Tuesday, October 6, 2009

விஜய் படங்களின் ஓட்டைகளில் வழி(டி)யும் லாஜிக்

கமல் படம் பார்க்கும் முன் இணையத்தில் விமர்சனங்களைப் படித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு(குறிப்பா என்னுடையது என்று சொல்லவில்லை) என்று ஒரு நெருங்கிய நண்பன் சொன்னான்.அவன் சொன்னதை அப்படியே தருகிறேன்."இணைய அறிவுஜீவிகள் சொன்ன பார்ப்பனீசம்,இந்துத்துவா,குறியீடு எல்லாம் ஞாபகப்படுத்தி ஒவ்வொரு காட்சியாக பார்க்கும் நேரத்தில் அடுத்தக் காட்சியே வந்து விடுகிறது..அவர்கள் பார்வையிலே படம் பார்த்து எனக்கும் இருக்கும் ஒருவன் காணாமல் போய் விட்டான்..இந்த கூட்டத்தில் நீயும் ஒருவன்.." என்று என்னை நோக்கி சுண்டுவிரலை நீட்டினான்(நான் இப்போழுது தான் எழுத தொடங்கியதால் எனக்கு சின்ன விரலாம்).எனக்கு அந்த அளவுக்கு எதையுமே துல்லியமாக கணிக்க தெரியாத காரணத்தாலும் என்னால் ஒரு ரவுடியாக மாற முடியாதோ என்ற பயத்தாலும்(கொரில்லா செல்) இதுவரை அமைதி காத்து வந்தேன்.அதை உடைத்து முதலில் கை வைக்க போகும் தலை தப்பு தளபதி விஜய் அவர்கள்.(முதல்ல விஜய் அப்புறம் தான் மத்தவங்க..)

வில்லு படத்தில் மகன் விஜயை மண்ணுக்குள் புதைத்தப் பிறகு ஒரு மண்புயல் உருவாகி அவர் குழிக்குள் இருந்து எழுந்து வந்து உளுந்து வாங்குவார் இல்ல அடி வாங்குவார் அப்புறம் கொடுப்பார்.அப்படி வந்த மண்புயல்ல கொஞ்சம் மண் என் கண்ல விழுந்து நான் கண் கலங்கிட்டேன்.(இந்த படத்துக்கு நான் அழுததால் கூடப் படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.காரணம் துள்ளாத மனம் துள்ளும் படத்தில் விஜய் அழும்போது நான் மட்டும் சிரித்து வீட்டில் திட்டு வாங்கினேன்.)

குருவி படத்துல ஒரு லாங்க் ஜம்ப் பண்ணி கூவத்தையே தாண்டி அப்படியே ஓடுற டிரெயின்ல ஏறிய சமயம் நான் குறுகிப் போய் உக்காந்துட்டேன்.(தரணி இந்த சீன் சொல்லும் போது உங்களுக்கே சிரிப்பு வரல..).இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப சாதாரணம் என்று அடுத்த காட்சியிலே தெரிந்து கோண்டேன்.இன்னும் கண்ணுகுள்ளே நிக்குது நீங்க லிப்ட உடச்சு வெளியே வந்த சீன்.

அழகிய தமிழ்மகன் படத்தில் நீங்க ஒரு தடகள வீரர் தான் நான் ஒத்துக்கிறேன்.அதுக்காக ஸ்ரெயாவ மகாபலிபுரம் ரோட்ல துரத்தின நீங்க அப்படியே கோல்கொண்டா வந்துடீங்க(ஆந்திரா பிளேன் கூட இவ்வளவு வேகமா வராது).அதை பார்த்து நான் அசந்து போயிட்டேன்.

போக்கிரியும்,கில்லியும் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த படம்.பின்ன ஒரிஜினல் பார்த்த எனக்கு மகேஷ் பாபு தான் தெரிஞ்சாரு.அதுக்காக அவரு மூக்க ஊறிஞ்சா நீங்களும் அப்படி செய்யனுமா.(அன்னைக்கு அவருக்கு ஜலதோஷம்.மகேஷ் பாபு சீக்கிரம் ஒரு ஹிட் படம் குடுங்க)

ஆதி படத்துல வர்ற கடைசி சண்டையிலே முதுகு புல்லா தீப்பிடிச்சி எரியும்,அதை அணைக்காம கொள்ளாம சண்டை போடுவீங்க.அதைப் பார்த்து நான் தீய்ஞ்சு போயிட்டேன்.

சிவகாசி படத்துல ஹீரோயின் வந்து கேட்டப் பிறகு பொங்கி வரும் உங்க அம்மா பாசத்துல நான் தொங்கி போயிட்டேன்.அதுல வர்ற கடித மிரட்டல் எல்லாம் தூள் படத்துல வந்த மாதிரி ஞாபகம்.(பேரரசு தரணியோட உதவி தானே..பின்ன எப்படி இருக்காம போகும்)ரெண்டு படம் முடித்தப் பிறகு பேரரசுவ ஏன் அஜித் மேல ஏவி விட்டுடீங்க..

மதுரை படத்துல செல்போன்ல இருக்கும் பாம் பேசினா வெடிக்கும்,அதை தடுக்க சிக்னல் டவரையே வெடிக்க வைப்பீங்க.அதை பார்த்து நான் அசந்து போயிட்டேன்.காய்கறி விக்கிற பையனுக்கு இவ்வளவு அறிவா? பின்னாடி வர்ற சந்ததிகள் எப்படி இருப்பாங்கன்னு யோசித்து பார்த்தா விஜய் இந்த படத்துல நீங்க கலெக்டர் தானே.

திருமலை படத்தில் வில்லனை காப்பாத்த ஆறுபது அடி உயரத்தில் இருந்து குதித்து கால லேசா தடவும் போது எனக்கு ஒன்னுமே புரியல அதே உயரத்துல வில்லன் குதிச்சா மட்டும் சிதறி விடுகிறான் எப்படி.

புதிய கீதை படம் சில பல கோடியில் எடுத்து கடைசியில சைட் ஸ்டாண்ட் போட்டு வண்டி ஓட்டக் கூடாது சொன்ன மெஸேஜ் பார்த்துட்டு நான் மெர்சல்யாயிட்டேன்.

தமிழன் படத்துல நீங்க ஸ்டாம்ப் ரீலிஸ் பண்ணும் பொது கவர்னர் தமிழ்ல பேசுவாரு.நான் இந்த படத்தப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன் காரணம் திரைக்கதை உங்க அப்பா எழுதினார் போல.

ஷாஜகான் படத்துல நீங்க டிரெயின்ல பறந்து பறந்து சண்டை போடுறதைப் பார்த்துட்டு கவுந்து படுத்துட்டேன்.ஆமா இந்தப் படத்துக்கும் ஷாஜகான் இந்த பெயருக்கும் என்ன சம்பந்தம்.காதலி கிடைக்காம ஓவரா சிரிச்சி பின்னாடி இருந்தவன் கிட்ட ரெண்டு உதை வாங்கினேன்.அந்த வெறிப் பிடிச்ச ரசிகனைப் பாக்கத் திரும்பினால் அவன் எனக்கு மேல சிரிச்சி எனக்கு உதை கொடுத்து இருக்கிறான்.

நேரா ரசிகன் படத்துக்கு போவோம்.நல்லவேளை சங்கவிக்கு பாட்டி இல்ல.

வருஷா வருஷம் தீபாவளிக்கு மொக்கை படம் பாக்குறது தான் வழக்கம்.இந்த வருஷம் தப்பிச்சோம்.

2001 - ஷாஜகான்

2002 - பகவதி

2003 - திருமலை

2004 - அட்டகாஷம்

2005 - அது ஒரு கனா காலம்

2006 - வல்லவன்

2007 - அழகிய தமிழ்மகன்.

2008 - சேவல்

2009 - இந்த வருஷம் தப்பிச்சோம்.(ஆதவனா இருக்கலாம்).வேட்டைகாரன் இல்ல

2010 - இறா இல்ல சுறா

டிஸ்கி :

பகவதி வர்ற வசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? "உயிரை எடுக்க ஆசைப்படுறவன் உயிர் மேல ஆசைப்படக் கூடாது" நாங்களும் உயிரை வெறுத்துத்தான் தான் போறோம்.இத்தனை உயிரை எடுக்கிறீங்க உங்களுக்கு உயிர் மேல ஆசை கிடையாதா ?

விஜய் ரசிகர்கள் கோவப்பட வேண்டாம்.நெகடிவ் ஓட்டு குத்த வேண்டாம்.(நான் சொன்னா கேட்கவா போறீங்க..என்னவோ பண்ணுங்க..)

28 comments:

தினேஷ் said...

இந்த படத்துக்கு நான் அழுததால் கூடப் படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.காரணம் துள்ளாத மனம் துள்ளும் படத்தில் விஜய் அழும்போது நான் மட்டும் சிரித்து வீட்டில் திட்டு வாங்கினேன்.


same blood....

தினேஷ் said...

2009 - இந்த வருஷம் தப்பிச்சோம் --வேட்டைகாரன் இல்ல

கடவுளுக்கு நன்றி இந்த வருசமாச்சும் தியேட்டர் பக்கம் தீபாவளிக்கு போகலாம்..

தினேஷ் said...

//அதுக்காக அவரு மூக்க ஊறிஞ்சா நீங்களும் அப்படி செய்யனுமா.(அன்னைக்கு அவருக்கு ஜலதோஷம்.மகேஷ் பாபு சீக்கிரம் ஒரு ஹிட் படம் குடுங்க)//

இத விட்டுபுட்டீங்க அவரு மூக்குல பேசுறானு இவரும் பேசுனத..

லோகு said...

ரைட்டு...

Admin said...

/*தமிழன் படத்துல நீங்க ஸ்டாம்ப் ரீலிஸ் பண்ணும் பொது கவர்னர் தமிழ்ல பேசுவாரு.நான் இந்த படத்தப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன் காரணம் திரைக்கதை உங்க அப்பா எழுதினார் போல.*/

கலக்கிடிங்க... விஜய் படம் பாத்து ரொம்ப நொந்து இருக்கீங்க போல

யாசவி said...

:)

பிரபாகர் said...

சகாவ எல்லாரும் சேந்து என் இப்படி புண்படுத்துறீங்கன்னு புரியல...

கலக்கலா எழுதியிருக்கே அர்விந்த்... வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

பின்னோக்கி said...

நல்லாயிருந்துச்சு :)

/.காய்கறி விக்கிற பையனுக்கு இவ்வளவு அறிவா?

படத்துல அவரு கலெக்டரா வர்ற மாதிரி தானே காண்பிச்சுருப்பாங்க. அதனால இத மட்டும் மன்னிக்க கூடாதா ? :)

Raju said...

பாவம்யா அவரு..! இப்பிடி தாளிச்சிட்டீங்க.

YumYes said...

சூப்பர்... :))

Ashok D said...

ண்ணா... சூப்பருங்கண்ணா...

IKrishs said...

Rasigan Padatha pathina unga commentukku vilundhu vilunchu siruchukittu iruken...

ரவி said...

அட்டகாசம் அஜீத் இல்லையா ?

ஈரோடு கதிர் said...

//ரெண்டு படம் முடித்தப் பிறகு பேரரசுவ ஏன் அஜித் மேல ஏவி விட்டுடீங்க..//

அப்போதானே அஜித்துக்கும் ரிவிட் அடிக்க முடியும்

எல்லாம் ஒரு நல்ல எண்ணம்தான்

நையாண்டி நைனா said...

விசை படத்திலே... லாஜிக்கா.... சகா... பஸ்ட்டு கதைய தேடு....

துபாய் ராஜா said...

//காதலி கிடைக்காம ஓவரா சிரிச்சி பின்னாடி இருந்தவன் கிட்ட ரெண்டு உதை வாங்கினேன்.அந்த வெறிப் பிடிச்ச ரசிகனைப் பாக்கத் திரும்பினால் அவன் எனக்கு மேல சிரிச்சி எனக்கு உதை கொடுத்து இருக்கிறான்.//

வேணாம்.வலிக்குது... சிரிச்சி,சிரிச்சி வயிறு..... :)))

துபாய் ராஜா said...

//காதலி கிடைக்காம ஓவரா சிரிச்சி பின்னாடி இருந்தவன் கிட்ட ரெண்டு உதை வாங்கினேன்.அந்த வெறிப் பிடிச்ச ரசிகனைப் பாக்கத் திரும்பினால் அவன் எனக்கு மேல சிரிச்சி எனக்கு உதை கொடுத்து இருக்கிறான்.//

வேணாம்.வலிக்குது... சிரிச்சி,சிரிச்சி வயிறு..... :)))

வினோத் கெளதம் said...

:)

அகல்விளக்கு said...

சேம் பிளட்.

கலக்கிட்டப்பா.......

பீர் | Peer said...

:)))

பீர் | Peer said...

அஜீத் பட ஓட்டைகளை யாராவது பதிவெழுதினால், இங்கேயே லிங்க் குடுங்கப்பா...

ஆ.ஞானசேகரன் said...

//வருஷா வருஷம் தீபாவளிக்கு மொக்கை படம் பாக்குறது தான் வழக்கம்.இந்த வருஷம் தப்பிச்சோம்.//

ம்ம்ம்ம்ம்

ப்ரியமுடன் வசந்த் said...

விஜய் பேர் போட்டா ஹிட்ஸ் வரும் அப்படின்றதுக்காக இப்படி எழுதுறத நிப்பாட்டுங்க அரவிந்த்

Unknown said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

:-)

துளசி கோபால் said...

கலக்கல்ங்ண்ணா:-)))

பரமார்த்தகுரு said...

//ரெண்டு படம் முடித்தப் பிறகு பேரரசுவ ஏன் அஜித் மேல ஏவி விட்டுடீங்க..//


அந்த குட்டி சாத்தானை நாங்களும் தேடிட்டுதான் இருக்கோம். மவனே கைல மட்டும் கெடைக்கட்டும்....

தமிழினியன் said...

//வருஷா வருஷம் தீபாவளிக்கு மொக்கை படம் பாக்குறது தான் வழக்கம்.இந்த வருஷம் தப்பிச்சோம்.//

அக்டோபர் 30ம் தேதி கண்டேன் காதலை சன் பிக்சர்ஸ் ரிலீஸ் பண்ணபோறாங்களாம், இப்போ இருந்தே அலப்பறையை ஆரம்பிச்சிட்டாங்க, ஆனா வேட்டைக்காரன் ஆர்ப்பாட்டத்தை இன்னும் ஆரம்பிக்காம இருக்கானுங்க, வேட்டைக்காரன் என்ன ஆச்சு? ஒரு கலாய்த்தல் பதிவு போடுங்க, ரீ ஷூட்டா?

Prathap Kumar S. said...

கலக்கலா கலாய்ச்சுட்டீங்க
நானும் அப்படித்தான் விஜயோட "பயங்கர" பேன்... :-)