என் தம்பி எம்.சி.சி கல்லூரியில் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தான். எல்லா வருடமும் அவர்களுக்காக அன்றைய நிலவரப்படி வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர்களை அழைத்து வருவார்கள். முதல் வருடம் தரணியும்,இரண்டாவது வருடம் ஜெயம் ராஜாவும் வந்தார்கள்.கடைசி வருடம் அமீர் வந்தார்.
கில்லி படம் இயக்கிய பிறகு அவரை அழைத்து இருந்தார்கள். கில்லி படம் வெளி வருவதற்கு நாலு நாட்களுக்கு முன்பே திருட்டு வி.சி.டி சென்னையில் கிடைத்தது. (சேஸிங் காட்சிகள் உட்பட முப்பது நிமிடங்கள் அதில் இல்லை). அந்த சேஸிங் காட்சிகள் தான் படத்துக்கு உயிர்.தெலுங்கில் இருந்து கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல் எடுத்தார்கள்.
தரணியிடம் கேள்விகள் யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றவுடன் நான் என் தம்பியிடம் மூன்று கேள்விகள் கேட்க சொன்னேன்.
1. அரையிறுதியில் தோற்ற விஜய் அணி எப்படி இறுதி போட்டிக்கு வந்தது ?
2. விஜய் எறியும் காலி பெப்ஸி பாட்டில் சுவரில் பட்டவுடன் பெப்ஸி வழியும் எப்படி ?
3. தமிழ்நாடு அணியில் விஜய் அணியினர் அனைவரும் இருப்பார்கள் எப்படி ?
விழா முடிந்து வந்தவனிடம் கேள்விகள் கேட்டயா என்று கேட்டேன்.
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன் என்றவனிடம்,தரணியின் பதிலைக் கேட்க ஆர்வமாக இருந்தேன்.
முதல் கேள்விக்கு தரணியின் பதில்
அரையிறுதி பெஸ்ட் ஆப் தீரி.அதனால் விஜய் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.
இந்த பதிலால் அடுத்த கேள்விகளை மறந்து விட்டேன் என்று சொன்னான்.மேலும் அரையிறுதிக்கு பெஸ்ட் ஆப் தீரி வைத்த ஒரே ஆள் தரணி தான் என்று சிரித்தான்.
இப்படியே தொடர்ந்த அவரின் திரைக்கதை முன்னேற்றம் குருவியில் ஓடும் இரயிலைப் பறந்து பிடித்ததில் முடிந்தது.
அடுத்த வருடம் வந்த ஜெயம் ராஜாவிடம் "ஏன் தொடர்ந்து ரீமேக் செய்கிறீர்கள்" என்று கேட்க சொன்னேன்.
ஏன் தம்பிக்கு முந்தி ஒரு பையன் இந்த கேள்வியைக் கேட்டு விட்டான்.
கேள்வி கேட்ட விதம் "ஏன் ரீமேக்கை கட்டி கொண்டு அழுவுறீங்க"
ஜெயம் ராஜா கோபமாக "புதுசா ஒரு கோடு போடுறது ரொம்ப சுலபம்.ஆனா ஒரு கோடு மேல இன்னொரு கோடு அலுங்காம போடுறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தான் தெரியும்.." என்று சொன்னாராம்.
பார்த்து சார் புதுசா ஒரு கொடுப் போடுறீங்க யாராவது கைய ஆட்டிறப் போறாங்க. அப்புறம் கோடு கோணலா போயிரும்.
மூன்றாவது வருடம் வந்த அமீரிடம் யாரும் இதுப் போல கேள்விகள் கேட்கவில்லையாம். காரணம் பருத்திவீரன்.
டிஸ்கி :
நான் யாரிடமும் கேள்விகள் கேட்கவில்லை.கா"ரணம்" ஏன் கல்லூரிக்கு வந்தவர்கள் காந்திமதியும் (மண்வாசனை படத்துல வந்த வசனத்த வேறப் பேசிக் காட்டினார். என்ன கொடும சார் இது). எஸ்.வி.சேகர் (இராணிமேரி கல்லூரியை இடிக்கலாம் என்று சொல்லி கொண்டிருந்தார்.முட்டாளிடம் பேசுவதற்கு சும்மாவே இருக்கலாம்)
Monday, August 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
போனவருடம் நேரில் சந்தித்தபொழுது காந்திமதியிடம் உங்கள் வயசென்ன என்று கேட்டதற்கு ஏன்,ராசா என்னை கட்டிக்கலாம் பார்க்கறியா என்று பதில் கேள்வி கேட்டு அதிரவைத்தார். :))
ஆனா பாருங்க சகா, இந்த தில்லுமுல்லு வேலையெல்லாம் மறக்க வச்சு பம்பர் பரிசு அடிச்சார் கில்லில தரணி.. அத ஒத்துக்கிட்டுதான் ஆகனும்..
அமீரிடமும் கேட்கலாம்.கம்ர்ஷியல் சமாச்ச்ரஙக்ளை ஒதுக்கி தள்ளனும். ய்தார்த்தமா படம் எடுக்கனும்ன்னு சொல்றீஙக்ளே.. யோகில உங்களுக்கு ஓப்பனிங் சாங் நிச்சயம் கிடையாதா?
நன்றி துபாய் ராஜா
நன்றி கார்க்கி. நிச்சயம் ஒத்துக்குறேன். கில்லி மெகா ஹிட்டு தான்.
Nalla nalla kelvigalai ready pannitu, dialogue a correct a solli kodukkama vittuteengha.....
Gandhi mathi guest a? Nalla comedy nadigai adhukkaga..Romaba paavam neengha...Apparm,Avanga kooda photo yedhuvum yeduthukalaya? :)
-Krish
லாஸ்ட் ரோவுல இருந்து தூங்கி வழிஞ்சேன் கிருஷ் அதனால போட்டோ எடுக்கல
டிஸ்கி கலக்கல்...
//"புதுசா ஒரு கோடு போடுறது ரொம்ப சுலபம்.ஆனா ஒரு கோடு மேல இன்னொரு கோடு அலுங்காம போடுறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தான் தெரியும்.." // பயங்கரமான ஆளா இருப்பாரு போல? காந்திமதியோட தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க ஒரு நல்ல கலைஞர். அதேமாதிரி S.V. சேகர் மேல உங்களுக்கு என்ன காண்டுன்னு தெரியலே. அவரோட டைமிங்-காமடி ரொம்ப பிடிக்கும்.
என்னாது காந்திமதி தி.மு.க. வா...?
சொல்லவே இல்ல ஜெகா.
:)
விஜய் படத்துலயே நான் சொந்தகாசு போட்டு பார்த்த ஒரே படம் கில்லி.
மலரும் நினைவுகள் சாமியோவ்...!
நன்றி வழிப்போக்கன்
நன்றி டக்ளஸ்
நன்றி தல (நான் அவரை பற்றி சொன்னது காரணம் இராணிமேரி பற்றிய அவரது கருத்துக்கள்)
நல்லாத்தான் கேட்குறாங்கையா கேள்வி..
:))
நன்றி நையாண்டி நைனா
நன்றி நாஞ்சில் நாதம்
//ஜெயம் ராஜா கோபமாக "புதுசா ஒரு கோடு போடுறது ரொம்ப சுலபம்.ஆனா ஒரு கோடு மேல இன்னொரு கோடு அலுங்காம போடுறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தான் தெரியும்.." என்று சொன்னாராம்.//
என்ன ஒரு தத்துவம்!
நன்றி வால்பையன்
ஒரு காட்சி எடுக்கிறதுக்கு முன்னாடி அத தெலுங்குல பார்த்துட்டு தான் எடுப்பாரு
Post a Comment