Wednesday, October 28, 2009

ஒத்து வந்தா பங்கு உடைசல குடுத்தா சங்கு

"என்ன இந்த முறையும் ஆள் தப்பிச்சிட்டானா..என்ன மயி.. புடுங்குறீங்க..குமார் அவனை கூப்பிடுங்க..அவன் தான் இந்த வேலைக்கு சரியான ஆள்.." என்று காட்டுக் கூச்சல் போட்டார் கவுதம்.

அரை மணி நேரம் கழித்து குமார் வர..எல்லோரையும் அனுப்பி விட்டு இருவர் மட்டும் தனியாக..

"குமார் உன்னை பத்தி சொன்னாங்க..நீ தான் இந்த காரியத்தை செய்யனும்..எங்களால அவனை நெருங்க கூட முடியவில்லை.."

"ம்..பண்றேன்..ஆனா நான் கேட்பதை உடனே செஞ்சு தரணும்..கேள்வி கேட்க கூடாது.."

"என்ன படிச்சியிருக்க.."

"பி.எஸ்.சி மேக்ஸ் பாதியிலே விட்டுட்டேன்..திரும்பவும் சொல்றேன் எனக்கு கேள்விகள் பிடிக்காது.."

"சரி கேக்கலை..இவன தான் நீ முடிக்கனும்..போட்டோஸ் அண்ட் டிடேயில்ஸ்.." என்று குமாரிடம் ஒரு கவரை குடுத்தார் கவுதம்.

"எத்தனை தடவை முயற்சி பண்ணீங்க அவனை கொல்ல.." கவரை பிரிக்காமலே கேட்டான் குமார்.

"நிறைய தடவை இருக்கும்..ஒரு தடவை அவனுக்கு பலத்த அடி தலையில..அதுல இருந்து ரொம்ப உஷாரா இருக்கான்.."

"அப்ப அவனை கொல்ல ஆறு மாசம் ஆகும்.."

"என்ன ஆறு மாசமா.."

"சரி வேண்டாம்..கவரப் பிடிங்க..ஆள விடுங்க..புதுசுனா உடனே முடிக்கலாம்..அவன் பழசு.." என்று எழுந்தவனை தோளைப் பிடித்து அமர்த்தினார் கௌதம்.

"ஏன் இவ்ளோ கோபம்..சயின்ஸ் படிச்சுருந்தா உனக்கு இதெல்லாம் புரியும்.."

"எது சயின்ஸ்.."

"இரத்தம்,அதில் வரும் அழுத்தம்.."

"ரத்தத்தின் அளவு,அதில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை,அழுத்ததின் அளவு இப்படி எல்லாமே கணக்கு தான்..வாழ்க்கையே ஒரு கணக்கு தான்.."

"எப்படி சொல்றே.." என்று சிரித்தவரைப் பார்த்து

"அது தெரிஞ்சா தான் நீங்களே அவனை போட்டு இருப்பீங்களே..பை தி பை..உங்க சிரிப்பு இன்னும் நல்லாயிருந்திருக்கும் ஒரு பல்லைப் புடுங்காமல் விட்டுடிருந்தால்.." சொல்லிவிட்டு எழுந்து சென்ற குமாரை வெறித்து பார்த்தாஎ கௌதம்.

************
மூன்று மாதங்கள் கழித்து குமார் போனில்..

"ஜேம்ஸ் அவன் காரை சர்வீஸுக்கு விட்டு இருக்கான்..அதுல டைம் பாம் வைங்க கௌதம்.."

"நீ செய்வன்னு பாத்தா எங்களை செய்ய சொல்ற..என்ன இதெல்லாம் குமார்.."

"சொன்னதை மட்டும் செஞ்சா போதும்.." என்று போனை வைத்து விட்டான்.

காரில் குண்டு வெடித்து டிரைவர் மரணம் என்று செய்திதாள்களில் வந்தது தான் மிச்சம்.

"குமார் நீ என்ன நினைச்சி இருக்க உம் மனசுல..முடியலைன்னா சொல்லு..நாங்க பார்த்துக்குவோம்.."

"ஜேம்ஸை நாம நேர்ல சந்திக்கப் போறோம்..அப்பாயிண்மெண்ட் பிக்ஸ் பண்ணுங்க..துப்பாக்கி கூட வேண்டாம்.."

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சியிருக்கு.."

"ப்ளீஸ் சொன்னதை மட்டும் செய்ங்க.."

ஜேம்ஸை அவன் வீட்டில் பார்த்து துக்கம் விசாரித்து விட்டு வந்தார்கள் குமாரும்,கௌதமும்.

"நாளைக்கு ஆயுத பூஜை..ஆயுதத்தை எல்லாம் ரெடி பண்ணுங்க..அவன் நாளைகழிச்சி அவனுக்கு கடைசி நாள்.."

"நடந்தா சரி..".

**************

ஆயுத பூஜைக்கு மறு நாள் வெளியே வந்த ஜேம்ஸ் கொல்லப்பட்ட செய்தி கேட்டு ஊரே கொந்தளித்தது.

குமார் வீட்டில்..

"எப்படி முடிச்ச.." என்ற கௌதமை பார்த்து

"அவன் கேஸ் ஹிஸ்டரிய படிச்சேன்..அவனுக்கு எழுத படிக்க தெரியாதுன்னு அதுல இருந்தது..ஆனா அவன் வீட்டுக்கு தினமும் எல்லா பேப்பரும் போகுது..இங்கே தான் என் சந்தேகம் வந்தது.."

"ம்..அப்புறம்.."

"அந்த பேப்பர் கடையிலே விசாரித்தேன்..அவனுக்கு தலையில அடி பட்ட கொஞ்ச நாள் கழிச்சி தான் பேப்பர் வாங்க தொடங்கியிருக்காங்க.."

"கணக்கு..கணக்கு தான்.."

"பழைய பேப்பர்காரனை அனுப்பி அவங்க வீட்டு சமையல்காரனை சரிகட்டி பழைய பேப்பர்,காலண்டர் எல்லாம் எடுத்திட்டு வந்தேன்.."

"இதெல்லாம் சொல்லவேயில்ல.."

"நீங்க டிசம்பர் 25ம் தேதி அவனுக்கு குறி வைச்சு இருக்கீங்க..அவன் காலண்டர்ல 24ம் தேதில சிகப்பு வட்டம் இருக்கு..இப்படி நீங்க தாக்குதல் நடத்துன எல்லா நாளுக்கும் முன்னாடி உள்ள நாள் குறிக்கப்பட்டிருக்கு.."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.."

"24ம் தேதி பேப்பர்ல ஒரு பக்கம் மட்டும் வெட்டி எடுத்து இருந்தாங்க..அது என்ன நியூஸ்னு பாக்க 23,24,25 உள்ள பழைய பேப்பரை எடுத்து பார்த்தேன்..25ம் தேதி ஒரு பக்கத்துல அவன் மேல நீங்க நடத்த திட்டம் போட்டிருந்த விஷயம் இருந்தது..அவனுக்கு எல்லாமே ஒரு நாளைக்கு முன்னாடியே தெரியுது.."

"அப்ப நீ நடத்த சொன்ன கார் பாம்.."

"அவனுக்கு விஷயம் தெரியுதான்னு கன்பார்ம் பண்ணினேன்.."

"அவன் வீட்டுக்குப் போனது.."

"காலண்டரைப் பாக்க.."

"ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் ஏண் கொலை பண்ண திட்டம் போட்ட.."

"ஆயுத பூஜை அன்னைக்கு தான் பேப்பர் வராது இல்ல..அதான் அடுத்த நாள்.."

"சரியான் ஆள்டா நீ.." என்று சொல்லி கட்டிக் கொண்ட கௌதமை பார்த்து..

"கடைசியில உன் புத்தியை காட்டிட்ட இல்ல பாடு.._த்த சாவுடா.." என்று குமார் துப்பாக்கியை எடுத்தான்.

"என்ன பண்ற.."

"சாகும் போது ஜேம்ஸ் சொன்னான்..நீ என்ன கொல்ல திட்டம் போட்டு இருக்கன்னு..அவன் கையில் அப்ப பேப்பர் இருந்ததுடா..அவன் பேப்பர் வாங்க தான் வெளியே வந்தான்.."

"டூமீல்..டப்.." என்று சத்தம் கேட்டு வந்த கௌதமின் ஆட்கள் குமாரை துரத்த தொடங்கினார்கள்.

ஓடும் போது தூரத்தில் எக்மோர் ஸ்டேஷனில் 2164 வண்டி மும்பைக்கு புறப்பட தொடங்க..குமாருக்கு ஜேம்ஸ் சாகும் போது சொன்ன 2163 எண் ஞாபகம் வந்தது.

"இன்னும் நாலு அடிதான்..கம்பியை பிடித்து விட்டால் தப்பி விடலாம்.." என்று நினைத்து கொண்டே கம்பியைப் பிடிக்க தாவிய குமாருக்கு முதல் முறையாக கணக்கு தப்பாக,கை ஸ்லிப்பாக..அலற கூட நேரம் இல்லாமல் தண்டவாளத்திற்கு உள்ளே போய் விட்டான்.

*********

அடுத்த நாள் செய்திதாளின் முதல் பக்கத்தில்..

பிரபல தாதா ஜேம்ஸ் காலை 9 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

விசாரிக்க சென்ற உளவுத்துறை போலீஸ் அதிகாரி கௌதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டு விட்டு தப்பிக்க முயன்ற குமார் என்ற பட்டதாரி வாலிபர் இரயில் அடிப்பட்டு சாவு.

***********

டிஸ்கி :

1.அடிக்கொய்யால நீ எந்த ரகத்துல வருவன்னு எனக்கு தெரியல என்று ஒரு நண்பர் இந்த கதையைப் படித்து விட்டு சொன்னார்.

2.இரயிலைப் பிடிக்கும் குமாருக்கு "குருவி..குருவி.." அப்படி பிண்ணனி இசை போட்டு கொண்டே படிக்கவும்.

பின் குறிப்பு : இது ஒரு க்ரைம் கதை.என்னுடைய முதல் முயற்சி.கொஞ்ச நாட்களாக தலை மறைவாக இருக்கும் பதிவர் டக்ளஸ் என்ற ராஜூ என்ற ரைஸ் பிளேட் ரெட்டிகாரு அவர்களுக்காக இந்த கதை .

17 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பரபரப்பு ....அற்புதம்
//சரியான் ஆள்டா நீ.." என்று சொல்லி கட்டிக் கொண்ட கௌதமை பார்த்து..

"கடைசியில உன் புத்தியை காட்டிட்ட இல்ல பாடு.._த்த சாவுடா.." என்று குமார் துப்பாக்கியை எடுத்தான்.

"என்ன பண்ற.."

"சாகும் போது ஜேம்ஸ் சொன்னான்..நீ என்ன கொல்ல திட்டம் போட்டு இருக்கன்னு..அவன் கையில் அப்ப பேப்பர் இருந்ததுடா..அவன் பேப்பர் வாங்க தான் வெளியே வந்தான்.."
//
//இன்னும் நாலு அடிதான்..கம்பியை பிடித்து விட்டால் தப்பி விடலாம்.." என்று நினைத்து கொண்டே கம்பியைப் பிடிக்க தாவிய குமாருக்கு முதல் முறையாக கணக்கு தப்பாக,கை ஸ்லிப்பாக..அலற கூட நேரம் இல்லாமல் தண்டவாளத்திற்கு உள்ளே போய் விட்டான்//

புலவன் புலிகேசி said...

நல்ல இருக்கு தல. ஆர்வத்துடன் படித்தேன்.. என்ன தமிழ் பட முடிவு மாதிரி ஆயிடுச்சி....

வனம் said...

வணக்கம் அரவிந்த்

முடியல ராஷேஸ்குமார் நாவல் படித்தமாதிரி இருக்கு -- நல்லா இருக்கு
இராஜராஜன்

ஜெட்லி... said...

கலக்கல் எக்ஸ்பிரஸ்

பிரபாகர் said...

தம்பி, நல்லதொரு சஸ்பென்ஸ் உன்னிடமிருந்து... வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

தினேஷ் said...

டொய்ங்க்....

க.பாலாசி said...

கதையின் ஓட்டம் அந்த ட்ரெய்ன் மாதியே வேகமா இருக்கு. கொஞ்சம் ராஜேஷ்குமார் நாவல் மாதிரி முயற்சி பண்ணியிருக்கீங்க. கடைசியா திருப்பங்களும் நல்லாருக்கு...

வாழ்த்துக்கள் நண்பா...

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கதை சூப்பர்.. செம ஃபாஸ்ட்ல போகுது.. கலக்குங்க.. :))

வால்பையன் said...

கதை முழுக்க ட்விஸ்டா இருக்கு!

கொஞ்சம் பிழை திருத்தி சர்வேஷனின் நச்சுன்னு ஒரு கதைக்கு அனுப்புங்க!

shortfilmindia.com said...

நிறைய லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் ஸ்பீடா இருக்குது.

கேபிள் சங்கர்

ஈரோடு கதிர் said...

டெம்ப்ளெட் பின்னூட்டம் இல்ல அரவிந்த்

உண்மையிலேயே செம திரில்

ரசித்தேன்

Anonymous said...

நல்லா இருக்கு அரவிந்த்.

velji said...

the story is clearly on the track.
good piece of writing.

யூர்கன் க்ருகியர் said...

டுவிஸ்டு வச்ச சூப்பர் கத ..
விறு விறு ... சுறு சுறு ....

Unknown said...

முடிவு நல்லருக்கு, ஆனா ஆரம்பத்துல கொஞ்சம் கொழப்பமா இருக்குங்க..

Toto said...

க‌தை ந‌ல்லா வ‌ந்திருக்கு ஸார்.. க‌ல‌க்குங்க‌..

-Toto
www.pixmonk.com

Unknown said...

விறுவிறுப்பு சுறுசுறுப்பு.. அருமையான ஆங்கில படத்தின் TRAILOR பார்த்த அதிர்வு:) வித்தியாசமான படைப்பு:) வாழ்த்துகள்