தான் பார்த்தேன்...

Unknown said...

///பதினைஞ்சு..வருமா.." என்று சரளமாக சொல்ல///
யோவ்... அடிக்கணும்டா உன்னைய

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு....

Suresh Kumar said...

நல்ல துவையல்

IKrishs said...

Vidumuraiku ooruku pogum podhu yerpadum nununkkamana unarvugalai alagaga padhivu seydhi irukureergal...Nanjil nadan sirukathai onril andha mana nilayai alagaga solli iruppar..kurippitta Sirugathai yin peyar marandhu vitten aanal pei kottu yengira siru kathai thoguppil padithu irukiren...